சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள். Khan11

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்.

Go down

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள். Empty உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்.

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 20:32

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள். Fae9945894175f760f1352d7b2135afe_1M-233x300
மனிதகுல
வரலாற்றில் மக்களதுஉரிமைகள் மீறப்பட்டு அவர்கள் அடக்கி
ஒடுக்கப்படுகின்றபோது மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்து தமது
எதிர்ப்புக்களைத் திடீரென வெளிக்காட்டுகின்றபோது அது புரட்சியாக
உருவெடுக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் புரட்சி என்பது அரசியல் துறையை
அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார
துறைகளில் ஏற்படுத்தப்படும் பாரிய மாற்றமாகும்.
நாம் வரலாற்றுப்
பாதையினைத்திருப்பிப் பார்க்கின்றபோது இப்புரட்சிகள் காலத்திற்குக்காலம்
நடைபெற்று வந்துள்ளமையை அறியமுடிகின்றது. அந்தவகையில் உலக
வரலாற்றில்இடம்பிடித்த மூன்று முக்கியபுரட்சிகளாக மேல்வருவனவற்றைக்
குறிப்பிட முடியும்.

• ஆங்கிலப்புரட்சி – 1688
• அமெரிக்கப்புரட்சி – 1776
• பிரான்சியப்புரட்சி – 1789

ஆங்கிலப்புரட்சி – 1688

இங்கிலாந்து
வரலாற்றிலே 1688ஆம் ஆண்;டில் இரண்டாம் ஜேம்ஸ் மன்னனுடைய ஆட்சிக் காலத்தில்
இடம்பெற்ற ஆங்கிலப்புரட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
அமைதியான முறையில் தொடங்கி அமைதியாகவே முடிவுற்றதோடு போர் நடவடிக்கைகளும்
இடம்பெறவில்லை. இதனால் இப்புரட்சியை ‘மாண்புறுப்புரட்சி’ என்று
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரித்தானிய
பாராளுமன்றத்திற்கும் ஸ்டுவட் வம்ச அரசர்களுக்குமிடையில் இறைமை பற்றிய
போராட்டத்தின்முடிவே இப்புரட்சியாகும். மன்னனுடைய அதிகாரங்களைக் குறைத்து
பாராளுமன்றத்தின் அதிகாரங்களை உயர்த்துவதே புரட்சியின் நோக்காக அமைந்தது.
இதன் முதற் கட்டமாக ‘மக்னா காட்டா’ (மகா பட்டயம்) ஒப்பந்தம் 1215 இல்
ஏற்படுத்தப்பட்டது.

புரட்சிக்கான காரணங்களை ஆராய்கின்றபோது 1603ஆம்
ஆண்டிலே முதலாம் ஜேம்ஸ் மன்னன் சிம்மாசனம் ஏறியகாலம் தொடக்கம்
பாராளுமன்றத்திற்கும் ஸ்டுவட் அரச வம்சத்திற்குமிடையில் முரண்பாடுகள்
ஏற்பட்டவண்ணமாயிருந்து. இவ்வம்சத்தின் முக்கிய மன்னனாக இரண்டாம் ஜேம்ஸ்
விளங்கினான். இவனின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே புரட்சிக்கான
உடனடிக்காரணமாக அமைந்தது.
தீவிர கத்தோலிக்கனான இரண்டாம் ஜேம்ஸ் மன்னன்
பதவியேற்றதுடன்(1685-1688) மன்னனுக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில்
மீண்டும் மோதல் ஏற்பட்டது. இம்மோதலுக்கு சமயக் கருத்து வேறுபாடே காரணமாக
அமைந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோர் சீர்திருத்த சமயத்தவராயிருக்க
மன்னனோ றோமன் கத்தோலிக்கனாயிருந்தான். மன்னன் அரசுரிமையை றோமன் கத்தோலிக்க
சமயத்தவனுக்கு வழங்குவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தான். ஆயினும்
பாராளுமன்றம் மன்னனின் மகளைத் திருமணம் செய்திருந்த சீர்திருத்த சமயத்தவரான
நெதர்லாந்தைச் சேர்ந்த இளவரசன் வில்லியத்திற்கு முடிசூட விரும்பியது.

இளவரச
தம்பதியைப் பதவியேற்கபாராளுமன்றம் அழைப்பு விடுத்தது. அவ்விருவரும்
அழைப்பை ஏற்று இங்கிலாந்திற்கு வந்திறங்கியபோது ஜேம்ஸ் மன்னன்
பிரான்சிற்குத் தப்பியோடினான். வெற்றி பெற்ற பாராளுமன்றம் மூன்றாம்
வில்லியத்தையும் இரண்டாம் மேரியையும் பிரித்தானிய சிம்மாசனத்தில்
அமர்த்தியது. இவர்கள் பாராளுமன்றத்தால் விதிக்கப்பட்ட உரிமைகள் மனுவை
ஏற்றுக் கொண்டே பதவியில் அமர்ந்தமையால் பாராளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட
மன்னராட்சி இங்கிலாந்தில் உருவானது.

எனவே இங்கிலாந்தில் நீண்ட காலமாக
மன்னனுக்கும் பாராளுமன்றத்துக்கும் தொடர்ந்து வந்த ஆதிக்கப்போட்டி
முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்புரட்சி அரசியல், பொருளாதார சமூக
ரீதியில் மாற்றத்தினை ஏற்படுத்தி ஜனநாயக ஆட்சிமுறைக்கான அடித்தளத்தினையும்
பிரித்தானியாவின் வளர்ச்சியை ஏற்படுத்திய புரட்சி என்றவகையில் வரலாற்றில்
இருப்புக் கொண்டுள்ளது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள். Empty Re: உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்.

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 20:32

அமெரிக்கப்புரட்சி – 1776

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட
நாடுகாண் பயணங்களின் விளைவாக அமெரிக்காக்கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் ஸ்பானியர், போர்த்துக்கேயர், பிரான்சியர், ஒல்லாந்தர்,
ஆங்கிலேயர் என்போர் அங்கு குடியேற்றங்களை அமைத்தனர். இவர்களில் வட
அமெரிக்காவில்நிலையான குடியேற்றங்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றவர்கள்
ஆங்கிலேயராவர்.

1776இல் சுதந்திரப்போர் ஆரம்பமாகும் போது ஆங்கிலக்
குடியேற்றங்கள் பதின்மூன்று வட அமெரிக்காவில் காணப்பட்டன. அவையாவன
வேர்ஜினியா, ஜோர்ஜியா, பென்சில்வேனியா, நியுயோர்க், நியுஜேர்சி, டெலவெயார்,
மஸீசெட்ஸ், கெனடிகட், தென்கரோலினா, வடகரோலினா, நியுஹேம்ஷயர், ரோட்ஜலண்ட்,
மேரிலண்ட் போன்றனவாகும்.

இந்த அமெரிக்கக் குடியேற்றங்களின் பிரஜைகள்
தாய்நாடான பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு மேற்கொண்ட
புரட்சியே ‘அமெரிக்க சுதந்திரப்போர்’ எனப்படுகின்றது. வட அமெரிக்காவில்
உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்ட
ஆளுநர்களாலேயே நிருவகிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இவர்கள் தமது
கைத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும்
முடிவுப்பொருட்களை விற்பதற்குமான ஒரு சந்தையாகவே அமெரிக்காவைப்
பயன்படுத்தினர். அத்தோடு புதிய வரிகளையும் அவர்கள் மீது விதித்தனர்(1765).

இதனால்
விரக்தியுற்ற மக்கள்இவ்வரிகளுக்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினையும்
தெரிவித்து மேல்வருமாறு கோஷங்களை எழுப்பினர். ‘எமது பிரதிநிதிகள் இடம்பெறாத
பிரித்தானியப் பாராளுமன்றத்தில் எம்மீது எவ்வாறு வரிவிதிக்கமுடியும்’ என
அமெரிக்கக் குடியேற்றவாசிகள் கேள்வி எழுப்பினர். இக்கோரிக்கைகளுக்கு
செவிசாய்க்கப்படாமையால் ‘பிரதிநிதித்துவமின்றேல் வரியுமில்லை’ என்ற
கோஷத்துடன் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். 1773களில் இப்போராட்டம்
தீவிரமடைந்தது. 1776களில் பிலடெல்பியா நகரில் ஒன்று கூடிய போராளிகள் தமது
போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜோர்ஜ் வொஷிங்டனைத் தலைவராக நியமித்தனர்.

1776ஆம் ஆண்டு யூலை மாதம் நான்காம் திகதி பிரித்தானியஆதிக்கத்திற்கு
எதிராகச் சுதந்திரப் பிரகடனத்தை முன்வைத்தனர். அதனைக் கடுமையாக எதிர்த்த
பிரித்தானியரோடு ஜோர்ஜ் வொஷிங்டன் தலைமையில் ஒன்றிணைந்த அமெரிக்கக்
குடியேற்றவாசிகள் நீண்டகால யுத்தத்தின் மூலமாக 1783ஆம்ஆண்டில் பிரான்ஸின்
வேர்சையில் மாளிகையில் பிரித்தானிய-அமெரிக்க நாடுகளுக்கிடையே
ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கியஅமெரிக்கா சுதந்திரம்
அடைந்தது.

இப்புதிய நாடு 1787 ஆம் ஆண்டு தனக்கென அரசியல் யாப்பு ஒன்றை
வரைந்து கொண்டது. இதுவே உலகில் எழுதப்பட்ட முதலாவது அரசியல் யாப்பாகும்.
அத்தோடு அடிப்படை மனித உரிமைகள் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டமையால் அது
உலகளாவிய மதிப்பைப் பெற்றுக் கொண்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள். Empty Re: உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்.

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 20:34

பிரான்சியப்புரட்சி – 1789

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும்
எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு பிரான்சில் இடம்பெற்ற மாபெரும்
மாற்றமே பிரான்சியப் புரட்சியாகும்.இது அடிப்படை மனித உரிமைகளைப் பெற்றுக்
கொள்ளும் முன்னேற்றப் பயணத்தில் இன்னுமொரு முக்கிய கட்டமாகும்.

ஐரோப்பிய
வரலாற்றில் பெரும்திருப்புமுனையை ஏற்படுத்தி எதேச்சாதிகாரமான முடியாட்சி,
மடாலயங்களின் ஆதிக்கம், பிரபுக்களின் சமூக, பொருளாதார ஒடுக்குமுறை
ஆகியவற்றிற்கெதிராக பிரஞ்சு நாட்டின் மூன்றாம் குடித்தினையோர் என்று
சொல்லப்படும் சாதாரணகுடிகள் போர்க்கொடி உயர்த்தி,
‘அனைவருக்கும் சுதந்திரம்
அவர்களிடையே சமத்துவம்
ஏற்படுவதோ சகோதரத்துவம்’

என்ற
ஜனநாயக முழக்கங்களை விண்ணதிர ஒலிக்கச் செய்தனர். ஐரோப்பிய நாடுகளில்
முடியாட்சி முறைக்கும் பிரபுத்துவமுறைக்கும் சாவுமணியடித்து ஜனநாயகத்தின்
அடிப்படைத் தத்துவத்தினை உலகிற்கு உணர்த்திய புரட்சி இதுவாகும்.

சமகால
பிரான்சிய சமூகத்தை பிரதானமாக மூன்று பிரிவுகளாகப் பிரித்து நோக்கமுடியும்.
அவர்களில் மன்னன் முதன்மையானவன், இரண்டாம் நிலையில் மதகுருமார் மற்றும்
பிரபுக்கள் அடங்கியிருந்தனர். இவ்விரு பிரிவினரும் உயர்குடியினர்என்றும்
உரிமையுள்ள வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர். ஏனையோர் விவசாயிகள்,
வர்த்தக வகுப்பினர் , புத்திஜீவிகள்அடங்கிய சாதாரண மக்களாகக் காணப்பட்டனர்.
இவர்கள் மூன்றாம் குடித்திணையோர் என்றும் உரிமையற்ற வர்க்கத்தினர் என்றும்
அழைக்கப்பட்டனர்.
பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்பட்ட வர்க்க
வேறுபாட்டில் உரிமையற்ற வர்க்கத்தினரே மன்னனின் கடுமையான வரிச்சுமைக்கும்
கொடுங்கோண்மை ஆட்சியின்கீழும் நசுக்கப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்ற
மக்கள் புரட்சிக்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்திருந்தனர். அத்தோடு
மதகுருமார் மற்றும்பிரபுக்களிடையே ஏற்பட்டுக் கொண்ட முரண்பாடுகள்
மற்றும்படித்த மத்தியதர வர்கத்தின்எழுச்சி என அனைத்துத் தரப்பினரும்
அதிருப்திப்பட்டுக் கொண்டதன் விளைவே புரட்சியாகவெடித்தது.
உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள். Fae9945894175f760f1352d7b2135afe_1M
பிரான்சியப்
புரட்சியின் விளைவுகளாக ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகள்
கட்டியெழுப்பப்பட்டன. மனித உரிமைகள் சாசனம் உருவாக்கப்பட்டது. சமூக
ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு தேசிய உணர்ச்சிதூண்டப்பட்டது. சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகள் நிலைநாட்டப்பட்டன.
ஜேர்மனியஐக்கியம், இத்தாலிய ஐக்கியம், தென்னமெரிக்க நாடுகளில் நடைபெற்ற
விடுதலைப் போராட்டங்கள் போன்ற பல வரலாற்று நிகழ்வுகளுக்கு வழிகாட்டியாக
அமைந்தது.

எனவே நாகரிக வளர்ச்சியின் பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக்
கொண்டு மனிதனின் வாழ்க்கை ஊட்டம் நடைபெற்று வருகின்றமையை வரலாற்றைக்
கற்கின்றபோது புரிந்து கொள்ள முடிகின்றது. அந்தவகையில் உலக வரலாற்றில்
இடம்பிடித்தமூன்று முக்கிய புரட்சிகளும் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்குப்
பங்களிப்பினை நல்கி உலக வரலாற்றில் தனித்துவம் பெறுகின்றன.
-
அறிவுலகம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள். Empty Re: உலக வரலாற்றில் இடம் பிடித்த மூன்று முக்கிய புரட்சிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum