Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெயரை எப்படி எழுதுவது?
Page 1 of 1
பெயரை எப்படி எழுதுவது?
சொந்த பெயரின் பின்னால் எந்த பெயரை சேர்த்துக் கொள்வது என்று முடிவு எடுக்க பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகாரம் வழங்கி மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. திருமணம் வரையில் அப்பா பெயரை பிறகு கணவன் பெயரை சேர்த்துக் கொள்வது வழக்கம். விவாகரத்து செய்தால் கணவன் பெயரை துண்டிப்பார்கள். மறுமணம் செய்தால் புதிய கணவன் பெயரை சேர்க்கின்றனர். இப்படி பெயரின் பின்பகுதி மாறுவதை சுட்டிக் காட்டி பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சொத்தும் கூட. அரசு உத்தரவு இதற்கு தீர்வு காணும் முயற்சி. யாரும் பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும்போது பெயருக்கு பின்னால் உள்ள இணைப்பை காரணம் காட்டி உரிமைகளை மறுப்பது அற்பமான செயல். மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கு சேர வேண்டிய சலுகைகளையும் மறுப்பதற்கே நமக்கு ஊதியம் தரப்படுகிறது என்று நம்பும் அரசு அலுவலர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது. தனியார் இந்த விஷயத்தில் மேலென்று பாராட்டவும் வழியில்லை. அவர்கள் தொல்லை வேறு விதம். பெயர் சூட்டுவதில் உலகம் முழுவதும் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரே முறையை பின்பற்றுவதாக ஒரு மாநிலத்தைக்கூட கைகாட்ட முடியாது. பெயருக்கு முன்னால் தந்தை பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடும் வழக்கம் தமிழகத்தில் அதிகம். இனிஷியலுக்கு பதில் தந்தை பெயரை முழுமையாகவோ பகுதியாகவோ பெயருக்கு பின்னால் சேர்க்கும் பழக்கம் அதிகரிக்கிறது. ஜாதி பெயர் சேர்ப்பது அருகி விட்டாலும் தந்தை பெயருடன் அதை சேர்த்துதான் உலகம் அறியும் என்பதற்காக பலர் அவ்வாறு இணைக்கின்றனர்.
இனிஷியலாக அப்பா பெயர்தான் என்றில்லை; அம்மா பெயரின் முதல் எழுத்தையும் பயன்படுத்தலாம்; இருவரின் பெயர்களையும் இனிஷியல்களாக வைத்துக் கொள்ளவும் தடையில்லை என தமிழக அரசு அறிவித்த பின்னர் அம்மாவுக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் பெருகியிருக்கின்றனர். பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இனிஷியலை விரிவுபடுத்தி எழுத சொல்கிறார்கள். அப்போது அம்மா, அப்பா பெயர்களை முழுமையாக எழுதி அதை தொடர்ந்து சொந்த பெயரை குறிப்பிட நேர்கிறது. பெற்றோருக்கு கொடுக்கும் மரியாதையை பிறந்த மண்ணுக்கும் கொடுக்க வேண்டாமா என்ற சிந்தனையின் விளைவாக இப்போதெல்லாம் ஊர் பெயரையும் சேர்க்கின்றனர் பலர். தென்னிந்தியாவில் கேரளா, ஆந்திராவில் மட்டும் வழக்கில் இருந்தது இந்த நடைமுறை.
விண்ணப்ப படிவங்களில் இவ்வளவு நீளமான பெயர்களை எழுதும் அளவுக்கு இடம் விடுவதில்லை. இனிஷியல் இல்லாமல் சொந்தப் பெயரை மட்டும் எழுதக்கூட இடமில்லாதபடி பாங்க் செலான்கள் கரன்சி நோட்டு போல சிறிதாக அச்சிடப்படுவது வேறு விஷயம். அதற்கு சிக்கனம் என்று பெயர். பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு கதவு திறந்து விட்ட பிற்பாடு நிலைமை இன்னும் சிக்கலாகி விட்டது. மேலை நாடுகளின் பாணியில் முதல் பெயர், நடுப் பெயர், கடைசிப் பெயர் என்று விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். மொத்தமே ஒரு பெயரை வைத்துக் கொண்டு மூன்று கட்டங்களை எப்படி நிரப்புவது என்று கேட்டால் ‘அக்கார்டிங் டு அவர் ரூல்ஸ்..’ என்று ஆரம்பித்து விடுகின்றனர். கடன் தர முடியாது என்று சொல்வதற்கு மாற்று வழியாக பயன்படுத்துகின்றனர். வங்கிகளில்தான் என்று கிடையாது. இமெயில் அக்கவுன்ட் தொடங்கவோ, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, பொருள் வாங்குவது போன்ற காரியங்களுக்கு படிவங்கள் நிரப்பும் போதும் இந்த பிரச்னை எழுகிறது. நடுப் பெயர் இல்லாவிட்டால் சில தளங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் முதலும் கடைசியும் கட்டாயம். அந்த இரண்டில் ஒரு பெயரைதான் டிக்கெட் டில் குறிப்பிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் அது அப்பா பெயராக அல்லது ஊர் பெயராக இருக்கும். ரிசர்வேஷன் சார்ட்டில் வேறு பெயரில் இருந்தால் எத்தனை பேரால் சுலபத்தில் கண்டுபிடிக்க இயலும்? ஆங்கில பத்திரிகைகள் மேற்கத்திய பாணியில் இந்தியர்களுக்கு கடைசிப் பெயரை பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலுக்கு வலு சேர்க்கின்றன. பெற்றோர் சூட்டிய முதல் பெயரால் அறியப்படுவதும் அழைக்கப்படுவதுமே நமது மரபு என்பதை அவர்கள் ஏற்பதில்லை. மிஸ், மிஸ்டர் போடுவதும் மறைந்துவிட்ட சூழ்நிலையில் ஆணா பெண்ணா என்று தெரியாத குழப்பமும் நேர்ந்து கொள்கிறது. நடராஜன் பேச்சு, காந்தி அறிவிப்பு, பச்சன் பேட்டி என்று படிக்கையில் ஜெயந்தி, சோனியா, ஐஸ்வர்யா நினைவுக்கு வருவதில்லை.
பெயரில் என்ன இருக்கிறது என்று ஷேக்ஸ்பியர் நினைத்தார் என்றால், அப்போதெல்லாம் படிவங்களில் பெயரை மூன்று கட்டங்களில் நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றுதானே அர்த்தம்.
நன்றி தினகரன்

Similar topics
» மரபுக்கவிதை எழுதுவது எப்படி?
» கணினியில் தமிழில் எழுதுவது (Type) எப்படி?
» நமக்கு யானை படம் வரைய தெரியாமல் இருந்தால் விடை எழுதுவது எப்படி???
» எனது பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
» குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum