சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும் Khan11

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும்

3 posters

Go down

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும் Empty (Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும்

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 8:27

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும் Cell-150x150
இந்த 20ஆம் நூற்றாண்டின் நாம் வாழும் இந்த காலம் மிகவும் விஞ்ஞான வளர்ச்சி அடைந்த காலம், இந்த விஞ்ஞான வளர்ச்சி முஸ்லிம்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும் காரணம் ஒரு முஸ்லிம் தனக்கு தேவையான மார்க்க விளக்கத்துக்கு பல நூறு ஹதீஸ்களை பார்த்து அதற்கான விடையை கண்டு கொள்ள வேண்டும் அதற்கு பல நாட்கள் செலவு ஆகும் ஆனால் இந்த நவீன கண்டு பிடிப்புகளால் ஒரு சில பட்டன்களை தட்டிவிட்டால் போதும் அதற்கான விடை கிடைத்துவிடும். இப்படிப்பட்ட நவீன கண்டு பிடிப்புகளை நாம் எப்படி? பயன்படுத்துகிறோம் என்பதுதான் இப்போது நமக்கு முன் உள்ள ஒரே கேள்வி.

அவற்றில் பல இருந்தாலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் பற்றிய ஒரு அலசல் இது. மனித சமுதாயத்துக்கு ஆரோக்கியத்தில் பல மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்றாலும் அன்றான வாழ்வில் தகவல் தொடர்புக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இதை முஸ்லிம்கள் எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதில் சில கட்டுப்பாடு இஸ்லாத்தில் உள்ளது. இது என்ன புதுமை? இதில் கூட கட்டுப்பாடா? என்று வியப்போடு நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது ஆம் ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எதையும் தன் இஷ்டத்துக்கு செயல்படுத்த முடியாது. காரணம் இறைவன் வழிகாட்டலில்தான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும் இதைத்தான் இஸ்லாம் இபாதத் என்கிறது இறைவனுக்கு அடிபனிவது, கட்டுப்படுவது என்பது ஒரு முஸ்லிமுக்கு மிக முக்கியம்.

இஸ்லாம் ஒரு வாழ்கை நெறி எனவே ஒரு முஸ்லிமின் வாழ்வில் நடைபெறும் உண்ணுவது, உறங்குவது, பேசுவது, என அனைத்து செயல்களுக்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது. அந்த அடிப்படையில் இந்த செல் போன் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம் இதைப்பற்றி நேரடியாக இஸ்லாம் சொல்லவில்லை என்றாலும் இதை உபயோகிப்பதில் ஏற்படும் குழப்பங்கள் இஸ்லாத்தோடு தொடர்பு உடையதாக இருக்கின்றன.

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள்:

முதலில் இதன் முக்கிய உபயோகம்; நாம் பிறரை தொடர்பு கொண்டு பேசுவதும் பிறர் நம்மை தொடர்பு கொண்டு பேசுவதும்தான்.பிறகுதான் மற்ற பயன்கள். அப்படி பிறறை நாம் தொடர்பு கொண்டாலோ, அல்லது பிறர் நம்மை தொடர்பு கொண்டாலோ அதற்கு அழைப்பு ஒலி மிக அவசியம் அந்த அழைப்பு ஒலி Ring Tone எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதில் முஸ்லிம்களாகிய நாம் கவனம் செலுத்த வேண்டும் ஏன் என்றால் கனவன் மனைவியை விட மிக நெருக்கமாக நம்முடன் இருப்பது இந்த செல்போன், இதை நாம் பிரிய முடிவதில்லை கழிவறைக்கு கூட கொண்டு சென்று விடுகிறோம் நம்முடன் அப்படி ஒரு நெருக்கம் உடையது.

தொழுகை நடைபெரும் போது சப்தமிட்டு குர்ஆன் கூட ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது அப்படியிருக்க நாம் அதை பள்ளிவாசலுக்கு எடுத்து செல்கிறோம் இதனால் இன்று மிகப்பெரிய சிக்கல்கள் உறுவாகி உள்ளன. பள்ளியில் செல்போனை அடக்கிவையுங்கள் என்ற அறிவிப்பு பலகை பரவலாக வைக்கப்பட்டுள்ளது, இதை யாரும் கண்டுகொள்வதாகவே தெரிவதில்லை இமாம் தொழுகைக்கு முன்பு தொழுகைக்கான அறிவிப்புபோல இதை செய்கிறார் ( சில இமாம்கள் இது ஒரு சுன்னத் நபிவழி போல் ஆகிவிட்டது என்கிறார்கள் ) அப்படி இருந்தும் சிலரின் கவணக்குறைவால் அல்லது அலட்சியத்தால் தொழும்போது செல்போன் ஒலி எழுப்பி அனைவரது தொழுகையையும் வீணாக்கி விடுகிறது.

ரிங்டோனிலும் பிரச்சனை

அழைப்பை அறிந்து கொள்ளத்தான் அதன் ஒலி, அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அதிலும் அதிகமானவர்கள் தவறு செய்கிறோம். சிலர் அதிகமான சத்தத்தையும், இசையுடன் கூடிய பாட்டுகளையும் வைக்கிறார்கள் இது பிறரை முகம் சுளிக்க செய்கிறது இது அநாகரீகமானது. யாருக்கும் தொந்தரவு தராத சாதாரன ஃபோன் ரிங், அல்லது கார் ஹாரன் இப்படி ஏதாவது ஒன்றை அதிக சப்தமில்லாமல் வைக்கலாம்.

மியூசிக் தவறு என்று கூறும் சில முஸ்லிம்கள் தொழுகையாளிகள் கிராஅத்களை ரிங்டோன்களாக வைக்கிறார்கள். காரணம் இசை வைப்பதற்கு இது மேல் அல்லவா? என்கிறார்கள் இது மிகவும் தவறான கருத்தாகும் குர்ஆன் அருளப்பட்டது ஓதுவதற்காக, கேட்பதற்காக, சிந்திப்பதற்காக, செய்ல்படுத்துவதற்காக ரிங்டோன் வைப்பதற்காக அல்ல என்பதை நாம் உணர வேண்டும். குர்ஆன் ஓதப்பட்டால் அமைதியாக இருந்து கேட்க வேண்டும் என்று.
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

‘குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் – (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.’ அல்குர்ஆன்: 7:204

ஆனால் நாம் என்ன? செய்கிறோம் எப்போது அழைப்பு வந்தாலும் குர்ஆன் ஓத தொடங்கும் உடனே அதை நாம் நிறுத்திவிட்டு பேச தொடங்கிவிடுகிறோம் அதை கோட்கவேண்டும் என்ற எண்ணமோ அல்லது அதற்கு மரியாதை செய்யவேண்டும் என்ற எண்ணமோ நமக்கு வருவதில்லை. அல்லது அதை நாம் கழிவறைக்கு எடுத்து சென்றால் அங்கும் அழைப்பு வரும்போது ஓதத்தொடங்கி விடுகிறது. இப்போது சிந்தியுங்கள் இது நல்லதா? இதற்காகவா குர்ஆன் அருளப்பட்டது? குர்ஆனை நாம் கின்டலும், கேலியும செய்வதாக ஆகி விட்டதே? இதுவா அதன் அருளப்பட்ட நோக்கம் எனவே தயவுசெய்து யாரும் இப்படி செய்திருந்தால் இதை படிக்கும் இந்த நேரமே அதை மாற்றி விடுங்கள்; அதன் மூலம் அல்லாஹ் நமக்கு அருள் புரிவான் நாம் குர்ஆனை கண்ணியம் செய்தவர்களாக ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்.

மேலும நாம் யாருககேனும் கால்செய்தால் அது தொழுகை நேரமாக இருந்தால் தவிர்ப்பது நல்லது. அப்படி அவசரம் என்றால் அழைப்பை அவர் நிறுத்தினால் நாம் புரிந்துகொள்ளவேண்டும் இது தொழுகை நேரமாக இருக்காலம் என்று. ஒரு பத்து நிமிடம் இடைவேளை விட்டு மீண்டும் கால் செய்யலாம். சில நேரம் அவர் தொழுகையை முடித்து இருக்காலாம். அவர் தொழுகையில் இருந்து தொடர்ந்து கால் செய்தால் மறுமுனையில் உள்ளவர் சைலன்டில் வைக்கவில்லை என்றால் அனைவரது தொழுகையும் நம்முடைய அழைப்பால் வீணாகிவீடும்.

எனவே நாம் இதில் கவனமாக இருக்கவேண்டும். நாமும் தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் முன்பு சைலன்டில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் இதில் அதிகமானவர்கள் அலட்சியம் செய்கிறோம், இது நல்லது அல்ல இதை நமது கடமையாக உணர வேண்டும் அனைவரது தொழுகையும் வீணாக்கும் செயலை நாம் செய்யகூடாது. மாற்று மதத்தார் பள்ளி முன்பு மேலம் அடித்தால் கோபம் கொள்கின்ற நாம் பள்ளியின் உள்ளேயே இசையுடன் பாட்டு போட்டு விடுகிறோம். ஏன? இந்த விஷயத்தில் அக்கரை இல்லாமல் இருக்கிறோம் நமது இந்த மறதி ஷைத்தானின் செயல் இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்.

மற்ற உபயோகம்

அடுத்ததாக இந்த செல்போனில் ஆடியோ வீடியோ மற்றும் பல இவற்றிலும் நாம் நன்மையான செயல்களுக்கு மிகவும் குறைவன மக்களே பயன்படுத்துகிறோம் விலை உயர்ந்த போன்களை நாம் வைத்திருகிறோம் அனால் அதன் நல்ல பயன்பாடுகளை மறந்து தவறானவைகளுக்கே பயன்படுத்துகிறோம் குர்ஆன் படிப்பதற்கான சாஃப்ட்வேர்கள் இப்போது இருக்கின்;றன அதை பயன்படுத்தி அதை நம்முடைய செல்போனில் போட்டுக்கொண்டால் நமக்கு ஓய்வாக இருக்கும் நேரத்தில் குர்ஆனை பார்த்து படிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆனால் நம்மில் இதை எத்தனைபேர் பயன்படுத்துகிறோம்? குர்ஆனை ரிங்டோனாக வைத்தால் நல்லது என்று தாவறாக விளங்கி செய்கின்ற நாம் நிஜமாகவே நன்மைதரும் இதை நாம் செய்ய முன்வருவதில்லை. தினமும் குர்ஆன் ஓதும் பழக்கத்தை நாம் ஏற்படுத்தவேண்டும், தொகைக்காக பள்ளிக்கு வந்து இகாமத் வரை காத்து இருக்கும்போது ஒன்று துஆ செய்யலாம் இது துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம். அல்லது குர்ஆன் ஓதலாம் ஆனால் நம்மில் பலர் இந்த நேரத்தை வீண் பேச்சில் செலவு செய்கிறோம். செல்போனில் குர்ஆன் சாப்ட்வேர் போட்டு இருந்தால் பிரயானத்தின்போதும் இதை ஓதுவதன் மூலம் நன்மையும், இறை சிந்தனையும் அல்லாஹ்வின் பாதுகாப்பும் நமக்கு கிடைக்கிறது. எனவே இப்போதே இதை செயல்படுத்த முன் வரவேண்டும்.

இது ஆபத்தானது!!

அடுத்ததாக செல்போனில் அதிகமானோர் செய்யும் தவறு கேமரா உபயோகம். இதில் அதிக மெமொரி கார்டுகளை போட்டுக்கொண்டு இஷ்டம்போல போட்டோவையும், வீடியோவையும் எடுப்பது. இது மிகவும் தவறான செயல் இதன் வபரீதம் தெரிந்தால் நாம் ஒருபோதும் இதை பயன்படுத்த மாட்டோம். நம்மில் பலர் தங்களது செல்போனில் வீட்டில் உள்ளவர்களை படம் எடுப்பது வழக்கம், சிலர் தங்களது மனைவி, குழந்தைகளை படம் எடுப்பார்கள் சிலர் தனிமையிலும் ஆடை களைந்த நிலையிலும் (தான் பார்த்து ரசிப்பதற்காகத்தான்) படம், வீடியோ எடுத்து வைத்திருப்பார்கள் இது மிகவும் ஆபத்தானது.

இப்படிப்பட்ட ஃபோன்கள் பழுதாகிவிட்டால் கடைக்கு சரிசெய்ய போகும்போது முதலில் அதில் உள்ள படத்தையும், வீடியோவையும்தான் கடைக்காரன் எடுப்பான், ஒன்று அவன் ரசிப்பதற்காக அல்லது
அதை இன்டர்நெட்டில் போட்டு உலகமே பார்க்க வைத்துவிடுவான். இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல தினமும் நடக்கும் முற்றிலும் உன்மையான செய்தியாகும். குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கவணமாக இருக்க வேண்டும். இப்போது நீங்கள் நினைக்கலாம் எடுத்து பிறகு அழித்துவிடலாம் டெலிட் செய்துவிடலாம் என்று ஆனால் மறந்துவிடாதீர்கள்!! டெலிடட் ரெக்கவர் ஃபைல் என்று ஒரு சாஃட்வேர் உள்ளது அதை கொண்டு நீங்கள் டெலிட் செய்து இருந்தாலும் மீண்டும் அதை எடுத்து விடலாம் நாம் நம்முடைய, நம் குடும்பத்தாருடைய மானத்தை நம் கையால் நாசமாக்க கூடாது அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். எனவே இந்த தவறை நம் வாழ்க்கையில் இனி செய்துவிடக்கூடாது. எடுத்து இருந்தால் அந்த மெமொரிகார்டை உடைத்து சேதமாக்கி விடுங்கள்.

பெண்களால் ஏற்படும் பிரச்சனைகள்:

இன்று நமது ஊர்;களில் நடக்கும் அதிகமான பெண்கள் சம்பந்தமான தவறுகள் இந்த செல்போன்களால்தான் என்றால் அது மிகையாகாது வெளிநாட்டில் வாழும் நாம் நமது அன்பு மனைவிக்கு, சகோதரிக்கு பரிசாக செல்போனை கொடுக்கின்றோம் அதன் விளைவு அவர்கள் வாழ்கை நாசமாவது மட்டுமல்லாமல் நம்முடைய மானமும், சமுதாய மானமும் கப்பல் ஏறிவிடுகிறது. பிறகு கேள்விப்பட்டு வருந்துகிறோம் வீட்டில் உள்ளவர்களுடன் பேச டுயனெ டுiநெ போதும் தேவை என்றால் சாதாரன செல் போதும். (அதிலும் கவணமாக இருக்கவேண்டும்)
1.தேவையில்லாமல் வரும் ராங்கால்கள் மீண்டும் வந்தால் அதை எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
2.நம்மைப்பற்றிய விபரம் கேட்டால் சொல்வதை தவிர்க்கவேண்டும்.
3.வழக்கமாக ஒரே அந்நிய டிரைவர்களை கூப்பிடுவதையும், அவர்களிடம் குடும்ப செய்திகளை சொல்வதையும், செல் நம்பர் கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும்.
4.நளினமாக பேசுவதையும், தேவைக்கு அதிகமாக பேசுவதையும் தவிர்த்துவிட வேண்டும்.
5.எந்த விளம்பர கால்களுக்கும், எஸ்.எம்;.எஸ் களுக்கும் பதில் பேசுவதோ, அனுப்புவதோ கூடாது.
6.நமது செல் நம்பரை தெரியத யாருக்கும் கொடுக்க கூடாது.
7.ரீசாஜ் செய்ய ரீசார்ஜ் கார்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் (தேவை என்றால் பணம் இருக்கும்போது 2.3. கார்டுகள் வாங்கி
வைத்துக்கொண்டு தேவைப்படும்போது மட்டும் ரீசார்ஜ் செய்யலாம்) இலவசம் ஃபிரீ ஆஃபர் என்றால் உடனே அதன் பின்னால்
அலைய கூடாது
8.யாருக்கும் நம்பர் கொடுத்து ஈசி யில் பணம் அனுப்ப சொல்வதை
தவிர்க்கவேண்டும்.

பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சனைகள்:

செல்லப்பிள்ளைக்கு ஒரு செல்போன்!

இன்று பிள்ளைகளுக்கு இறையச்சம் போதிப்பதில் நாம் யாரும் கவனம் செலுத்துவதில்லை ஆனால் அவர்களின் சந்தோஷததை பற்றி அதிகம் கவலைப்படுகிறோம். அதன் விளைவு அவர்கள் கேட்கும் எதுவும் உடனே வாங்கி தரப்படுகிறது. அதில் முக்கியமாக செல்போன். இன்று சமுதாயத்தில் நாம் அதிகம் படிக்காதவர்களாக இருக்கிறோம் அனால் பிள்ளைகளை அதிகம் படிக்க வைக்கிறோம் அது தேவைதான் அனால் கல்வி அறிவு இல்லாத நாம் அவர்களுக்கு செல் போன் வாங்கி கொடுக்கும்போது அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்க தவறிவிடுகிறோம்.

கடைசியில் அவர்களுக்கு தகாத உறவுகள் ஆண் நன்பர்கள் மூலம் ஏற்பட்டு வழிதவறி விடுகிறார்கள். பிறகு காதல் கத்தரிக்காய் என்று சொல்லி விட்டைவிட்டு ஓடி விடுகிறார்கள் இது இப்போது தினமும் நமது ஊர்களில் நடக்கிறது. இதை நாம் முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கு எக்காரணம் கொண்டும் பிள்ளைகளுக்கு செல்போன் அவர்களுக்கு என்று தனியாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், நன்பர்கள் யார் என்பதை கண்காணிக்கவே;ணடும். அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் அறியாமல் பள்ளி புத்தக பேக்குகளை சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களை நாம் சந்தேகிக்கிறோம் என அவர்களுக்கு எண்ணம் வரக்கூடாது. மாறாக நம்மை பெற்றோர்கள் கண்காணிக்கிறார்கள் என்ற எண்ணம் வரவேண்டும். அது போல பார்த்துக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். அல்குர்ஆன்:66:6

நபி(ஸல்) கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாக உள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பைப் பற்றி வினவப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளராவார். அவர் தம் பொறுப்பைப் பற்றி வினவப்படுவார். ஒரு ஆண் தம் குடும்பத்தார் விஷயத்தில் பொறுப்பாளராவார். அவர் தம் பொறுப்பபை பற்றி வினவப்படுவார். பெண் தன் கணவனின் இல்லத்துக்கு பொறுப்பாளி யாவாள். அவள் தன் பொறுப்பைப் பற்றி வினவப்படுவான். பணிபுரிபவர் தம் முதலாளியின் பொருளுக்கு பொறுப்பாளியாவார்.
அவர் தம் பொறுப்பைப் பற்றி வினவப்படுவார். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பைப் பற்றி வினவப்படவீhகள். (புகாரி, முஸ்லிம் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி))

அன்பான சகோதரர்களே! இறைவனின் மற்றும் இறைதூதர் நபி(ஸல்)அவர்கள் போதனைகளை உணர்ந்து, நாளை மறுமையில் நமக்கு விசாரனை உள்ளது, நாம் நமது குடும்பத்துக்கு பொறுப்பாளிகள் எனவே இதில் கவனம் செலுத்தி இந்த செல்போன் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு அதை நல்ல வழியில் பயன் படுத்தி இறு உலகிலும் வெற்றி பெறுவோமாக. ஆமீன்

நன்றி http://niduri.com


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும் Empty Re: (Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும்

Post by Muthumohamed Wed 20 Mar 2013 - 8:53

நல்ல பயனுள்ள பதிவு நன்றி சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும் Empty Re: (Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும்

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 11:23

Muthumohamed wrote:நல்ல பயனுள்ள பதிவு நன்றி சம்ஸ் அண்ணா
மறுமொழிக்கு நன்றி முத்து :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும் Empty Re: (Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும்

Post by பானுஷபானா Wed 20 Mar 2013 - 11:51

மியூசிக் தவறு என்று கூறும் சில முஸ்லிம்கள் தொழுகையாளிகள் கிராஅத்களை ரிங்டோன்களாக வைக்கிறார்கள். காரணம் இசை வைப்பதற்கு இது மேல் அல்லவா? என்கிறார்கள் இது மிகவும் தவறான கருத்தாகும் குர்ஆன் அருளப்பட்டது ஓதுவதற்காக, கேட்பதற்காக, சிந்திப்பதற்காக, செய்ல்படுத்துவதற்காக ரிங்டோன் வைப்பதற்காக அல்ல என்பதை நாம் உணர வேண்டும். குர்ஆன் ஓதப்பட்டால் அமைதியாக இருந்து கேட்க வேண்டும் என்று.
அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

ஆனால் நாம் என்ன? செய்கிறோம் எப்போது அழைப்பு வந்தாலும் குர்ஆன் ஓத தொடங்கும் உடனே அதை நாம் நிறுத்திவிட்டு பேச தொடங்கிவிடுகிறோம் அதை கோட்கவேண்டும் என்ற எண்ணமோ அல்லது அதற்கு மரியாதை செய்யவேண்டும் என்ற எண்ணமோ நமக்கு வருவதில்லை. அல்லது அதை நாம் கழிவறைக்கு எடுத்து சென்றால் அங்கும் அழைப்பு வரும்போது ஓதத்தொடங்கி விடுகிறது. இப்போது சிந்தியுங்கள் இது நல்லதா? இதற்காகவா குர்ஆன் அருளப்பட்டது? குர்ஆனை நாம் கின்டலும், கேலியும செய்வதாக ஆகி விட்டதே? இதுவா அதன் அருளப்பட்ட நோக்கம் எனவே தயவுசெய்து யாரும் இப்படி செய்திருந்தால் இதை படிக்கும் இந்த நேரமே அதை மாற்றி விடுங்கள்; அதன் மூலம் அல்லாஹ் நமக்கு அருள் புரிவான் நாம் குர்ஆனை கண்ணியம் செய்தவர்களாக ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்.


நிறைய பேர் இதை வைக்கிறார்கள் ....அவர்கள் ஈமானோடு இருப்பதாக காட்ட வேண்டுமாம் #.


சிலர் டயலர் டோனாக வைத்திருக்கிறார்கள் .. #.


மிக மிக சிறப்பான பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

(Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும் Empty Re: (Cell Phone) செல்ஃபோனும் முஸ்லிம்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum