சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் !  Khan11

மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் !

Go down

மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் !  Empty மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் !

Post by Muthumohamed Sat 23 Mar 2013 - 21:31

மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் !  578322_493100197417051_707092389_n

மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் !

அநீதியான ஈராக் யுத்தம் காரணமாக மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் ஒருவர் அமெரிக்க
முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் டிக் சென்னி ஆகியோருக்கு
எழுதியுள்ள கடிதம் ஓன்று வெடெரன்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது
அந்த கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை இங்கே தருகிறோம். (தமிழில் -அய்யாஷ் )

நான் இந்த கடிதத்தை ஈராக் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகி 10 வருட நிறைவை ஒட்டி
என் சார்பாகவும் ஈராக் யுத்தத்தில் பங்கு பற்றிய அனைத்து இராணுவ வீரர்கள்
சார்பாகவும் இதை எழுதுகிறேன் .நான் இந்த கடிதத்தை ஈராக் யுத்தத்தில்
கொல்லப்பட்ட 4288 படை வீரர்களின் சார்பாக எழுதுகிறேன்.

ஈராக்
யுத்தம் காரணமாக உடல் மற்றும் உள ரீதியாக காயமடைந்துள்ள பல ஆயிரக்கணக்னான
இராணுவ வீரர்களின் சார்பில் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.


2004 இல் சத்ர் என்ற நகரில் போராளிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில்
கடுமையாக காயமடைந்தவர்களின் நானும் ஒருவன் . நான் அந்த தாக்குதலால் உடல்
இயலாத நிலைக்கு ஆளாக்கப்பட்டேன் . அதன் பின்னர் நான் மருத்துவ மனை
கவனிப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றேன்.

ஈராக் யுத்தம் காரணமாக
தமது கணவர்களை மனைவிகளை ,இழந்த துணைவர்ககள் சார்பாக தமது பெற்றோர்களை இழந்த
குழந்தைகள் சார்பாக ,தமது புதல்வர்களை ,புதல்விகளை இழந்த பெற்றோர்கள்
சார்பாக மற்றும் மூளை சேதம் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான முன்னாள் இராணுவ
வீரர்களை கவனிக்கும் தோழர்கள் சார்பாக இதை எழுதுகிறேன்.

ஈராக்
யுத்தத்தை நேரடியாக பார்த்து மன ரீதியாக பாதிப்படைந்த நிலையில் உள்ள
முன்னாள் இராணுவ வீரர்கள் சார்பாகவும் அதனால் தற்கொலை செய்த இராணுவ
வீரர்கள் சார்பாகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

ஈராக் யுத்தம்
காரணமாக கொல்லபட்ட 10 இலட்சம் ஈராக்கியர்கள் சார்பாக எண்ணற்ற காயமடைந்த
ஈராக்கியர்கள் சார்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன் . யுத்தம் காரணமாக
பாதிப்புற்ற எல்லா மனித சமூகம் சார்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

நீங்கள் நீதியை தவிர்க்க முடியும் எமது கண்களில் நீங்கள் பாரிய
யுத்தக்குற்றம் புரிந்தவர்கள் .எனது முன்னாள் இராணுவ தோழர்களின் கொலை
உட்பட ஆயிரக்கணக்கான இளம் அமெரிக்கர்களின் எதிர்காலத்தை திருடி கொலை
செய்த கொலைக்குற்றம் உங்கள் மீது உள்ளது.

நான் இந்த எனது
கடிதத்தை ,எனது கடைசி கடிதத்தை திரு புஷ் அவர்களுக்கும் திரு சென்னி
அவர்களுக்கும் எழுதுகிறேன் .நீங்கள் உங்களது பொய்களால் திருகு தாளங்களால்
,பண ,பல வெறிகளால் மிக மோசமான மனித இழப்புகளுக்கும் ,ஒழுக்க
பாதிப்புகளுக்கும் இட்டுச்சென்றீர்கள் என்பதற்காக இதை எழுதவில்லை .மாறாக
நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை எனது ஆயிரக்கணக்கான
இராணுவ தோழர்களுக்கும் ,லட்சக்கணக்கான நாட்டு மக்களுக்கும்
ஈராக்கிய,மத்திய கிழக்கு மக்களுக்கும் முழுமையாக வெளிப்படுத்தவே இதை
எழுதுகின்றேன்.

உங்களின் அதிகார பதவிகள் ,கோடிக்கணக்கான தனிப்பட்ட
சொத்துக்கள் ,பொது உறவு ஆலோசகர்கள் ,உங்களது அந்தஸ்து ஆகியன உங்களது
பண்புகளை முகமூடி போட்டு மறைக்க முடியாது.

வியட்நாம் யுத்த சரத்தை
மீறிய திரு சென்னி நீங்களும் தேசிய பாதுகாப்பு பிரிவை மீறிய திரு புஷ்
நீங்களும் ஈராக்கில் சாவதற்க்காக யுத்தத்துக்கு எங்களை அனுப்பினீர்கள்.

உங்களது கோழைத்தனத்தையும் சுயநலத்தையும் தசாப்தங்களுக்கு முன்னர்
நீங்கள் ஆரம்பித்திருந்தீர்கள் உங்களை தியாகம் செய்ய விரும்பாத நீங்கள்
ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் உணர்வற்ற யுத்தம் ஒன்றுக்கு தியாகம்
செய்ய அனுப்பினீர்கள்.

நான் செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று
இரு தினங்களின் பின்னர் இராணுவத்தில் இணைந்தேன் .எனது நாடு தா
க்கப்பட்டதால் நான் இராணுவத்தில் இணைந்தேன்..எனது சக 300 அமெரிக்கர்களை
கொன்றவர்களை தாக்கி அழிக்க நான் இராணுவத்தில் இணைந்தேன்.


செப்டம்பர் 11 தாக்குதலோடு எந்த தொடர்பும் இல்லாத ,தனது அயல் நாடுகளுக்கு
எந்த அச்சுறுத்தலும் ,அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத ஈராக்
போக நான் இராணுவத்தில் இணையவில்லை.

ஈராக்கியர்களை “விடுதலை”
அளிக்கவோ அல்லது மத்திய கிழக்கிலும் ,ஈராக்கிலும் உங்களால் அழைக்கப்பட்ட
‘ஜனநாயகத்தை ” நிலைநாட்டவோ அல்லது புராண கதை கூறப்பட்ட “அழிவு தரும்
ஆயுதங்களை” அழிக்கவோ நான் அமெரிக்க இராணுவத்தில் சேரவில்லை.


நான் ஈராக்கை கட்டிஎழுப்ப அமெரிக்க இராணுவத்தில் இணையவில்லை.ஈராக்கில்
கிடைக்கும் எண்ணெய் வருமானம் கிடைக்கும் என்று கூறப்பட்டது . மாறாக ஈராக்
யுத்தம் அமெரிக்காவுக்கு 3 ட்ரில்லியன் டொலர் செலவை ஏற்படுத்தியது.

திடீர் முன்னெச்சரிக்கை இல்லாத யுத்தம் புரிய நான் அமெரிக்க இராணுவத்தில்
சேரவில்லை .அது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது. படை வீரனாக இருந்த நான்
உங்களது கொள்கைக்கும் ,குற்றச் செயல்களுக்கும் உடந்தையாக
இருந்திருப்பதை நான் இப்போது தெரிந்து கொண்டுள்ளேன்.

ஈராக் யுத்தம் அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஏமாற்று .இது மத்திய கிழக்கில் வல்லரசு சமநிலையை மாற்றியது.

ஒழுக்க ,தந்திரோபாய ,இராணுவ ,பொருளாதார என்று எந்த அடிப்படையிலும்
பார்த்தாலும் ஈராக் யுத்தம் தோல்வி அடைந்த யுத்தம் ஆகும் .இந்த யுத்தத்தை
ஆரமபித்து வைத்தது திரு சென்னியும் திரு புஷ்ஷுமே ஆகும் . எனவே அதன்
பாதிப்புக்களை அவர்களே ஏற்க வேண்டும்.

செப்டம்பர் 11ஐ நடத்திய
படைகளுக்கு எதிரான ஆப்கானிய யுத்தத்தில் நான் காயமடைந்திருந்தால் இந்த
கடிதத்தை எழுதிஇருக்க மாட்டேன் .அதில் காயமடைந்திருந்தால் நான் எனது தாய்
நாட்டை காக்க யுத்தம் புரிந்து காயம் அடைந்தேன் என்று ஆறி
இருந்திருப்பேன்.

ஈராக் யுத்தம் நடைபெறாது இருந்திருப்பின் நான்
இந்த கட்டிலில் வலி கொல்லி மருந்துகளுடன் இருந்திருக்க மாட்டேன் . நான்
உட்பட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ,மனித உயிர்களை கஞ்சத்தனமான எண்ணெய்
கம்பனிகளுக்காகவும் ,சவூதி அரேபிய ஷேய்க் மாருடன் உள்ள கூட்டணிக்ககவும்
,உங்களது கேவலமான வல்லரசு அத்தியாயத்துக்க்காகவும் பலியிடப்பட்டோம்

என்னைப்போன்றே பாதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீர்கள் போதிய கவனிப்பு இன்றி உள்ளனர்

எங்களது உடல் ரீதியான மன ரீதியான காயங்களில் உங்களுக்கோ எந்த அரசியல்
வாதிகளுக்கோ அக்கறை இல்லை .நாங்கள் உங்களால் பயன்படுத்தப்பட்டோம் நாங்கள்
உங்களால் துரோகம் இழைக்கப்பட்டோம் நாம் உங்களால் கைவிடப்பட்டுள்ளோம்

கிறிஸ்தவர் என்று உங்களை கூறிக்கொள்ளும் திரு புஷ் பொய் சொல்லுவது பாவம்
இல்லையா ?கொலை செய்வது பாவம் இல்லையா ? சுய இலாபத்துக்காக கொள்ளையடிப்பது
பாவம் இல்லையா?

நான் கிறிஸ்தவன் இல்லை நான் கிருஸ்தவ கருத்தில்
நம்புகிறேன். உங்கள் சகோதர்களுக்கு நீங்கள் செய்த மோசமானவை உங்களுக்கு
வரும் என்று நான் நம்புகிறேன்.

எனது விசராணை நாள் என் மீது
விதிக்கப்பட்டு விட்டது . உங்களது விசாரணை விரைவில் வரும் .நீங்கள்
விசாரணையின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நம்புகிறேன் .வாழ
வேண்டியவர்களுக்கு நீங்கள் செய்த அநீதிகளுக்கு நீங்கள் முகம் கொடுக்க
வேண்டும்.

உலகில் உங்களது ஆயுள் முடியும் முன்னர் எனது ஆயுள்
இப்போது முடிந்து கொண்டிருக்கின்றது நீங்கள் அமெரிக்க மக்கள் மற்றும்
மற்றும் உலகம் முன்னிலையில் குறிப்பாக ஈராக் மக்கள் முன்னிலையில்
மன்னிப்பு கேட்டு இரஞ்ச வேண்டும்

ஜஸாக் அல்லாஹ் தமிழில் -அய்யாஷ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum