Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்
2 posters
Page 1 of 1
வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்
வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம் ...!!!
மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும்.
இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும்வாய்ப்புண்டு.
இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ,வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இதுஅலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல.
வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்:-
கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்தரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு வெயின் என்றுபெயர்.
வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள்.
இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்றுஅழைக்கிறோம்.
வெரிகோஸ் வெயின் (Varicose Vein) நோய் எதனால் வருகிறது
மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித்தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின்பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லதுவீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக,மலச்சிக்கல்தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.
அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது,ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசைவற்று உட்கார்ந்திருப்பதுபோன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கானவாய்ப்பு உள்ளது.
ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தைஇதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும்போது,ரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்தநாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும்.ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவைஎன்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வெரிகோஸ் வெயின் (Varicose Vein) நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்
· அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதியபராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம்.
· பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும்.
· வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு
· கருவுற்றிருக்கும் பெண்களக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில்ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.
அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும்.
பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கானவாய்ப்பு அதிகம் உள்ளது.
அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே வேலை செய்வது, (நர்ஸ், போலீஸ்,செக்யூரிட்டி வேலைகளில் இருப்பவர்கள்) அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வெரிகோஸ் வெயின் (Varicose Vein) நோய்க்கான அறிகுறிகள் என்ன?
· தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும்.
· கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல்.
· பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல்.
· பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.
· கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாககருதிவிடுவது உண்டு)
· வெரிகோஸ் வெயின் (Varicose Vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.
வரும்முன் தடுக்க
இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனைஅவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பது நல்லது.
தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணியவேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்கவேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சிகிச்சை
வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கானசிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாகஉருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும்வேதனைகளைக் குறைக்க முடியும்.
அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாகபயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு ரத்த நாளத்தின் மூலமாக இந்நோய்ஏற்பட வாய்ப்புண்டு.
Microsclerotheraphy, Laser Surgery, Endovenous Ablation Theraphy, Endoscopic Vein Surgery, Ambulatory Phlebectomy, Vein Stripping And Ligation, உள்ளிட்ட முறைகளில் இந்நோய்க்குசிகிச்சை அளிக்க இயலும்.
வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும்,வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள்.
ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள்உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன . இந்த போன்ற உபோகமான தகவல்களை அனுப்பி மற்றவர்களுக்கும் தெரிந்து பயன் அடைய வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு இன்று ஒரு தகவல் சார்பாக நன்றியே தெரிவித்து கொள்கிறோம்
தகவலுக்கு நன்றி
தேனிதுறை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்
பகிர்வுக்கு நன்றி :] சம்ஸ் ........
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!
» வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்
» கருஞ்சீரகம் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள்
» கருஞ்சீரகம் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள்
» பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்
» வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்
» கருஞ்சீரகம் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள்
» கருஞ்சீரகம் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள்
» பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum