சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்! Khan11

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!

2 posters

Go down

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்! Empty 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:31

தம்மாம்: நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம்.

நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும், பலர் விசிட் விசா அல்லது ஃப்ரீ விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை. விசிட் விசா மற்றும் ஃப்ரீ விசாவில் வருபவர்களுக்குத் தான் சிக்கல்கள் அதிகம்.

விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும், ஃப்ரீ விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதி அரேபியாவின் நிலை.

நம்மில் சிலர் நான் சொந்த விசாவில் தான் சவூதிக்கு வந்திருக்கேன் என சொல்வதுண்டு. அவர்களின் அறியாமையால் அப்படி சொல்வதை காலம் கடந்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

அது சரி சொந்த விசா என்றால் என்ன? என நாம் விசாரித்தபோது நமக்கு தலையே சுற்றிவிட்டது. இதையா? இவர்கள் இவ்வளவு பெருமையாக சொன்னார்கள் என சொன்னவர்களை பார்த்து நம்மை பரிதாபப்பட வைக்கும். அந்தளவுக்கு ஃப்ரீ விசா ஆபத்தானது,

இப்போது விஷயத்திற்கு வருகிறேன், சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு ஓட்டுனர் விசா வேண்டுமென்றோ அல்லது தனது கடை மற்றும் கம்பெனிகளுக்கு தொழிலாளர் விசா வேண்டுமென்றோ அரசாங்கத்திடம் முறையாக விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட விசாவை பெற்றுக்கொண்டு அதை இங்குள்ள சில புரோக்கர்கள் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை அந்த விசாவை வெளிநாட்டு மோகம் கொண்ட அப்பாவி மக்களிடம் விற்று விடுவார்கள்.

அது மாதிரி விசாவில் வருபவர்கள் எங்கே வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசை வலையில் சிக்கியவர்கள் வீட்டை விற்று, நகைகளை விற்று ஒரு வழியாக சவூதிக்கு வந்ததும் மெடிக்கல் செக்கப்புக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3,000, இன்சூரன்ஸ் மற்றும் இகாமா எடுப்பதற்கு ரூ. 30,000 என மொத்தம் ரூ.33,000 செலவழிக்க வேண்டும்.

இந்த செலவுகள் அனைத்துமே அவரவர்கள் பொறுப்பு. இகாமா கிடைத்ததும் அவர்களே வேலையும் தேடிக்கொள்ள வேண்டும். வேலை கிடைத்ததோ இல்லையோ மாதம் தவறாமல் விசா கொடுத்த அரபிக்கு 300 ரியால் அதாவது ரூ.4,300 கொடுத்தாக வேண்டும். இது தவிர சாப்பாடு மற்றும் தங்குமிடமும் அவரவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இது போன்ற விசாவில் வருபவர்கள் சராசரியாக 2,000 ரியாலில் இருந்து ,2500 ரியால் வரைக்குமே மாதச் சம்பளமாக பெற முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2500+2400=4,900 ரியால் செலவழித்து இகாமாவையும் புதுப்பிக்க வேண்டும். ஒரு மாதச் சம்பளம் 2,500 ரியால் ஆகும்.

செலவினங்களின் வகைகள்:

தங்குமிடம் - 300 ரியால்
சாப்பாடு - 400 ரியால்
அரபிக்கு கொடுப்பது - 300 ரியால்
இகாமா புதுப்பித்தல் - 400 ரியால்
போக்குவரத்து செலவு- 150 ரியால்
போன் செலவு - 150 ரியால்
------------
மொத்தம் - 1,700 ரியால்
------------
இதில் 2,000 ரியால் சம்பளமாக இருந்தால் 300 ரியாலும், 2,500 ரியால் சம்பளமாக இருந்தால் 800 ரியாலும் செலவினங்கள் போக மிஞ்சும். மொத்தத்தில் மாதம் ரூ.5,000- 10,000 வரை மட்டுமே குடும்பத்தாருக்கு அனுப்ப முடியும்.

இதையும் கூட சுதந்திரமாக பெற முடியாது! ஜவசாத் என்னும் காவல்துறைக்கு பயந்தே சம்பாதிக்க வேண்டும். காரணம் ஹவுஸ் டிரைவர் விசா அல்லது மற்ற ஃப்ரீ விசாக்களில் வெளியில் வேலை பார்ப்பது சட்டவிரோதமாகும். இப்போது இத்தகைய தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக ஜவசாத் எனும் காவல்துறை அதிரடியாக ஹவுஸ் டிரைவர் விசாவில் வெளியில் வேலை பார்ப்பவர்களையும், ஃப்ரீ விசாவில் வந்து வெளியில் வேலை பார்ப்பவர்களையும் சல்லடை போட்டு தேடி வருகிறது.

பாவம், விசாவுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வந்திருக்கும் நமது சகோதரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதை நினைக்கும்போது வேதனையே மிஞ்சி நிற்கிறது.

எனதருமை சொந்தங்களே, இனியாவது வெளிநாட்டு மோகத்தில் மற்றவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் தீவிரமாக விசாரித்து கூடுமானவரை கம்பெனி விசாக்களில் வந்து வேலை பார்ப்பது போல் அமைத்துக் கொள்ளுங்கள்

ராஜு சரவணன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்! Empty Re: 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 23:45

@. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum