Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழக தலை நகரத்தில் தரம் தாழ்ந்து போன 'தாய் தமிழ்' மொழி - 'சென்னையில் ஒரு நாள்' அனுபவம் !
Page 1 of 1
தமிழக தலை நகரத்தில் தரம் தாழ்ந்து போன 'தாய் தமிழ்' மொழி - 'சென்னையில் ஒரு நாள்' அனுபவம் !
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி" எங்கள் தமிழ் குடி என்று நம் தமிழ் மொழியின் தொன்மையான வரலாறை நாம் பேசிக் கொள்வதுண்டு. செந்தமிழ் நாடெனும் போதினிலே, நல்ல தேன் வந்து பாயுது காதினிலே என்றும் தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்றும் தமிழுக்காக முழங்கினான் மகா கவி பாரதி, 'வள்ளுவன் முதல் வைரமுத்து' வரை ஆயிரமாயிரம் தமிழ் புலவர்கள், சான்றோர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் என்று தமிழை நம்மிடம் கொண்டு சேர்த்து விட்டனர். ஆனால் தாய் மொழியாம் நம் தமிழ் மொழி இன்று படும் பாட்டை கண்ணுற நேரும் போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
தமிழ் நாட்டின் தலை நகரமாம் சென்னையில் கூட தமிழ் மொழியினை பேசுபவர்கள் மூன்றாம் தர குடிமக்களாகவே பாவிக்கப்படுகிறார்கள். தமிழில் பேசுபவர்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு, அவர்களுடன் உரையாடும் (தங்லீஸ் பேசும் தமிழ் மக்கள்.!?) அவர்களிடம் மிக மோசமாக கதைப்பதும், தரம் தாழ்த்தி பதிலளிக்கும் கேடு கேட்ட கலாச்சாரமும், இப்போது சென்னையில் மிக வேகமாக பரவி வருகிறது.
நண்பர் ஒருவர் தனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்தை, தமிழுக்கு நேர்ந்த சோக அனுபவத்தை, மிகுந்த மன வருத்தத்துடன் இன்று ஒரு தகவலுடன் பகிர்ந்து கொள்கிறார்.
"அலுவலகப் பணிகளின் மன அழுத்தத்தை கொஞ்சம் குறைக்க எண்ணி, கடந்த வாரம் நானும் என் நண்பர்களும் சென்னையில் உள்ள 'சத்தியம்' திரை அரங்கிற்கு மகிச்சியோடு சென்றோம். ஆனால் நாங்கள் தமிழை பேசிய குற்றத்திற்காக அசிங்கபடுத்தபடுவோம் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை. திரை படத்திற்கான நுழைவு சீட்டை பெற வரிசையில் காத்திருந்து நகர்ந்தது முன்னுக்கு சென்றோம். அப்போது நுழைவு சீட்டினை கொடுப்பவர் எங்களிடம் வந்து "ட்ரிங்க்ஸ் பண்ணி இருந்தா தேட்டருக்குள்ளார அலோடு இல்லே. அப்டியே போனாலும் நாங்க ஊத சொல்லி செக் பண்ணுவோம்" என்று எச்சரித்தார். எங்களுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என்று கண்ணியமாக பதிலளித்தோம். அதற்கு அவர், "தம்பிகளா இங்கு வரும் அனைவரிடமும் இதனை சொல்லுவது எங்களது கடமை அது தான் சொன்னோம்" என்று கடுகடுப்பான முகத்துடன் சொன்னார். அவரின் உண்மையான கடமை உணர்ச்சியை கண்டு நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம். ஆனால் எங்களுக்கு நுழைவு சீட்டு வழங்க, அது வரை தாமதம் செய்து கொண்டே இருந்தார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு நபர் முக்கால் பேன்ட், டி ஷர்ட் அணிந்த வண்ணம் கையில் பச்சை குத்தி, 'முள்ளம் பன்றி' 'ஸ்பைக் தலையுடன் வந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் திரை படத்திற்கான டிக்கெட் கேட்டார். 'I NEED TWO TICKETS FOR GI JOE MOVIE' என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதற்கு டிக்கெட் கொடுப்பவர் PLEASE WAIT SIR.. I WILL CHECK என்று கூறி அவருக்கு டிக்கெட் இருக்கிறது என்று சொல்லி, எந்த விசாரணையும் இன்றி உடனே இரண்டு டிக்கெட் கொடுத்து, WELCOME SIR என்று சிரித்தபடியே அவரை திரையரங்கிற்குள் அனுப்பினார்.
இது வரை அமைதி காத்த எங்களுக்கு, இந்த சம்பவம் கடுமையான மன வேதனை அளித்தது. நாங்கள் டிக்கெட் கொடுப்பவரிடம் நெருக்கமாக சென்று, "ஏன் நீங்கள் அந்த அர டவுசர் போட்ட சார் கிட்ட, எங்களிடம் கேட்ட கேள்வியை கேட்கவில்லை என்று கேட்டோம். அதற்கு அவர் "தம்பி நீ சொல்வது புரியவில்லையே" என்று சொன்னார். நாங்கள் கொஞ்சம் மரியாதை இல்லாமலேயே அவனை "ஏன்டா பரதேசி.. தமிழில் டிக்கெட் கேட்டா குடிச்சிட்டு வந்தியானு கேட்கிறா... ஆனா ஆங்கிலத்தில் கேட்டால் WELCOME SIR என்று சொல்லுறா. தமிழ் பேசினா உங்களுக்கு என்னடா அவ்வளவு இளக்காரமா..? என்று கொஞ்சம் கூச்சல் சத்தம் போட்டு பேசினோம்.
இதற்கிடையே ஒரு நியாயவான் வந்து, எங்களை சுட்டிக் காட்டி "இவர்கள் தமிழ் வெறி பிடித்தவர்கள். இவர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம், என்று டிக்கெட் கொடுப்பவருக்கு திரையரங்கிற்குள் நல் அறிவுரை வழங்கி பிரச்னையை முடித்து வைக்க முற்பட்டார். ஆனால் அதன் பின்பு தான் அவருடனும் ஒரு சிறு தகராறு ஏற்பட்டது. நாங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கழிக்க நினைத்த, விடுமுறை நாளான, அந்த வார கடைசி நாள், தமிழில் பேசிய ஒரே காரணத்திற்காக தகராறில் முடிந்தது. ஏன் எங்களுக்கு ஆங்கிலம் பேச தெரியாதா..? தமிழ் நாட்டில் நாங்கள் பேச விரும்பவில்லை. எங்கள் தாய் மொழியை தமிழ் நாட்டின் தலை நகரத்தில் கூட பேச முடியவில்லை என்றால் இதை விட ஒரு அவமானம் வேறெதுவும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் எல்லாம், தமிழ் வெறியர்களாக சித்தரிக்கும் கொடுமைகள் அரங்கேற்றப்படும் 'தலைமை செயலகமாக' சென்னை உருவெடுத்து வருவது வேதனையான உண்மை.
மீண்டும் சம்பவ இடத்திற்கே வருவோம். "பின்னர் இந்த தகராறு விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த திரையரங்கு உயர் ஊழியர்கள் சிலர் எங்களிடம் வந்து, 'அவன் புது பையன் சார் நீங்க போயி படம் பாருங்க' என்று திரை அரங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள்.
இந்த சம்பவத்தை அசை போட்டு பார்க்கும் போது 'இது எங்களுக்கு மட்டும் நடக்கும் அவமானம் இல்லை. சென்னையில் தமிழ் பேசித் திரியும் தமிழர்கள் அனைவரும் தினம் தினம் படும் வேதனை என்பதை நாங்கள் உணர ஆரம்பித்தோம். படத்திற்கான இடைவெளி நேரம் வந்தது. ஏறத்தாழ அரை மணி நேரம் வாக்கு வாதம் செய்ததில் ஏற்பட்ட தாகத்தை தீர்க்க நினைத்து ஏதாவது குளிபானம் வாங்கி குடிக்கலாம் என்று பார்த்தால், எங்கு நோக்கினும் PEPSI , COCA COLA , என்று மானம் கெட்டவர்கள் குடிக்கும் குளிர் பானமாக தான் இருந்தது. சரி வேண்டாம் வெறும் தண்ணிர் மட்டும் குடிக்கலாம் என்று பார்த்தால் அதிலும் கூட PEPSI COMPANY என்று போட்டு இருக்கிறது அதை தூர போட்டு விட்டு யோசித்து பார்த்தோம்.
நம்முடைய, இந்திய திரு நாட்டில், உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய பானம் ஒரு திரை அரங்கில் கூட இல்லையே... ஏன்.?? என்று மீண்டும் யோசிக்க தூண்டியது. நம் நாட்டில் பணம் குளிர் பான உற்பத்தியாளர்களே இல்லையா..?? ஏன் உள்நாட்டு தயாரிப்புகளை இவர்கள் விற்பனை செய்ய தயங்குகிறார்கள்..??? அப்போது ஒரு உண்மை புலப்பட்டது... பணத்திற்காக மலத்தை தின்னும் சில அரசியல் காட்டுமிராண்டிகள் இருக்கும் வரை 'மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை' பாதிக்க படுவது அப்பாவி மக்கள் தான். அது போன்ற கேடு கெட்ட அரசியல்வாதிகளின் அரவணைப்பு இவர்களுக்கு இருக்கும் வரை எதுவும் சீர் செய்ய படப் போவதில்லை.
ஆகவே, பல கோடி இந்திய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களாக இருக்கும் உள் நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்.
எங்கள் தமிழ் பேசும் நல்லுலகமே... தமிழ் நாட்டிலாவது எங்களை தமிழில் பேச விடுங்கள். செந்தமிழ் பூங்காக்கள் அமைப்பதை காட்டிலும், செந்த்தமிழ் மொழியை 'வாய்' 'மை'யில் அழகான வார்த்தைகளாக மாற்றுங்கள்.
எங்களுக்கு தமிழ் நாட்டில் தமிழ் பேச 'அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே... உங்களுக்கு எப்படி..???
Similar topics
» தாய் மொழி எதுவானாலும் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: ஜெயலலிதா
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» தூய தமிழ்ச்சொற்கள்(வட மொழி - தமிழ் மொழி)
» தாய் மொழி
» ஜாக்கி ஷெராப்பின் தமிழ் பட அனுபவம்
» உலகத் தாய் மொழி தினம் – தாய் மொழியை காக்க மெரீனா கடற்கரையில் கையெழுத்து பரப்புரை (படங்கள்)
» தூய தமிழ்ச்சொற்கள்(வட மொழி - தமிழ் மொழி)
» தாய் மொழி
» ஜாக்கி ஷெராப்பின் தமிழ் பட அனுபவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum