சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் Khan11

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள்

Go down

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் Empty மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள்

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 8:29

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் 50a85a12-3bbb-4fda-8753-14f3650da2da_S_secvpf
இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக்குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாது:-

மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புகளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது.

இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை நாளமில்லா சுரப்பிகள். நம் உடலில் பிட்யூட்டரி தைராய்டு, பாராதை ராய்டு, அட்ரீனல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் என்று அழைக்கிறோம்.

நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும். கருவில் குழந்தை உருவாகும் போது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந்திருக்கும்.

சுமார் 15 முதல் 25 கிராம் எடையுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொண்டது. வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள் நடுவில் இணைப்பு திசுவால் இணைக்கப்பட்டுள்ளது.

தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணைக்கப்பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங்கும் போது குரல் வளையோடு தைராய்டு சுரப்பியும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும்.

தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகிற தென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையை விட மிகுதியாய் இருக்கிறது என்பதை அறியலாம்.

தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவாகி இரண்டு வார காலத்தில் இருந்தே துவங்கி விடுகிறது. சுரக்கும் ஹார்மோனின் பெயர் தைராக்சின் தைராய்டு.

தைராய்டு செல்களிடையே செழிப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற அமிலத்துடன் இணைந்து தைராக்சின் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட ஹார்மோன் தைரோகுளோபுலின் சேமித்து வைக்கப்படுகிறது.தேவையான பொழுது இவை ரத்தத்தில் கலக்கப்படுகிறது.

இந்த தைராக்சின் உருவாகும் செல்கள் ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், தைராய்டு ஹார்மோன்கள் பெரிதும் உதவுகிறது.

உடல் வெப்ப நிலையை சீராக வைக்கவும் உதவுகிறது. செல் மற்றும் திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலில் வெப்பம் உண்டாக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். புரதப் பொருள்களை சிதைவுப்படுத்தி செல்களின் வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் உதவுகிறது.குளுகோஸ் உறிஞ்சப்படுவதை தூண்டுகிறது.கிளைக்கோஜன் சிதைவுபட உதவுகிறது.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளில் இருந்து அதிக அளவில் விடுபட வைக்கிறது. வைட்டமின் ஏ உருவாக ஏதுவாக உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது. குடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்துகிறது.இனப் பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற உதவுகிறது. பால் சுரப்பு கோளங்களை தூண்டி அதிக அளவில் பாலை சுரக்க வைக்கிறது.

தைராய்டு சுரப்பியின் இயக்க குறைவினாலோ, மிகுதியாலோ நோய்கள் ஏற்படலாம். தைராய்டு இயக்க குறை நோயை என்றும் தைராய்டு இயக்க மிகை நோய் என்றும் அழைக்கின்றனர்.

குழந்தை கருவில் இருக்கும் போதே தைராய்டின் இயக்கம் குறைந்திருந்தால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையில் குழந்தை சுறு சுறுப்பாக உலாவவில்லை என்ற அறிகுறியின் மூலம் அறியலாம். அப்படிப்பட்ட குழந்தைகள் குழந்தை பிறந்த உடனேயே வீறிட்டு அழுவதில்லை. உடனே மலம் கழிப்பதில்லை. மூச்சு எடுத்து விடக் காலம் கடத்தும், மற்றும் வயிறு பெறுத்து, தொப்புளில் குடலிறக்கத்துடன் காணப்படும். இக்குழந்தைக்கு இயல்பாக பிறந்தவுடன் ஏற்படும் மஞ்சள் காமாலை நெடுநாள் வரை நீடிக்கும்.

பிறந்தது முதல் குழந்தையின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் மற்ற குழந்தைகளை விட பின் தங்கியே இருக்கும். வயதாக வயதாக குழந்தையின் அறிவு முதிர்ச்சி பின்தங்கக் துவங்கும்.பெற்றோர் இப்பருவதில் இதனை உணரத்துவங்குவார்.

கர்பத்தில் குறைபாடுகள், நினைவுக் குறைபாடுகள் ஆகியன தெரிய ஆரம்பிக்கும். பிறந்த சில ஆண்டுகளுக்கு பின் தைராய்டு குறை ஏற்பட்டால், இக் குழந்தைகளின் செயல்வேகம் குறைந்து இருப்பதை காண முடியும். பருவ வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தக்க சமயத்தில் பருவம் எய்துவதில்லை. இதுவே வயது வந்தவர்களுக்கு தைராய்டு குறை ஏற்படின் அதைகண்டு பிடிப்பதற்கே மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் Empty Re: மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள்

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 8:29

தலைமுடி கொட்டுதல், புருவங்களில் இருந்து முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். முகம் எப்பொழுது பார்த்தாலும் தூங்கி விழிந்தது போலவே இருக்கும். கண்ணை சுற்றி ஒரு வீக்கம் இருக்கும். பேச்சு ஏற்றதாழ்வில்லாமல், மெதுவான வேகத்தில் இருக்கும். குரல் தடித்திருக்கும். மலச்சிக்கல் நீரி பிரியாமை, உடல் முழுவதும் வீக்கம் ஆகிய பிற அறிகுறிகள் தோன்றலாம்.

ஆண்மைக் குறைவு, மாத சுழற்சியின் போது உதிரம் அதிகம் போதல், மலட்டுத்தன்மை ஆகியவையும் தைராய்டு இயக்க குறையால் ஏற்படலாம். முதுமையில் தைராய்டு இயக்க குறைவு ஏற்பட்டால் அது நரம்புகள் பலம் இழப்பு, நரம்புகள் தடித்துப் போவதால் கைகளிலும், கால்களிலும் மதமதப்பு போன்றவை ஏற்படலாம்.கைகால் வலிப்பு உண்டாகலாம். சிறுமூளை பாதிக்கப்பட்டு தள்ளாட்டமும் நடுக்கமும் ஏற்படலாம்.

வளர்சிதை மாற்றம் அதிக அளவில் நடப்பதால் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். அதிக அளவு வெப்பத்தை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. வயிற்றுப் போக்கு அதிகம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உதிரம் குறைவாகவே வெளியேறும். மனதில் இனம் புரியாத பயம், படபடப்பு ஏற்படும். கைகள் நடுங்கும், இதயம் படபடக்கும். உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டும், எளிதில் சோர்வு ஏற்படும், சரியான உறக்கம் ஏற்படாது. வயதானவர்களுக்கு இந்த நோய் ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மாத சுழற்சி சிலசமயம் நின்று விடலாம்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப் புண்டு, இதயத்தின் இயக்கம் சீர்கெடும். நாடித்துடிப்பு 200-க்கு மேலாகவும் சீரில்லாமலும் இருக்கும்.

தைராய்டு நோய் ஒருவருக்கு இருக்கின்றதா என்று ஆராயும் போது இரண்டு செய்திகள் கவனிக்கப்படுகின்றன. தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாகவோ, சரியாகவா அல்லது மிகுதியாகவோ என்பது. தைராய்டு சுரப்பின் வடிவம் எவ்வாறு உள்ளது என்பது உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை பரிசோதிப்பது தைராய்டு செயல்படும் நிலையை அறிய உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை அளப்பது, அடிப்படை வளர் சிதைமாற்ற விகிதத்தை கணிப்பது, போன்றவை மற்ற பரிசோதனை முறைகள் ஆகும். இதய மின் வரைபடங்களில் ஏற்படும் மாறுதல்கள் கூட தைராய்டு செயல்பாடு நிலையில் உள்ள மாறுபாடுகளை எடுத்துக் காட்டும்.

தைராய்டு சுரப்பியின் வடிவத்தை அறிய எக்ஸ்-கதிர் படம் கணினி அச்சு வெட்டுப்படம். காந்த அதிர்வு படம் மற்றும் நுண் ஒலித் துருவு படங்கள் உதவுகின்றன.

கதிரியக்க அயோடின், டெக்னீஷியம் 99 எம், தாலியம் ஆகிய மூலகங்களைத் தைராய்டு சுரப்பி கவரும் தன்மை கொண்டது. இத்தன்மையை பயன்படுத்தி சில துருவப் படங்கள் எடுப்பதன் மூலம் தைராய்டின் வடிவம் மட்டுமின்றி எந்தப் பகுதி மிகுதியாக வேலை செய்கின்றது, எந்தப் பகுதி குறைவாக வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்.

தைராய்டு இயக்க கோளாறுகளால் ஏற்படும் நோயை தக்க மருத்துவரின் உதவியுடன் அறிந்து அதற்கு உகந்த மருந்துகளை உட்கொள்வது சிறந்தது. மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதால் அயோடின் சத்து நம் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது.இதனால் தைராய்டு நோய்கள் முளையிலேயே தடுக்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் Empty Re: மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள்

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 8:30

நவீன மருத்துவ முறைகளில் தைராய்டு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்துகள் உள்ளன என்கிறார் சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.

தைராய்டு சுரப்பிக் குறைபாட்டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ மிகவும் குறைவாகச் சுரந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படும்.

தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளைவுகள்:

36 நாட்கள் இடைவெளியில் மாத விலக்குத் தோன்றினால், சில வேளைகளில் மாத விலக்கே ஏற்படாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாத விலக்காகி குறைந்த உதிரப் போக்கும் அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப்படாது இயல்பான மாதப்போக்கு இருந்தாலும் முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்து இருக்கும். இத்தகைய பிரச்சினையால் முட்டை வெளியிடப்பாத குறைபாடுள்ளவர்கள் உணவு, முறை மாற்றம் செய்து கொழுப்பைக் குறைக்கலாம்.

அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட்டுத் தன்மை வரும். அதிக உடற்பயிற்சி செய்தாலும், முட்டை வெளிப்படுவது தடைபடும், நீண்ட தூரம் ஓட்டம் ஆபத்தானது, மாத விலக்கு ஒழுங்காக வராத நிலை இருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும் முட்டை வெளிப்படுவதில் சிக்கல் ஏற்படும். இக்குறைபாட்டை நவீன சிகிச்சை மூலம் சரிப்படுத்தினால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்புக் குறை என்பது பொதுவான மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இருக்கின்றது. அயோடின் குறைபாடு அல்லது அயோடின் வெளிப்பாடு போன்ற காரணிகள் அதன் இடரை அதிகரிக்கும். தைராய்டு சுரப்புக் குறைவுக்கு பல காரணிகள் உள்ளன.

தைராய்டு சுரப்புக் குறையானது பேற்றுக்குபின் தைராய்டு சுழற்சியை விளைவிக்கும். இந்த நிலையானது அனைத்து பெண்களில் 5 சதவீதம் பேருக்கு பிரசவத்திற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் Empty Re: மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள்

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 8:30

முதல் கட்டம் என்பது வழக்கமாக அதி தைராய்டியம் ஆகும். பின்னர் தைராய்டு ஆனது இயல்புக்கு திரும்புகிறது அல்லது பெண் தைராய்டு சுரப்புக் குறைக்குத் திரும்புகிறது. அந்த பெண் பேற்றுக்குப் பின் தைராய்டு சுழற்சியுடன் தொடர்புடைய தைராய்டு சுரப்புக் குறையை உணர்கிறார்.

ஐந்தில் ஒருவர் வாழ்க்கை முழுவதும் சிகிச்சை தேவைப்படுகின்ற நிரந்தர தைராய்டு சுரப்புக் குறையைப் பெறுவார். தைராய்டு சுரப்புக்குறைக்கு விரவும் தன்மையுள்ள மரபுப்புரவலும் சில நேரம் ஆட்டோசோம் மங்கலும் காரணமாக அமையலாம்.

தைராய்டு சுரப்புக்குறை ஒப்பிடுகையில் வீட்டு நாய்களுக்கு வரும் பொதுபாலின் நோயுமாகும். இதில் சில குறிப்பிட்ட நாய் இனங்களில் அது குறிப்பிடத்தக்க உணர்தன்மை மிகுதியுடையவையாக உள்ளன. தற்காலிகமான தைராய்டு சுரப்புக் குறைக்கு உல்ஃப்- சைக்காப் காரணமாக இருக்கலாம்.

அதிகமாக அயோடின் எடுத்துக் கொள்வது தைராய்டு சுரப்புக் குறையை குணப்படுத்தப் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக அவசரக் காலங்களில் அயோடின் என்பதும் தைராய்டு ஹார்மோன்களுக்கான பற்று பொருளாகும், அதன் அளவு அதிகமானால் உட்கொள்ளப்படும்.அயோடின் சிறு அளவையே எடுத்துக் கொள்ளும் படி கட்டுப்படுத்தப்படும். இதனால் ஹார்மோன் உற்பத்தி குறைக்கப்படும்.

மோசமான தசை தளர்ச்சி, களைப்பு, குளிர் தாங்க முடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல், உளச் சோர்வு, தசைப்பிடிப்புகள் மற்றும் மூட்டு வலி, மணிக்கட்டு குகை நோய், முன்கழுத்துக் கழலை, மெலிதல், விரல் நகங்கள் நொறுங்குதல், மெலிதல், முடி நொறுங்குதல், வெளிரிய தன்மை, குறைவான வியர்வை, உலர்ந்த அரிக்கும் தோல், எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம், குறை இதயத் துடிப்பு, (குறைவான இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்), போன்றவை தைராய்டு நோய்க்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் Empty Re: மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum