சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு Khan11

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு

Go down

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு Empty எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு

Post by *சம்ஸ் Mon 22 Apr 2013 - 8:00

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு 81f49df8-0850-4c17-8faf-6e2fa1d78301_S_secvpf
நாகர்கோவில், ஏப். 22-

குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி. (வயது 68). மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். நாகர்கோவில், ராமவர்மபுரம் சிதம்பரநாதன் தெருவில் வசித்து வரும் எம்.ஆர். காந்தி தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்றும் இதுபோல நேசமணி நகர், ஆசாரி பள்ளம் ரோட்டில் நடைபயிற்சிக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த எம்.ஆர். காந்தி பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பற்றி தெரியவந்ததும், குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். வெட்டியவர்களை உடனே கைது செய்யக் கோரி நாகர்கோவில், ஆத்திக்காட்டுவிளை, பிள்ளையார்புரம் பகுதிகளில் மறியல் போராட்டம் நடந்தது.

பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இச்சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத் தப்பட்டது.

இன்று காலையில் மாவட்டத்தின் முக்கிய நகரங்களான நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, தோவாளை, கன்னியாகுமரி, சுசீந்திரம், ஈத்தாமொழி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிறு கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.

டீக்குடிக்கவும் வழியின்றி தவித்தனர். எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட தகவல் பரவியதுமே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேர “ஸ்டே பஸ்”களை இயக்கவில்லை. இருந்தும் இரவில் வெளியூர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.

களியக்காவிளையில் 3, மார்த்தாண்டத்தில் 3, குலசேகரத்தில் 8, தக்கலை 5, திருவட்டார் 3, குளச்சல் 2, இரணியல் 4, ஆரல்வாய்மொழி 1, திருப்பதி சாரம் 1 மற்றும் நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி அருகே ஒன்று என மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைக்கப்பட்டன. நள்ளிரவில் நடந்த பஸ் உடைப்பு சம்பவங்களால் இன்று காலையில் போக்குவரத்து அதிகாரிகள் பஸ்களை இயக்க தயங்கினர்.

இதனால் காலை 9 மணி வரை “டவுன் பஸ்”கள் எதுவும் இயக்கப்படவில்லை. போக்குவரத்து நடைபெறாததால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வெளிமாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் பயணிகளை இறக்கி விட்ட பின்பு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புறப்பட்டுச்சென்றது.

திருவனந்தபுரம் செல்லும் பஸ்களும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. நகருக்குள் பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.

பாரதீய ஜனதா கட்சியினரின் போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் உடைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 300 போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் பதட்டமான பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். காலை 10 மணிக்கு மேல் ஓரளவுக்கு பதட்டம் தணிந்ததை தொடர்ந்து உள்ளூர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டன.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை பிரச்சினை: புதுவையில் கடைகள் அடைப்பு
» பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு; ஜெயலலிதா உத்தரவு
» நியாயவிலைக் கடைகள் இன்று முதல்செயல்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum