Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு
Page 1 of 1
பா.ஜனதா செயலாளர் கொலை: கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு
சென்னை, ஜூலை.22–
சேலத்தில் பாரதீய ஜனதா மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு பாரதீய ஜனதா அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு சிவசேனா, அகில பாரத இந்து மகாசபா ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் கல் வீசி உடைக்கப்பட்டது. இதையடுத்து இரவு 10 மணிக்கு மேல் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டு டெப்போக்களுக்கு திருப்பி விடப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு பிறகு தான் கிராமப்புறங்களுக்கு 4, 5 பஸ்களாக சேர்த்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. மார்த்தாண்டம், திருவட்டார், இரணியல், குலசேகரம், களியக்காவிளை, தக்கலை, நேசமணி நகர், புதுக்கடை ஆகிய இடங்களில் 30 பஸ்கள் மர்ம நபர்களால் கல்வீசி உடைக்கப்பட்டது.
மார்த்தாண்டத்தில் பஸ்கள் மீது கற்களை வீசிய ஜெகன், கிருஷ்ணகுமார், மணிகண்டன் மற்றும் பினு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். காலை நேரத்தில் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பரித விப்புக்குள்ளாயினர். மார்த்தாண்டத்தில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் டீக்கடைகள் கூட திறக்கப்படவில்லை.
ஈரோடு நகரில் இன்று பாதிக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோபியில் கடை அடைப்பு முழுமையாக இருந்தது. கவுந்தப் பாடி, பு.புளியம்பட்டி, சென்னி மலை ஆகிய பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
சத்தியமங்கலம், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கடந்த 20–ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடந்ததால் இன்று கடையடைப்பு நடக்கவில்லை. சேலத்தில் அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஓசூரில் 3 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கோவை நீலகிரி மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, உக்கடம் டவுண் ஹால் பகுதி கடை வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பேரூர் அருகே பஸ் கல் வீசி உடைக்கப்பட்டது. காந்திபுரத்தில் இருந்து வேடப்பட்டி சென்ற பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. அதிர்ஷ்ட வசமாக பணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம் கடையடைப்பு முழுமையாக இருந்தது. இங்கு டாக்சி ஆட்டோக்களும் ஓட வில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 50 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மதுரையில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. சேலத்தில் இருந்து சிவகாசி வந்த அரசு பஸ் இன்று காலை 5 மணிக்கு திருத்தங்கல் அருகே சென்றபோது இருளில் மறைந்து இருந்த சிலர் பஸ் மீது கல் வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு பேக்கரி கடை மீதும் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அந்த கடையின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
ராஜபாளையம் செவல்பட்டி பகுதியில் கடைகளை அடைக்க வற்புறுத்திதயாக ராஜபாளையம் நகரபாரதீய ஜனதா தலைவர் ராஜ கோபால், உறுப்பினர் மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லில் அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. திருச்சியில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடைகளை அடைக்க வற்புறுத்திய நகர பாரதீய ஜனதா கட்சி செயலாளர் சுப்பிரமணியம், ராமு உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் திருப்புவனம், கதிராமங்கலம், திருநாகேஸ்வரம் ஆகிய இடங்களில் 1000 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை பகுதியில் குத்தாலம், தலைஞாயிறுவில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம், ஆசாத்நகர், மன்னார்குடி சாலை சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருத்துறைப்பூண்டி, புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முழு அமைப்பால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. கடைகளும் திறந்திருந்தன.
நெல்லை மாவட்டத்தில் ஆறுமுகநேரி, ராதாபுரம், கலக்காட்டில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த குறிச்சி மற்றும் மேலநத்தம் கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர். சென்னையில் மறியல் சென்னையில் சைதாப்பேட்டை மார்க்கெட் அருகில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தேனாம் பேட்டையில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையிலும், பெரவள்ளூரில் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலும், அமைந்தகரை அண்ணா வளைவு அருகே சக்கரவர்த்தி தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. சென்னை முழுவதும் 18 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை பழைய பஸ் நிலையம், ஆற்றுப்பாலம், ஆகிய இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா நகர தலைவர் விநாயகம், இந்து முன்னணி நகரத்தலைவர் செல்லத்துரை ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பட்டுக்கோட்டை, கும்பகோணத்திலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த தென்பாதியில் தாலுகா அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகர தலைவர் சதானந்தம், மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர் ஒன்றியம் சார்பில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் ரூபாவதி தலைமையில் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ரூபாவதி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆவேசம் : பஸ்கள் மீது கல்வீச்சு
» இலங்கை பிரச்சினை: புதுவையில் கடைகள் அடைப்பு
» எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு
» யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!
» இலங்கை பிரச்சினை: புதுவையில் கடைகள் அடைப்பு
» எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு
» யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum