சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு . Khan11

மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு .

Go down

மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு . Empty மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு .

Post by veel Wed 1 May 2013 - 22:06

ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது
தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக கூலிமில் முன்னாள்
ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூட்டினர்.

“வேதமூர்த்தி ‘தமது சொந்த நலனுக்காக இந்தியர்களுடைய சுயமரியாதையையும்
கௌரவத்தையும் அம்னோவிடம் அடகு வைத்து விட்டதாக அந்தக் குழுவின் பேச்சாளரான
எம் அசோகன் கூறினார்.

பிஎன், அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் ஆகியவை மீதான தங்களது
மகிழ்ச்சியின்மையையும் வெறுப்பையும் காட்டுவதற்காக 2007ம் ஆண்டும் 2008ம்
ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர்
சொன்னார்.

“ஆனால் அந்த வரலாற்று நிகழ்வுகளை மறந்து விட்டு வேதமூர்த்தி இப்போது அம்னோவுடன் கூட்டு
சேர்ந்துள்ளார்.”kulim1

“ஒரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட இந்தியர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குத்
துரோகம் செய்து விட்ட வேதமூர்த்தியை மலேசிய இந்தியர்கள் ஒரு போதும்
மன்னிக்க மாட்டார்கள்,” என பாயா புசாரில் 500 பேருக்கும் மேல் கலந்து
கொண்ட எதிர்ப்புக் கூட்டத்துக்குப் பின்னர் அசோகன் கூறினார்.

பாயா புசார், பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. அந்தத் தொகுதியில் முன்னாள்
ஹிண்ட்ராப் வழக்குரைஞரும் நடப்பு பிகேஆர் உதவித் தலைவருமான என் சுரேந்திரன், அதன் நடப்பு எம்பி
என் கோபாலகிருஷ்ணன், பிஎன் -னின் ஹெங் சியா கீ, சுயேச்சைகளான ஹமிடி அபு ஹசான், ஒஸ்மான் வாவி
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

kulim2வேதமூர்த்தி ஏப்ரல் மாதம் நஜிப்புடன் புரிந்துணர்வுப் பத்திரம்
ஒன்றில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்தில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மையைப் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்ட பின்னர் அவருடைய
ஆதரவாளர்களில் சிலர் ஆத்திரமடைந்துள்ளனர்.

ஹிண்ட்ராப் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கும் வேதமூர்த்தியின் சகோதரர்
உதயகுமார், தங்கள் போராட்டத்தைக் கடத்தி விட்டதாகக் கூறி வேதமூர்த்தியை
அந்த இயக்கத்திலிருந்து நீக்கினார்.

இந்தியர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக வேதமூர்த்தி தமது உண்ணாவிரதத்தை ‘நாடகமாக்கி விட்டதாக’ அசோகன் சொன்னார்.

நஜிப்பை சந்தித்ததின் மூலம் இந்தியர்கள் எதிர்நோக்கும் எல்லா கடுமையான
பிரச்னைகளையும் புரிந்துணர்வுப் பத்திரம் தீர்த்து விட்டதாக வேதமூர்த்தி
கூறியதாக அவர் குறிப்பிட்டார்.kulim3

“ஆனால் கடந்த காலத்தில் மஇகா உட்பட பல்வேறு தரப்புக்கள் அம்னோ/பிஎன்
அரசாங்கத்திடம் சமர்பித்த பல புரிந்துணர்வுப் பத்திரங்கள் வழியான
முறையீடுகளில் எதுவும் நிறைவேறவில்லை என்பதை அவர் கொஞ்சம் கூட உணரவில்லை,”
என்றார் அசோகன்.

“ஆகவே வேதமூர்த்தி முன்மொழிந்த அந்தக் கோரிக்கைகளை அமலாக்க அம்னோ அரசாங்கம்
விருப்பத்துடன் ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்வது முட்டாள்தனமானதாகும்,”
என்றார் அவர்.

“வேதமூர்த்தி நடத்தியது எல்லாம் நல்ல அரசியல் நாடகம் என்பதை இந்தியர்களாகிய
நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்,” என அவர் வலியுறுத்தினார்.

kulim4இந்தியர்களுடைய வெறுப்பை அதிகம் தேடிக் கொண்டுள்ள இன்னொரு மனிதர்
கூலிம் பண்டார் பாரு முன்னாள் எம்பி-யான சுல்கிப்லி நூர்டின் என அசோகன்
தெரிவித்தார்.

மலேசியா இந்திய சமூகத்துக்குச் சொந்தமானது அல்ல என்றும் அவர்கள்
இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கூறி சுல்கிப்லி இந்து
சமயத்தை “குறை கூறி கண்டனம்” செய்துள்ளார் என அசோகன் கூறிக் கொண்டார்.

சுல்கிப்லி விடுத்த அறிக்கை இந்தியர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. இப்போது அவர் பிஎன் சின்னத்தில்
போட்டியிடும் ஷா அலாமில் உள்ள இந்தியர்கள் அவருக்கு பாடம் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

“சுல்கிப்லி இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தமக்கு வாக்களிக்குமாறு ஷா அலாமில் உள்ள
இந்தியர்களைக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவர் சந்தர்ப்பவாதி, இனவாதி என்ற அவருடைய
உண்மையான சொரூபத்தை இந்தியர்கள் அறிந்துள்ளனர்,” என்றார் அவர்.

“இந்தியர்களாகிய நாங்கள் எங்கள் அதிருப்தியை காட்டுகிறோம். அவருடைய
நடவடிக்கை தேச நிந்தனையானது என நாங்கள் கண்டிக்கிறோம். அந்த நடவடிக்கை இந்த
நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும்,” என அசோகன் மேலும்
கூறினார்.

http://dinaithal.com
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதாவை தாக்கி பேசியதால் கோத்தபாயவின் கொடும்பாவி எரிப்பு
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» யானை தந்தங்கள் எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum