Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அயலவர்களின் உரிமைகளை மதிப்போம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அயலவர்களின் உரிமைகளை மதிப்போம்
அயலவர்களின் உரிமைகளை மதிப்போம்
அயலாருடனும், உறவினர்களுடனும் அன்பாகப் பழகுவதையே இஸ்லாம் விரும்புகிறது. இஸ்லாம் விரும்புவதை முஸ்லிம்களாகிய நாம் முற்று முழுதாகப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்போது தான் நாம் உண்மை முஸ்லிம்களாக முடியும். ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து “அல்லாஹ்வின் றஸ¤லே இன்னாள் (இப்பெண்) தன்னுடைய ஏராளமான (ஸ¤ன்னத்து) தொழுகையாலும், நோன்புகளாலும், தர்மத்தாலும் பிரபல்யம் அடைந்திருக்கின்றாள். ஆனால் அவள் தன்னுடைய நாவினால் தன் அயலகத்தார்களைத் துன்புறுத்துகிறாள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவள் நரகத்திலிருப்பாள்” என்றார்கள்.
“அல்லாஹ்வின் ரஸ¤லே இன்னாள் (இப்பெண்) பர்ளுகளைக் தொழுகிறாள். சொற்ப (ஸ¤ன்னத்து) நோன்புகளும், தொழுகையும் உடையவள். பாற் கட்டியில் சிறிதளவே தர்மம் செய்கிறாள். ஆனால் அவள் தன்னுடைய நாவினால் தன் அண்டை வீட்டாரைச் சிறிதும் துன்புறுத்துவதில்லை” என்று அவர் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்திலிருப்பாள்” என்றார்கள்.
பிரஸ்தாப சம்பவத்திலிருந்து அண்டை வீட்டாரைப் பகைத்துக்கொள்வது எவ்வளவு பாவமான காரியம் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றில் விளங்குகிறது. “தன் அயலான் பசித்திருக்கும் பொது வயிறு நிரம்ப உண்பவன் முஸ்லிம் அல்லன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இதிலிருந்து ஒரு முஸ்லிம் என்பவன் தன் அயலாரின் சகல நிலைகளிலும் பங்குள்ளவனாக இருக்க வேண்டும் என்ற உண்மை புலனாகின்றது. நபி (ஸல்) அவர்கள் அயலாருக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றிக் கூறும் போது “உன்னிடம் உதவி கோரினால் உதவியளித்தல், நோயுற்றால் சென்று பார்த்தல், ஏதாவது நன்மை ஏற்பட்டால் வாழ்த்துக் கூறல், துன்பம் ஏற்பட்டால் அனுதாபம் கூறல், அவன் இறந்தால் அவனது ஜனாஸாவைப் பின் தொடருதல், அவனின் அனுமதியின்றி நமது கட்டடங்களை உயரமாகக் கட்டாதிருத்தல், நீ பழங்களை வாங்கினால் அதில் கொடுத்தல், உனது வீட்டில் சமைக்கும் கறியினால் துன்புறாதிருக்க அதில் அவனுக்குக் கொடுத்தல்.....” என்று தொடர்ந்து விவரித்துக் கூறினார்கள்.
இவை மட்டுமல்ல அயலாருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் உள்ளன. அயலான் நல்லவனாகவோ, தீயவனாகவோ, வேற்று மதமுடையோனாகவோ இருந்தாலும் மரியாதை செய்வது அவசியமாகிறது. அயலான் முஸ்லிம் அல்லாதவனாக இருந்த போதிலும் அயலான் என்னும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றான். ஆகவே, அயலான் யாராக இருந்த போதும் அவர்களின் சுபாவமறிந்து நடந்து கொள்ள வேண்டும். தனது வீட்டின் நாலாபுறம் நாற்பது வீடுகளில் வசிப்பவர்களே அயலாராகக் கருதப்படுகின்றனர். மிகச் சமீபமாகவுள்ளோரை விசேடமாகக் கவனிக்க வேண்டும். இவ்விதமே அயலாரை அயலார் கவனித்து வாழும் போது முழு ஊரில் உள்ளோரும் இணைந்து வாழக்கூடிய பிணைப்பு ஏற்படுகிறது.
அயலார் என்னும் போது அவர்கள் மற்றவர்களின் சகல வசதிகளிலும் கவனம் செலுத்தி வாழ்வது அவசியமாகும். அயலாரைப் போன்று உறவினரோடும் சேர்ந்து நடக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளை பிறப்பித்திருக்கிறது. உங்கள் உறவினரைத் தழுவி நடக்கும் அளவு உங்கள் வம்சப் பரம்பரையை அறிந்து கொள்வீர்களாக. ஏனெனில் உறவினரைச் சேர்த்து நடப்பது குடும்பத்தின் நேசத்திற்கும், செல்வத்தின் வளர்ச்சிக்கும்! வாழ்நாளின் நிகழ்ச்சிக்கும் காரணமாகிறது. நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றுக்கு அமைய உறவினரைச் சேர்த்து நடப்பதால் இறுதி நாளில் கிடைக்கும் நற்பேறுகளுடன் உலகிலும் பல நன்மைகள் கிடைக்கின்றன. “மிக விரைவில் பலன் கிடைக்கக் கூடிய நன்மை, உதவி உபகாரம் புரிவதும் உறவினருடன் சேர்ந்து நடப்பதுமாகும். மிக விரைவில் வேதனை கிடைக்கக் கூடிய தீமை, அநியாயம் புரிவதும் உறவினரை துண்டித்து நடப்பதுமாகும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஆகவே, அயலாருடனும், சொந்தக்காரர்களுடனும் தமது அன்பைப் பலப்படுத்திக் கொள்வதோடு ஏனைய அந்நிய மக்களுடன் பண்பாகப் பழகி ஈருலகிலும் நற்பலனைப் பெறுவோமாக ஆமீன்!
அஷ்ஷேக்
எம்.யூ.எம். வாலிஹ் (அஷ்ஹரி)
வெலிகம.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெருவோம்
» நமது வேதத்தை நாம் மதிப்போம்!!
» மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்
» ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்க விசேட அடையாள அட்டைகள்
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
» நமது வேதத்தை நாம் மதிப்போம்!!
» மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்
» ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்க விசேட அடையாள அட்டைகள்
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum