by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்
அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்
லக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
உ
அமெரிக்காவின் PEW எனும் சமயம் மற்றும் பொதுவாழ்வு ஆய்வு மையம், அடுத்த 20ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 35 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2010இல் 1.6 மில்லியராக இருந்த இந்த எண்ணிக்கை, 2030இல் 2.2 மில்லியராக உயரலாம். (ஒரு மில்லியர் அல்லது பில்லியன் என்பது 100 கோடி ஆகும்.)
பியூ ஆய்வு மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இது அரசியல் சார்பற்றது; மதப் பாகுபாடு பாராட்டாதது; பியூ அறக்கட்டளைதான் இதற்கு நிதியுதவி செய்துவருகிறது. இம்மையத்தின் மேலாளர்: Luis Lugo.
உலகமெங்கிலுமுள்ள பல்துறை அறிஞர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டின் ஆய்வு முடிவை முன்பே அறிவித்திருந்த இந்த மையம், இப்போது அடுத்த இரு தசாப்தங்களுக்கான ஆய்வின் எதிர்பார்ப்பு என்ன என்பதை வெளியிட்டுள்ளது.
அடுத்த இருபது ஆண்டுகளில்
எதிர்வரும் இரு தசாப்தங்களில் முஸ்லிம் அல்லாத மக்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி 0.7 விழுக்காடாக இருக்கும் நிலையில், முஸ்லிம் மக்களின் சராசரி வளர்ச்சி 1.5 விழுக்காடாக இருக்கும்.
2030ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை சுமார் 8.3 மில்லியராக (830 கோடி) இருக்கும் நிலையில், மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 26.4 விழுக்காடாக இருப்பர்.2010இல் உலக மக்கட்தொகை 6.9 மில்லியர் (690 கோடி) என்பதும் அதில் 23.4விழுக்காடு முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இருப்பினும், முஸ்லிம் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 1990-2010 தசாப்தங்களில்2.2 விழுக்காடாக இருந்தது; இது 2010-2030 ஆகிய தசாப்தங்களில் 1.5 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 தசாப்தங்களில் மக்கட்தொகை
ஆண்டு
மற்றவர்கள் (மில்லியர்)
முஸ்லிம்கள் (மில்லியர்)
கண்டங்கள் வாரியாக முஸ்லிம் மக்கட் தொகை
2010 2030
உலகம்
161,93,14,000
219,01,54,000
ஆசியா & மத்திய தரைக்கடல் பகுதி
100,55,07,000
129,56,25,000
மத்திய கிழக்கு& வட ஆப்ரிக்கா
32,18,69,000
43,94,53,000
ஆப்ரிக்கா &தெற்கு பாலைவனம்
24,25,44,000
38,59,39,000
ஐரோப்பா
4,41,38,000
5,82,09,000
அமெரிக்கா
52,56,000
1,09,27,000
ஐரோப்பா
அடுத்த 20 ஆண்டுகளில், இந்தோனேசியாவைவிட பாகிஸ்தானில் முஸ்லிம் மக்கட்தொகை உயரும்.
எகிப்தைவிட நைஜீரியாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகும்.
ஐரோப்பாவில் மொத்த மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம் மக்கட்தொகை நெருங்கிவிடலாம். 2010இல் 6 விழுக்காடாக இருந்த முஸ்லிம்கள்2030இல் 8.2 விழுக்காடாக உயர்வர். அதாவது ஐரோப்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கை (2010) 44.1 மில்லியனிலிருந்து (2030) 58.2 மில்லியனாக அதிகரிக்கும்.
(மொத்த மக்கட்தொகையில் சதவீதம்)
ஆஸ்திரியா
சுவிட்சர்லாந்து
பெல்ஜியம்
ஃபிரான்ஸ்
பிரிட்டன்
அதிகரித்த ஆயுள்
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெரும்பாலும் 15-29ஆக இருக்கிறது. பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. சுகாதாரம் மேம்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. மனித ஆயுள் கூடியுள்ளது. இத்தியாதி காரணங்களால் முஸ்லிம் மக்கட்தொகை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 40 முதல் 50 விழுக்காடு இருப்பர்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 7 முதல்12 விழுக்காடு இருப்பர். நடுத்தர வயதினர் 1990இல் 19 விழுக்காடு; 2010இல் 24விழுக்காடு; 2030இல் 30 விழுக்காடு இருப்பர்.
2030ஆம் ஆண்டில் உலகிலுள்ள ஒவ்வொரு 10 இளைஞர்களில் மூவர் முஸ்லிம்களாக இருப்பர். 15 முதல் 29 வயது வரையிலானவர்களில் 29.1 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர் என எதிர்பார்க்கலாம். இது 2010இல் 25.8 விழுக்காடாகவும்1990இல் 20 விழுக்காடாகவும் இருந்தது.
2030இல் முஸ்லிம்களில் சன்னிகளே 87-90 விழுக்காடு இருப்பார்கள். ஷியா முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உண்டு.
உலக முஸ்லிம்களில் 74.1 விழுக்காட்டினர் 49 நாடுகளில் பெரும்பான்மையினராக (2010) வாழ்கின்றனர். முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக உள்ள வளரும் நாடுகளில் 23.3 விழுக்காடு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
முஸ்லிம்களில் 3 விழுக்காட்டினர், வளர்ந்த நாடுகளான ஐரோப்பா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் 47.8 விழுக்காடு இல்லத்தரசிகள் (15-49 வயதினர்) ஏதேனும் ஒரு குடும்பக் கட்டுப்பாடுச் சாதனம் பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளில் இது 63.3 விழுக்காடாக உள்ளது.
ஆசியா
ஆசிய நாடுகளில் 2030இல் 10 பேரில் 3 பேர் (27.3%) முஸ்லிம்களாக இருப்பார்கள்.2010இல் 24.8 விழுக்காடாக இது இருந்தது. சீனாவில் முஸ்லிம்கள் 2 விழுக்காடே இருந்தாலும், 2030இல் உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா19ஆம் இடத்தில் இருக்கப்போகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் முன்னணியில் இருப்பது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகள்தான். இந்தப் பிராந்தியத்தில் உள்ள 20 நாடுகளில் -இஸ்ரேலைத் தவிர- மொத்தத்தில் 50விழுக்காடு முஸ்லிம்கள் 2030இல் இருப்பர்; 17 நாடுகளில் 75 விழுக்காட்டைவிடக் கூடுதலாக இருப்பர்.
பாலஸ்தீனத்தில் 2010இல் 17.7 விழுக்காடு முஸ்லிம்கள் இருந்தனர். இது 2030இல் 23.2விழுக்காடாக -அதாவது 2.1 மில்லியனாக- உயர வாய்ப்பு உண்டு.
ஆப்ரிக்கா மற்றும் தெற்குப் பாலைவனப் பகுதிகளில் அடுத்த 20 ஆண்டுகளில் 38.59கோடி (60%) முஸ்லிம்கள் இருப்பார்கள். ஐரோப்பாவில் மொத்த மக்கட் தொகையில்10 விழுக்காடு முஸ்லிம்களாக இருப்பர்.
கொசோவா: 93.5%; அல்பேனியா: 83.2%; போஸ்னியா: 42.7%; மாசிடோனியா: 40.3%;பல்கேரியா: 15.7%; ரஷியா: 14.4%; ஜார்ஜியா: 11.5%; பிரான்ஸ்: 10.3%; பெல்ஜியம்:10.2%.
அடுத்த 20 ஆண்டுகளில் கனடாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கலாம். அதாவது 9,40,000லிருந்து 20,70,000ஆக உயரக்கூடும். இது, மொத்த மக்கட்தொகையில் 6.6 விழுக்காடு ஆகும்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
http://www.alukah.net/World_Muslims/0/47000/#Comments
http://www.pewforum.org/global-muslim-population.aspx
[color:45ff=#fff]__._,_.___
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Re: அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
» இந்திய மருந்து சந்தை ரூ.2 லட்சம் கோடியாக உயரும்
» 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும்
» 2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்!
» இந்தியாவில் அடுத்த 4 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை பாதியாக குறையும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்