சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் Khan11

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்

5 posters

Go down

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் Empty கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்

Post by Muthumohamed Thu 16 May 2013 - 8:01

எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது.

கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம்.

கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.


1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம்.

எண்ணற்ற தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.


2. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.


3. கூகுள் திங்க் (Google Think) கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம்.

இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.


4. கூகுள் மாடரேட்டர் (Google Moderator): பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம்.

இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.


5. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.


6. கூகுள் ஸ்கீமர் (Google Schemer): தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம்.

ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.


7. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google): தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.


8. பில்ட் வித் குரோம் (Build with chrome):ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.


9. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project): இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.


10. கூகுள் ஸ்காலர் (Google Scholar): இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.


11. கூகுள் மார்ஸ் (Google Mars): அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.

நன்றி : தெரிஞ்சுக்கோ பிளாக்ஸ்பாட்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் Empty Re: கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்

Post by rammalar Thu 16 May 2013 - 8:13

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் Empty Re: கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்

Post by நண்பன் Thu 16 May 2013 - 11:27

ஆமாம் நிச்சியமாக பயனுள்ள தகவல் முஹம்மட் எனக்கு பல முறை (Google transliterate ) உதிவயிருக்கிறது சிறப்பான சேவை :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் Empty Re: கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்

Post by ahmad78 Thu 16 May 2013 - 16:33

அனைத்தும் புதிதாக இருக்கிறது

தகவல்களுக்கு நன்றி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் Empty Re: கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்

Post by *சம்ஸ் Thu 16 May 2013 - 20:54

ahmad78 wrote:அனைத்தும் புதிதாக இருக்கிறது

தகவல்களுக்கு நன்றி.
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள் Empty Re: கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum