Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சூரியனும் கருகிய சிறகுகளும்..
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சூரியனும் கருகிய சிறகுகளும்..
தொழுகைக்காய் ரசூலுல்லாஹ் பள்ளிவாயல் செல்வதை ஒரு கிழவி பார்த்திருக்கிறாள்.உயரத்திலிருந்து குப்பை கொட்டுகிறது.தூய உடையில் அழுக்குப் படிகிறது, தட்டி விட்டுச் சிரித்தவாறே சென்று விடுகிறார் நபிகள்.
ஒரு நாள் குப்பை கொட்டவில்லை;கிழவியும் இல்லை.நோய்வாய்ப்பட்டிருக்கும் கிழமாதுவை நோய் விசாரிக்கச் செல்கிறார் முஹம்மத் (ஸல்).அவள் கண்களில் நீரோடை;
மூன்றிலிருந்து நான்குவயதிற்குள் நான் கேட்ட கதை இது.
தேவதைக்கதைகள் எதுவும் நான் கேட்டதில்லை; உம்மா சொன்னதெல்லாம் இப்படியான உருக்கமான வரலாற்றுத் துணுக்குகள் தான். நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் சொல்ல முடியாததொரு வயதிலேயே உள்ளத்தில் அல்லாஹ்வின் தூதரின் உருவம் அச்செனப் பதிந்து விடுகிறது.
ஒன்பது வயதினொரு பொழுதில் ஒரு நாளின் பெரும்பகுதி ‘நபிகள் நாயகம்’ என்ற நூலில் அமிழ்ந்து கிடந்தேன்.பின்னிரவில் புத்தகத்தோடே உறங்கி விடுகிறேன். என் கனவில் நீங்கள்.கண்கள் வலித்தோடும் பாலைநிலத்தின் பெரு நிலப்பரப்பில் பதிகின்ற பாதங்களோடு கம்பீரமும் கண்ணியமும் கலந்ததோர் உருவம் கூடியிருக்கும் கூட்டம் நோக்கி வருகிறது.
ரசூலுல்லாஹ் வருகிறார்கள் என்ற உணர்வு சர்வ நாடிநாளங்களிலும் பிரதிபலிக்க கூட்டத்தின் மூலையில் எதிர்பார்ப்பும் பதட்டமும் கலந்த ஒரு சிறுமியாய் காத்திருக்கிறேன்.
நீங்கள் வருகிறீர்கள்,உங்களைப் பற்றி புத்தங்கங்கள் சொல்லும் மேட்டிலிருந்து இறங்குவது போன்று முன்பாதங்களை அழுத்தி வரும் அதே நடையுடன் நீங்கள் வருகிறீர்கள்.
உங்கள் முகத்தினை நிமிர்ந்து பார்க்கும் திராணி இழக்கிறேன்.உங்களோடே அன்பு மனைவி கதீஜா(ரலி) அவர்கள். என் வயதை ஒத்த வயதில் பக்கத்தில் அருமைப் புதல்வி பாத்திமா(ரலி) அவர்கள்.
சிறுபொழுதில் விழித்தெழுகிறேன்;என் முதிர்வடையாத பிஞ்சு மனதெல்லாம் யா ரசூலுல்லாஹ் நீங்களே வியாபித்திருக்கிறீர்கள்.
பதின் வயதுகளின் ஆரம்பத்தில் மீண்டுமோர் அனுபவம். உம்மாவும் வாப்பாவும் வருட வருடமாய் சேர்த்து வைத்திருக்கும் சஞ்சிகைக் கட்டுக்கள்.இந்தியாவிலிருந்து வெளிவரும் சமரசம் இதழ்களைக் அடுக்காக வைத்து ஒவ்வொன்றினதும் அட்டைப்படம் ரசிக்கிறேன்.ஒவ்வோர் இதழிலும் சிராஜுல் ஹஸன் அவர்கள் எழுதிய சுவை சொட்டும் சிறுகதைகளை மட்டும் வாசித்துச் செல்கிறேன்.தற்செயலாய் ஓராக்கம் நோக்கி விழிகள் நிலைக்கின்றன.அதன் ஆசிரியரின் பெயரை அப்படியே மறந்து விடுகிறேன்;அந்த எழுத்துக்கள் மட்டும் அப்படியே உள்ளக்கல்லில் செதுக்கலாகிச் சென்றன.
இன்றிருக்கும் எமது வீடுகளுக்கு ரசூலுல்லாஹ் விருந்தாளியாய் வந்தால்… என்ற வரிசையான கற்பனை; ஆபாசப்படங்கள் கொண்ட சஞ்சிகைகள் ஒளிக்கப்படுகின்றன; தொலைக்காட்சிப்பெட்டி தூர வைக்கப்படுகின்றது.வற்புறுத்தி வரவழைக்கப்பட்ட நற்பண்புகளுடன் வீட்டினர் தயாராகும் அந்த வேடிக்கை கலந்த படைப்பு என்னைப் பெரிதும் பாதித்தது.யோசிக்க வைத்தது.
நபிகளார் பற்றி வாசித்துச் செல்லும் போது மனக்கண்ணில் பாலைநிலமும்,ஒட்டகைகளும்,எளிமையும் பழமையுமாய் வீடுகளும் தூய வெள்ளுடை அணிந்த மனிதர்களும்,இலட்சிய வேட்கை கொண்ட பெண்களும் தவறாது வந்து போயினர்.பதின்வயதுகளின் ஆரம்பத்திலேயே குடும்பத்தோடு ஹஜ் செய்யும் பாக்கியம் வாய்க்க, முதல் விமானப்பயணம்.களைப்புடன் முன்னிரவில் மக்கா வந்தடைய என் கனவொன்று அங்கே உடைந்து சில்லு சில்லாய் சிதறிப்போனது.
பாலைப்பெரும்பரப்பும் விளக்குகளின் 'முணுக் முணுக்' வெளிச்சம் கொண்ட குடிசைகளுக்கும் பதிலாக தார் பரத்திய வீதிகளும்,உயரமாய் எழுந்து நிற்கும் கனவுக்கட்டடங்களுமாய் மக்கத்து மாநகர்.மாற்றங்கள் பற்றியெல்லாம் யோசித்து வைத்திருக்கத் தெரியாத வயது.ஏமாற்றம் வலுத்தாலும் கஃபாவின் முன்னே இனம் புரியாத உணர்வுகளின் வெள்ளம். இந்தச் சுவர்களில் சாய்ந்திருந்து தானே ரசூலுல்லாஹ் அவர்கள் ஒப்பற்ற ஒரு சமூகம் பற்றி கனவொன்று கண்டார்கள் ;உடம்பின் ஒவ்வொரு அங்குலமும் சிலிர்த்துக் கொள்ள இப்போதும் அந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
உயர்தரம் கற்கையில் மு.மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’ கரம் கிட்டுகின்றது.அதன் கவியழகில் என்னை இழக்கிறேன்.சில வரிகளில் சிக்குப்பட்ட இதயம் இன்று வரை அங்கேயே தங்கி நிற்கின்றது.
உங்கள் இதயம் என்னும்
இனிய சிறையில்
கடைசிவரைக்கும் நான்
கைதியாய் இருக்கவே விரும்புகிறேன்;
செய்து விடுதலை கொடுத்து விடாதீர்கள்
வளர்ப்பு மகன் ஸைதை தந்தை அழைக்க, அவரோ நாயகத்திடம் தன்னால் போக முடியாதென்பதை சொல்வது போன்ற கவிதை.
தேசிய மீலாத் விழா; கலந்து கொண்டு கவிதை எழுதுகிறேன்.
“மதீனா நோக்கி மாநபி நடந்தார்;
அவர் இதயமெல்லாம்
மக்கா நடந்தது.” என்று எழுதிய வரிகள் நினைவுக்குள் நிற்கின்றன.
ஆமாம், எழுதி முடிக்கும் போதே முதற்பரிசு எனக்குத்தான் என்ற உறுதி முளைக்கிறது.
7 நாள் பயிற்சிப்பாசறை, தூங்கியிருந்த ஈமானிய உணர்வுகளைத்தட்டியெழுப்பிய வசந்தப்பொழுதுகள்.
புத்தளத்தின் இஸ்லாஹிய்யா வளாகத்தில் ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த காற்றும் ,கடும் சாயத்தோடு கூடிய சூடான தேநீரும் போலவே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் விரிவுரையும் மனதின் மிக ஆழத்தில் தெள்ளிதாய் பதிந்து விட்டது. ‘நபிமார்களின் தஃவா அணுகுமுறை’ ரசூலுல்லாஹ்வை இன்னோரு கோணத்தில் பார்க்கச் செய்தது.
ஒரு முற்பகல் பொழுதில் மார்டிங் லிங்ஸ் (அபூபக்ர் சிராஜ் அத்தீன்) என்ற புகழ்பூத்த எழுத்தாளர் எழுதிய “முஹம்மத்” என்ற நூல் கரம் மலர்ந்தது. மிகப்பழைய மூலங்களை ஆதாரமாகக் கொண்டு ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கையை மனக்கண் முன் கொண்டு வரும் அதியற்புதமான நூல் அது. ஒரு சஞ்சிகை கேட்டதற்கிணங்க பின்னாளில் அது பற்றிய நூலறிமுகம் ஒன்றையும் விருப்பத்தோடு எழுதியிருக்கிறேன்.'ரஹீக் அல் மக்தூம்' என்பது மிகச்சிறப்பாக நபியவர்களின் வரலாறு சொல்லும் நூல்.எனினும் ‘முஹம்மத்’ நூலை வாசித்துச்செல்லும் போது ஏற்பட்ட உள்ளார்ந்த ஆர்வமும்,நெகிழ்வும் இதில் எனக்கு ஏற்படவில்லை என்பது அழுத்தமான உண்மை;அதற்கு என் கவிதை மனசும் அனுபவக்குறைவும் கூட காரணமாயிருக்கக்கூடும்.
‘அண்ணல் நபி பொன் முகத்தைக் கண்கள் தேடுதே..’ என்ற நாகூர் ஹனீபா அவர்களின் கம்பீரம் ததும்பும் குரல் காற்றில் மிதந்து வரும் போதெல்லாம் கண்கள் கசியும்.உள்ளம் உருகித் தவிக்கும். அண்ணலாரின் மீது கொண்ட அன்பிற்காய் உயிர் துறக்கத் தோன்றும். ;'ஒரு நாள் மதீனா நகர்தனிலே ஓங்கு மஸ்ஜிது நபவியிலே’ என்று தொடங்கும் உகாஷா(ரலி) க்கும் நபியவர்களுக்கும் நடக்கும் பாசப்போராட்டம் சொல்லும் இன்னொரு பாடலும் இதயம் வலிக்கச் செய்யும்.
ரசூலுல்லாஹ் வாழ்ந்த காலத்தில் நான் ஒரு புல்லாய் பிறந்திருக்கக் கூடாதா என நெஞ்சம் ஏங்கியிருக்கிறேன்.அந்தக்காலத்தில் வாழ்வதாய் நிஜத்துக்கும் நிழலுக்குமிடையில் அடிக்கடி கற்பனைகள் வந்து போயிருக்கின்றன.
இணையம் அறிமுக ஆனதன் பின்னர் தான் நாமெல்லாம் மனசில் உயர்ந்த ஓரிடத்தில் வைத்திருக்கும் ரசூலுல்லாஹ்வை வேறு வேறு விதங்களில்லாம் சில அறியாதவர்கள் பார்க்கிறார்கள்; மற்றவர்களையும் பார்க்க வைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
கார்ட்டூன்களின் ஒரு கரடுமுரடான அசுத்தமான உருவத்தை முஹம்மத்(ஸல்) எனச் சித்தரிக்க, மனசுக்குள் சிரிப்பு முளைத்தது.எந்தக் கார்ட்டூனுக்கும் எனக்குள் இருந்த ரசூலுல்லாஹ்வை கத்தரிக்க முடியாமல் போனது. சூரியனின் சந்திக்கப் போய் சிறகு கருகிய பறவைக்கதை தான் மறக்காமல் ஞாபகத்திற்கு வந்தது.
இந்தாண்டு ஜூலையில் 'யூ டியூப்' எனப்படும் இணைய ஒளித்தளத்தில் தரவேற்றப்பட்ட ‘Innocence of Muslims’ என்ற தந்திரமான தலைப்புடன் கூடிய ஒரு திரைப்படத்தின் அறிமுகக்காட்சிகள் ஏற்படுத்திய படிப்படியான அதிர்வுகள் எனக்குள்ளும் பதிவாகின.அந்தப் படத்தின் ஒரு துளியைக் கூட நான் பார்க்க விரும்பவில்லை.
அது எமது நபியவர்களை தரக்குறைவாகச் சித்தரித்திருப்பதாய் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் கிளர்ந்தெழ ஆர்ப்பாட்டங்கள் சூடுபிடித்திருக்கின்றன.
அமெரிக்க அதிபரின் கொடும்பாவி எரித்து அல்லாஹு அக்பர் என வீதிகள் இறங்கி சுலோகம் தாங்கி இலங்கையிலும் நாம் எதிர்ப்பை சப்தமாய் தெரிவித்து வ்ருகிறோம்.
எனக்குள் ஒரு கேள்வி.
அல்லாஹ் ஒருவரை கண்ணியப்படுத்த நாடினால் அதை யாராலும் தடுத்திட முடியாது;அல்லாஹ் ஒருவரை இழிவுபடுத்த தீர்மானித்தால் அதையும் யாராலும் நிறுத்தி விட முடியாது. படைத்தாளும் இறைவன் மனித சமுதாயத்திலேயே அதி கூடிய அந்தஸ்த்தை வழங்கி மிகுந்த கண்ணியத்தோடு வைத்திருக்கும் அவனுடைய தூதர் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்வை இழிவு படுத்திட எவரால் முடியும்???
இனியும் இந்த கார்ட்டூன்களும், கையாலாகாதவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களும் வெளிவரத்தான் போகின்றன; நிலவை மறைப்பதாய் நினைத்துக் கொண்டு கிழிசல் மேகங்கள் அலையத்தான் செய்கின்றன.
நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் இவற்றுக்கெல்லாம் என்ன பதிலடி கொடுக்கப்போகிறோம்.?
இன்று நபியவர்கள் நம்மோடிருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?
ரசூலுல்லாஹ் வாழ்ந்து காட்டிய அதியற்புத வாழ்வை அறியாததால் அல்லவா இந்த முனை நமுத்துபோன தீக்குச்சிகள் கிளம்பியிருக்கின்றன.
இன்னொரு மதத்தை இன்னொரு மனிதனை இழிவு படுத்துவதால் அழுக்காகிப்போவது நமது சுயம் தான்.
வேண்டாம்; எமது நபியவர்கள் வாக்கும் வாழ்வும் தூய்மையாய் அல்லவா இறுதி வரை இருந்தது.
வாழ்ந்து காட்டுவோம்;சூழவிருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.
ரசூலுல்லாஹ் கண்ட கனவிற்கு உயிர் கொடுக்கும் மனிதர்களாய் பெண்களாய் நாமிருப்போம்.
சூரியனினைச் சுட்டெரிக்கச் சென்று கருகிய பறவைச் சிறகுகள் ஞாபகமிருக்கட்டும்.
சமீலா யூசுப் அலி
Shameela Yoosuf Ali

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சூரியனும் கருகிய சிறகுகளும்..
இன்னொரு மதத்தை இன்னொரு மனிதனை இழிவு படுத்துவதால் அழுக்காகிப்போவது நமது சுயம் தான்.
வேண்டாம்; எமது நபியவர்கள் வாக்கும் வாழ்வும் தூய்மையாய் அல்லவா இறுதி வரை இருந்தது.
வாழ்ந்து காட்டுவோம்;சூழவிருப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.
:/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஆசிரியர்களின் அக்கறையின்மையால் பிஞ்சிலே கருகிய பிள்ளை!
» சூரியனும் கோள்களும்
» சூரியனும் கோள்களும்...
» சூரியனும் கோள்களும் (குர்ஆனில் விஞ்ஞானம்)
» மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்
» சூரியனும் கோள்களும்
» சூரியனும் கோள்களும்...
» சூரியனும் கோள்களும் (குர்ஆனில் விஞ்ஞானம்)
» மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum