சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Khan11

பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை

3 posters

Go down

பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Empty பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை

Post by *சம்ஸ் Thu 4 Jul 2013 - 9:24

பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Images+%25283%2529
பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை


கற்றாழையின் தாவரவியல் பெயா: “ஆலோவேரா” 


AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.



     கற்றாலை மருத்துவக்குணம் நிறைந்தது சித்தவைத்தியத்தில் இதனை “குமரி” என அழைக்கப்படுகின்றது. இம் முகிலி இருபக்பகமும் சாதுவான முள்போன்ற நீண்ட மேல் நோக்கிய தாள் போன்ற அமைப்பைக் கொண்ட இலைகளை உடையது. இதனை “சுகத்துக்குத் தாழை” என்று கூறுவர் இது  காலப் போக்கில் மருவடைந்து “சோற்றுக்கற்றாழை” ஆகிவிட்டது.         தாவரங்கள் பொதுவாக நிலத்திலிருந்து அகற்றியதும் வாடி வதங்கி காலதாமதமானால் இறந்து விடும் ஆனால் சோற்றுக்கற்றாழை நிலத்திலிருந்து அகற்றியதும் இறந்து விடாது வளியில் இருக்கும் ஈரப்பதத்தை ஈத்து வளர்வதுடன் உலர்ந்த தாளிகளின் நீரையும் ஈத்து வளரும் தன்மையுடையது. பொதுவாக கிராமபுறங்களில் வீட்டின் கூரையின் தாள்வாரத்தில் தாள் ஒன்றினை கட்டி விடுவர்கள் அத்தாழை மேல்நோக்கி திரும்பி புதிய குருத்துக்கள் உருவாகி வளர்வதை அவதானிக்கூடியதாகவிருக்கும். இத்தாவரம் ஒவ்வொரு வருடமும் பூக்கொத்தை உருவக்கும். இதன் காரணத்தினாலே இத்தாவரத்தை “வான்குமரி” என அழைப்பதும்முண்;டு.


  கற்றாழையின் தாவரவியல் பெயர் “ஆலோவேரா” அல்லது “ஆலோ” என்றும் குறிப்பிடுவர். இதில் இன்னுமேர் வகையும் உண்டு. அது “ஆலோவாவிடன்ஸ்” இவை இரண்டினதும் மருத்துவத் தன்மையும் ஒன்றுதான். இவ் முகிலிகையை நவீன அறிவியல் உலகம் காயகற்ப அதிசய முகிலிகையாக குறிப்பிடுகின்றனர். இதில் இருபதிற்கு மேற்பட்ட அமிலோஅமிலங்கள் உண்டென்று குறிப்பிடுகின்றனர். உடலின் கட்டுமாணப் பணிக்கான புரதச் சத்தின் அடிப்படை அலகுகளை அமிலோ அமிலங்கள் என்று அழைப்பர். இதில் மனித ஆரோக்கியத்துக்குத் தேவையான மிக முக்கிய எட்டு வகை அமிலோஅமிலம் இதில் உண்டு. இந்து இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் குன்றி விடும் எனக்குறிப்பிடுகின்றனர். இதனால் இத் தாவரத்தை முழு மருத்துவக்குணமுள்ள தாவரமாக கருதுகின்றனர். 


      கற்றாழை தொர்பாக பார்;க்கும் போது ஒன்று ஆரோக்கியத்துக்குத் தேலையான அமிலோஅமிலங்கள் இருக்கின்றன அடுத்து. அது இன்ரைய அறிவியல் இதனை அழகுசாதனப் பொருட்களுக்கு அடிப்பாடையான பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரசியநாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் முதுமை அடைந்து இறக்கும் தருவாயில் இருந்த  கற்றாலை உணவாக கொடுக்பப்பட்டு; வெள்ளை எலிகளுக்கு கொடுத்து ஆயூட் காலத்தை இருமடங்காக அதிகரித்ததை அவதானித்தாக கட்டுரை வெளியாகியிருந்தது. வெள்ளை எலிகளின் ஆயூட்காலம் முற்பது மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


  இதற்கு தழிழ் மெய் உலகம் பல்ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இதை உணர்து இத்தாவரத்துக்கு “குமரி” என பெயர் இயம்பி இழமையை நிலைத்து முதுமையை விரட்டிடும் அற்புதமுகிலிகையாக இயம்பியிருக்கின்றது. மானிடப் பிறவியின் அர்த்தம் புரிந்து மானிடர்க்காக வாழ்ந்த சித்தார்கள் இதை ப்புரிந் திருந்தனர். அனுபவ அறிவால் நுன்மதி நுளை புலத்தால் அவர்களின் தெய்வீக அற்றலால் வெளிப்படுத்தினர்.


    தேரையர் பாதார்த்த குணசிந்தாமனியில் குமரியின் மருத்துவ பண்பை “பொல்லா மேகம் கபம் புல் சூலைகுட்டம் ரசம் அல்லார் மந்தம் பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்குமரிக்கு மருண்டு” 
பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Aloe-vera-plant1.“பொல்லா மேகம்”: இது சக்கரை நோயைக் குறிக்கின்றது. இதனை மேகத்துக்கு ஒப்பிடுகின்றார். மேகமானது தோன்றி மறைவதுடன் திரும்பத் திரும்ப தோன்றுவதும் மேகங்கள் உயர்வதும் தாழ்வதும் அதன் இயக்கையான குணமாமும் இதையொத்த பண்புடையது சக்கரை நோயாகும். இன் நோயைப் போக்கும் தன்மை குமரிக்கு உண்டு.


 2.“கபம்”: கபம் என்பது நாசி, தொண்டை, நெஞ்சிப்பகுதியில் சளி கட்டி உடலை உபாதைக்குட்படுத்தும். இதனை கிராமப்புறங்களில் சளிபிடித்தால் சனிபிடித்தமாதிரி என்று இயம்புவதுண்டு அவ்வளவு அவத்தைப்பாடுத்தும். கண்டத்தில் கபம் கட்டி சுவாசத்தை தடை செய்து உடல் இயக்கத்தை நிறுத்தக்கூடிய தன்மையானது கபம். நெருப்பெரிய ஒட்சிசன் தேவை ஒட்சிசன் இல்லாவிட்டால் நெருப்பு அனைந்து விடும். இது போன்றே பிரபஞ்கம் இயங்க பிராணவாயு தேவை. அதுபோன்று உடல் இயங்க ஆத்துமா வாகிய அக்கினி பிரகாசிக்க வேண்டும். அதற்கு பிராணவாயு கண்டத்தின் வழியாக செல்ல வேண்டும். அதை கபம் தடைசெய்யும் இச் சந்தர்ப்பாத்தில் வாயால் சுவாசிக்க நேரும் இதனை “மோவாய் சுவாசம்”என்பர். இது போன்று ஒரு மனிதன் இறப்பதற்கு முன்னர் சுவாசம் நெஞ்கிப்பகுதிக்கு மேல் சுவாசம் இழுத்துக் கொண்டு இருக்கும் இதனை “சேப்பம் கட்டி இழுக்குது” என்பர். சேப்பம் என்பது கபம் இறுதியாக உடலிலிருந்து உயிரை பிரிக்க கபம் உதவுகின்றது. அப்படிபட்ட கபத்தை இல்லாமல் செய்யும் ஆற்றல் குமரிக்குண்டு. 


   குமரி குளிர்த்தன்மையானது. இது கபத்தை உருவாக்கக்கூடியது எனலாம். இதன் தன்மை கபத்தை இல்லாமல் செய்துவிடும் தன்மையுள்ளது. ஆரம்பத்தில் சளியை ஏற்படுத்தி பின்னர் தெடர்ந்து உண்டுவர நோய் எதிப்புச் சக்தியை உருவாக்கி கபத்தை அடியோடுடொலித்து விடும் சக்தி பெற்று விடும் குமரி.  குமரியைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை பொதுவாக கபத்தினால் உண்டாகும் அஸ்டுமா,கடுமையான ஜலதோம், சைனஸ் வருத்தங்கள் உள்ளவர் நிதானத்துடன் தவித்துக் கொள்வது நன்று. பொதுவாக குளிர்சியைத் தரும் தன்மை குமரிக்கு உண்டு. அதேவேளை சளியைத் தடுக்கும் வல்லமையும் குமரிக்கு உண்டு. சிறிது சிறிதாக நாளுக்கு நாள் உணவாக சேர்த்து வர காலப்போக்கில் நோய்எதிப்பு சத்தியைப் பொற்று விடும் உடல் அதன் பின்னர் கபம் தனது சக்தியை இழந்து விடும். வயதானவர்களுக்கு மார்புப் பகுதியில் கபம் கட்டுவது இயல்பு இதனால் உடல் நல்ல திடகாத்திரத்தை இழந்து விடும் அச்சந்தப்பத்தில் குமரியை உணவாக்கி  திடகாத்திரத்தைப் பெறமுடியும் எனவே குமரி ஓர் காயகற்ப முகிலிகையாகும.; 


3.“புல் சூலை”: உடலில் குடலில் புழுக்கள் ஒட்டுண்ணியாக இருப்பது உடலில் உள்ள சத்துப்பொருட்களை உறுஞ்சி குடித்து தேகாரோக்கியத்தை இழக்கச் செய்வது இயல்பு பல்வேறு நோய்களை ஏற்ப்படுத்தும். இப்படிப்பட்ட புழுக்களை அகற்றும் ஆற்றல் குமரிக்கு உண்டு. 
பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Images+%25281%2529
 4.“சூலை”: சூலை என்பது கணுக்களில், கபாலத்தில்,வயிற்றில், குடலில் வரும். கணுக்களில் வரும்போது கணுச்சூலை என்றும் கபாலத்தில் ஏற்படுகின்ற போது கபாலைச்சூலை அல்லது சிரசூலை என்றும் குடலில் வருகின்ற போது குடல்சூலை என்றும் இரைப்பையில் வருகின்ற போது சூலை நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். சூலையின் வேதனை சூலத்தால் குத்துவதை ஒத்தவலியை போன்றது. இது உஸ்னத்தால் உண்டாவது இதை தடுக்கும் ஆற்றல் குமரிக்கு உண்டு. சங்கால இலக்கியம் குமரியின் தன்மையை “குமரியின் சாற்றை உண்டு குடல் புண் ஆறக்கண்டேன்” என்று கூறுகின்றது. கருக்குடலில் இருக்கும் பினிகளுக் கெல்லாம் அருமருந்து குமரி 


5.“குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் குமரிக்குண்டு.


6.“ரசம்”: எலும்பு மச்சையை ரசம் என்று அழைப்பதுண்டு எலும்பு மச்சையில் உள்ள சத்துக்கள் குன்றிப்போனால் சிவப்பணுக்களின் உற்பத்தி தடைப்படும் இதன் விளைவால் இரத்தத்தை நரம்பு வளியாக இலுத்துக் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைவடைந்து நாம் செயல்படும் செயலாற்றல் குறைவடையும் இதனால் இளமையில் முதுமையை எதிர் நோக்க விளையும் அத்துடன் வெளுப்பு நோய்க்கு ஆட்படுவோம். இன்நிலையிலிருந் எம்மை காக்க குமரி ஓர் அருமந்தாகும். இது சிவப்பணு உற்பத்தியை அதிகரித்து எம்மை பலமிக்தாக்கும் தன்மை குமரிக்கு உண்டு.
பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Images+%25282%2529

 7.“மந்தம்”: மந்தம் என்பது ஐPரணக்குறைபாடு இயல்பான வேகத்தில் குறைபாடு இதனால் ஏற்படும் அஐPரணம் வயிற்று பொருமலாக இருக்கும் இதன் மூலம் உடலில் அமிலம் சுரந்து அசாதாரன நிலையை ஏற்படுத்தும் இவ்வாறன நிலையிலிருந்து குமரி எம்மைப் பாதுகாக்கும்.


8. “பகம் தரும்”: பகர்தரும் என்பது ஆசன வாசலில் ஏற்படும் புண்ணும் சீளுமான நிலை இதை வயல் வெளியில் சேறும்சகதியுமாக இருக்கும் நிலைக்கு ஒப்பிடுவர். இது மூலநோயின் ஒருவகை இதனால் குத்துகின்றது போன்ற வலியும் எரிச்சலும் கடுப்புடண் கூடிய வலியும் ஆசனவாசலால் இரத்தக்கசிவுள்ள பல பண்புகளைக் கொண்ட மூலரோகம் உழையும் மூலரோகம் எனப்படும். மூலநோய் என்பது பலவகை உண்டு உள்மூலம், வெளிமூலம், உதிரமூலம், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாயில் திறவு இன்னுமோர் மேலதிக பாதை போல் தோன்றும் இயல்பு இதை பவித்திரம் என்பார்கள்  இதனை போக்க வவ்லது குமரி. 



9.“குன்மம் எல்லாம் விட்டு ஏகும்”: அஐPரனத்தால் ஏற்படும் நோய் குன்மம் இப்படிப்hட்ட நோய்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிடும் எனக்குறிப்பிர்வதுடன். 


10. “அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும்”: கிரிச்சரம் என்பது  சிறுநீர்த்தாரையில் சிறுநீர் வரும் பாதையில் அரிப்பும் எரிச்சலும் இருந்து அளொகரியத்தை ஏற்படுத்துகின்ற நீர்த்தாரை நோய் இதற்கு குமரி அருமருந்து .     
பயன் படுத்தும் முறைகள்:




       சோற்றுக்கற்றாழை(குமரி)யின் தொலை நீக்கி சோற்றை எடுத்து அதை ஏழு முறை சுத்மான நீரில் திரும்பத்திரும் புதிய புதிய நீரினால் கழுவி சுத்தம் செய்து அதிலுள்ள அலோயின் என்ற சத்தை நீக்கிவிட வேண்டும். இது கொளுகொளுப்பாக இருக்கும் இதை நீக்கியபின் மருத்து உயயோகத்துக்கு உகந்தாக அமையும். தாழையின் மடலைத் தெரிவு செய்கையில் பின்வரும் விடையங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Images
1. கற்றாழை மரத்தின் முதிர்வு ஆகக்குறைந்தது ஒன்றரைவருடத்தை பூர்திசெய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முழுமையான மருத்துவ பண்புகள் நிறைந்தாக இருக்கும். வேதியல் மூலக்கூறுகளை முழுமையாக பெற்றிருக்கும்


2. தாழை ஓலை மரத்திலிருந்து வெட்டி எடுத்து அரைமணித்தியாலத்;துக்கும் ஒரு மனித்தியாலத்துக்கும் இடையில்  தோலை நீக்கி சுத்தம் செய்தல் உத்தமம். ஆனாலும் நான்கு மணித்தியாலத்துக்கு மேல்படுதலாகாது.
பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Images+%25284%2529


3. சோற்றுப்பகுதியை துண்டுகளாக நறுகி எடுக்கவேண்டும். உண்ண ஆரம்பிக்கும் போது முதலில் அரைச் சதுரடிப் பிரமாணமாக ஒரு வாரமும் இரண்படாவது வாரத்தில் ஒரு சதுரடிப் பிரமாணமாகவும் அடுத்து ஒன்றரை சதுரடி பிரமாணமாகவும் நான்காவது வரத்தில் இரண்டு சதுரடிப் பிரமாணமாகவும்  காலையில்  வெறு வயிற்றில் உணவு உண்பற்கு அரைமண்த்தியாலயம் முன்தாக உட் கொள்ள வேண்டும். பொதுவாக இரண்டு சதுரடிப் பிரமாணம் கொண்ட ஒரு துண்டில் ஒரு நாளுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அணைத்தும் அடங்கியுள்ளது. ஒரு நாளுக்குப் போதுமானதாகும். இத்துன்டுகளை சக்கரை, பணம்கற்கண்டு, கற்கண்டு போன்றவற்றில் போட்டு புறட்டியுட் சுவையுட்டியும் பயன் படுத்தலாம் அல்லது வெறுமனேயும் பயன் படுத்தலாம். குமரியின் பாதப்படுத்திய துண்டுகளை சீலையில் கட்டிதொங்விட்டு சிறுது நேரத்தின் பின் அதை புளிக்கொளம்பாகம் தயார் செய்து உணவாகவும் பயன் படுத்தலாம். அடுத்து இதை குமரியை சாறாக்கி தொடம்பழச்சாறும் சேர்த்து பழரசமாகவும் பயன் படுத்தலாம். லேக்யமாக்கியும் பயன்படுத்தலாம்.


4. இவ்வாறு எடுத்து கொள்வதன் நோக்கம் உடலில் சத்து பொருளைகளை படிப்படியாக சேர்த்துக் கொள்வதே இதன் நோக்கம் இப்படி முறையான செயல் பாட்டுக்கு காரணமாகும்.


5. ஏக்கனவே கபம் அதிமாகி இளை நோய்க்கு ஆளானவர்களும் பினிச நோக்கு ஆளானவர்களுடம் வைத்தியரின் ஆலோசணையுடன் குமரியை உகயோகிக்த் தொடங்குவது சிறந்தது. உகயோகிப்பதானால் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஆலோபதி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தி காலப் போக்கில் ஆலோபதி மருந்துகளை நிறுத்திக் கொள்ள முடியும். பொதுவாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் நன்று.


6. முதுமையால் உண்டாகும் மூட்டுவலி முட்டிவலி மூட்டுக்களில் வழுவின்மை போன்ற நோய்களுக்கு குமரியை தோலுடன் இரண்டு சதுரடி அளவு எடுத்து அதனுடன் இஞ்சி, மஞ்சல் சமனிடை சேர்த்து விழுது போல் அரைத்து சாதுவாக சூடாக்கி மூட்டுகளில் பற்றுப்போல் நன்றாக பூசி காயவிட மூட்டுவலி, வீக்கம் என்பன நீங்கி சுகம் பெறலாம். இது போன்று காலை மாலை பற்றிடலாம்.  
பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Images+%25285%2529


      குமரி குளிர்மையானது  இதை பாவிக்க ஆரம்பிக்கும் போது இது முதலில் கபத்தை உருவாக்கி பின்னர் எதிப்புச் சத்தியை உடலில் ஏற்படுத்தி உடலை கபத்திலிருந்து காத்து ஸ்திரப்படுத்தும். ஆத்துடன் மகரி~p தேரையரின் பாடலில் செப்பிய 


“பொல்லா மேகம் கபம் புல்  சூலைகுட்டம்  ரசம் அல்லார் மந்தம்
 பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும்
 அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவைகுமரிக்கு மருண்டு” 


                அனைத்து பெற்று வழமாய் இளைமையாய் இறை இன்பம் பெற உறுதியா உடல் பொற்று இரண்றற்று ஒன்றாய் அவனுள் அவனாய் உய்வோம். “நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வம்” சித்தர்கள் வாழ்வியலை சிரமேற்று அவர்கள் அடியை பின்பற்றி காயத்தை கற்பமாக்கி வாழ்வாங்கு வாழ்வோம். 


Last edited by *சம்ஸ் on Thu 4 Jul 2013 - 17:03; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Empty Re: பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை

Post by ahmad78 Thu 4 Jul 2013 - 15:03

கொஞ்சம் திருத்தவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Empty Re: பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை

Post by jafuras Fri 5 Jul 2013 - 6:57

  கற்றாழையின் தாவரவியல் பெயர் “ஆலோவேரா” அல்லது “ஆலோ” என்றும் குறிப்பிடுவர். இதில் இன்னுமேர் வகையும் உண்டு. அது “ஆலோவாவிடன்ஸ்
பயனுள்ள தகவல்:”@: 
                                              
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை Empty Re: பொல்லா மேகம் கபம் போக்கும் கற்றாழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum