Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரசவத்துக்கு பின் பெண்களை தாக்கும் போஸ்ட் நேட்டல் ப்ளூஸ்..
Page 1 of 1

சிலிர்ப்பூட்டும் அனுபவமாக அமைய வேண்டிய பிரசவம் அரிதாக சில பெண்களுக்கு திகிலூட்டும் அனுபவமாகவும் அமைவதுண்டு. 70 சதவிகிதப் பெண்களைப் பாதிக்கிற இந்தப் பிரச்னையை ஆங்கிலத்தில் ‘போஸ்ட் நேட்டல் ப்ளூஸ்’ என்கிறார்கள். புரிகிறபடி சொல்வதானால் பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்.
அலட்சியப்படுத்தப்பட்டால், இது சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலையைப் பெரியளவில் பாதிக்கும் என்கிற மகப்பேறு மருத்துவர் ஜெயராணி, அதன் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள் என எல்லாவற்றையும் விளக்குகிறார்.
‘‘பிரசவத்துக்கு சில மணி நேரம் முன்னாடி வரைக்கும் பிறக்கப் போற குழந்தையை எப்ப பார்க்கப் போறோம், அது எப்படி இருக்கும்னு ஏங்கித் தவிக்கிற மனசு, பிரசவமானதும் பல பெண்களுக்கு அப்படியே தலைகீழா மாறிப் போகும். பிரசவ வலி தந்த பயம், சிசேரியனா இருந்தா அந்தக் காயமும், ஆறாத புண்ணும் கொடுக்கிற வேதனை... ‘இனிமே நமக்கு பழைய, சாதாரண வாழ்க்கை சாத்தியமே இல்லை போல...
இந்த நிலைமைல குழந்தையை வேற எப்படி வளர்க்கப் போறோம்’னு ஒரு திகில் உணர்வு தலைதூக்கும். குழந்தையைப் பார்த்ததும், அதை எப்படிக் கையாள்றதுனு தெரியாம, அதை வளர்க்க நமக்குத் தகுதியிருக்கானு மனசு குழம்பும். பிரசவமான அடுத்தடுத்த நாள்ல ஆரம்பிக்கிற இந்தக் கலக்கம், 2 வாரங்கள் வரை நீடிக்கலாம். இது எல்லாத்துக்கும் காரணம், பிரசவிச்ச பெண்ணோட உடம்புல நடக்கிற ஹார்மோன் மாற்றங்கள்தான்’’ என்கிற டாக்டர் ஜெயராணி, பாதிப்பின் அறிகுறிகளைப் பட்டியலிடுகிறார்.
‘‘தூக்கமில்லாதது, எப்போதும் அழுகை, சோர்வு, தலைவலி, டென்ஷன், பசியில்லாதது, எந்த வேலைலயும் ஆர்வமில்லாதது, சுய பச்சாதாபம், குற்ற உணர்வு, யாரைக் கண்டாலும் எரிச்சல், வாழறதே வேஸ்ட்டுங்கிற மனப்பான்மை, குழந்தைக்கு டயாப்பர் மாத்தற மாதிரியான முக்கியமான வேலைகளைக்கூட செய்யாமத் தவிர்க்கிறது, கவனச் சிதறல்னு ஏகப்பட்ட அறிகுறிகளைப் பார்க்கலாம். ஏற்கனவே சொன்ன மாதிரி குழந்தை பிறந்த ரெண்டு வாரங்களுக்குள்ள இதெல்லாம் சரியாயிடும்.
சிலருக்கு சில மாசங்கள் நீடிக்கலாம். அதையும் தாண்டி இந்த அறிகுறிகள் நீடிச்சா, அதை ஜீஷீstஜீணீக்ஷீtuனீஜீsஹ்நீலீஷீsவீsனு சொல்றோம். இந்த அறிகுறிகளுடன் தன்னையோ, தன் குழந்தையையோ துன்புறுத்திப் பார்க்கிற குரூர மனசும் சேர்ந்துக்கும். மிகச் சில பெண்களையே பாதிக்கிற இதுக்கு மனநல மருத்துவரோட ஆலோசனையும், சிகிச்சையும் தேவைப்படலாம்.
அது சரி... இந்த ‘போஸ்ட் நேட்டல் ப்ளூஸ்’ பிரச்னை யாருக்கெல்லாம் வரும்?
முன்னெல்லாம் கூட்டுக்குடும்பங்கள் நிறைய இருந்ததால பிரசவங்கிற சம்பவம் குடும்பத்துல மாத்தி, மாத்தி யாருக்கோ நிகழ்கிற ஒரு விஷயமா இருந்தது. அதைப் பார்த்தே வளர்ந்தாங்க பெண் குழந்தைங்க. இன்னிக்கு கூட்டுக் குடும்பங்கள் சிதைஞ்சு போயாச்சு. உறவுகள்னு சொல்லிக்க ஆளில்லாம, ஒத்தைக் குழந்தையா வளர்றவங்களுக்கு இந்த கலக்கம் அதிகம் வருது. ரொம்ப இள வயசுலயோ, வயசு கடந்தோ கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்கிற பெண்களையும் பாதிக்கும்.
முதல் பிரசவத்தின் போது, இந்த மனக் கலக்கத்தால பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அடுத்த பிரசவத்துலயும் அது வரலாம். கணவனோடயும், புகுந்த வீட்டோடவும் உறவு சுமுகமில்லாத பெண்களுக்கும் வரலாம். கர்ப்பிணிப் பெண்களை சந்தோஷமா வச்சுக்கணுங்கிறதுக்காகவும், பிரசவம் நல்லபடியா நடக்கணுங்கிறதுக்காகவும்தான் பூச்சூட்டல், வளைகாப்பு, சீமந்தம் மாதிரியான விசேஷங்களை நடத்தறதுண்டு.
அந்த சந்தர்ப்பங்கள்ல கர்ப்பிணிப் பெண்ணை சுத்தி, பெற்றோர், உறவுக்காரங்க, நண்பர்கள்னு பெரிய கூட்டமே ஆதரவா இருக்குங்கிறதை மறைமுகமா உணர்த்தவும்தான் இதெல்லாம். குழந்தை பிறந்ததும் தொட்டில் போடற சடங்குகளோட பின்னணிலயும் இந்தக் காரணம் உண்டு...’’ என்கிற டாக்டர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படிப் பட்ட சிகிச்சைகளும், தீர்வுகளும் உதவும் என்றும் விளக்குகிறார்.
நாங்க எல்லாரும் உன் பக்கத்துல இருக்கோம். நீ பயப்படாதே’ங்கிற மன தைரியம்தான் முதல் சிகிச்சை. இதுல கணவரோட பங்கு ரொம்பவே முக்கியம். குழந்தை தூங்கும் போது மனைவியையும் தூங்கச் சொல்றது, இடையில குழந்தை எழுந்து அழுதா, சமாதானப் படுத்தறது, குழந்தைக்கு டயாப்பர் மாத்தறது மாதிரி சின்னச் சின்ன உதவிகள் மூலமா அவளோட பயத்தைப் போக்கலாம். மற்ற உறவுகளுக்கும் இது பொருந்தும்.
பாசிட்டிவாக பேசக் கூடிய, தன்னோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கக் கூடிய நபர்களை தாயான பெண் தன் பக்கத்துல துணையா வச்சுக்கலாம்.குழந்தை தூங்கற நேரத்துல மனசுக்குப் பிடிச்ச விஷயங்களை, உதாரணத்துக்கு பாட்டு கேட்கறது, புத்தகம் படிக்கிறது மாதிரி எதையாவது செய்யலாம்.நாள் கணக்கா தூக்கமும், பசியும் இல்லாமப் போனா, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை கேட்கலாம். எல்லாத்தையும்விட, இது தற்காலிகமான ஒரு மன மாற்றம், சில வாரங்கள்ல சரியாகிடக் கூடியதுங்கிற நம்பிக்கையும் தைரியமும் அவசியம்.

Similar topics
» பிரசவத்துக்கு பின் தாம்பத்திய உறவு எப்போது வைத்துக் கொள்ளலாம்.
» பெண்களை தாக்கும் நோய்
» பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
» பெண்களை தாக்கும் கொடிய நோய்
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்...
» பெண்களை தாக்கும் நோய்
» பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
» பெண்களை தாக்கும் கொடிய நோய்
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum