சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும் Khan11

சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும்

2 posters

Go down

சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும் Empty சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும்

Post by ராகவா Sat 31 Aug 2013 - 14:54

சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும்


சந்தியா கிரிதர்


சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும் Rishi


கபில முனிவர்

கபில முனிவர் கடவுளால் படைக்கப்பட்ட சித்த சக்திக் கொண்ட முனிவர். கபில முனிவர் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென்றும், அது போல வெவ்வேறு சூழ்நிலையில் கபில முனிவர் அக்னியின் அவதாரமாகவும், சிவபெருமானின் அவதாரமாகவும் தோன்றியிருக்கிறார். பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய பிரஜாபதி கர்தாம் என்பவருக்கும் அவருடைய மனைவி தேவயுவதிக்கும் கபிலர் மகனாகப் பிறந்தார். மகன் பிறந்ததும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என்ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினர். கபிலர் பிறந்ததும் பிரம்ம தேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாக சொன்னார். மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத்தை உருவாக்குவார் என்று பிரம்ம தேவன் சொல்லிவிட்டு மறைந்தார். கபிலமுனிவர் வளர வளர அவருடைய தந்தை சன்னியாசம் பெற்றுக் கொண்டு காட்டிற்கு சென்றார். சில நாட்கள் கழித்து காட்டிலேயே கபிலரின் தந்தை உயிர் நீத்தார். அதன் பிறகு கபில முனிவர் தன்னுடைய அன்னையுடன் சரஸ்வதி நதிக்கரையோரத்தில் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தங்கினார். ஒரு நாள் பிரம்ம தேவன் தோன்றி தேவயுவதியிடம், அவளுடைய மகன் கபில முனிவர் அவளிடம் அல்லது மக்களிடம் இருக்கும் அறியாமையை அழித்து தன்னிடமிருக்கும் ஞானத்தை எடுத்துரைப்பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார். பிரம்ம தேவன் கூறியபடியே கபில முனிவர் தியானம் செய்தார். தன்னுடைய ஞானத்தின் மூலம் மக்களுடைய அறியாமையை அகற்றினார். இயற்கை, ஆத்மா இரண்டும் ஒரு சக்தியால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தினார். தன்னுடைய ஞானத்தால் சமக்கிய சாஸ்திரத்தை படைத்தார். கபில முனிவர் தாயினுடைய அனுமதியோடு கடுந்தவம் செய்ய கங்கையை தாண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். முனிவர் கபில சூத்ரம் ஏன்ற நூலையும் இயற்றினார்.


பகவான் பாதாஞ்சலி

பகவான் பாதாஞ்சலி யோகத்தைப் பற்றி பூலோகத்திற்கு அறிய வைத்தார். பாதாஞ்சலி த்வாபர யுகத்தில் அங்கிரா, கோனிகா தம்பதியருக்கு மகனாக இருவட்டு என்ற இடத்தில் பிறந்தார். கோனிகா தினமும் குழந்தை வரத்திற்காக செப்புச் சொம்பிலிருந்து இரண்டு கைகளிலும் தண்ணீர் விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாள். ஒரு நாள் சூரிய பகவான் அவளுடைய கைகளில் குழந்தையை கொடுத்தார். சூரிய பகவானால் பெற்ற அந்தக் குழந்தைக்கு கோனிகா பாதாஞ்சலி என்று பெயர் வைத்தாள். பாதாஞ்சலி குழந்தைப் பருவத்திலே அளவுக்கு அப்பாற்பட்ட அறிவுத் திறனை பெற்றிருந்தார். சிறுவனாக இருந்த போது கடுமையான தவம் செய்தார். அவருடைய தவவலிமையைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், பிரம்மாண்டத்திற்கு மொழிகளின் இலக்கணத்தை அறிய வைக்கும் வரத்தை அவருக்கு கொடுத்தார். அதன்பிறகு பகவான் பாதாஞ்சலி கோனார்த் என்ற இடத்தில் தஞ்சமடைந்தார். பகவான் பாதாஞ்சலியைப் பற்றி மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது. ஆசார்ய பனினி இருகைகளாலும் தண்ணீர் விட்டு சூரிய பகவானை வேண்டிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அவருடைய கைகளில் பாம்புக் குட்டியைப் போட்டார். அந்தப் பாம்புக்குட்டி குழந்தையாக பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பனினி, பாதாஞ்சலி என்று பெயர் கொடுத்து நல்ல அறிவையும், திறமையையும் கற்றுக் கொடுத்தார். பாதாஞ்சலி சுமேரு மலையிலுள்ள குகையில் லோலுபாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். லோலுபா நல்ல அறிவாளி, இசை ஞானம் தெரிந்தவள். பகவான் பாதாஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை எழுதினார்.


நாட்டியாசாரியார் பரத முனிவர்

த்ரேதாயுகத்தில் மக்கள் இயற்கை சீற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திர பகவான் பிரம்ம தேவனிடம் மக்களுடைய சந்தோஷத்திற்காக நாட்டிய சாஸ்திரத்திரத்தை படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரம்ம தேவன் ரிக்வேதத்தின் பாடலையும், சாம வேதத்தின் ராகத்தையும், யஜூர்வேதத்தின் நடிப்புத் திறனையும், அதர்வவேதத்தின் ரசத்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார். பிரம்ம தேவன் பரத முனிவருக்கு அந்த நாட்டிய சாஸ்திரத்தைக் கொடுத்தார். பரத முனிவர் அந்த சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் காளிதாஸரின் காவியங்களை படைத்தன. பரத முனிவரால் படைக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரம், இயல், இசை, நாடகம், நடிப்பு ஆகிய பாவங்களை மக்களுக்கு எளிமையாகத் தெரிய வைத்தது.

மகரிஷி வால்மீகி

மகரிஷி கஷ்யப , அதிதி தம்பதியருக்கு வருன் பிரசேதாஸ் ஒன்பாவது குழந்தையாக பிறந்தார். வருன் பிரசேதாவிற்கு ரத்னாகர் பத்தாவது குழந்தையாக பிறந்தார். ரத்னாகர் பிறந்தவுடன் அவருடைய தந்தை மரணமடைந்தார். பெற்றோர்களை இழந்த ரத்னாகர் காட்டிற்கு சென்றார். காட்டிலுள்ள பில்வர்கள் ரத்னாகரை வளர்த்தார்கள். ரத்னாகர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருட ஆரம்பித்தார். காட்டிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து திருடிக் கொண்டிருந்த ரத்னாகர் அந்த வழியே சென்று கொண்டிருந்த தேவரிஷி நாரதரிடமிருந்து திருடும் போது, இந்தத் திருட்டினால் ரத்னாகருக்கு சந்தோஷம் கிடைக்கிறதா? என்று கேட்டார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பாவப்பட்ட வருமானத்தால் சந்தோஷம் பெறுகிறார்களா? என்று கேட்டார். நாரதரை மரத்தோடு கட்டிப் போட்டு ரத்னாகர் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வந்தார். நாரதர் கேட்ட கேள்விக்கு அவர்கள் இந்தப் பாவச் செயலில் தங்களுக்கு எந்தவித பங்குமில்லை என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன வார்த்தை ரத்னாகரின் கண்ணைத் திறந்தது. ரத்னாகர் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து ரத்னாகர் திருட்டுத் தொழிலை விட்டு விட்டுக் கடுந்தவம் செய்தார். அவர் தவமிருந்த சமயத்தில் அவர் உடல் மீது எறும்பு புற்றுக்கள் தோன்றி விட்டன. அதனை அறியாமல் அவர் கடுமையான தியானத்தில் மூழ்கியிருந்தார். சிறிது காலம் கழித்து தேவரிஷி நாரதர் அவ்வழியே சென்றார். ரத்னாகரின் உடல் முழுதும் எறும்பு புற்றுக்களால் மூடப்பட்டு கிடப்பதைக் கண்டு அவருக்கு வால்மீகி என்று பெயர் கொடுத்தார். த்ரேதாயுக அவதாரமான ஸ்ரீராமபிரானின் வரலாற்றைச் சொன்னார். வால்மீகி 24000 சுலோகங்களைக் கொண்டு பெருமை வாய்ந்த இராமாயண காவியத்தைப் படைத்தார். வால்மீகி படைத்த இராமாயணம் இன்றும் இந்து சமய மக்களால் போற்றப்பட்டு வருகிறது.

நன்றி:தளம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும் Empty Re: சில முனிவர்களும் அவர்கள் பெருமைகளும்

Post by Muthumohamed Sat 31 Aug 2013 - 21:29

நல்ல பதிவு நன்றி அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum