Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
304 பஸ் நிலையங்களில் மினரல் வாட்டர் விற்பனை: கண்டக்டருக்கு 12 பாட்டில்
2 posters
Page 1 of 1
304 பஸ் நிலையங்களில் மினரல் வாட்டர் விற்பனை: கண்டக்டருக்கு 12 பாட்டில்
"அம்மா மினரல் வாட்டர்' திட்டத்தின் கீழ், 304 பஸ் நிலையங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது. தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில், நடத்துனரிடம், 12 பாட்டில்கள் வீதம் வழங்கப்பட்டு, பயணிகளுக்கு விற்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில், ஒரு லிட்டர் பாட்டில், 10 ரூபாய் என வினியோகிக்கும், "அம்மா மினரல் வாட்டர்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 12 ஸ்டால்கள்; சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு, 39 ஸ்டால்கள் என, எட்டு போக்குவரத்துக் கழகங்களுக்கும், 304 பஸ் நிலையங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஸ்டால்கள், லாரிகளில் கொண்டு வரப்பட்டு, பஸ் நிலையங்களில் இறக்கி அமைக்கப்பட்டன. தேவையான இடங்களில் ஸ்டால்களை நகர்த்தி வைக்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில், 12 ஸ்டால்கள் அமைக்க திட்டமிட்டு, முதல் கட்டமாக, எட்டு ஸ்டால்களில் விற்பனை துவங்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல், 1:30 மணிக்கு மேல், பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் விற்பனை துவங்கியது. ஒவ்வொரு ஸ்டாலிலும், 500 பாட்டில்கள் வரை விற்பனைக்கு அளிக்கப்பட்டன. விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலே, விற்பனை சூடுபிடித்தது. பஸ் நிலையங்களில், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில், 20 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், 10 ரூபாய்க்கு தரமான குடிநீர் வழங்குவதை வரவேற்பதாக, பயணிகள் தரப்பில் கூறினர்.
இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கும்மிடிபூண்டியில் இருந்து தனியார் வாகனங்கள் மூலம், கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு, குடிநீர் கொண்டு வரப்படும். பின்னர், பஸ்களில் குடிநீர் ஏற்றப்பட்டு, அனைத்து பஸ் நிலையங்களுக்கும் கொண்டு செல்லப்படும். ஸ்டால் ஒன்றுக்கு, இரண்டு ஊழியர்கள் விற்பனைக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர் கொண்டு செல்லும் பணி உட்பட மொத்தம், 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இத்திட்டத்திற்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். தொலைதூரம் செல்லும் அனைத்து போக்குவரத்துக் கழக பஸ்களிலும் பயணிகளுக்கு குடிநீர் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிகளுக்கு குடிநீர் வழங்க, 12 பாட்டில் குடிநீர், நடத்துனரிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மோட்டல்களில் எப்போது கிடைக்கும்?
தொலை தூரம் சென்று வரும் பயணிகளின் நலன் கருதி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், குறிப்பிட்ட வழித்தடங்களில், பயண வழி உணவகங்கள் (மோட்டல்கள்) அமைக்கப்பட்டன. தற்போது, 37 வழித்தடங்களில் உள்ள தனியார் மோட்டல்களில், பஸ் ஒன்றிற்கு, 40 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கும் வகையில், போக்குவரத்துக் கழகங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன. மோட்டல்களில் அதிக விலை கொடுத்து சாப்பிடுவதுடன், குடிநீருக்காக, 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை செலவழிக்க நேரிடுகிறது. அங்கு விற்கப்படும் குடிநீர் தரமானதாக இல்லை; தாங்கள் கேட்டும் தயாரிப்பு நிறுவன குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, 10 ரூபாய் குடிநீரை, மோட்டல்களிலும் விற்பனை செய்தால் உதவியாக இருக்கும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்திருந்தும், மோட்டல்களில் விற்பனை செய்வது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "உற்பத்தியை அதிகப்படுத்தியவுடன், மோட்டல்களில் விற்பனையை துவக்கும் திட்டம் உள்ளது' என்றார்.
- நமது நிருபர் -
நன்றி:தினமலர்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சுத்தமான மினரல் வாட்டர்
» ரூ.10க்கு ‘அம்மா மினரல் வாட்டர்’ அரசு பஸ்களில்: ஜெயலலிதா அறிவிப்பு
» திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை
» தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை
» எந்த நீரையும் மினரல் வாட்டராக மாற்றும் ஸ்டரா!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum