சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புனித யாத்திரை – கயிலயங்கிரி Khan11

புனித யாத்திரை – கயிலயங்கிரி

Go down

புனித யாத்திரை – கயிலயங்கிரி Empty புனித யாத்திரை – கயிலயங்கிரி

Post by ராகவா Thu 26 Sep 2013 - 14:59


தர்பூசேவிலிருந்து கிரிவலம் ஆரம்பமாகிறது. அங்கிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ள தேராபுக் (Dehra Buk) சென்று இரவு அங்குள்ள விடுதியில் தங்குவது முதல் நாள் பயண முடிவு. தொடர்ந்து செல்ல முடியுமா எனச் சந்தேகப்படுபவர்கட்கு, முடியாது என்றே முடிவெடுக்குமளவுக்கு புறத்தாக்குதல்கள் இருக்கும்.
எதிரில் திரும்பி வரும் சிலர் சொல்லும் செய்திகள், அங்கு நிலவும் குளிர், இந்த 12 கி.மீ. பயணம் (நடை அல்லது குதிரை மீது அமர்ந்து) நம் குடும்ப உறுப்பினர்களின் நினைவு ஆகியன இது போதும் என்ற முடிவெடுத்துவிட வைக்கும்.
சராசரியாக கிரிவலம் செல்ல முடிவெடுத்துச் செல்பவர்களில் சுமார் பாதிப்பேர் இந்த இடத்துடன் தங்கள் கிரிவலத்தை நிறுத்திக் கொண்டு அன்றே தார்ச்சனுக்கு திரும்பி விடுகின்றனர்.
எச்சரிக்கை:
கிரிவலம் செல்ல குதிரை என்றால் சுமார் ரூ.12,000 நம் பையை எடுத்து வர ஓர் ஆள் செலவு ரூ.6000 என ரூ.18,000 செலவாகும் அல்லது நடந்து செல்பவர்கட்கு ரூ.6000 மட்டும் செலவாகும்.
டிராவல்ஸ் நிறுவனங்கள் யாத்ரிகர்கள் பயணிக்கும் வாகனங்கள் தவிர, கூடுதலாக இரு டிரக்குகள் வாடகைக்கு எடுப்பார்கள். ஒன்றில் நமது பொருட்கள் அடங்கிய பைகளும், மற்றதில் சமையல் பாத்திரங்கள், எரிவாயு, குடிநீர், மளிகை சாமான்கள் மற்றும் உணவுப் பொருட்களுடன் சிலரும் பயணிப்பர்.
நாம் பயணம் செய்யும் காரிலும் ஒருவர் உடன் வருவார். பெரும்பாலும் இந்த ஆட்களை நமது கிரிவலத்தின் போது, நம் பையை எடுத்து வரும் நபராக (கட்டணம் ரூ.6,000) அனுப்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரூ.6000 வசூலிப்பார்கள். நான்கு பேருடைய பைகளை ஒரு யாக் எருமை மீது கட்டியோ அல்லது இரண்டு மூன்று பேர் பைகளை ஒருவர் சுமந்து கொண்டோ வருவார்கள்.
பாவம், அவர்கட்கு இந்த கிரிவலம் முடிந்த பின் நாம் கொடுக்கும் அன்பளிப்புத் தொகை தான் முழுமையாகக் கிடைக்கும். கட்டணத் தொகையான ரூ.6,000ல் மிகமிகக் குறைவான ஒரு தொகையை மட்டுமே சுற்றுலா ஏற்பாட்டாளரின் மேலாளர் (காத்மாண்டு நபர்) தருவார் என்ற செய்தியை அறிய முடிந்தது. எனவே, 12 கி.மீ. சென்று வர, குதிரை எனில் ரூ.18,000மும் நடந்து என்றால், ரூ.6,000மும் செலவழிப்பது தேவைதானா என முன்பே முடிவெடுப்பது சிறப்பு.

நானும் என் மனைவியும் பரிக்ரமா செல்வதில்லை என முடிவெடுத்துத்தான் பயணத்துக்கான தொகையையே செலுத்தினோம். இயற்கையும் மிகவும் உறுதுணையாக இருந்தது.
பணம் கொடுத்த பின்பே கிரிவலம் துவங்கும். அந்தப் பணத்தை நம்மிடமிருந்து யுவான்களாக (சைனா பணம்) பெற்றுக் கொள்பவர் காத்மாண்டு டிராவல்ஸ் நிறுவனப் பிரதிநிதி நாளுக்கு நாள் இத்தொகை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
நம்மில் பலருக்கு நம் ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது எனத் தவறான எண்ணம் உண்டு. 2011ல் ஒரு அமெரிக்க டாலருக்கு நமது ரூபாய் சுமார் 50 இன்று 2012 அக்டோபரில் சுமார் ரூ.57 அதேபோல் ஒரு வருடம் முன் ஒரு சீனா யுவானுக்கு நமது ரூபாய் 7ணீ. ஆனால், இன்று ரூ. 9ணீ ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு கூடிக்கொண்டே உள்ளது. சுண்டைக்காய் அளவுள்ள நாடுகளின் கரன்சி மதிப்புகூட இன்று நமது ரூபாய் மதிப்பை விட உயர்வாகவே உள்ளன. இதற்கு நாம் தான் காரணம். சிந்தியுங்கள். எனவே, தார்ச்சனிலிருந்து பெறும் தரிசனத்துடன், அஷ்டபத் சென்று (வாகனத்துக்கு தனி கட்டணம் சுமார் ரூ.700) பார்க்கும் தரிசனம் மட்டுமே போதும்.

12 கி.மீ. செல்ல ரூ.6,000 அல்லது ரூ.18,000 செலவழிப்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.
கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள்:
உல்லன் துணிகள்:
படுத்து உறங்க எல்லா இடங்களிலுமே கட்டில், மெத்தை, ரசாய், கம்பளி போன்றவை வழங்கப்படுகின்றன. அவைகளை எடுத்துச் செல்ல வேண்டாம். அணிவதற்கு ஸ்வெட்டர், மங்கி கேப், கையுறை, காலுறை (ஷாக்ஸ்), தெர்மல்வேர் மற்றும் காதில் வைத்துக் கொள்ள பஞ்சு இவை போதும்.
சுற்றுலா ஏற்பாட்டாளர் துணிகள் மற்றும் நமது பொருட்களை எடுத்துச் செல்ல எண் குறித்த கெட்டி துணிப்பையும், (மழை பெய்தால் நனையும்) உடலின் மேல் அணிந்து கொள்ள கெட்டி ஜெர்கினும் தருகின்றார். பயண முடிவில் ஜெர்கினைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
ஆடைகள்: அணிந்து செல்வது நீங்களாக நான்கு செட் உடைகள் போதும். பெண்களுக்கு சுடிதார், புடவை எதுவானாலும் இந்த எண்ணிக்கையே போதும். ஆனால் தினமும் ஒன்று என்ற கணக்கில் பத்துக்கும் மேல் எடுத்துச் செல்வது வீணான மன உலைச்சலைத் தரும்.
இதர பொருட்கள்:
பரிக்ரமா செல்பவர்கள் மட்டும் ரெயின்கோட் (மழைக்காலமானால்) கொண்டு செல்லலாம். எல்லோரும் குடை, டார்ச்லைட், வெந்நீர் ஊற்றிக்கொள்ள பிளாஸ்க் (Flask), கறுப்பு கண்கண்ணாடி, பாத்ரூமுக்கு அணிந்து செல்ல ரப்பர் செப்பல், தினமும் அணியும் கேன்வாஷ் ஷு, பனியால் முகம் வெடிக்காமல் இருக்க கிரீம்கள், தேங்காய் எண்ணெய் போன்றவை.
தின்பண்டங்கள்:
பிஸ்கட், உலர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, சாக்லேட், குளுகோஸ் மற்றும் கடலை வகைகள்.
மருந்துகள்:
வழக்கமான மருந்து மாத்திரைகளுடன் முன் எச்சரிக்கையாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, சளி, இருமல் ஆகியவற்றுக்கான மாத்திரைகளுடன் உப்பு நாரத்தங்காய், உப்பு எலுமிச்சங்காய், எலக்ட்ரால் பவுடர், வலிக்கான களிம்புகள், இரத்த அழுத்தம் கூடாமலிருக்க (Diamox) டயமாக்ஸ் என்ற மாத்திரைகள் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.
பூஜை சாமான்கள்:
சுற்றுலா ஏற்பாட்டாளரே எல்லாம் கொண்டு வந்து விடுவதால், நாம் தனியாக வாங்கிச் செல்ல வேண்டியதில்லை. சூடமும் தீப்பெட்டியும் மட்டுமே போதும். இதற்கு மேல் அவரவர் விருப்பப்படி எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு எடுத்துச் செல்லலாம்.
குளியல்:
நம்மூரில் குளித்த பின், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 2 நாட்கள் குளிக்க வாய்ப்பு உண்டு. அதன்பின் தொடர் பயணம் என்பதால் மூன்று முறை மட்டுமே குளிக்க வாய்ப்புண்டு. அவை:
சாகா லாட்ஜில், மானசரோவர் ஏரியில் திரும்பி வரும்போதும் சாகாவில். எனவே, உள்ளாடைகளைக் கூட தினமும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. வியர்வையே வராது.
பனிக்காற்று மூக்கினுள் செல்லாமலும், உதடுகளைப் பதம் பார்க்காமலும் இருக்க, டஸ்ட் மாஸ்க் (Dust Mask) அணிவது அவசியம். பிளாஸ்டிக் மக் ஒன்றும் அவசியம் வேண்டும்.

நன்றி:தன்நம்பிக்கை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum