சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Khan11

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

+3
Atchaya
பானுஷபானா
*சம்ஸ்
7 posters

Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by *சம்ஸ் Sat 12 Oct 2013 - 7:55

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் 6f767224-3c7b-4af3-9074-384b6a33ce23_S_secvpf



பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்தகைய மழைக்காலத்தை விரும்புவதற்கு பெரும் காரணம், மிதமான வெப்பநிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்கத்திற்கே எடுத்துச் செல்லும். 

நம்மை பொருத்தவரை மழைக்காலம் என்றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட்டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்றும் இருக்கத் தானே செய்யும். 

என்ன புரியவில்லையா? வீட்டை விட்டு மழையில் வெளியே செல்லும் போது, வீட்டிலிருந்து ரசித்த மழைத்துளிகள் நம்மீது படும்போது, நோய்கள் வராதா? ஆம், மழையை நாம் எவ்வளவுக்கு அதிகம் ரசிக்கின்றோமோ, அந்த அளவு அதில் ஆபத்தும் உள்ளது. அதிலும் இந்த காலத்தில் பொதுவாக பல நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம். 

அதிலும் சில நோய்களை விரைவில் குணப்படுத்தலாம் மற்றும் சில நோய்கள் உயிருக்கே ஆபத்தாகக் கூட கொண்டு செல்லும். ஆகவே மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அந்த நோய்களைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், அதிலிருந்து எளிதில் தப்பிக்கக்கூட முடியும். சரி, அந்த நோய்களைப் பார்ப்போமா!!! 

* மலேரியா: பருவக்காலத்தில் வரும் நோய்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது மலேரியா தான். மலேரியா என்னும் நோயானது பெண் அனாஃபிலிஸ் கொசுக்களால் ஏற்படுகிறது. இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கிருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும். 

எனவே மலேரியாவின் இடர்பாட்டை தடுக்க, வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ வேண்டும். காய்ச்சல், நடுக்கம், தசை வலி மற்றும் சோர்வு ஆகியவைகள் தான் மலேரியாவின் அறிகுறிகளாகும். 

* வயிற்றுப் போக்கு: மழைக்காலத்தில் எளிதில் தாக்கும் நோய்களில் வயிற்று போக்கும் ஒன்று. சுத்தமில்லாத உணவை உண்பதாலும், தண்ணீரை பருகுவதாலும் ஏற்படும். பொதுவாக வயிற்றுப் போக்கில் இரண்டு வகைகள் உண்டு. 

அவை கடுமையான வயிற்றுப் போக்கு (அக்யூட்டையரியா) மற்றும் தீவிரமான வயிற்றுப் போக்கு (குரோனிக் டையரியா). இவை இரண்டையுமே வரும் முன் தடுத்து நிறுத்தலாம். அப்படியே வந்தாலும் கூட உரிய சிகிச்சை கொண்டும் குணமாக்கலாம். 

அதற்கு முதலில் செய்ய வேண்டியது சுத்தத்தைக் கடைப்பிடிப்பது தான். அதில் உண்ணும் முன் கையை கழுவுவது, எப்போதும் வெந்நீரைக் குடிப்பது போன்றவை அடங்கும். 

* டெங்கு காய்ச்சல்: மழைக்காலத்தில் கொசுக்களால் ஏற்படுவது. இந்த காய்ச்சல் வந்தால், காய்ச்சலுடன் உடல் வலி, மூட்டு வலி மற்றும் தடிப்புகள் போன்றவை உண்டாகும். இந்த நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள் தான். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் நல்ல உடையை அணிந்து, முழுமையாக உடலை மூடிக் கொள்ள வேண்டும். 

* சிக்கன்குனியா: ஏய்டெஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது தான் சிக்கன்குனியா. இந்த கொசுக்களானது தேங்கிய நீரில் தான் அதிகம் இனப்பெருக்கமாகும். மேலும் இது பகல் நேரத்தில் தான் கடிக்கும். 

திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து வரும் மூட்டு வலி தான் இதற்கான முக்கிய அறிகுறி. இதனை தடுக்க தண்ணீர் தொட்டிகளை சீரான முறையில் சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் பூச்சி மருத்துகளைப் பயன்படுத்த வேண்டும். 

* டைபாய்டு: டைபாய்டு என்ற நோய், தண்ணீரினால் வரும் நோயாகும். இது அதிகமாக பரவுவது மழைக்காலத்தில் தான். டைபாய்டு வர காரணமாக இருப்பது எஸ்.டைஃபி என்ற பாக்டீரியா. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உபயோகிப்பதால், இந்த நோய் நம்முள் வந்து விடும். மேலும் இந்த நோய் சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலை உருவாக்குவதாலும் பரவும். 

இந்த நோய்க்கான அறிகுறிகளாவன காய்ச்சல், தலைவலி, சோர்வு, வலி மற்றும் தொண்டை புண் ஆகியவைகள் தான். டைபாய்டு வராமல் தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தெருவோரம் விற்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது மற்றும் சத்தான பானங்களை அதிகமாக குடிக்க வேண்டும். 

* வைரஸ் காய்ச்சல்: பொதுவாக வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் வருவதுண்டு. மிதமான முதல் அதிகமான காய்ச்சல் தான் இதற்கான அறிகுறி. இந்த காய்ச்சல் 37 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும். 

* காலரா: பருவக்காலத்தில் வரும் ஆபத்தான வியாதி தான் காலரா. இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் வரும். மேலும் சுத்தமில்லாமல் இருப்பதாலும் உண்டாகும். இந்த காலரா இருந்தால், கடுமையான வயிற்றுப் போக்குடன் பேதியும் சேர்ந்து இருக்கும். ஆகவே சுத்தமான தண்ணீரை குடிப்பதாலும், சுத்தமான சுற்றுசூழலில் இருப்பதாலும் காலராவை தடுக்கலாம். 

* லெப்டோஸ் பிரோசிஸ்: லெப்டோஸ் பிரோசிஸை வீல்'ஸ் சிண்ட்ரோம் என்றும் அழைக்கலாம். இந்த நோய் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதாலும், குடிப்பதாலும் வருவதுண்டு. 

தலை வலி, தசை வலி, காய்ச்சல், நடுக்கம் மற்றும் சுழற்சிகள் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகள். இந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், வெளியில் செல்லும் போது பாதங்களை நன்றாக மூடிக்கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக உடலில் ஏதேனும் வெட்டு காயங்கள் ஏற்பட்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும். 

* மஞ்சள் காமாலை: மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகள், சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது. சோர்வு, மஞ்சள் நிற சிறுநீர், வாந்தி மற்றும் ஈரல் செயல் பிறழ்ச்சி ஆகிவைகள் தான் இதன் அறிகுறிகள். 

இதற்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து, தெருவில் விற்கும் உணவை சாப்பிடாமல் இருந்தால், மஞ்சள் காமாலையில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். வயிற்றில் ஏற்படும் தொற்று இந்த காலத்தில் இரைப்பை குடல் சுழற்சி போன்ற தொற்றுக்கள், வயிற்றில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

இது வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும். இதனை தடுக்க தெருவோரம் விற்கும் உணவுகளை தவிர்த்து, கொதிக்க வைத்த தண்ணீரையும், அதிக அளவில் சத்தான பானங்களையும் குடிக்க வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by பானுஷபானா Sat 12 Oct 2013 - 11:01

பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by Atchaya Sat 12 Oct 2013 - 15:02

*_ *_
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by Muthumohamed Tue 15 Oct 2013 - 21:52

நல்ல பதிவு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by ansar hayath Fri 18 Oct 2013 - 16:06

பயனுள்ள பகிர்வுக்கு :”@: தல
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by நண்பன் Mon 21 Oct 2013 - 12:05

காலத்திற்கு ஏற்றாப்போல் அருமையான பயனுள்ள தகவல் நன்றி குரு)( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by ahmad78 Wed 23 Oct 2013 - 16:25

பயனுள்ள தகவல்கள்


பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள் Empty Re: மழை காலத்தில் உடலை தாக்கும் 10 நோய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum