சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சல்மான்கானுடன் `நெருக்கம்' - அசினின் புது விளக்கம் Khan11

சல்மான்கானுடன் `நெருக்கம்' - அசினின் புது விளக்கம்

Go down

சல்மான்கானுடன் `நெருக்கம்' - அசினின் புது விளக்கம் Empty சல்மான்கானுடன் `நெருக்கம்' - அசினின் புது விளக்கம்

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 22:22


சல்மான்கானுடன் `நெருக்கம்' - அசினின் புது விளக்கம் Asin_salman001தமிழ், தெலுங்கு, இந்தி என்று கலந்துகட்டி கலக்குபவர் அசின். ஏடாகூடமான கேள்விகளுக்கும் படபடவென்று பதில்களைப் பொரிகிறார்
உங்களின் கடைசி இந்திப் படமான `லண்டன் ட்ரீம்ஸ்' வெளியாகி ஓராண்டாகி விட்டது. இது உங்களுக்குக் கஷ்டமான காத்திருப்பாக அமைந்ததா?
அப்படிச் சொல்ல முடியாது. நான் வேறு படங்களில் நடிக்காமல்
இருந்திருந்தால் எனக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் நான் இந்தக்
காலகட்டத் தில் தென்னிந்தியப் படங் களில் நடித்திருக்கிறேன். திரைப்பட
உலகிலிருந்து நான் என்னைத் துண் டித்துக் கொள்ளவில்லை. இந்தி சினிமாவில்
என்னைக் காணவில்லை என்றதுமே ஆளாளுக்கு ஊகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் நான் இங்கேதான் இருக்கிறேன். இந்த 2011 ஆண்டில் ரசிகர்கள் என்னை
நிறையப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும்.
புதிய படங்களில் ஒப்பந்தமாவதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக
இருக்கி றீர்கள். இந்தியில் மறுபடி அதிரடியாக வெளிப்பட, ஒரு பெரிய
வாய்ப்புக்காகக் காத்திருக்கிறீர்களா?

அதை விட, இப்படிச் சொல்லலாம். அதாவது எனக்குச் சரியாகத் தோன்றும்
விஷயங்களை மட்டுமே நான் செய்கிறேன். ஒரு நடிகையாக எனக்கு ஒத்துவரும்
படங்களைத்தான் தேர்வு செய்கிறேன். திரையுலகில் குதித்து, எப்போதும்
கவனத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகப் படபடவென்று படங்கள் பண்ணுகிற
நடிகையல்ல நான். எனக்கு அனுபவம் இருப்பதால் பொறுமையாகக் காத்திருந்து நல்ல
வாய்ப்புகளைத் தேர்வு செய்ய முடியும்.
ஆனால் உங்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளீர்களே?
அட விடுங்க... ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க. நீங்க சொல்ற
மாதிரியெல்லாம் எதுவுமில்லை. `லண்டன் ட்ரீம்ஸ்'-க்கு பிறகு எனது இந்திப்
படம் எதுவும் வெளியீட்டுக்குத் தயாராக இல்லை. அந்நேரத்தில் நான் தெற்கே
`பிசி'யாகிவிட்டேன். எனவே இந்தியில் எனது படம் வெளியாகாத நிலையில் என்னைப்
பற்றிய பேச்சும் அதிகமாக இருக்காது. அதிலென்ன இருக்கு? பேசுவதற்கு என்ன
இருக்கு? எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கேட்கிறீர்கள் என்று
நினைக்கிறேன்.
அதைப் பற்றிப் பேச நீங்கள் விரும்பவில்லையா?
தனிப்பட்ட விஷயங்களைவிட எனது வேலை பற்றிப் பேசவே நான் விரும்புகிறேன்.
அதுதானே இயற்கையானது? இது நான் யோசித்துத் தீர்மானித்த விஷயமல்ல. இயல்பாகவே
நான் அப்படித்தான்.
நீங்கள் உங்களின் அடுத்த இந்திப் படமான `ரெடி'யில் சல்மான்
கானுடன் ஒரு நெருக்கமான காட்சியில் நடித்தி ருக்கிறீர்களாமே... கடைசியில்
நீங்கள் கூச்சத்தை உதறிவிட்டீர்களா?

எனக்கே இவ்விஷயம் புதிதாக இருக்கிறது. நான் அப்படி எந்த நெருக்கமான காட்சி யிலும் சல்மானுடன் நடிக்கவில்லை.
ஆனால் நெருப்பில்லாமல் புகையாதே...
அப்படின்னா நான் என்ன சொல்றது? யாரோ ஒருத்தரின் கற்பனை, பரபரன்னு பரவிக்கிட்டிருக்கு. இதுவே ஒரு சினிமா கதை மாதிரித்தான் இருக்கு.சல்மான்கானுடன் `நெருக்கம்' - அசினின் புது விளக்கம் Asinm-salman
ஏன் அப்படிச் சொல்றீங்க?
இந்தியின் மூலமான, தெலுங்கு `ரெடி'யை பார்த்தவர்களுக்குத் தெரியும். அது
ஒரு குடும்பப் படம். அதில் ஒரு நெருக்கமான காட்சி கூட இல்லை. அதற்கான
வாய்ப்பும் இல்லை. ஒரிஜினல் படத்தை நீங்கள் பார்த்தால், எப்படி அப்படி ஒரு
காட்சியைச் செருக முடியும் என்று வியப்பீர்கள். இந்த மாதிரி வதந்திகள்
எல்லாம் உண்மையி லேயே வினோதமானவை.
`ரெடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்றிருந்தாலும் அது ஒரு மசாலா
படம்தானே... நீங்கள், சிறந்த படங்களைத்தானே தேர்வு செய்வதாகச்
சொல்கிறீர்கள்?

இல்லை, இந்தியில் இந்தப் படத்தை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் பல
மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சல்மான் இருப்பதால் அவரது
ரசிகர்களுக்கு ஏற்பச் சில மாற்றங்களைச் செய்துதான் ஆகணும். இயக்குநர்
அனீஸ்ஜிக்கு பொது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் புரிஞ்சிருக்கு.
பாலிவுட்டில் சில பெரிய ஆட்கள் காவலனின் கதையை வாங்கத் தயாராக
இருக்கிறார்களே... தமிழ், இந்தி `கஜினி'யில் நீங்களே நடித்ததைப் போல, இந்தி
யில் தயாராகும் காவலனிலும் நடிப்பீர்களா?

இல்லை. இப்போதைக்கு அம்மாதிரி எதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. சில
வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனாலும் எதுவும் இன்னும் இறுதியாகவில்லை.
காவலனைப் பொறுத்தவரை அதன் இந்திப் பதிப்பில் நான் நடிப்பேனா, இல்லையா என்று
உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. பார்க்கலாம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum