சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றால் யாருக்கு லாபம்? Khan11

மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றால் யாருக்கு லாபம்?

2 posters

Go down

மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றால் யாருக்கு லாபம்? Empty மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றால் யாருக்கு லாபம்?

Post by ராகவா Sat 14 Dec 2013 - 7:44

மதுரை: மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றாலும் அதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என வேளாண்மை பயிற்சி முகாமில் விவசாயி கவலை தெரிவித்தார்.



மதுரையில் உள்ள வேளாண்மைக்கல்லூரியில் மல்லிகைப் பூ ஏற்றுமதி செய்வது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. வேளாண் வணிக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் நடந்த இந்த பயிற்சியில் மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியை பாக்கியத்து சாலிஹா வரவேற்றார்.
கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சின்னுச்சாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை தலைவர் பேராசிரியர் ஜவகர்லால் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

"வேளாண் வணிக திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் மதுரை மல்லி உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் ஆயிரம் மல்லிகைப்பூ விவசாயிகள் சேர்த்து கொள்ளப்படுவர். அவர்களுக்கு நபார்டு வங்கி, தோட்டக்கலைத்துறை மற்றும் வணிக மேம்பாட்டு மையம் சுமார் 3 வருடத்துக்கு பயிற்சி அளிக்கும். அதில் மல்லிகைப் பூ ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முழுவதுமாக விளக்கப்படும். ஆனால் இந்த ஏற்பாடு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படும்.

மதுரை மல்லிகைப் பூவிற்கு வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் பூ விரைவில் மலராமல் இருப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. அந்த முறையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வறட்சியான பூமியில் விளையும் பயிர்களை கொண்டு விவசாயிகள் பலனடையலாம். தாராபுரம் பகுதியில் கண்வள்ளி கிழங்கு பயிரிட்டு ஏக்கருக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கின்றனர். மூலனூர் விவசாயிகள் செடி முருங்கை பயிரிட்டு தற்போது தினமும் ஒரு லட்சம் முருங்கைகாய் வரை ஏற்றுமதி செய்கின்றனர்.

அதேபோல, ஹாலந்து நாடு கடல் மட்டத்துக்கு கீழே இருப்பதால் நீர் வளம் மட்டும் உள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் 15 அடி உயரம் வளரும் தக்காளி செடி பயிரிட்டு நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஒரு செடியில் சுமார் 50 கிலோ தக்காளி காய்க்கிறது. அதேபோல, மதுரை மாவட்டத்தில் பூக்கள் பயிரிட்டு நல்ல லாபம் சம்பாதிக்க விவசாயிகளுக்கு வாய்ப்பு உண்டு.

மதுரை மண்ணில் கந்தகம் அதிகளவு இருப்பதால் வாசனை நிறைந்த தரமான பூக்கள் விளையும். கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் முக்கிய பிரமுகர்களுக்கு கையில் கொடுக்கும் பூங்கொத்தில் வைக்கப்படும் லில்லியம் என்ற பூவை ஒரு பூ ரூ.45க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

அதேபோல, மதுரை விவசாயிகளும் பசுமை குடில் மூலமாக பூ சாகுபடி செய்யலாம். சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். எனவே இதற்கான தொழில்நுட்ப உதவியை வேளாண்மை பல்கலைக்கழகம் வழங்கும்.

அதாவது, விளைவிப்பது, அதிக மகசூல் பெறுவது, ஏற்றுமதி வாய்ப்புகள் ஆகியன குறித்து விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை மட்டும் வழங்கும்." இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மதுரை வேளாண் விற்பனை குழுவைச் சேர்ந்த தவசிமுத்து பேசும் போது,

"சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் வோண்மை பல்கலைக்கழக உதவியுடன் மல்லிகை பூ ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆனால் புகழ் பெற்ற மதுரை மல்லிகை பூவுக்கு உலகளவில் வரவேற்பு இருந்தாலும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதற்கு முக்கிய காரணம் மதுரை மாவட்டத்தில் உள்ள மல்லிகைப் பூ விவசாயிகள் வியாபாரிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், விவசாயிகளுக்கு இதனால் எந்த பலனும் இல்லை. எனவே மதுரை மாவட்ட விவசாயிகள் தினமும் குறைந்த பட்சம் 2 கிலோ மல்லிகை பூவை ஏற்றுமதிக்கு கொடுக்க வேண்டும். மேலும், ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் மதுரையில் ஏற்படுத்தப்பட வேண்டும்." என்று பேசினார்.

பயிற்சி முகாமில் மல்லிகை ஏற்றுமதியாளர் சேதுமாதவன், வேளாண் வணிக துணை இயக்குனர் மூர்த்தி, தோட்டக்கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றால் யாருக்கு லாபம்? Empty Re: மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்றால் யாருக்கு லாபம்?

Post by பானுஷபானா Sat 14 Dec 2013 - 14:01

தகவலுக்கு நன்றீ அச்சலா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum