சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சிங்கப்பூர் கலவரம் 2013 ! Khan11

சிங்கப்பூர் கலவரம் 2013 !

Go down

சிங்கப்பூர் கலவரம் 2013 ! Empty சிங்கப்பூர் கலவரம் 2013 !

Post by ராகவா Sat 14 Dec 2013 - 8:00

தனது 47 ஆண்டு கால குடியரசு வரலாற்றில் ஒரு ஆகப் பெரிய கலவரத்தைச் சந்தித்து மீண்டு வந்திருக்கின்றது சிங்கப்பூர்!

அந்த கலவரத்திற்கு காரணமே நம் சகோதரர்கள் தான் என்பது ஒரு வரலாற்றுச் சோகம். இதை ஏதோ ஒரு கலவரம் என்ற வகையில் நாம் எளிதாக ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இது நடந்தது இந்தியாவில் இல்லை. இந்த கலவரத்தால் அடையப்போகும் பாதிப்புகளும் நம் தலையில்தான் விடியும். பல்லாண்டு காலமாக நம் வம்சாவழியினர் வாழும் பூமி இது. பல்லாயிரம் குடும்பங்களின் சகோதரிகளின் திருமண கனவை நனவாக்கவும், பெற்றோர்களின் மருத்துவ செலவுக்கு பொருள் ஈட்டவும், சகோதரர்களின் பட்டதாரிக் கனவை நனவாக்கவும் தனது சொந்த வீட்டுக் கனவை நனவாக்கவும் பொருள் ஈட்ட உதவி புரிந்த புரிந்துகொண்டிருக்கும் பூமி இது!

வளர்த்த கடா மார்பில் பாயும் என்பார்களே, அதுபோல பாய்ந்து விட்டு ஓய்ந்திருக்கிறார்கள் நம் சகோதரர்கள். இது நாம் பிழைக்க வந்த நாடு என்று நினைத்திருந்தால் இது போல செய்திருக்க மாட்டார்கள். ஆனால் சிங்கப்பூரில் அந்த நினைவு வருவது குறைவுதான். ஏனென்றால் நம் சொந்த ஊரில் இருப்பது போலவே ஒரு உணர்வோடு வாழலாம் இங்கு. பிழைக்க வந்த நாட்டில் இப்படி இருப்பதை நினைத்து கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அம்மன் கோவில் பிரசாதத்தில் இருந்து அஞ்சால் அலுப்பு மருந்து வரை இங்கு கிடைக்கும். ஆனால் அதிகமாக கொடுக்கப்பட்ட உரிமைகள் நம்மை இப்படி செய்யத் தூண்டி விட்டது போலும்.

இங்கு உள்ள தமிழர்களுக்குத் தாய் வீடு போல லிட்டில் இந்தியா. உள்ளே போய் விட்டால் நம்ம ஊர்ச் சந்தைக்கு போய் வந்த திருப்தியும் திருவிழாவிற்கு போய் வந்த திருப்தியும் ஒன்றாகக் கிடைக்கும். வார நாட்களில் ஓரளவிற்கு இருக்கும் கூட்டம் வார இறுதியில் அலைமோதும். பொதுவாக உள்ளூர்த் தமிழர்களும், இங்கு குடும்பத்துடன் இருக்கும் இந்தியாவில் இருந்து வந்தவர்களும் வெள்ளி சனிக்கிழமைகளில் தங்கள் வேலைகளை முடித்துக்கொள்வார்கள். ஞாயிற்றுக்கிழ்மை இந்தப்பகுதி, இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுவிடும். தொழிலாளர்கள் என்று சொன்னாலும் பங்களாதேசில் இருந்து வந்தவர்களும் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் பலதரப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்தவர்களும் அதிகமாக கூடுவார்கள்.

சனிக்கிழமை வரை உழைத்துவிட்டு சில சமயம் ஞாயிற்றுக் கிழமையும் மாலை வரை உழைத்துவிட்டு கிடைத்த சில மணிகளில் தன் நண்பர்களை, உறவினர்களைப் பார்க்கவும் பணம் அனுப்பவும், அந்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும் இங்கு கூடுவார்கள். அப்படி வந்த இடத்தில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சும்மா எப்படி பேசுவது? ஆகவே நம் தமிழக ரத்தத்தில் ஊறிப் போன குடியோடு தான் பேச்சு துவங்கும். 90% பேர் இப்படித்தான். கலவரத்திற்கு காரணமாக பல பேர் யூகமாக சொல்வது இது தான்.. குடித்துவிட்டு (இதுவும் போலிஸ் அறிக்கையில் இனி தான் தெரியவரும்) சாலையை கடக்க முயன்ற ஒரு தமிழரைத் தான் ஒரு தனியார் பேருந்து காவு வாங்கி கலவரத்திற்கு வித்திட்டது என்று.

கலவரம் எப்படி துவங்கியது என்று நாம் யூகமாகவே கூற முடியும், ஏனென்றால் நேரில் பார்த்திருந்தால் கூட இப்போது யாருமே பேசத் தயங்குவார்கள். முதலில் அவர் எப்படி அடிபட்டார் என்பதே பல யூகங்களாக உள்ளது. இரண்டாவது யூகம் அவர் பேருந்தில் ஏற முயன்றதாகவும் நடத்துனர் பெண்மணி (இதைப்பற்றி அடுத்து கூறுகிறேன் ) அவர் கைய பிடிக்க முயன்று நிலை தடுமாறி விழுந்ததாகச் சொல்வது. இதை நாம் ஆரம்பத்திலே நிராகரிக்கலாம், ஏனென்றால் இது போல உள்ள அனைத்து தனியார் பேருந்துகளும் குளிசாதன வசதி செய்யப்பட்டது. பேருந்தை நகர்த்தும் முன்பாகவே தானியங்கி கதவுகள் மூடி விடும். அப்படியே நடந்திருந்தாலும் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமரா காண்பித்துவிடும்.

அடுத்த யூகம் அவர் பேருந்தை நிறுத்த தட்டிக் கொண்டே ஓடி வந்ததாகவும், நடத்துனர் பெண்மணி அவரை தள்ளி விட்டதால் அவர் நிலை தடுமாறி விழுந்து அடிபட்டு இறந்ததாகவும் சொல்கிறார்கள், இதற்கும் முதலில் சொன்ன காரணங்களே பொருந்தும். கதவு சாத்தியிருக்கும் போது அதை திறந்துகொண்டு தள்ளிவிட அந்தப் பெண்மணிக்கு அவசியம் இல்லை. அப்படியே இருந்தாலும் சிசிடிவி காண்பித்துவிடும். ஆகவே அவர் எப்படி அடிபட்டு இறந்தார் என்பது காவல்துறை அறிக்கையில்தான் தெரியவரும்.

இப்போது நடத்துனர் பெண்மணி விவகாரத்திற்கு வருவோம். இங்கு அரசாங்கப் பொது போக்குவரத்தே அதிகம். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை விட்டு தூரத்தில்தான் விடுதிகள் இருக்கும் மேலும் பலருக்கு வேலை இடத்திலேயே தங்கும் இடம் இருக்கும். அங்கெல்லாம் பொதுப் போக்குவரத்து இருக்காது. ஞாயிற்று கிழமை அதிகமான பேர் லிட்டில் இந்தியா வருவதால், பல கம்பெனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டும் ஓட்டுனர்கள் ஞாயிற்று கிழமை அவர்களுக்கும் ஓய்வு என்பதால் உபரி வருமானத்திற்காக துணைக்கு தன் மனைவியோ,மகன் அல்லது மகளையோ அழைத்துக்கொண்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களுக்கு வந்துவிடுவார்கள். குறைந்த கட்டணத்தில் அவர்களை லிட்டில் இந்தியாவில் இறக்கிவிட்டு அங்கேயே காத்திருந்து இரவானதும் திரும்ப வருபவர்களை அழைத்து வருவார்கள். இப்படி ஒரு பேருந்தில்தான் ஒருவர் அடிபட்டு இறந்து கலவரம் உருவானது.

கலவரம், விபத்து உருவாக்கிய பேருந்தை தாக்குவதில்தான் தொடங்கியிருக்கிறது. ஆனால் அது எப்படி காவல் வாகனங்களையும் உதவிக்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தாக்கி எரிப்பதில் முடிந்தது என்று புரியவில்லை. இந்த காட்டுமிராண்டித்தனமான வன்முறை என்பது யார் என்ன காரணத்திற்காக செய்திருந்தாலும் கண்டிப்பாகக் கண்டிக்கப்படக்கூடியது. இதை ஏன் தமிழ்நாட்டு ஊடகங்கள் சீனர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் என்று சித்தரித்தார்கள் என்று தெரியவில்லை.

முதலில் ஒரு அடிப்படையை அங்கு உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கப்பூர் என்பது தோராயமாக 70% சீனர்களையும், 20% மலாய் இனத்தவர்களையும் 10% இந்திய வம்சாவழியினரையும் உள்ளடக்கியது. இதில் நம் தமிழ் நாட்டில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் சொற்பமே. இந்தக் கலவரம் முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் இருந்து வந்து வேலை செய்பவர்களால் மட்டுமே செய்யப்பட்டது. இதற்கும் இங்கு வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினால் எந்தப்பிரச்சனையும் இல்லை. எப்பொழுதும்போல அடுத்த நாளே தமது வேலைகளுக்கு சென்று வந்தனர். மாறாக தமிழ்நாட்டு ஊடங்கள் வர்ணித்தது போல் கைதுக்கு பயந்து யாரும் வீட்டுக்குள் முடங்க வில்லை.

இங்கு உள்ள காவல்துறையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுத்து எளிதில் யாரையும் கைது செய்ய மாட்டார்கள். சம்பவ இடத்தில் 28 பேரை கைது செய்தார்கள் விசாரணையில் நான்கு பேருக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்று விடுதலையும் செய்துவிட்டார்கள். மீதி 24 பேர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்துவிட்டார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் சில பிரம்படிகளும் கிடைக்கலாம். கலவரத்தில் ஈடுபடும் முன் ஒரு நிமிடம் நிதானித்து நாம் எதற்காக இவ்வளவு செலவு செய்து இங்கு வந்து குடும்பத்தைப் பிரிந்து ஓய்வில்லாமல் வேலை செய்கிறோம் என்று நினைத்துப் பார்த்திருந்தால் இதை செய்வதற்கு மனது வந்திருக்காது.

இதனால் என்ன சாதித்து விட்டோம் இப்பொழுது? ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு செல்லும்பொழுது, அது வேலைக்காக இருந்தாலும் சுற்றுலாவாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவை நாம் பிரதிபலித்துச் செல்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாம் செய்யும் செயல்கள்தான் இந்தியர்கள் மீதான பிம்பத்தை வெளிநாட்டவர்கள் மத்தியில் உருவாக்கும். ஏற்கனவே கற்பழிப்புகளால் நம் மானம் கப்பலில் போய்க்கொண்டிருக்க மிச்சம் உள்ளதை கலவரங்கள் செய்து ஏற்றிக்கொண்டிருக்கின்றோம், அதுவும் பிழைக்க வந்த நாட்டில்.

கலவரம் செய்யும் அளவிற்கு அரசாங்கத்தால் அடக்குமுறைகளும் இங்கு இல்லை. குறிப்பாக தொழிலாளர்களுக்கு. உழைப்பவர்களை பெருபாலான சிங்கப்பூரர்கள் மதிப்பார்கள். வீடுகளுக்கு அருகில் நம் தொழிலாளர்கள் வேலை செய்தால் சில சமயங்களில் வீட்டில் இருப்பவர்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள், குடிக்க குளிர்பானம் பணம் இப்படி இன வேறுபாடு இல்லாமல் கொடுப்பார்கள். நானே பலமுறை பார்த்திருக்கிறேன். விதி விலக்குகள் உண்டு. அவர்களை நாம் பொருட்படுத்த தேவை இல்லை.

சிங்கப்பூரில் பொது இடங்களில் குப்பை போடுவதோ அல்லது அசுத்தம் செய்வதோ சட்டப்படி குற்றம். ஆனால் ஞாயிற்றுக் கிழமை லிட்டில் இந்தியாவில் அரசாங்கம் இவற்றை கடுமையாகக் கடைபிடித்தது இல்லை. நினைத்த இடத்தில் நான்கு பேர் அமர்ந்து மது அருந்துவார்கள், குப்பை போடுவார்கள், அங்கு இருந்து வீட்டுக்கு திரும்பும் பொழுது பொது போக்குவரத்து பேருந்துகளில் மற்றும் ரயில்களில் குடித்துவிட்டு வாந்தி எடுத்து வைப்பார்கள், பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் ஊருக்கு போன் செய்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே வருவார்கள், இவை அனைத்தையும் அரசாங்கம் இதுவரை கண்டும் காணாமல்தான் இருந்து வந்தது. அவர்களது வேலை கஷ்டங்களையும் பொருளாதார நிலைமையையும் கருத்தில் கொண்டு அதிகமாகத் தண்டிப்பதில்லை. ஆனால் இனி? தன தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளும் யானை ஆகிவிட்டோம்.

இவ்வளவு இருந்தும் ஒட்டுமொத்தமாக குடியினால் மட்டுமே இந்தக் கலவரம் என்று ஒற்றை வரியில் கடந்துபோக முடியவில்லை இந்த நிகழ்வை. ஊரில் சிங்கபூருக்கு என்று முடிவானவுடன் முகவர்களால் அவர்களது பணத்தாசையால் ஆரம்பிக்கும் மன அழுத்தம் இங்கு வந்து சேர்ந்ததும் அவனது பணிச் சூழலால் பல மடங்கு அதிகமாகிறது. அதிகாலை எழுத்து காலை உணவாக இரண்டு ரொட்டியும் ஒரு காப்பியை பாக்கெட்டில் ஊற்றிக்கொண்டு உறிஞ்சிக்கொண்டே போனால் வேலையிடம் வந்துவிடும். மதியம் கட்டிக்கொண்டுபோன ஆறிப்போன சாப்பாடு அப்பறம் வேலை மாலை ஆனதும் ஒரு காப்பி ரெண்டு ரொட்டி கூடுதல் நேரம் வேலை பார்த்து விடுதிக்கு வரவே 10இல் இருந்து 11 மணி ஆகிவிடும். பிறகு சமையல் குளியல் என்று 1மணிக்கு மேல்தான் உறங்க முடியும்.

இப்படி தன் மன அழுத்தங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக்கொண்டே வந்தவன் எதன் மீதாவது அதைக் காமிக்க சந்தர்ப்பம் வரும்போது விஸ்வரூபம் எடுக்கிறான். புறக்காரணிகள் அவனுக்கு இரண்டாம் பட்சம் ஆகிறது. அதுவும் துணைக்கு ஆள் இருந்து செய்யும்போது இன்னும் ஆக்ரோசமாகச் செய்கிறான். இதன் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம் இந்தக் கலவரம். பார்க்க நேர்ந்த சில காணொளிகள் அதைத்தான் உணர்த்துகின்றன. கலவரத்தில் மாட்டிக்கொண்ட காவலர்களும், ஆம்புலன்சில் வந்த உதவியாளர்களும் பயந்து ஓடும்பொழுது ஒருவன் இறந்து கிடக்கிறான் என்ற உணர்வையும் மீறி விசில் அடித்தும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் அதை கொண்டாடுகின்றனர்.

அரசாங்கம் இந்தச் சம்பவத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் கருதாமல், தவறு இழைத்தவர்களை தண்டிப்பதோடு நின்று விடாமல் உளவியல் ரீதியாகவும் இதை அணுகி வெளிநாட்டு தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும் நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும். திரை கடல் ஓடியும் திரவியம் தேடச் சொன்ன முன்னோர்கள் திரை கடல் ஓடியும் கலவரம் செய்யச் சொல்லவில்லை என்பதை மட்டும் நாம் மனதில் கொள்வோம்.

நன்றி : வைகை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum