சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் Khan11

சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Go down

Sticky சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Nisha on Wed 12 Mar 2014 - 2:16

சிறுவர்களுக்கான பாடல்கள்  என் கற்பனையில்

உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம்  காகம் ஏமாந்த கதை தானே தெரியும்..ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலி காகம்  என்பதால்  நரியார் தாம் ஏமாந்தாராம்.
எப்படி என   ஒரு பாடல்..

நரியும் காகமும்
 சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் 12510697

 
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!

பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!

காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...!

என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது!

ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம்
!


Last edited by Nisha on Sat 22 Mar 2014 - 22:48; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky சிறுவர்களுக்கான பாடல்கள்--கிளி

Post by Nisha on Sat 22 Mar 2014 - 22:40

சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் Parrot-0016
கிக்கீக் கிக்கீக் கிளியக்கா
கிட்டக் கொஞ்சம் வா அக்கா
பச்சை நிறத்துக் கிளியக்கா
பழம் தருவேன் தின்னக்கா

பட்டு மேனிக் கிளியக்கா
பஞ்ச வர்ணம் ஏனக்கா?
கொஞ்சும் மொழி பேசுக்கா
கோபம் ஏனோ? சொல்லக்கா?

கிட்டக் கிட்ட வா அக்கா
கிள்ளை மொழி பேசுக்கா
கொய்யாப்பழம் தின்னக்கா
கொஞ்சி மகிழ்வோம் வா அக்கா
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky சிறுவர்களுக்கான பாடல்கள்--காகம்

Post by Nisha on Sat 22 Mar 2014 - 22:45

சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் Crow
கா...கா என்றே கரைந்திடும்
கழுத்தைத்திருப்பி பார்த்திடும்
இனிய உணவைக் கண்டதும்
இனத்தைக் கத்திக் கூப்பிடும்

பகிர்ந்து உணவை உண்டிடும்
பழக்கம் தன்னை உணர்த்திடும்
காக்கை காட்டும் குணத்தினைக்
கருத்திற் கொண்டால் நலமாகும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky சிறுவர்களுக்கான பாடல்கள்--மான்

Post by Nisha on Sat 22 Mar 2014 - 22:47

சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் Deer_05022009_4


புள்ளிப்புள்ளி மான் இது
துள்ளித்துள்ளி ஓடிடும்
தழையும் இலையும் தின்றிடும்
தண்ணீ ரையும் குடித்திடும்

நீண்ட கொம்பு கொண்டது
நீண்ட தூரம் ஓடிடும்
சின்னஞ்சிறிய வாலுடன்
சிட்டுப்போல மறைந்திடும்

பச்சைப் புல்லைத் தின்றிடும்
பார்க்க அழகுதந்திடும்
மருண்ட பார்வை கொண்டது
மானின் அழகு அது தானே!

எட்டி நானும் தொட்டிட
எண்ணம் கொண்டு சென்றிட்டால்
துள்ளித் துள்ளி ஓடுது
தூரம் ஓடிப் போகுது.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Nisha on Thu 15 May 2014 - 10:25

குரங்கு

சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் 3301337720_31e740a30e

குறும்பு சேட்டைகள் பல செய்திடும்
குட்டிக் குரங்கு காண்போம் வாரீர்

மரத்தில் ஏறித்தாவிடும்
மண்ணில் குதித்து ஓடிடும்

கொம்பில் ஏறித் துள்ளிடும்
குதித்து குதித்து தாவிடும்

வித்தை பல நீ செய்தால்
வேடிக்கை பல சேர்ந்து காட்டிடும்

கடலை, பழங்கள் நீ கொடுத்தால்
பறித்து ருசித்து தின்றிடும்

வாலிருக்கும் குரங்கிது
காவடியும் ஆடிடும்

பட்சமாக நாம் வளர்த்தால்
பல வகையில் உதவிடும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Nisha on Thu 15 May 2014 - 10:27

நிலவு

எந்தன் பிஞ்சு மனம் மகிழ்ந்து
நெஞ்சம் நிறைந்து பாடும்
பஞ்சு போன்ற மேகம் மேல்
அஞ்சிடாமல் செல்கிறாய்

வாட்டம்கொண்டு தினமும்
வாடிச் செல்லும் நிலவே
வானில் தெரியும் உன்
வட்டத் தோசை முகம் அழகே

மாலை தோறும் தோன்றி
மண்ணைக் குளிர்மையாக்கி
விண்ணில் தவழும் நிலவே
நீ என்னைப்போல அழகே

மலர்கள் மலர்ந்து மணம் வீச
சிறுவர் நாங்கள் பாடி மகிழ
பெரியோர் கூடி சேர்ந்து பேச
வண்ண நிலவே தினம் வருவாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 May 2014 - 11:03

நல்லபதிவு தொடருங்கள் 
மகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்


சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Nisha on Fri 27 Jun 2014 - 9:20

எந்தன் பிஞ்சு மனம் மகிழ்ந்து
நெஞ்சம் நிறைந்து பாடும்
பஞ்சு போன்ற மேகம் மேல்
அஞ்சிடாமல் செல்கிறாய்

வாட்டம்கொண்டு தினமும்
வாடிச் செல்லும் நிலவே
வானில் தெரியும் உன்
வட்டத் தோசை முகம் அழகே

மாலை தோறும் தோன்றி
மண்ணைக் குளிர்மையாக்கி
விண்ணில் தவழும் நிலவே
நீ என்னைப்போல அழகே

மலர்கள் மலர்ந்து மணம் வீச
சிறுவர் நாங்கள் பாடி மகிழ
பெரியோர் கூடி சேர்ந்து பேச
வண்ண நிலவே தினம் வருவாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Nisha on Fri 27 Jun 2014 - 9:22

பாட்டி

பாட்டி எங்கள் பாட்டி
பல கதைகள் சொல்லும் பாட்டி
பல் இல்லாத போதிலும்
பாங்காய் பேசும் பாட்டி

பாலர் நாங்கள் மகிழ
பண்பில் சிறந்து வாழ
பளளிப்பாடம் தினமும்
சொல்லித்தரும் பாட்டி

பாட்டி நல்ல பாட்டி
பாசமான பாட்டி.
பாலர் எம்மை அணைத்து
பலகாரம் தின்னத்தரும் பாட்டி

வீட்டில் எம்மை கூட்டி
விடுகதை பல சொல்லி
பாடல் மூலம் தாலாட்டி
தூங்கச் செய்யும் பாட்டி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Nisha on Fri 27 Jun 2014 - 9:37

காகம் ஒன்று மரத்திலே
கூடு கட்டி வாழ்ந்தது.
தன் இனத்தை பெருக்கவே
தினம் முட்டை இட்டுச்சேர்த்தது!

தினம் சேர்க்கும் முட்டையை
பாம்பு ஒன்றும் கண்டது!
காகம் பறந்து சென்றதும்
பாங்காய் முட்டை குடித்தது!

பொறுத்து பார்த்தார் காக்கையார்
பொறுமை காற்றில் பறந்தது
மன்னன் மனைவி மணிமாலையை
கௌவிக் கூட்டில் போட்டது!

மணிமாலை தேடி வீரர்கள்
மரத்தை தறித்து போடவே
மரத்தில் இருந்த பாம்பாரோ
பொங்கி எழுந்து சீறினார்.

சீறி எழுந்த பாம்பிடம்
சின்மும் கொண்ட வீரர்கள்
சிறுதுண்டாக வெட்டினர்
அந்தோ பாம்பு இறந்தது!

தீங்கு நினைத்த அரவத்தை
தன் புத்தியாலே வென்றது!
சித்தி கொள்ள நாமுமிந்த
சிந்தனையை தொடருவோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by rammalar on Fri 27 Jun 2014 - 12:40

அனைத்தும் அருமை...!
-
[img]சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் 2im6ol[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16009
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by மீனு on Fri 27 Jun 2014 - 17:14

Nisha wrote:சிறுவர்களுக்கான பாடல்கள்  என் கற்பனையில்

உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம்  காகம் ஏமாந்த கதை தானே தெரியும்..ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலி காகம்  என்பதால்  நரியார் தாம் ஏமாந்தாராம்.
எப்படி என   ஒரு பாடல்..

நரியும் காகமும்
 சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் 12510697

 
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!

பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!

காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...!

என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது!

ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம்
!
இது சுவிஸ் காக்காதானே அதான் ஏமாறல
குழந்தைப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அன்பு நன்றி இன்னும் எழுதுங்க
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by ராகவா on Fri 27 Jun 2014 - 17:19

மீனு wrote:
Nisha wrote:சிறுவர்களுக்கான பாடல்கள்  என் கற்பனையில்

உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம்  காகம் ஏமாந்த கதை தானே தெரியும்..ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலி காகம்  என்பதால்  நரியார் தாம் ஏமாந்தாராம்.
எப்படி என   ஒரு பாடல்..

நரியும் காகமும்
 சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான் 12510697

 
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!

பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!

காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...!

என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது!

ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம்
!
இது சுவிஸ் காக்காதானே அதான் ஏமாறல
குழந்தைப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அன்பு நன்றி இன்னும் எழுதுங்க
ஓ! அதுதானா விசியம்...இன்னும் எழுதுங்க மீனுமா நீங்களும் கொடுங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Nisha on Sun 26 Apr 2015 - 11:00

இந்த திரியில் வரும் பாடல்களில் சில நான் என் சொந்தகற்பனையில் எழுதியது,.


இப்ப பதியபோவது நண்பனிடமிருந்து சுட்டது!

ஆறிடமுன் சுடசுட சுட்டதை பகிர வந்தேன்..

 
அந்தப்பக்கம் கா கா கா
கிளி இந்தப்பக்கம் கீ கீ கீ
குயில் மரத்தில் கூ கூ கூ
கோழி கூரையில் கொக் கொக் கொக்
பசுவும் கன்றும் மா மா மா
பதுங்கும் பூனையும் மியா மியா மியா
மேயும் ஆடும் மே மே மே
காக்கும் நாய் லொல் லொல் லொல்
டம் டம் டும் டும் கச்சேரி
நடக்குது பாரு ஊருக்குள்ள!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by சுறா on Sun 26 Apr 2015 - 12:22

Nisha wrote:இந்த திரியில் வரும் பாடல்களில் சில நான் என் சொந்தகற்பனையில் எழுதியது,.


இப்ப பதியபோவது நண்பனிடமிருந்து சுட்டது!

ஆறிடமுன் சுடசுட சுட்டதை பகிர வந்தேன்..

 
அந்தப்பக்கம் கா கா கா
கிளி இந்தப்பக்கம் கீ கீ கீ
குயில் மரத்தில் கூ கூ கூ
கோழி கூரையில் கொக் கொக் கொக்
பசுவும் கன்றும் மா மா மா
பதுங்கும் பூனையும் மியா மியா மியா
மேயும் ஆடும் மே மே மே
காக்கும் நாய் லொல் லொல் லொல்
டம் டம் டும் டும் கச்சேரி
நடக்குது பாரு ஊருக்குள்ள!

க கா கி கீ... பாடல் அருமை
சுட்டதானாலும் சூப்பர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by ராகவா on Sun 26 Apr 2015 - 13:51

அருமை.....தொடருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum