சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழங்களின் பயன்கள்
by rammalar Yesterday at 13:43

» பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
by rammalar Yesterday at 3:59

» காதல் பிசாசே காதல் பிசாசே ...!
by rammalar Yesterday at 3:43

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by rammalar Thu 6 May 2021 - 15:54

» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
by rammalar Mon 3 May 2021 - 8:57

» மீம்ஸ்
by rammalar Sun 2 May 2021 - 16:33

» தவல வடை
by rammalar Sun 2 May 2021 - 16:27

» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
by rammalar Sun 2 May 2021 - 16:03

» தமிழ்நாடு - தேர்தல் - மக்கள் தீர்ப்பு நிலவரம்
by rammalar Sun 2 May 2021 - 10:39

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா
by rammalar Sun 2 May 2021 - 4:06

» அனுபவ மொழிகள்-தொடர் பதிவு
by rammalar Sat 1 May 2021 - 16:57

» ‘குக்-வித் ஏமாளி!’
by rammalar Sat 1 May 2021 - 15:20

» மே-1 உழைப்பாளர் தின வாழ்த்துகள்
by rammalar Sat 1 May 2021 - 3:23

» திருப்பம் - சிறுகதை
by rammalar Fri 30 Apr 2021 - 15:36

» நடிகர் செல்லத்துரை காலமானார்
by rammalar Fri 30 Apr 2021 - 15:30

» விநாயகன் - பக்தி பாடல்
by rammalar Fri 30 Apr 2021 - 15:26

» பெங்களூரூக்கு சவால் அளிக்குமா பஞ்சாப்?
by rammalar Fri 30 Apr 2021 - 9:37

» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
by rammalar Fri 30 Apr 2021 - 9:34

» பல்சுவை கதம்பம்
by rammalar Thu 29 Apr 2021 - 18:17

» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
by rammalar Wed 28 Apr 2021 - 16:57

» இலக்கியம் படித்த கௌரி..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:56

» சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் ..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:55

» அது அவன் இல்லை – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:53

» பெண்மனம் – ஒரு நிமிடக் கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:51

» நிழல் நிஜமாகிறது – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:50

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
by rammalar Tue 27 Apr 2021 - 15:23

» உணவுதான் மூலத்துக்கு தீர்வு.
by rammalar Mon 26 Apr 2021 - 17:00

» ...காவல் காக்க முன்வர வேண்டும்!
by rammalar Mon 26 Apr 2021 - 15:41

» வாரியாரைக் காக்க வைத்த சாய்பாபா!
by rammalar Mon 26 Apr 2021 - 15:23

» தோஷத்துக்கு பரிகாரம் பண்ணணும்...!
by rammalar Mon 26 Apr 2021 - 15:18

» எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி
by rammalar Mon 26 Apr 2021 - 6:27

» அனுமன் ஜெயந்தி
by rammalar Mon 26 Apr 2021 - 6:18

» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
by rammalar Mon 26 Apr 2021 - 5:32

» சீன கடற்படையில் 3 நவீன போர் கப்பல்கள் இணைப்பு
by rammalar Mon 26 Apr 2021 - 4:40

» விளையாட்டு செய்திகள் - சில வரிகளில்...
by rammalar Mon 26 Apr 2021 - 4:37

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Khan11

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sat 22 Mar 2014 - 23:08

First topic message reminder :

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து  பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும்  தொகுக்கப்பட்டது.


இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்  
பெயர்களின் மேல் சுட்டவும்.

 1. செங்காந்தள்
 2. ஆம்பல்
 3. அனிச்சம்
 4. குவளை
 5. குறிஞ்சி
 6. வெட்சி
 7. செங்கொடுவேரி
 8. தேமாம்பூ
 9. மணிச்சிகை
 10. உந்தூழ்
 11. கூவிளம் பூ
 12. எறுழம்
 13. சுள்ளி
 14. கூவிரம்
 15. வடவனம்
 16. வாகை
 17. குடசம்
 18. எருவை
 19. செருவிளை
 20. கருவிளம்
 21. பயினி
 22. வானி
 23. குரவம்
 24. பசும்பிடி
 25. வகுளம்
 26. காயா
 27. ஆவிரை
 28. வேரல்
 29. சூரல்
 30. சிறுபூளை
 31. குறு்நறுங்கண்ணி
 32. குருகிலை
 33. மருதம்
 34. கோங்கம
 35. போங்கம்
 36. திலகம்
 37. பாதிரி
 38. செருந்தி
 39. அதிரல்
 40. சணபகம்
 41. கரந்தை
 42. குளவி
 43. மா
 44. தில்லை
 45. பாலை
 46. முல்லை
 47. குல்லை
 48. பிடவம்
 49. செங்கருங்காலி
 50. வாழை
 51. வள்ளி
 52. நெய்தல்
 53. தாழை
 54. தளவம்
 55. தாமரை
 56. ஞாழல்
 57. மௌவல்
 58. கொகுடி
 59. சேடல்
 60. செம்மல்
 61. சிறுசெங்குரலி
 62. கோடல்
 63. கைதை
 64. வழை
 65. காஞ்சி
 66. மணிக்குலை
 67. பாங்கர்
 68. மராஅம்
 69. தணக்கம்
 70. ஈங்கை
 71. இலவம்
 72. கொன்றை
 73. அடும்பு
 74. ஆத்தி
 75. அவரை
 76. பகன்றை
 77. பலாசம்
 78. பிண்டி
 79. வஞ்சி
 80. பித்திகம்
 81. சிந்துவாரம்
 82. தும்பை
 83. துழாய்
 84. தோண்றி
 85. நந்தி
 86. நறவம்
 87. புன்னாகம்
 88. பாரம்
 89. பீரம்
 90. குருக்கத்திப்பூ
 91. ஆரம்
 92. காழ்வை
 93. புன்னை
 94. நரந்தம் 
 95. நாகப்பூ
 96. இருவாட்சி
 97. குருந்தம் 
 98. வேங்கை
 99. புழகு 1. மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
 2. விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
 3. குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
 4. சங்ககால மலர்களின் பட்டியல் 


மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை  தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!

இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Mon 31 Mar 2014 - 15:03

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide22-1

குடசம் கிரிமல்லிகை, மலைமல்லிகை குடசப்பாலை என அழைக்கபடும். அழகிய இளம் வெள்ளையில் இதழ்கள் நடுவே இளம் மஞ்சளில் திலகம் வைத்தார் போல சிறு கோடுடன், அடர் பச்சையில் இலைகள் காணப்படும்.

இதனை வெட்பாலைப் பூ என்பர்.

குடசப்பாலை (கருப்பாலை, Holarrhena pubescens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் சிறுமரமாகும். வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை

குடசத்தின் பட்டை பல மருத்துவக் குணங்கள் கொண்டதாம்,ஆனால் பொதுவான இயல்பு கசப்பு.


குடசம் எதுவெனும் குழப்பத்தில் நான்..

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 738px-Milo_closeupபெயர் -: பூவரசு.
தாவரப்பெயர் -: THESPESIA POPULNEA.
தாவரக்குடும்பம் -: LVACEAE.குடசம் என்னும் மலரைக் குறிஞ்சிப்பாட்டு வான்பூங் குடசம் என விளக்கிக் காட்டுகிறது.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் இதனைக் குளிப்பிடுகின்றன. குடை போன்று இருக்கும் பூ ‘குடசம்’. இதனை இக்காலத்தில் பூவரசம் பூ என்கின்றனர். பூவரச மரம் ஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.

சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்

புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது. தென்னிந்தியாவில் அதிகமாக் காணப்படுகிறது.இதன் இலை பசுமை நிறமாகவும், அரச இலையைவிட சற்று அகலமாகவும் இருக்கும். இதன் பூமொட்டுசிறிய பம்பரம் போல் இருக்கும்.மொட்டு மலர்ந்தவுடன் புனல் வடிவில் மஞ்சள் நிறமுடையதாக மலரும். கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். காய்களை உடைத்தால் விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. விதை குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் உண்டாகும்

இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 2 Apr 2014 - 10:22

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide23
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 1-5
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 2-5

கொறுக்கச்சி, கோரை என்று பலவாறு அழைக்கப்படும் ஒரு வகை நாணற்புல்.


கோரை ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிரிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும்.

இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 2 Apr 2014 - 10:23

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide24

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 80ab7c2d

செருவிளை என்பது வெண்ணிறம் கொண்ட சங்குப்பூ வகை
கரிசண்ணி என்றும் அழைக்கப்படுகின்ற பூவும் இதுவே.

சங்கு பூ, தந்திரப் பூக்கள் அபராஜிதா, காக்கானம், வெள்ளை காக்கானம் பெயர்கள் உண்டு

இது ஒரு கொடி வகைத் தாவரம் தனித்தும், வேலிகளிலும், புதர்களிலும் படரும், வெப்ப நாடுகளில் அதிகம் காணப்
படுகிறது.

இரண்டு வண்ணங்களில் இருக்கும் வெண்ணிறத்தில் இருப்பது செருவிளைஊதா நிறத்தில் இருப்பது கருவிளை
இறைவனுக்கு உகந்த மலராகையில் பெண்கள் சூடுவதில்லை

பல சங்க காலப் பாடல்களில் பலரால் பாடப் பட்டது இந்த மலர்அபராஜிதா என மகாபாரத்திலும் கார்கோடகப்பூ என ஆண்டாள்லாலும்அழகுறப் பாடப் பட்ட மலர்

வெண்மையாய், பட்டு போல மிருதுவான இதழ்கள், தூயபச்சையில் அதன் இலைகள், அதை தாங்கி
தண்டோடும் காணப்படும்.

இந்த ம‌லர் ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த மலர் ஆகும் ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தமருத்துவத்திலும் தலைசிறந்து விளங்குகிறது
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 2 Apr 2014 - 10:24

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide25

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 4bd9d3b3
ஊதாநிற சங்குப்பூ; காக்கணம் என்றும் அழைக்கப்படும் குறிஞ்சிப்பாட்டு பூ.

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 2 Apr 2014 - 10:28

 குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide26
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Vateria20indica-Saaludhoopa
குறிஞ்சிப் பாட்டில் கபிலர், ""பயினி வானி பல் இணர்க்~ குரவம்"" என்றார். `பயினி' என்பதற்கு நச்சினார்க்கினியர் `பயினிப்பூ' என்று உரை கூறினார். சங்க இலக்கியத்தில் வேறு எங்கும் `பயினி' என்பது கூறப்படவில்லை. பிற்கால இலக்கியமாகிய பெருங்கதையில் ""பயில் பூம் பயினி"" என வரும் சொற்றொடரைக் கொண்டு பார்த்தால் `பயினி' மரத்தில் பூக்கள் அடர்ந்திருக்கும் என்று அறியலாம். வட்டேரியா இண்டிகா என்னும் தாவரப்பெயர் உள்ள மரத்தைப் `பயின்' என்று மலையாள மொழியில் அழைப்பர் என்று காம்பிள் கூறியுள்ளார். இம்மரத்தின் பூக்கள் கொத்தாக உள்ளன. `பயினி' என்பது வட்டேரியா இன்டிகா என்ற மரமாக இருக்கலாம் என்று எண்ணி இத‌ன் தாவர இயல்புகள் கீழே தரப்படுகின்றன. எனினும், இம் மரம் கபிலர் கூறும் `பயினி' மரமா என்னும் ஐயப்பாடு உள்ளது.


பெரியமரம். இம்மரத்தில் ஒரு வகையான பசை உண்டாகிறபடியால் இதனைப் பினேவார்னிஶ் மரமென்றும், இந்தியக் கோபால் வார்னிஶ் என்றும் கூறுவர்.தோல் போன்று தடித்து அக‌ன்ற இலை முட்டை வடிவானது. இணை; இலை நரம்புகள் காணப்படும்.

மலர் வெண்மை நிறமானது. 8 அங்குல அகலமானது. மணமுள்ளது.பூக்கும் இரு வித்திலைத் தாவரம்

கனி ஒரு வித்துள்ள (காப்சூல்) வெடிகனி, முட்டை அல்லது வட்ட வடிவானது. மங்கலான பழுப்பு நிறமானது.

விதையிலை அகன்று சதைப்பற்றானது. சமமில்லாதது. முளை வேரையுட்கொண்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் கன்னடத்திலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள 2500 அடி உய‌ரமுள்ள மலைப்~ பாங்கில் வளரும். மரம் கருநீலப் பழுப்பு நிறம். மரத்தில் ரெசீன் என்னும் பசைப்பொருள் உள்ளது, விதையில் ஒருவித எண்ணெயுண்டாகிறது
தேடலுடன்....
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by rammalar Wed 2 Apr 2014 - 10:29

*_  *_ -
-
நல்ல பதிவு...

-

(இலங்கை வட பகுதியில்)..
எங்கட ஊரில கன காதலர்களின் தபால்ப்பெட்டி

இதுதான். வேலியோரத்து பூவரச மரத்தில தான்

தங்களின் காதல் கடிதங்களையும் அன்பளிப்பு

பொருள்களையும் சொருகிப்போட்டு போறவை.
-
-தமிழ்ப்பொடியன்-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 17982
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 2 Apr 2014 - 10:30

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 247fced4

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 1-6
இது ஒரு வகை பனையின் மலர்.இதற்கு நிறைய தாலிப்பனை, குடைப்பனை,கூந்தப்பனை விசிறிப்பனை, கூந்தல் பனை என பெயர்கள் உண்டு.

இதில் நான்கு வகை உண்டு,
முதல் வகை, இரண்டு ஆள் உயரம் தாண்டாது,
இரண்டாம் வகை ஓங்கி உயர்ந்து வளரும்,
மூன்றாம் வகை பல தலைகளுடன் காணப்படும்
கடைசி வகை மிகத் தாழ்வாக படர்ந்து இருக்கும்.

மிகப் பெரிய பூவை பூக்கும் மிக விந்தையான மரம் இது இதன் மனத்தை வெகு தூரம் வரை உணர முடியும். வெகு தூரத்தில் இருந்தும் இதனைக் காண முடியும்

வாழ்வில் ஒரு முறைதான் பூக்கும், அதிலும் முப்பது முதல் எழுபது வருடங்கள் ஆகும் போது தான் பூத்துக் கனியாகும்.அந்த விதை மண்ணில் விழுந்த பின்எப்போதும் பூக்காது.

நெடுங்காலம் உயிர் வாழும்ஆகவே இது மிகக் குறைவாகவே இன விருத்தி செய்கிறது. அதனால் அடர்ந்த காட்டிலும் தனியாகவே இருக்கும். இதில் பெரும்பாலான மரங்கள் அர்த்தனாரீஸ்வரர்கள்.அதாவது ஒரே பனையில் ஆணும்,பெண்ணும் இணைந்தே இருக்கும்.

பனையோலைச் சுவடிகள் போல அல்லாமல், மெலிதாய் பெரிய சிறகு போல இருப்பதால், இதில் பலநூல்களும் எழுதி உள்ளனர்.
 
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 2 Apr 2014 - 10:35

rammalar wrote:*_  *_ -
-
நல்ல பதிவு...

-

(இலங்கை வட பகுதியில்)..
எங்கட ஊரில கன காதலர்களின் தபால்ப்பெட்டி

இதுதான். வேலியோரத்து பூவரச மரத்தில தான்

தங்களின் காதல் கடிதங்களையும் அன்பளிப்பு

பொருள்களையும் சொருகிப்போட்டு போறவை.
-
-தமிழ்ப்பொடியன்-

ஆமாமாம் ! காதல் கடிதம் கட்டுமா! புத்தகப் பைகளை ஒழிச்சு வைக்கவும் அது அருமையான இடம்!  காலை எழுந்து ரெம்ப நல்ல பிள்ளையாய் புத்தப்பையை தூக்கிகொண்டு  பாடசாலை முன்னாலிருக்கும்  பூவரசமரமோ, ஆலமரமோ, வம்மி மரமோ  அதில் பையை ஒழிச்சு வைச்சிட்டு  விளையாடி விட்டு  சரியாக் பள்ளிமுடியும் நேரம் பையுடன் விட்டுக்கு போய் பூவரச விளாரால் அடி வாங்கினாலும் உறைக்காது!

உங்கள் கருத்திடலுக்கும் நன்றி ஐயா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 6 Apr 2014 - 17:51

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide27
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 373px-Illustration_Euonymus_europaea0

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Spindle_tree_fruits_-_geographorguk_-_1025468

வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.சுழல் அல்லது சுழல் மரம் என்றும் அழைக்கப்படும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 6 Apr 2014 - 17:56

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide28

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 800px-Luculia_gratissima

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு மலர் - மலைவசம்பு அல்லது குரவகம் அல்லது Common blue-bottle flower இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கக்கூடும்.

குரவம்
குரவு, குரா என்றும் இதனை வழங்குவர். குரவ மலரை, `நறும் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை' -30- குரவம் முல்லை நிலத்து மரம். முன்பனிக் காலத்தில் அரும்பு கட்டத் தொடங்கும் என்பதையும், இளவேனிற் காலத்தில் மிகுதியாகப் பூக்கும். பின்பனிக்காலமான மாசி , பங்குனியில் பூக்கும் பூ இது...

இதன் அரும்பு அரவின் எயிற்றினைப் போன்று இருக்கும்.

இதன் மொட்டுக்களும், பூக்களும் சிறியதாகவே இருக்கும். மலர் வெண்மை நிறத்துடன் குவிந்து இணராகப் பூக்கும் தன்மையினையும், மணமிகுந்து விளங்கும் பண்பினையும், நற்றிணைப் பாக்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய Tarenna வரை 6 மீற்றர் வரை வளரும் சிறிய மரம். , இலைகள் 8-18 செ முனையில் குறுகிய நீட்சி கொண்டு நீண்டு 4-8 செ.மீ. அகலத்தோடும் தண்டு வரை 0.5-2 செ.மீ. ஆகும். இலை விளிம்பு முழுமையாக அல்லது ஓரளவு சுருண்டிருக்கும்.. கிளைகள் இறுதியில் நீள் சதுர வடிவ இதழ்களோடு மலர்கள் இருக்கும். ஆசிய Tareந்ன இனம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் காணப்படுகிறது.பூக்கும் தாவர வகையைசேர்ந்த‌ ஒரு குடும்பம், பல்வேறு காபி, பூண்டு வகைசெடியை சேர்ந்த குடும்பம்,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 6 Apr 2014 - 17:58

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide29
Garcinia ஆசியா, ஆஸ்திரேலியா, வெப்ப மண்டல மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா, மற்றும் பொலினீசியா வளரக்கூடிய Clusiaceae பேரினமாகும்

இந்த இனத்தில் உள்ள தாவரங்கள் saptrees, mangosteens (மேலும் ஊதா mangosteen, ஜி mangostana குறிப்பாக இது), garcinias அல்லது, ambiguously, "குரங்கு பழம்" என்று அழைக்கப்படுகின்றன.இவ்வின‌த்தின் ப‌ல‌ ப‌ழ‌ங்க‌ள் உட‌ன் உண்ண‌கூடிய‌வையே..

Garcinia இனங்கள் பசுமையான மரங்கள் மற்றும் புதர்கள், . பல இனங்கள் காடுகள் அழிப்புகளின்காரணமாக அழிந்து விட்டது. தெற்கு அந்தமான் தீவுகளில் அதிகமாக் காணப்பட்ட cadelliஅன இனங்கள் கிட்டத்தட்ட அல்லது முழுமையாக அழிந்துவிட்டது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 6 Apr 2014 - 17:59

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide30

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 69e79b77
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Untitled
மகிழம்பூ, இலஞ்சிபூ, என மனம் கமழும் பெயர்கள் உண்டு.

மகிழ் என்றால் மகிழ்ச்சியாக இரு என பொருள் படும். மனதுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருவதால் இம்மலர் மகிழம் பூ என அழைக்கப்பட்டதாம். சித்த மருத்துவத்தில் சிறந்த பூ இது.

அழகிய சிறு நட்சத்திரம் போன்ற மலர்கள் மஞ்சளும், வெள்ளையும் கலந்த வண்ணத்தில், அடர் பச்சையில் சற்றே நீண்ட இலைகளை தாங்கும் கிளைகளோடு மாலையில் பூத்து, காலையில் உதிர்ந்துவிடும்பூ. மனதை மயக்கும் மலரின் மண‌ம் இப்பூவில் உண்டு.

ஆனால் உதிர்ந்த மலர்கள் வீசும் சுகந்த நறுமனத்திர்க்காகவே உதிர்ந்த மலர்களையும் சேகரித்து வைப்பர். இறைவனுக்கு சமர்ப்பணம்செய்யப்படும் மலரிது.


பூத்துக்குலுங்கும் மகிழமரத்தினை இமைகொட்டாது பார்க்கும் வாய்ப்பினை ஒரு முறையாவது கண்டு களியுங்கள். மனதுக்கு இனிமையும் புத்துணர்ச்சியும் உண்டாகும். மகிழம்பூ மரத்திலிருந்து கழன்றுவிழும் அழகை திருத்தக்கத் தேவர் என்னும் புலவர், ஒரு சிலந்திப்பூச்சி கீழ் விழுவதுபோல், அசைந்து, அசைந்து விழுவதாய் உருவகப்படுத்துகிறார். சிவனுக்குரிய மலர்களிலேயே சிறப்பான மலராக மகிழம்பூ பாடல்களில் இடம் பெற்றுள்ளது


Last edited by Nisha on Sun 6 Apr 2014 - 18:05; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sun 6 Apr 2014 - 18:01

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide31

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 3-4
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 1-8
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Da0131f2
குயம்புச்செடி, காசா மரம், பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon edule
அல்லி (இந்தி), அஞ்சனி, பூவை, பூங்காலி எனப் பலவிதமாக அழைக்கப்பெறும் Memecylon umbellatam.

காயா என்ற வார்த்தைக்கு, காய்க்காத என்று பொருள். காட்டுப் பகுதிகளிலும், செந்நிலப் பகுதிகளிலும் இது வளர்ந்திருக்கும். முதுவேனிற் காலத்தில் பொலி~ விழந்திருந்த மரத்தின் கிளைகள், மழை பெய்தவுடன் தழைத்துக் கருமையுடன் பளபளப்பாகத் தோற்றமளிக்கும். காயா இணராக மலரும் தன்மையுடையது.
காயா மொட்டாக இருக்கும்போது கரிய நிறத்துடன் இருக்கும். விரியும்போது நீலமணியின் நிறத்தைப் பெறுகிறது. அப்போது, அதன்நிறம் மயிலின் கழுத்தைப் போன்ற நிறத்துடன் விளங்குவதைக் கண்டு பாடியுள்ளனர். கார்காலத்தில்தான் இம் மலர் மிகுதியாகப் பூக்கும். கொன்றை, தளவு, முல்லை, இவற்றுடன் மலர்ந்து காணப்படும்.

சின்னச் சின்ன ஊதா மலர்களை அழகுற அடுக்கியது போல பூங்கொத்துகள், அவை தரும் அழகிய பச்சை நிற காய்கள், அவை மெல்ல மெல்ல அடர் சிவப்பாய் மாறி கனிகையில் கருமை நிறம் அடைகிறது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான் மலரும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by rammalar Sun 6 Apr 2014 - 18:29

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 17982
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:06

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide32


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Avarm

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 3-5
பெயர் புதிதுபோல் இருந்தாலும் நம் அனைவரும் அறிந்த மலர் தான் போகிப் பண்டிகையின் பொது காப்புகட்டுகையில் அதனுடன் இந்த மலரையும்சேர்த்து வைப்பர்

அழகிய மஞ்சளில் கொத்துக் கொத்தாய் மிக அழகாக பூக்கும் புதர் தாவர வகை வெளிர் பச்சையில் சின்னச் சின்ன இலைகளுடன், காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் இந்த மலருக்கு உண்டு

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழி மூலம் . ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாவதை அறியலாம்.

மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூவின் செடி குத்துச்செடி இனத்தைச் சேர்ந்தது. இதனை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.


மருத்துவ பயன்கள்

நீரிழிவு நேயைக் கட்டுப்படுத்த அன்றே நம் சித்தர்கள் பல மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அதில் ஆவாரம் பூவும் ஒன்று. சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.


மேனி பளபளக்க

ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மேனி தங்கம் போல் பளபளவென்று இருக்கும். சரும நோய்கள் ஏதும் அண்டாது.


ஆவாரம் பூ நரம்பிலுள்ள உப்புத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.

சிலருக்கு உடம்பில் வியர்வை அப்படியே படிந்து உப்புப் படிவமாக மாறும். உடலெங்கும் வெள்ளைத் திட்டுக்களாக படிந்து இருக்கும். இவர்கள் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் சீயக்காய் தூள் சேர்த்து குளிக்கும் முன் உடலெங்கும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடம்பில் உப்பொரிதல் மாறும்.ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது.

ஆவாரம்பூவை காயவைத்து அதனுடன் சீயக்காய், சிறுபயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளரும்.

ஆவாரம் பூவின் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:08

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide33

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 1-10

குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 28-வது மலர்; சிறுமூங்கில், சின்ன மூங்கில், male bambo என்று அழைக்கப்படும் மரம்/அதன் பூ.

வெதிரம் என்பது பெருமூங்கில்.
வேரல் என்பது சிறுமூங்கில்.

உந்தூழ் பெரு மூங்கிலின் மலர்
வேரல் சிறு மூங்கிலின் மலர்


இந்த மூங்கில் துளை இல்லாத சிறு மூங்கில் அழகிய நீளமும் பச்சையும் கலந்த கலவையாய் முதிர்கையில் மஞ்சளும், பச்சையும் கலந்ததாய் மாறிவிடும்.அதன் பாதி உயரத்திற்கு மேலே
நன்கு வளைந்து இருப்பது அதன் இயல்பு. காட்டு மூங்கில், சிறு மூங்கில்,கல் மூங்கில், என்பன இதன்
வேறு பெயர்கள்

பெருமூங்கில் பந்தல்கால் நடப் பயன்படும்.
சிறுமூங்கில் கிழித்துப் கூடை முடையப் பயன்படும். சிறுமூங்கிலை ஊன்றுகோலாகவும் பயன்படுத்துவர்.


வெதிர், வெதிரம், அமை கழை என்னும் சொற்கள் ஒரே புல்லினப் பெருமூங்கில் மரத்தைக் குறிப்பவை.


மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும்.நீண்ட காலம் வளரக்கூடிய, புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. இது சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்து மனிதனுடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்வதோடு, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் இடுபொருட்களை தொடர்ச்சியாக அளிக்கக்கூடிய பயிராகும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:10

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide34
சூரல் என்பது முள் இருக்கும் காட்டுப் புதர்ச்செடி.


மலை இலந்தைப் பழ மரத்தின் மலர்கள்.முட்கள் நிறைந்த மரம், அழகிய இளம் பச்சையும். இளம் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் இதன் மலர்கள், சிறு நட்சத்திரங்களைப் போலே அத்துணை அழகு. அடர் பச்சையில் அடர்த்தியாய் இலைகள் காண*ப்ப*டும். இளம் பச்சையில் சிறு காய்கள் அவை கனிகையில் நல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.காட்டுப்பகுதியில் வளரும் காட்டு இலந்தை மரங்களில் சாதாரண இலந்தையைவிட ஏராளமான மருத்துவ சத்துக்கள் நிறைந்துள்ளன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Wed 9 Apr 2014 - 10:13

இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, Red Dateகுறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Arrow-10x10, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது

மருத்துவப்பயன்கள் :- இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி
மொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த
உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்
இலந்தை நெறுங்கனியை யெண்
- அகத்தியர் குணபாடம்

காட்டு இலந்தைப்பழம்
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Jujube2

நாட்டு இலந்தைப்பழம்
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Elandhai


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:33

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide35-1
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Eb128238

சிறுபூளை, கண்பூளை, ஊமிள், காப்பு, சிறுபீளை,ஆமைகரம், சிறுகண் பீளை, கற்பேதி, பாஷணபேதி என்று பலவாறு அழைக்கப்படும் காட்டுக் களைப்பூடு வகையை சார்ந்த செடியாகும்.

இந்த செடி கொத்துரகத்தை சார்ந்தது. நன்றாக வளரும் தன்மை கொண்டது. இச்செடி சுமார் இரண்டரை அடி வரை உயர்ந்து வளரும. பக்க வாட்டில் வெள்ளை நிறப்பூக்கள் கொண்ட கதிர்கள் பூத்திருக்கும். தமிழ் நாட்டிலெல்லா மாவட்டங்களிலும் இச்செடியை காணலாம்.

விசேஷமான நிறமோ, மனமோ இல்லாத மலர் எனினும், எத்தனை நாள் இருந்தாலும், வாடாத மலர் இது, மலர்கையிலே காய்ந்தது போலத்தான் இருக்கும்

அழகிய பச்சையில் சிறு சிறு வட்டங்களாக இலைகள், நீண்ட தண்டு போன்ற காம்புடன் மாற்றடுக்கில் அமைந்த சிறிய இலைகளையும் இலைகோண்ங்களில் மலர்க்கதிர்களையும் உடைய இது பொங்கல் பூ எனவும். அழைக்கபடுவதுண்டு. போகிப் பண்டிகைக்கு காப்பு கட்டும் போதுவைக்கும் மலர்களில் இப்பூவும் ஒன்று.

தரிசுகளில் தானாகவே வளரும் செடி இது. இச்செடி முழுவதுமே நிறைய மருத்துவப் பலன்களைத் தன்னகத்தே கொண்டது.

இதன் மலர் நீரடைப்பை போக்கும் நல்ல மருந்தாகும். இச்செடியின் வேர் உடம்பில் தேங்கியிருக்கும் நீர்க்கோவை , கட்டு, கல்லடைப்புக்கு அரு மருந்தாகும். காய்ந்த வேர்களை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தடவி வர மயிர்க்கால்கள் வலுவடைந்து முடி கொட்டுவது நின்று விடும். சிறுபூளையின் வேர்ப்பட்டை யும் மருத்துவ் குணம் வாய்ந்தது.  அன்பா லடிகை தொழுவீ ரறியீரேமின்போன் மருங்குன் மடவா ளொடுமேவிஇன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.     அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:34

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide36

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 250px-
குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி, குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை, பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் கொடி

குன்றிச் செடி (Jequirity) என்பது, ஆப்ரஸ் பிரிக்கட்டோரியஸ் (Abrus precatorius) என்னும் அறிவியற் பெயர் கொண்ட ஒரு தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச் சொல் குன்றிமணி என்பதன் திரிபு ஆகும். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

குன்றிமணியில் உள்ள நஞ்சு ஆப்ரின் (abrin) எனப்படுகிறது. இது ரைசின் (ricin) எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது.

இது தமிழ் நாட்டில் எங்கும் வளரக்கூடியது. இது செடி, புதர்,மரம் இவைகளைப்பற்றிப் படரக் கூடிய கொடிவகையைச் சேர்ந்தது. இதுஅவரைக் காய் போன்று காய்விட்டு முற்றி வெடித்து விதைகள் சிதறிவிடும்.விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது. "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்பது ஒரு குறள். குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்துநாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Fri 11 Apr 2014 - 11:38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide37
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 White20Fig-2
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Ficuvire_12
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 White20Fig-1


மார்ச் மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை பூக்கும். சில இடங்களில் பெப்ரவரியிலேயே பூப்பதும் உண்டு. இது சூழல் பசியப் பசந்து (பசந்தம்>வசந்தம் - இருபிறப்பிச் சொல்) கிடக்கும் காலத்தில் பூப்பதாலும், மல்லிகை போன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்த கால மல்லிகை என்று சொல்லுகிறார்கள்.

இந்திய சூழலில் இரண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக வசந்த காலத்திலும் (பிப்ரவரி ஆரம்பத்தில் மே வரை), பருவ மழை (அதாவது ஜூன் ஆரம்பத்தில் செப்டம்பர்) காலத்தி்லும் புதிய இலைகள் இளஞ்சிவப்பு சிவப்பு தோன்றும்.

மொட்டாய் இருக்கும் போது முத்துப் போல் அமைவதால் பின் அதிமுத்தம், அதிமுத்தகம் எனப்படும்.

தென் கிழக்கு ஆசியா, இந்தியா போன்ற இடங்களில் கண்டு பிடிக்கபட்டு மலேசியா வடக்கு அவுஸ்ரேலியா வரைக்கும் பரந்து வளரும் செடி மரம் இது.


இந்தியாவில் புதுதிலலி, நொய்டா நகரங்களில் பல இடங்களில் 27 மீற்றரிலிருந்து 32 மீற்றர் வரை மிகவும் உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் மரமாக காட்சிதருவதை காணலாம்.

தாய்லாந்து இனமக்கள் இக்காய்களையும் இலைகளையும் சமைத்து உணவுக்கும் பயன் படுத்துகிறார்கள்.


இப்பூக்கள் பற்றி சங்கபாடல் சொல்வதென்ன.

எந்த ஒரு அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும், தாங்காவாம். பரிபாடல் 15 ஆம் பாட்டில் 41 ஆம் அடியில், “குருகு இலை உதிர குயிலினம் கூவ” என்று வரும். அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிரலாமாம்.

மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

என்று சொல்லி, ”இடியிடிக்க, மழை பெய்ய, இளஞ்சிவப்புக் குருகு இலை தளிர்க்கவும் செய்யும்” என்று இன்னுமொரு புதலியற் செய்தியைப் புகல்கிறது என்றும் பாடப்பட்டிருக்கிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sat 12 Apr 2014 - 22:25

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide38

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Ac4e3986

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Marutam

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம், மருத மரத்தில் கருமருது, கலிமருது, பூமருது ஆகிய வகைகள் உள்ளன.நீர்ப் பெருக்கான இடங்களில், வயல்களின் ஓரங்களில், மருதம் வளர்ந்திருக்கும். மருதம் இணராகப் பூக்கும் தன்மையுடையது. பூவின் நிறம், மஞ்சள் நிறமாக இருக்கும்.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொத்து கொத்தாக வெளிர் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கும்.

ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர் (பர்மா), ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. "மருது' வழவழப்பான சாம்பல் நிறப் பட்டையுடன் திகழும்.

இந்த மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு மருத மரப் பட்டையில் உள்ள அர்ஜுனின் என்ற வேதிப் பொருள் உதவுவதை சமீபத்திய ஆராய்ச்சிகள் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.

இதில் லிப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்து உள்ளதால், ரத்தம் உறைநிலையைத் தடுப்பதோடு, இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் உள்ளது. ரத்தபேதி மற்றும் சீதபேதி ஏற்பட்டால், இதன் இலைக் கொழுந்தை மென்று விழுங்கினால், உடனடியாக குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.

இந்த மகத்தான மருத மரம் "அர்கீனா' என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரப் பெயர் "டெர்மினேலியா' என்பது.

மருதமரம் மருத்துவக் குணங்கள் நிறைந்த- மக்களின் ஆற்றங்கரை நாகரீகத்தோடு ஒன்றிவிட்ட ஒரு அழகிய மரம் மருது ஆகும். இது மூன்று முக்கிய திருத்தலங் களில் தல மரமாகத் திகழ்ந்து ஒரு புனித மரமாகவும் போற்றப்படுகிறது

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். உலகிலேயே உயரமாகவும், பரந்தும் விரிந்தும் வளரக்கூடிய மருத மரங்களை மருதவனங்களில் காணலாம். நீர் மருது, வெண்மருது செம்மருது மருத மரங்களில் பல வகை உண்டு. அர்ஜூன மரம் என்பதும் மருதமே.

காவிரி பாயும் தஞ்சை - திருவாரூர் மாவட்டங்களில் மருதநில இலக்கணத்தைக் கொண்டிருந்தாலும் அங்குள்ள மருதவனம் என்றோ விறகுகளாகிவிட்டன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sat 12 Apr 2014 - 22:29

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide39
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 733fe803
 
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 7614-004-5C39453E
 
கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (bombax gossypinum or Yellow Silk Cotton Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.காடுகளில் கோங்கம் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற் பருவம் தொடங்கியவுடன் இது மிகுதியாகப் பூக்கததொடங்கும். இதன் முகை உருண்டிருக்கும். எனவே, இது மகளிரின் நகிலுக்கு உவமையாகியது.தேனும், தாதும், நிறைந்த இம்மலர் இணராக மலர்ந்திருக்கும். அவற்றில் வண்டுகள் மொய்க்கும்.
 
கோங்கிலவு என்ற மரத்தின் மலர்தான் கோங்கம். பொன்னை ஒத்த தோற்றம் கொண்ட அழகிய மலர்.
 
இள‌ மஞ்சளில் மொட்டுகளும், பளீரிடும் மஞ்சளில் மலர்களும் அடர் பச்சையில் இலைகளும், அதை தாங்கும் மெல்லிய கிளைகளும் மலர்கள் முற்றுகையில் வரும் வெளிர் பச்சை நிறப் பிஞ்சுகளுமாய் காண‌ப்ப‌டும்
 
வறண்ட பிரதேசங்களில் வளரும் மரமாகையால் அடர்த்து, பரந்த கிளைகள் எல்லாம் இந்த மரத்திருக்கு இல்லை காய்கள் முதிர்ந்ததும் வெடித்து, விதைகள் காற்றில் பறந்து விழுகின்ற இடத்தில் துளிர்விடும்.
 
விதைகள், பஞ்சால் சுற்றப்பட்டது போல தோற்றம் கொண்டவை காற்றில் பறக்க ஏதுவாக..... நீரூற்றி வளர்க்க வேண்டியதில்லை, தானாகவே வளரும்.
 
கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. இதனால் செய்யப்பட்ட பொருள்கள் இலேசாகவும், மழமழப்பாகவும், மஞ்சள்-நிறதிலும் இருக்கும்.
 
 
 
கோங்கமரம், பூ, தாது பற்றிய சங்கநூல் செய்திகள்
 
எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும்
கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர்
கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்.
கோங்க-மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும்.
மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்.
கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்.
கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.
மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.
 
 கணிமேதாவியார் இயற்றிய
திணைமாலை நூற்றைம்பது

எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள்
பொன் அணிந்த, கோங்கம்; - புணர் முலையாய்! - பூந்தொடித் தோள்
என் அணிந்த, ஈடு இல் பசப்பு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sat 12 Apr 2014 - 22:31

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide40

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Ormo_ormon3

போங்கம் குனி, குன்னி, மலை மஞ்சடை, மலமஞ்சடை, மலைமான்ஜடி, கல்மாணிக்கம் என அழைக்கபடும் இம்ம‌ர‌மான‌து மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக அதிக மழை பெறும், பசுமைமாறாக்காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 800-1200 மீ. உயரமான மலைகளில்) மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு பகுதிகளில் காணப்படுகின்றன. தெற்கு சயாத்திரி மலைகளிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதிகளில் (மத்திய சயாத்திரி) காணப்படுகின்றன.

மரங்கள், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது. சிறிய நுனிக்கிளைகள் தட்டை அல்லது குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது

மலர்கள் பிங்க் நிறமானவை, இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம் மஞ்சரி. கனி (அவரைப்போன்றது), நீள்வட்ட வடிவானது உப்பியவை, 12 X 6 செ.மீ. நீளமானது, நீட்சியுடையது, விதை ஒன்று, சிவப்பு (ஸ்கார்லெட்) நிறமானது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Nisha Sat 12 Apr 2014 - 22:34

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Slide41
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 800px-Adenanthera_pavonina_seeds


குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 Adenanthera1

குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது ! - Page 2 E79de450
மஞ்சாடிப் பூ மரவகையைச்சேர்ந்தது.

மஞ்சாடி (Adenanthera pavonina) எனப்படுவது ஆசியா, அவுத்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இதன் வலிமை குறைந்தவையாகும்.

மஞ்சாடி மரம் மண்ணின் நைதரசன் அளவைச் சமப்படுத்துவதற்காகவே முதன்மையாக வளர்க்கப்படுகிறது. அத்துடன் விலங்குளின் உணவுக்காகவும் மருந்து மூலிகையாகவும் வீட்டுத் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் அழகுத் தாவரமாகவும் இது வளர்க்கப்படுகிறது. இத்தாவரத்தின் தரமான, அழகிய விதைகள் அவற்றின் அழகு காரணமாகவும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும் இதன் பரவல் எளிதாகின்றது. மஞ்சாடியின் இளம் காய்களைக் குரங்குகள் போன்ற விலங்குகள் விரும்பியுண்கின்றன. பச்சையாக உள்ள மஞ்சாடி விதைகள் ஓரளவு நச்சுத் தன்மையுள்ளனவாக இருந்த போதிலும் அவற்றைச் சமைக்கும் போது அவற்றின் நச்சுத் தன்மை குறைந்து உண்ணத் தக்கனவாக மாறுகின்றன. மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவிற் தங்கம் போன்ற பெறுமதி மிக்க மாழைகளை நிறுப்பதற்குப் பயன்பட்டன. மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும். இதன் இளம் தளிர்கள் சமைத்து உண்ணத் தக்கவை. மஞ்சாடி மரத்தின் வைரப் பகுதி மிகவும் கடினத் தன்மை கூடியதாகும். அது தோணி செதுக்குவதிலும் மரத் தளபாடங்கள் செய்வதிலும் விறகுக்காகவும் பயன்படுகிறது.

மஞ்சாடி மரமானது சவர்க்கார உற்பத்தியிற் பயன்படுத்தப்படுகிறது.இதன் மரப் பகுதியிலிருந்து உணவுக்காகப் பயன்படுத்தப்படும் செந்நிறச் சாயம் பெறப்படுகிறது.

மஞ்சாடி விதைகளிலிருந்து பெறப்பட்ட சாறு வெகுவாக உட்கொள்ளச் செய்யப்பட்ட எலிகளும் சுண்டெலிகளும் உடலெரிவுக்கு எதிரான தன்மை கூடுவதை வெளிப்படுத்தியுள்ளன


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum