Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள்...
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: தமிழர் நாகரிகம்
Page 1 of 1
தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள்...
மல்லர் கம்பம்
மல்லர் கம்பம் என்பது உடல்வித்தை விளையாட்டு.
மல் என்னும் சொல் வளத்தைக் குறிக்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. உடல்வளம் கொண்ட சங்ககால மன்னர்களில் ஒருவன் ஆமூர் மல்லன். தெருக்களில் வித்தை காட்டும் டொம்பர் தம் குழந்தைகளை நட்டுவைத்த மரத்தில் தலைகீழாக ஏறவும் இறங்கவும் செய்து விளையாட்டு காட்டுவர்.
தற்காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராட்டிர மாநிலத்துப் பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்ட விளையாட்டே சிறப்புற்று விளங்குகிறது. நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள் பங்கு கொள்வர்.
கயிற்றில் தொங்கி வித்தை காட்டும் விளையாட்டுகளில் பெண்கள் பங்குகொள்கின்றனர்.
மல்லர் கம்பம் (படம்) என்பது மகாராட்டிரத்தில் தோன்றி, இன்று தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயிலப்படும் ஒரு உடல்வித்தை, சீருடற்பயிற்சிக் கலை ஆகும்.
நன்றி:விக்கிபீடியா..

Last edited by அச்சலா on Wed 26 Mar 2014 - 18:26; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள்...
மேலும் ...
பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.
சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.
தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய
கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.
வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களாரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.
மல்லர் கம்பம் யோகாசனம்,தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.
சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.
மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.
இதுபோல் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.
விழுப்புரம் அருகே உள்ள வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த உலகதுரை என்ற உடற்பயிற்சி ஆசிரியர் மல்லர் விளையாட்டுப் பயிற்சியை முடித்தபின் மாணவர்களுக்கும், கிராமபுற இளைஞர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்தார். தமிழகம் முழுவதும் 200 மல்லர் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டின் உடற்கல்வியியல் பல்கலை கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த மதுரையை சேர்ந்த திருமலைசாமி கூறுகையில், நான் குவாலியரில் லட்சுமிபாய் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் படித்த போது மல்லர் விளையாட்டு ஒரு பாடமாக இருந்தது. தமிழர் விளையாட்டு என்பதால் அதன் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. நான் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது மல்லர் விளையாட்டை அனைத்து கல்விநிலையங்களிலும் கொண்டுவரும் திட்டத்தை அரசுக்கு அளித்தேன். தமிழக அரசு அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.
திராவிட, பார்பண ஆட்சிகளில் தமிழர் கலைகளும் தமிழர்களும் மதிக்கபடுவதில்லை . மனிதர்களுக்குப் பயன்படும் தமிழர் சொல்லிய நல்ல விசயங்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை. இன்றும் இவ் அங்கிகாரம் நிலுவையில் இருக்கின்றது.
ஆங்கிலய ஆட்சியில் தமிழர்கள் தற்காப்புக் கலைகள் அழிக்கபட்டன. தற்காப்புக் கலை பயின்ற தமிழர்கள் சிந்தனைவாதிகளாகவும் அடிமைப்பட விரும்பாமல் இருந்ததே இதற்குக் காரணம். பிற்காலத்தில் திராவிட பார்பண ஆட்சியிலும் தமிழர் கலைகள் தமிழர் வரலாறு, தமிழர் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்க பட்டன. இதற்கு இந்து எதிர்ப்பு என்று காரணம் சொல்ல பட்டது.தமிழ் சித்தர்கள் சொல்லிகொடுத்த யோகாசனம், தியானம் என்ற மக்களுக்கு பயன் படக்கூடிய உன்னத கலைகள் கூட இந்துமத முத்திரை குத்தி ஒதிக்கிவைக்க பட்டன திராவிட ஆட்சியில். , பார்ப்பண ஆட்சியில் தமிழர் அங்கிகாரங்கள் இழந்தனர்.

உப்பு மூட்டை
உப்பு மூட்டை என்பது மாமா முறையினரோ, பெரியவர்களோ குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு
உப்போ உப்பு,
யாருக்கு வேணும் உப்பு,
உனக்கு வேணுமா (அம்மாவிடம்),
உனக்கு வேணுமா” (பாட்டியிடம்)
எனப் பலரிடமும் கேட்டு வேடிக்கை காட்டும் விளையாட்டு.

சேவல் சண்டை
கோழிகளில் ஆண்கோழி சேவல் எனப்படும். ஆண் கோழிகள் தன் பெண் கோழி ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது.
புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்த விளையாட்டுகளில் ஒன்று கோழிச்சண்டை கோழிக் காலில் கத்தி கட்டி விளையாட விட்டும், கத்தி இல்லாமல் விளையாட விட்டும் வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். தமிழ்நாட்டில் இது பரவலாக அண்மைய காலம் வரையில் விளையாடப்பட்டு வந்தது.
கிராமப் பகுதிகளில் விளையாட்டுக்கென சேவல்களை வளர்த்து இரு சேவல்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து வந்தனர். போட்டியாளர்கள் தம் சேவல்களின் கால்களில் கூர்மையான சிறுகத்தியைக் கட்டி, சேவலைக் கையில் ஏந்தியபடி எதிர் சேவலை மோதல் காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின் மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும்.
பிற்காலத்தில் இது சூதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது.

பழமையான பாராம்பரிய விளையாட்டுகள் பகிர்வுக்காக நன்றி அச்சலா!
தமிழர் விளையாட்டுகள் என்றோ,கிராமிய விளையாட்டுகள் என்றோ தலைப்பிட்டு தொடராக பதியுங்களேன்!
இங்கே சென்று பாருங்கள்! தமிழர் விளையாட்டுகள் என 200 க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து உங்கள் பால்ய நினைவுகளை கிளறும் விளையாட்டுகளை தெரிந்து எங்களுக்க்கு அறிமுகபடுத்துங்கள். எது தேவையோ அதை மட்டும் தேடி எடுத்த இடத்திற்கு நன்றி சொல்லி பதியுங்கள்.
கவனியுங்கள்... மிக முக்கியமான விடயம். பதியும் பதிவு உங்கள் சொந்த பதிவில்லாத பட்சத்தில் படைத்தவருக்கும் எடுத்த இடத்துக்கும் நன்றி சொல்வது.

Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள்...
ஆமாம் அக்கா..நான் நன்றி சொல்ல மறந்துவிட்டேன்..இனி அவசியம் சொல்கிறேன்..Nisha wrote:பழமையான பாராம்பரிய விளையாட்டுகள் பகிர்வுக்காக நன்றி அச்சலா!
தமிழர் விளையாட்டுகள் என்றோ,கிராமிய விளையாட்டுகள் என்றோ தலைப்பிட்டு தொடராக பதியுங்களேன்!
இங்கே சென்று பாருங்கள்! தமிழர் விளையாட்டுகள் என 200 க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து உங்கள் பால்ய நினைவுகளை கிளறும் விளையாட்டுகளை தெரிந்து எங்களுக்க்கு அறிமுகபடுத்துங்கள். எது தேவையோ அதை மட்டும் தேடி எடுத்த இடத்திற்கு நன்றி சொல்லி பதியுங்கள்.
கவனியுங்கள்... மிக முக்கியமான விடயம். பதியும் பதிவு உங்கள் சொந்த பதிவில்லாத பட்சத்தில் படைத்தவருக்கும் எடுத்த இடத்துக்கும் நன்றி சொல்வது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள்...
ஓடியாடி ஆடிபாடி மகிழ்வோம்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Similar topics
» பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!
» எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன்
» கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
» பழந்தமிழர் விளையாட்டுக்கள்
» பேஸ்புக்கின் அருமையான விளையாட்டுக்கள்
» எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன்
» கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
» பழந்தமிழர் விளையாட்டுக்கள்
» பேஸ்புக்கின் அருமையான விளையாட்டுக்கள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: தமிழர் நாகரிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum