சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Khan11

உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by பர்ஹாத் பாறூக் Wed 30 Apr 2014 - 11:20

First topic message reminder :

இந்தத் திரியில் மிகவும் புகழ்பெற்ற 100 Greatest Science Discoveries Of All Time என்னும் அழகான அறிவியல் புத்தகத்தின் சுருக்கமான மொழிபெயர்ப்பாகும்.

நன்றி : Kendall Haven எழுதிய மூலப் புத்தகத்தினை  அரும்பாடுபட்டு சுருக்கமான முறையில் மொழிபெயர்த்து தமிழ்படுத்திய ஔவை , முத்தமிழ் மன்றம், மற்றும் ஔவையிடம் அனுமதிவாங்கி என்னை இங்கு பதிவிடச் சொன்ன நிஷா அக்கா ஆகியோருக்கு..

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 100+Greatest+Science+Discoveries+of+All+Time





































tr>

 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 


 
 
 
 

பொருளடக்கம்

வ. எண்கண்டுபிடிப்புகண்டுபிடித்தவர்காலம்
1.
நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகள்ஆர்க்கிமிடிஸ்
கி.மு. 260
2.
புவியல்ல, சூரியனே மையம்நிகோலஸ் கோப்பர்நிக்கஸ்
1520
3.
மனித உடற்கூறுஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்
1543
4.
மேலிருந்து கீழே விழுதல் குறித்த விதிகலிலியோ கலிலி
1598
5.
கோள்களின் நீள்வட்டப்பாதைஜோஹன்னஸ் கெப்ளர்
1609
6.
வியாழன் (ஜூபிடர்) கிரகத்தின் நிலாக்கள்கலிலியோ கலிலி
1610
7.
மனித உடலில் ரத்த ஓட்டம்வில்லியம் ஹார்வி
1628
8.
காற்றழுத்தம்எவெஞ்சலிஸ்டா டோரிசெல்லி
1640
9.
காற்றின் கன அளவுக்கும் அழுத்தத்துக்கும் இருக்கும் எதிர்மறைத் தொடர்பு: பாயில்ஸ் விதிராபர்ட் பாயில்
1650
10.
செல்களின் இருப்புராபர்ட் ஹூக்
1665
11.
புவி ஈர்ப்பு விசைசர். ஐசக் நியூட்டன்
1666
12.
படிமங்கள்நிகோலஸ் ஸ்டெனோ
1669
13.
புவி-சூரிய தூரம், அண்டத்தின் அளவுஜியோவான்னி காசினி
1672
14.
பாக்டீரியாஆண்டன் வான் லியூவென்ஹூக்
1680
15.
இயக்க விதிகள்சர் ஐசக் நியூட்டன்
1687
16.
இயற்கையின் ஒழுங்குகார்ல் லின்னயூஸ்
1735
17.
நட்சத்திர மண்டலம்தாமஸ் ரைட் மற்றும் வில்லியம் ஹெர்ஷல்
1750
18.
மின்சாரத்தின் இயல்புபெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
1755
19.
உலகத் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கடல்கள்பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
1770
20.
பிராணவாயு (ஆக்ஸிஜன்)ஜோசஃப் ப்ரிஸ்ட்லி
1774




Last edited by பர்ஹாத் பாறூக் on Wed 30 Apr 2014 - 12:54; edited 3 times in total
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down


 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by பர்ஹாத் பாறூக் Thu 1 May 2014 - 14:38

22. கண்டுபிடிப்பு: பொருள் நிறை குறையாப் பண்பு (Conservation of Matter)

கண்டறிந்தவர்: ஆண்டனி லவாய்ஸியர் (Antoine Lavoisier)

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 225px-Antoine_lavoisier_color

காலம்: 1789


எந்த ஒரு வேதியியல் ஆய்வுக்கு முன்பும், ஆய்வின் போதும், ஆய்வு முடிந்த பின்பும் பல விதங்களில் அளந்து குறிப்பெடுக்க வேண்டும் எனும் வழக்கத்தை முதன் முதலில் ஆரம்பித்த விஞ்ஞானி ஆண்டனி லவாய்ஸியர் ஆவார். அதற்கு முன்பு வரை அனைத்து ஆராய்ச்சிகளும் பொருட்களின் வேதியியல் விளைவுகளைப் பற்றி விளக்குபவையாகவும் அவ்விளைவுகளைப் பற்றி வர்ணிப்பவையாகவும் மட்டுமே இருந்தன. லவாய்ஸியர் தனது அனைத்து ஆய்வுகளுக்கு முன்னும் பின்னும் அனைத்துப் பொருட்களின் எடையையும் மிகத் துல்லியமாகக் கவனிக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அவர் கண்டறிந்தவை அவரை நவீன உலகின் வேதியியல் தந்தையாக உருவெடுக்க வைத்தது! அவர் அப்படி என்ன கண்டறிந்தார்? எப்படி அதைக் கண்டறிந்தார்?

1781 வாக்கில் பிரெஞ்சு விஞ்ஞானியான ஆண்டனி லவாய்ஸியரின் மனைவியான மேரி, ராபர்ட் பாய்லேயின் ஒரு கட்டுரையை பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தார். அக்கட்டுரையில் ஒரு சோதனை பற்றிய முடிவுகளை பாய்லே குறித்து வைத்திருந்தார். அதாவது இரும்புத் தகடைச் சூடாக்கும் போது அதன் எடையில் மாற்றம் ஏற்படுவதைக் குறித்திருந்தார். மற்ற விஞ்ஞானிகளைப் போலவே பாய்லேயும் அந்த வேதியியல் ஆராய்ச்சியின் போது அதிகப்படியான எடை உருவானதாகக் குறிப்பிட்டிருந்தார்.

லவாய்ஸியருக்கு அதை அப்படியே நம்புவதில் இஷ்டமே இல்லை. சரியான முறையில் அனைத்து விஷயங்களையும் அளக்கவில்லை, அதிலும் குறிப்பாக பொருளின் எடையை மட்டுமல்லாது சுற்றுப்புறத்தைப் பற்றியும் துல்லியமாக அளக்க வேண்டும். அவ்வாறு பாய்லே செய்திருக்க மாட்டார் என்று சந்தேகப்பட்டார். அதனைச் சரிபார்க்க, பாய்லேயின் அந்தச் சோதனையைத் தானும் செய்து விட முடிவுசெய்தார்.

அவ்வாறே மீண்டும் சோதனை செய்த லவாய்ஸியர் அந்த அதிகப்படியான எடை அந்த இரும்புத் தகடுக்கு எங்கே இருந்து வந்தது என்று கண்டுபிடித்து விட்டார்!

முதலில் ஒரு சிறு தகடை எடுத்த ஆண்டனி அதை மிகத் துல்லியமாகத் தன் தராசில் வைத்து எடையைக் கண்டுபிடித்துக் குறித்துக் கொண்டார். அதன் பின்னர் அத்தகடை வெப்பத்தைத் தாங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு கண்ணாடி குடுவைக்குள் வைத்து அதன் வாயை இறுக அடைத்தார். எந்த விளைவானாலும் அது அந்த குடுவைக்குள் தான் இப்போது நிகழ்ந்தாக வேண்டுமல்லவா?! இப்போது அந்தத் தகடோடு சேர்த்துக் குடுவையின் எடையையும் குறித்துக் கொண்டார். இப்போது அந்தக் குடுவையைச் சூடாக்க ஆரம்பித்தார். சூடு அதிகமாகும் போது அவர் உள்ளே வைத்த இரும்புத் தகட்டின் மேல் சாம்பல் நிறத்தில் ஒரு அடுக்கு படியக் கண்டார். அதன் பின்னர் சூடாக்குவதை நிறுத்தி விட்டுக் குடுவையைக் குளிர வைத்தார். மீண்டும் குடுவையை எடை போட்டார். என்ன ஆச்சரியம்! குடுவையின் எடையில் எந்த மாற்றமும் இல்லை! இப்போது குடுவையை மெல்லத் திறந்ததும் காற்று வெற்றிடத்தை நிரப்புவதைப் போல் வேகமாக உள்ளே நுழைந்தது. இப்போது தகடை மீண்டும் எடுத்து எடையைப் போட்டார் ஆண்டனி. தகட்டின் எடை 2 கிராம் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தார். பாய்லே சொன்னது போலவே தகடின் எடை அதிகரித்திருந்தது.

குடுவையின் மொத்த எடை ஆய்வுக்கு முன்னும் பின்னும் மாறாததால் தகடுக்கு அதிகப்படியான எடை குடுவைக்கு உள்ளே இருந்த காற்றினால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார் ஆண்டனி. அதனால் தான் காற்று வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேகமாக நுழைந்திருக்க வேண்டும் என்று யூகித்தார் ஆண்டனி. தகடு சூடேறும் போது காற்றுடன் வினைபுரிந்து சாம்பல் நிற அடுக்கு உருவாகி இருக்கின்றது என்று கண்டறிந்தார். இப்போது சற்றுப் பெரிய தகடை எடுத்துச் சூடாக்கி அதனை எடை போட்டார். அதே இரண்டு கிராம் தான் அதிகரித்திருந்தது! எத்தனை பெரிய தகடைச் சூடாக்கினாலும் இரண்டு கிராம் மட்டுமே அதிகரித்தது! அதுவே பெரிய குடுவையில் வைத்தால் இன்னும் கொஞ்சம் அதிக எடை அதிகரித்தது! ஆக, குடுவைக்குள் இருக்கும் காற்றின் அளவைப் பொறுத்தே தகடின் எடையில் மாற்றம் உருவாவதைக் கண்டறிந்தார். அதிலும், குடுவைக்குள் இருக்கும் காற்று அதிகரிக்க அதிகரிக்க, அதிகமான எடை அளவில் 20 சதவீதம் மட்டுமே தகடுடன் வினைபுரிந்து அதன் எடை அதிகரிக்க வகை செய்தது.

சுற்றுப்புறக் காற்றில் 20 சதவீதக் காற்று மட்டுமே தகடை வினைபுரியச் செய்ய வைக்க வல்லது என்று கண்டறிந்தார். இந்த 20 சதவீதக் காற்று தான் 1774ல் ப்ரிஸ்ட்லி கண்டறிந்த சுத்தக் காற்று என்று உணர்ந்து கொண்ட ஆண்டனி அதற்கு ஆக்ஸிஜன் என்று பெயரிட்டு அழைத்தார். அத்தோடு அதை ஆண்டனி விடவில்லை. மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். பல்வேறு வேதி வினைகளின் போது நிகழ்வதை அளந்து பார்த்து மிக முக்கியமான ஒன்றைக் கண்டறிந்தார்.

ஆம்! மொத்தமாகப் பொருளின் நிறை எப்போதும் அழிவதில்லை! அதை யாரும் அழிக்க முடியாது! வேதி வினைகளின் போது பொருளின் நிறையானது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம், அல்லது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குச் செல்லலாம். ஆனால் மொத்த நிறை எப்போதும் மாறுவதில்லை என்று உலகுக்கு வெளிக்காட்டினார். எந்த ஒரு ஆராய்ச்சியின் போதும் நிறை எங்கே சென்றது என்பதையும் குறித்து வைத்திருத்தல் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

தான் கண்டறிந்த இம்முடிவுகளை 1789ல் அவர் வேதியியல் புத்தகத்தில் வெளியிடும் வரை ரகசியமாகவே வைத்திருந்தார்.

வரி வசூல் செய்யும் அதிகாரியாகப் பணியாற்றிய அவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது மரண தண்டனை பெற்று 8/5/1794ல் தனது 50வது வயதில் கில்லெட்டின் கருவியின் மூலம் தலை வெட்டுப்பட்டு மாண்டார்.

"The Republic needs neither scientists nor chemists; the course of justice cannot be delayed" இவ்வார்த்தைகள் அவருக்குத் தீர்ப்பளித்த நீதிபதி கூறியது.

"It took them only an instant to cut off his head, but France may not produce another such head in a century." இவ்வார்த்தைகள் அவரைத் தண்டனைக்குள்ளாக்கிய பின் ஜோசப் லூயி லாக்ரான்ஜ் என்னும் கணிதமேதை கூறியது.

"To the widow of Lavoisier, who was falsely convicted." மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கழிந்த பின், அவரது உடமைகளைத் திருப்பிக் கொடுக்கும் போது அவரது மனைவியிடம் மன்னிப்புக் கேட்ட பிரெஞ்சு அரசாங்கத்தின் வார்த்தைகள் இவை.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by பர்ஹாத் பாறூக் Thu 1 May 2014 - 14:39

23. கண்டுபிடிப்பு: வெப்பத்தின் இயல்பு (The Nature of Heat)

கண்டுபிடித்தவர்: கௌண்ட் ரம்ஃபோர்டு (Count Rumford)

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 200px-Benjamin_Thompson

காலம்: 1790

தீயைப் பற்றியும் வெப்பத்தைப் பற்றியும் பலவித நம்பிக்கைகள் விஞ்ஞானிகள் இடையே உலவிய காலம் அது. வெப்பம் என்பது கண்ணுக்குத் தெரியாத, எடையில்லா கலோரிக் (Caloric) எனும் திரவம் என்று கற்பனை செய்திருந்தார்கள். சூடாக இருக்கும் பொருட்கள் கலோரிக்கால் நிரம்பி வழிந்ததாகக் கொள்ளப்பட்டது. அவ்வாறு வழிந்து விடுவதால் பொருட்கள் எப்போதும் சூட்டிலிருந்து குளிர்வதாக நம்பப்பட்டது! எரிவதோ ஃப்ளோஜிஸ்டன் (Phlogiston) எனும் மற்றுமொரு கண்ணுக்குத் தெரியாத பொருளினால் ஏற்படுவதாகக் கொள்ளப்பட்டது. எரியக் கூடிய பொருட்களுள் இது நிறைந்திருப்பதாகக் கருதப்பட்டது. ஒரு பொருள் எரியும் போது அது தன்னிடமிருக்கும் ஃப்ளோஜிஸ்டனை இழந்து காற்றில் கலப்பதாக நம்பினார்கள். மொத்த ஃப்ளோஜிஸ்டனையும் ஒரு பொருள் இழந்து விட்டால் எரிவதும் நின்று விடுவதாக நம்பப்பட்டது.

இத்தனை நம்பிக்கைகளும் ஒன்று சேர்ந்து யாருக்கும் அத்தனை எளிதாக தீ, வெப்பம் மற்றும் எரிதல் குறித்த ஆராய்ச்சியை நடத்துவதற்குத் தடைகற்களாக இருந்தன. ஆனால் இக்கற்களைத் தாண்டியவர் கௌண்ட் ரம்ஃபோர்டு என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட பெஞ்சமின் தாம்ஸன். எவ்வாறு அவர் எளிமையான வெப்பத்தின் இயல்பைக் கண்டறிந்தார் என்று காண்போமா?

1790 ல் 37 வயதான கௌண்ட் பவாரியா (Bavaria) அரசருக்கு ராணுவ ஆலோசகராகப் பணியாற்றினார். இது தவிர பீரங்கி உற்பத்தியையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். பெஞ்சமின் தாம்ஸன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவருக்கு பிரிட்டன் உளவாளியாகச் சவாலான வேலை பார்த்த அனுபவமும் இருந்தது! 1790ல் பவாரியா அரசரிடம் பணி புரிய ஆரம்பித்தார்.

பீரங்கி உற்பத்தித் தொழிற்சாலை ஒரு சகிக்க முடியாத இரைச்சல் கொண்டதாகும். ஒருபக்கம் மரச் சக்கரங்களின் மேல் உலோகப் பட்டைகளைப் (Rim) பொருத்துவதற்காக அடிக்கப்படும் சுத்தியல் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். தக தகவென்று வெப்பத்தின் உச்ச நிலையில் இருக்கும் இரும்பை நீரில் அழுத்திக் குளிர்விக்கும் போது எழும் நீராவி அறையையே முழுதும் ஆக்கிரமிப்பதாக இருக்கும்.

இன்னொரு புறத்தில் பீரங்கிக் குழாயை உருவாக்கும் பணி நடைபெறும். உருகிய உலோகக் குழம்பை பெரிய வார்ப்புகளில் (12 அடிக்கு 4 அடி நீளமுள்ளவை) ஊற்றப்பட்டன. பின்னர் அவ்வுலோகத் தண்டில் துளை போடும் இயந்திரத்தைக் கொண்டு துருவிக் குடையப்பட்டு பீரங்கிக் குழல்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு சுழன்று துருவும் போது அளவிட முடியாத வெப்பம் வெளிப்பட்டது! அவ்வாறு துளையிடும் போது உருகிவிடாமல் இருக்க நீரை எப்போதும் அதன் மேல் ஊற்றிக் கொண்டே இருந்தனர். அப்போது சப்தத்தோடு எழும் நீராவி தொழிற்சாலைக் கூரை வரை சென்று அங்கே குளிர்ந்து செயற்கை மழையாக உருவாகித் தொழிலாளர்களின் மேல் பொழிந்து கொண்டிருந்தது!

இவற்றையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்த ரம்ஃபோர்டு இத்துளையிடும் பணியில் அதிக வெப்பம் வெளியாவதைக் கவனித்தார். அன்றைய நம்பிக்கையோ, துளையிடும் போது அதிகபட்ச கலோரிக் வழிந்து ஓடுவதால் வெப்பம் அதிகம் இருப்பதாகத் தான் இருந்தது. ஆனால் ரம்ஃபோர்டால் அதை நம்ப முடியவில்லை. துளையிட ஆரம்பிக்கும் முன் குளிர்ச்சியாக இருக்கும் உலோகத் தண்டில் துளையிட ஆரம்பித்ததும் அப்படி எவ்வளவு தான் கலோரிக் வெளியேறி ஓடும் என்று கணக்கிட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்தார். இவ்வளவு கலோரிக்கும் அந்த உலோகத்துள் எங்கே இருந்தது என்றும் யோசிக்க ஆரம்பித்தார்.

ரம்ஃபோர்டு ஒரு மிகப் பெரிய தொட்டி ஒன்றைக் கட்டினார். உலோகக் குழாய் உருவாகும் போது வெளிவரும் நீரை முழுதும் பிடித்து அதில் ஏற்படும் வெப்பநிலை அதிகரித்தலைக் கணக்கிட வெப்பமானிகளையும் நிறுவினார். நீராவியே உருவாகாதவாறு அதிகமான நீரைப் பீய்ச்சி அடிக்கவும் ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு பொட்டு நீராவி கூட உருவாகி வெளியே தப்பித்து விடக் கூடாது (!) என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இப்போது கிரீச் எனும் சப்தத்துடன் துளையிடும் பணி ஆரம்பித்தது. வெப்பத்தால் உலோகம் ஜொலிக்க ஆரம்பித்தது. உடனே அதன் மேல் நீர் ஊற்றப்பட்டது. நீரனைத்தும் கீழே இருந்த தொட்டியில் விழுந்து வெப்பமானியில் வெப்பம் அளக்கப்பட்டது. அவர் கனவில் கூடக் கண்டறியாத அளவு கலோரிக் வழிந்தோடியது! அவ்வளவு நீரும் 50 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பமடைந்து ஓடியது.

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Cannon

கௌண்ட்டின் முகமோ குழப்பத்தால் இருண்டது. எங்கோ மாபெரும் தவறு இருக்கின்றது என்று நினைத்தார். ஏற்கனவே உலோகத்தை உருக்கும் போதே அதிலிருக்கும் கலோரிக் அனைத்தும் வழிந்து ஓடிவிட்டது! அதன் பின் அக்குழம்பு குளிர்ந்து இந்த உலோகத் துண்டு உருவாகி இருக்கின்றது. ஆனால், அதைத் துளையிடும் போது அதனுள்ளிருந்து மேலும் எங்கிருந்து இவ்வளவு கலோரிக் வர முடியும்?

இக்கேள்வியில் அவர் ஆழ்ந்திருக்கும் போதே தொழிலாளிகள் அடுத்த குழாயைத் துளையிட ஆரம்பித்தனர். அப்போது தான் அவருக்குச் சட்டென்று அவரது கேள்விக்குப் பதில் உதித்தது! துளையிடும் காரியமே வெப்பத்தை உருவாக்குவதாக ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வி தான் அந்தப் பதில். துளையிடும் கருவி உலோகத்தைத் துருவும் போது ஏற்படும் அசைவே வெப்பமாக உருவெடுக்கின்றது என்பதைக் கண்டறிந்தார் ரம்ஃபோர்டு.

இன்று நாம் அதனை உராய்வு என்று எளிதாகக் கூறினாலும், உராய்வு வெப்பத்தினை உருவாக்கும் வழிகளில் ஒன்று என்று நம்பினாலும், ரம்ஃபோர்டின் காலமான 1790ல் அவரை யாரும் நம்பவில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கு கலோரிக் தான் வெப்பத்தின் காரணம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர்.

காற்று மண்டலத்துடன் உராய்வதாலேயே எரிகற்கள் உருவாகின்றன என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதனால் ஏற்படும் வெப்பத்தைத் தடுக்கவே விண்ணூர்திகளின் அடிப்புறம் செராமிக் கற்களைக் கொண்டு அடுக்குகள் உருவாக்கியிருக்கின்றனர். அக்கற்களில் ஏற்பட்ட பிரச்னையால் தான் கொலம்பியா வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லாவுடன் இன்னும் சிலரது உயிரையும் உராய்வு பறித்தது என்பது கூடுதல் தகவல்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by பர்ஹாத் பாறூக் Thu 1 May 2014 - 14:41

24. புவியரிப்பு (Erosion of Earth)

கண்டறிந்தவர்: ஜேம்ஸ் ஹட்டன் (James Hutton)

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 225px-Hutton_James_portrait_Raeburn

காலம்: 1792


புவியில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உருவானதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பித்து வந்தனர் முன்னோர்கள். புவியின் முகம் நோவா வெள்ளத்தைப் போல் ஏதாவது வியத்தகு அமானுஷ்ய நிகழ்வுகளால் சிதைக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. புவியின் மலைச்சிகரங்களுக்கும் அதல பாதாளங்களுக்கும் இது போன்ற கதைகளைத் தேடிக் கொண்டிருந்தனர்.

1780ல் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் 57 வயதை நெருங்கிய மருத்துவரும், விவசாயியும், புவியியல் ஆர்வலருமான ஜேம்ஸ் ஹட்டன் புவியின் பாறைகளைக் குறித்த கதைகளிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கலானார். தனது நாடான ஸ்காட்லாந்தின் பாறைகளின் வயதைக் கொண்டு புவியின் வயதைக் கண்டுபிடிக்க முடியுமா எனும் ஆராய்ச்சியில் இறங்கினார்.

கரம் போன்ற நீண்ட வழுவழுப்பான உருண்டு திரண்ட மலைப் பாறைகளில் நடந்து சென்ற ஹட்டன், இவையெல்லாம் திடுமென ஒரே நாளில் ஒரே நிகழ்வால் உருவானது என்பதை நம்பமுடியாமல் தவித்தார். மாபெரும் வெள்ளங்கள் மாபெரும் பள்ளத்தாக்கை உருவாக்கின என்றும், அவை கல்லைப் புரட்டிப் போட்டதால் மலைகள் உருவாகின என்றும் அவரால் நம்பமுடியவில்லை. எப்பேர்ப்பட்ட வெள்ளத்தாலும் வழுவழுப்பான உருண்ட வடிவான பாறைகளை உருவாக்க முடியுமா என்று தனக்குள் கேள்வியை எழுப்பினார். நதிகளின் சமவெளிகள் எப்படி உருவாகின என்றும் கேள்வி எழுந்தது.

ஆக, தற்போதைய கொள்கை தவறென்பதை நிரூபணம் செய்ய முடிந்தாலும், உண்மையான காரணம் என்பதைக் கண்டறிந்து நிலைநிறுத்தினால் மட்டுமே அனைவரையும் நம்ப வைக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தார் ஹட்டன். ஹட்டனின் ஆராய்ச்சி எந்த அடிப்படை சக்தி புவியின் முகமாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் என்ற வழியில் செல்ல ஆரம்பித்தது.

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 800px-Siccar_Point_red_capstone_closeup

அந்த ஆண்டு கோடை காலத்தில் ஹட்டன் உயரமான பள்ளத்தாக்கிலிருந்து விழும் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே சென்றார். நீர்வீழ்ச்சியின் அருகே கீழே கிடந்த கூழாங்கற்களையும் மணல் துகள்களையும் தனது கரங்களில் எடுத்து உற்று நோக்கினார். அவற்றைத் தன் கைகளால் பிசைந்து பார்த்த ஹட்டன், இவையாவும் மலைமேலே எங்கிருந்தோ உருண்டு வந்து கீழே விழுந்திருக்க வேண்டும் என்று ஊகித்தார். அதற்கு முன் அது பெரிய கல்லாக இருந்து உடைந்து பின் நீர் வரும் பாதையில் உருண்டோடி வழுவழுப்பான தேகத்தைப் பெற்றிருக்கின்றது என்று ஊகித்துணர்ந்தார்.

அந்த நீர்வீழ்ச்சியானது தினந்தோறும், கற்களையும் மணலையும் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கின்றது என்று எண்ணினார். ஆக, புவியின் முகம் ஏதோ ஒருநாளில் உருமாறுவது அல்ல. அது தினந்தோறும் நிகழும் நிகழ்வால் ஏற்படுகின்றது. நீர் மட்டுமல்ல, சுழன்று அடித்து வீசும் காற்றும் இதே போன்று கற்களில் தனது கைவரிசையைக் காட்டுகின்றது என்பதைக் கண்டறிந்தார் ஹட்டன். மழைநீர் மலை மேல் விழுந்து கற்களைப் புரட்டி எடுத்து வந்து மணலாகச் சமவெளியில் கொண்டு வந்து சேர்க்கின்றது. இது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டே இருக்கின்றது. கால்வாய்களும், நீர்வீழ்ச்சிகளும் எறும்பூறக் கல்தேய்ந்த கதை என்பதைக் கண்டுகொண்டார்.

இதுவரை சரியாகவே கண்டறிந்த ஹட்டனுக்கு அடுத்து ஒரு கேள்வி மட்டும் தொக்கி நின்றது. இத்தனை ஆண்டுகாலமாக காற்றும் நீரும் புவியை அரித்து சமமாக்குகின்றது என்றால் மலைகள் எவ்வாறு உருவானது? ஏன் இத்தனை கோடி ஆண்டுகளில் புவியின் முகம் சீரானதாகவில்லை? இந்தக் கேள்விக்கான பதிலும் கிடைத்தால் மட்டுமே அவரது கண்டுபிடிப்பு முழுமையடையும் என்பதால் அதை நோக்கிய தன் கவனத்தைத் திருப்பினார் ஹட்டன். வெகுகாலம் ஆராய்ந்தே சரியான காரணத்தைக் கண்டறிந்தார் ஹட்டன். ஆம். புவியினடியில் கொதிநிலையில் இருக்கும் மையப்பகுதியே மலைகளையும் பாறைகளையும் வெளித்தள்ளி பெரிய மலைகளை உருவாக்குகின்றன என்பதையும் கண்டறிந்தார். உள்ளிருக்கும் அக்னி மலைகளை வெளித்தள்ள, வெளியிலிருக்கும் நீரும், காற்றும் அதைச் சமன்படுத்த முயல இது தொடர்கதையாக பூமாதேவியை அக்னி, வாயு, வருணன் ஆகியோர் கந்தர்கோலமாக ஆக்குவதை ஒருவழியாகக் கண்டறிந்தார் ஹட்டன்.

புவியியலில் ஒரு மாபெரும் சாதனை படைத்தவராகக் கருதப்படுகின்றார் ஹட்டன். அவரது கண்டுபிடிப்பு பல நவீன கண்டுபிடிப்புகளுக்கும் சாதனைகளுக்கும் வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by பர்ஹாத் பாறூக் Thu 1 May 2014 - 14:42

25. நோய்த்தடுப்பூசி (Vaccination)

கண்டறிந்தவர்: சீமாட்டி மேரி வோர்ட்லி மொன்டாகு & எட்வர்ட் ஜென்னர் (Lady Mary Wortley Montagu and Edward Jenner)

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 300px-Charles_Jervas_001

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 File:Edward_Jenner_by_James_Northcote

ஆண்டு: 1798


உங்களுக்குப் பெரியம்மை, பிளேக், போலியோ போன்ற கொள்ளை நோய்கள் வந்திருக்கின்றதா? அனைவருக்கும் வந்திருக்க நியாயமில்லை. ஆனால், மனிதன் தனக்குத் தானே போரிட்டு மடிவதை விட இது போன்ற கொள்ளை நோய்களால் கூட்டம் கூட்டமாக மரித்திருக்கின்றான். லட்சோப லட்சம் மக்கள் கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்டு மடிந்திருக்கின்றனர்.

இக்கொள்ளை நோய்களை உலகிலிருந்து விரட்டியடித்தது எப்படி எவ்வாறு?

1712ல் பிரிட்டனின் தூதுவராகத் துருக்கிக்குச் சென்ற தன் கணவருடன் 24 வயதான புகழ்பெற்ற கவிதாயினி மேரியும் சென்றார். தன் உடலில் அழிக்க முடியாத அவலட்சணமான தழும்பை ஏற்படுத்திச் சென்றதும், தன் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுமான பெரியம்மை நோயால் துருக்கியில் யாரும் பாதிக்கப்படுவதில்லை என்று கவனித்தார் மேரி. விரைவிலேயே அங்கே வாழும் பழங்குடி மக்களின் ஊசி குத்துதல் (ingrafting) சடங்கிற்கும் இதற்கும் தொடர்பிருக்க வேண்டும் என்று ஊகித்தார் மேரி.

அங்கே யாருக்காவது பெரியம்மை நோய் தாக்கியதென்றால் உடனே கூட்டமாகக் கூடி நோய் கிருமி இருக்கும் திரவத்தை ஒரு தேங்காய்ச் சிரட்டையில் எடுத்துக் கொண்டு ஒரு வயதான பெண்மணி அவர்களின் மொழியில் ஏதோ பாடலைப் பாடிக் கொண்டே ஒரு ஊசியின் மூலம் திரவத்தைத் தொட்டு ஒவ்வொருவரின் நரம்பிலும் செலுத்துவதைக் கண்டார் மேரி. அதன்பின் அவ்வாறு செலுத்தப்பட்டவர் சிறிய அளவில் சொறி மற்றும் காய்ச்சலால் ஓரிருநாட்கள் அவதிப்படுவதையும் அதன் பின்னர் அவருக்கு அம்மை நோய் தாக்குவதில்லை என்பதையும் அறிந்து கொண்டார்.

1713ல் இங்கிலாந்து திரும்பிய மேரி இதுகுறித்த தனது கருத்தைப் பரவலாக அனைவருக்கும் அறியப்படுத்தினார். ஆனால் அனைவரும் அவரை முட்டாள் தனமாகப் பேசுகின்றார் என்று ஒதுக்கி விட்டனர். 1714ல் வேல்ஸ் இளவரசி இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு, கைதிகளுக்கும் அனாதைகளுக்கும் சோதனை முறையில் இந்த ஊசிமுறையைப் பின்பற்றுவதற்கு அனுமதியளித்தார்!

மேரி அம்மை தாக்கப்பட்டவர்களிடமிருந்து சீழ் போன்ற திரவத்தை எடுத்து சோதனை முறையில் சிலருக்குக் குறைந்த அளவில் செலுத்தினார். இதனால் அவர்கள் இறப்பது மூன்றில் ஒருபங்காகக் குறைந்தது. தழும்பு ஏற்படுவது ஐந்தில் ஒருவருக்கே நிகழ்ந்தது. இவ்வாறு ஊசி போடுவதில் சில கெடுதல்களும் நிகழ்ந்தன. அம்மை நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவி பெருக்கமடைந்து விடுவதால் ஆபத்தானவையாகி விட்டன. எந்த ஊசி காக்கவேண்டுமோ அதுவே உயிரைக் குடிக்கும் எமனாகவும் மாறி விட்டது. இதனால் இந்த முறை அப்படியே வழக்கொழிந்து போனது.

அதன் பின்னர், 1794ல் வந்தார் எட்வர்ட் ஜென்னர். கிராமப்புறத்தில் வாழ்ந்த அவர் பால்பண்ணையில் வேலை பார்ப்பவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை என்பதைக் கண்டறிந்தார். ஆனால், அவர்கள் அனைவருமே பசுக்களைத் தாக்கும் ஒருவித அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தார். அவர்களின் கைகளில் சிறிய பாளமாக வெடிப்பை அந்நோய் ஏற்படுத்தியிருந்தது. ஜென்னர் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, பசு அம்மை நோய்க்கும், பெரியம்மைக்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டுமென்றும், மாட்டு அம்மையால் தாக்கப்பட்டவர்கள் ஊசிகுத்துதல் முறை போன்று கிருமியை ஏற்றுக் கொள்வதால், அவர்களுக்குப் பெரியம்மை நோய் வருவதில்லை என்றும் முடிவு செய்தார்.

சோதனை முறையில் 20 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பசு அம்மை நோய்க்கிருமிகளைச் சிறிய அளவில் ஏற்றினார் ஜென்னர். அனைவருக்கும் பசு அம்மை நோய் வந்தது. கைகளில் பாளங்கள் வந்து அவர்கள் பலநாட்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அனைவருக்கும் பெரியம்மை நோய்க்கிருமியையும் ஏற்றினார் ஜென்னர். அவர்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டார்களேயானால் இறந்து விடுவதற்குக் கூட வாய்ப்பிருந்தது. ஆனால், அவர்கள் ஒருவரைக் கூட பெரியம்மை நோய் அண்டவில்லை!

இவ்வாறு முள்ளைக் கொண்டே முள்ளை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டே விஷத்தை முறிப்பதையும் கண்டறிந்த ஜென்னர் அதற்கு தடுப்பூசி முறை (vaccination) என்று பெயரிட்டார். 1798ல் அவரது ஆராய்ச்சியையும் உலகுக்கு வெளிப்படுத்தினார். Vacca என்றால் லத்தினில் பசு என்று பொருள். Vaccinia என்றால் பசு அம்மை நோய் என்று பொருளாகும்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by ரமேஷ் குமார் Mon 4 Apr 2016 - 13:18

மீதம் உள்ள 75 எங்கே

ரமேஷ் குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by Nisha Mon 4 Apr 2016 - 16:47

ரமேஷ் குமார் wrote:மீதம் உள்ள 75 எங்கே

இந்த பதிவை போட்டவரை தேடிக்கண்டு பிடித்ததும் அவர் வந்து போடுவார்ப்பா! 

கண்டு பிடித்தவர்களையே தேடி கண்டு பிடிக்க போனவரையும் தேடி கண்டு பிடிக்க வேண்டிய  நிலையில்  இருக்கோம்பா!

ஆமாம் நீங்கள் யார் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by Nisha Mon 4 Apr 2016 - 16:51

வாவ் பர்ஹாத்!

நிஜமாகவே அசத்தலாக பதிந்திருக்கின்றீர்கள், நானும் கவனிக்காமல் போனேனே! இந்த பதிவை தொடர்வதற்காகவாவது பர்ஹாத்தை தேடிப்பிடித்து அழைத்து வாருங்களேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் - Page 2 Empty Re: உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum