Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள்.
3 posters
Page 1 of 1

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? இந்த பழமொழி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ஆம், அதனால் உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் பாலகர்களாக இருக்கும் போதே நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பியுங்கள். அதுவே அதற்கான சரியான வயதாகும். காலம் தாழ்த்தினால் அவர்களை மாற்றுவது மிகவும் சிரமமாகிவிடும்.
பழக்க வழக்கங்களை அவ்வளவு சுலபத்தில் மாற்றி விட முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். அதனால் நம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுப்பது அவசியமான ஒன்றாகும். பாலகர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை வீட்டிலிருந்தே தொடங்குங்கள். பாலகர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் நல்ல பழக்கவழக்கங்கள் உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் அறிவுத்திறன் ரீதியாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக மழலைச் செல்வங்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களோடு தான் அவர்களுடைய அதிக நேரத்தை செலவிடுவதால், அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய நல்ல பழக்கங்கள் வீட்டிலிருந்து தொடங்குவது தான் முறையாக இருக்கும். பொதுவாக தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை போல் செய்து நடித்து காட்டும் வயதை உடையவர்கள் தான் பாலகர்கள். அதனால் அவர்களுக்கான நல்ல பழக்கவழக்கங்களை வடிவமைப்பதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இங்கு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்கவழக்கங்களை நாங்கள் உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். உங்கள் வீட்டு பாலகர்களுக்கு நல்ல பழக்க ழக்கங்களை எடுத்துரைக்க நீங்கள் எண்ணியுள்ளீர்களா? அப்படியானால் கீழ்கூறிய பட்டியலை முதலில் படியுங்கள்.
சுத்தம்
இப்போது உங்கள் குழந்தை ஒரு பாலகன். அவர்களுக்கு சுத்தமாக இருப்பதை பற்றியும், தூய்மை மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டிய நேரம் இது. தினமும் குளிப்பது, விரல் நகங்களை வெட்டுவது, உண்ணுவதற்கு முன்னாள் கைகளை கழுவுவது, கழிவறைக்கு சென்ற பிறகு கைகளை கழுவுவது போன்ற நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க ஆரம்பியுங்கள்.
தூய்மை
சுத்தம் என்பது உங்களின் தனிப்பட்ட ஆரோக்கியம். ஆனால் தூய்மை என்பது உங்களின் சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வு முறையை சார்ந்ததாகும். பொதுவாக பாலகர்கள் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். ஆகவே தூய்மையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பது மிகவும் அவசியம். அவர்களின் பொருட்களை சுத்தமாக வைத்து அவைகளை ஒழுங்காக அடுக்கி வைக்க சொல்லிக் கொடுங்கள்.
மரியாதை
மரியாதை என்பதன் முக்கியத்துவத்தை சரியான முறையில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். மரியாதை என்பது மூத்தவர்களுக்கும், உயர்ந்த அந்தஸ்த்து அல்லது பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லை. அனைத்து மனிதர்களையும் மதித்து மரியாதை கொடுக்க, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
நேரம் தவறாமை
பாலகர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது நேரம் தவறாமை. நேரம் தவறாமை என்ற முக்கியமான பழக்கத்தை குழந்தை பருவத்திலேயே அவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது அவர்களை அனைத்திலும் நேரம் தவறாமல் நடந்து, தங்கள் வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல உதவி புரியும்.
பணிவு
பாலகர்களுக்கு பணிவை பற்றி சொல்லிக் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் நேர்மறையாக அவர்களிடம் உரையாடி, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் பாசத்தையும் செலுத்துங்கள். அதுவே அவர்களுக்கு வாழ்க்கையில் பணிவை கற்றுக் கொடுக்கும். அவர்களின் உணர்வை காயப்படுத்த கூடாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
விழிப்புணர்ச்சி
உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கப் போகும் விஷயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். சுய அக்கறை மற்றும் சுய பாதுகாப்பைப் பற்றி கற்றுக் கொடுங்கள். இவைகளை அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதால், அவர்கள் பாதுகாப்பாக இருக்க கற்றுக் கொள்வார்கள்.
தூங்கும் பழக்கம்
நன்றாக தூங்கும் பழக்கத்தை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம். இரவு நீண்ட நேரம் விழித்திருந்தால், அது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்கள் அதனை பின்பற்ற பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குடும்ப பிணைப்பு
குடும்பத்தின் மீது அதிக பற்று மற்றும் பிணைப்பு வைக்க வேண்டும் என்ற நல்ல பழக்கத்தை கண்டிப்பாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, அதன் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி சந்தித்து, ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். ஏனெனில் குழந்தையை ஒரு சிறந்த மனிதனாக வளர்க்க குடும்ப பிணைப்பு மிகவும் அவசியம். நல்ல பழக்கவழக்கங்கள் கடைசி வரை நீடிக்கும். பாலகர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளுங்கள். அது தான் அவர்களின் தனித்தன்மையை வடிவமைக்கும்.
Thanks minnal

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள்.
பயனுள்ள பகிர்வு...
- *_ *_
பெற்றோர்கள் தங்களுக்குத் தூக்கம் வராவிட்டாலும்
குழந்தைகளுடன் நேரத்தில் படுத்து அவர்களை
தூங்க வைத்து விட்டு, அப்புறம் டி.வி பார்ப்பது
புத்தகம் படிப்பது போன்றவற்றில் ஈடுபடலாம்..
-

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள்.
என்ன சொல்லி கொடுத்தாலும் பயன் என்னவோ குறைவாக தான் இருக்கும்
நாமும் கடைபிடித்தால் தான் நமது குழந்தைகள் நேர் வழி பெறுவார்கள்

Similar topics
» குழந்தைகளுக்கு புற்று நோயை உருவாக்கும் பெற்றோரின் பழக்கவழக்கங்கள்!!
» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
» குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்!!!
» பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!
» பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum