சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Khan11

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

+2
rammalar
Nisha
6 posters

Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by Nisha Sun 8 Jun 2014 - 10:18

தூக்கமின்மை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தகவல் வெளியிட்டு வருகின்றனர் விஞ்ஞானிகள்.
அந்த வகையில் தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் பெரும் அலட்சியப் போக்கு காணப்படுகிறது, அது அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடிய ஆபத்தாக உருமாறியிருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, மான்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தக் கூட்டு எச்சரிக்கையை விடுத்திருப்பவர்கள்.

மனித உடலின் இயற்கையான செயல்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்கச் செயல்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ‘உடல் கடிகாரம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் இந்த மனித உடல் கடிகாரம் என்பது சுமார் 400 கோடி ஆண்டு களாக படிப்படியாக உருவான ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒருநாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல. அது இன்றைய மனித உடல் உருவாகக் காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்குப் பழகிய ஒன்று என்கிறார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரஸ்ஸல் பாஸ்டர்.

இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகாரச் செயல்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார் அவர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் குறைவாக தூங்குவதாகக் கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்.

தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கியக் காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.

குறிப்பாக, குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின், நீலநிறம் அதிகமுள்ள வெளிச்சமும், தொடுதிரைக் கணினி மற்றும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சமும் மனிதக் கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது தூக்கம் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கூட தங்களின் தாத்தா, பாட்டிகளின் தூக்க மாத்திரைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இப்படி முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல, புற்றுநோய்கூட ஏற்படலாம் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

எனவே இரவு நேரத்தில் தொடுதிரைக் கணனி அல்லது தொடுதிரை செல்பேசி திரைகளில் மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், வீடுகளின் மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்கு வெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும் படியும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் அலட்சியம் ஆபத்தையே தரும் என்பது அவர்களின் கருத்து


http://www.newsonews.com/view.php?204608q2203fnBdd4ea4mOld4cb0C6AAeddcAoMQedbcaRlOS3e43ZBnZ3e03cE80Q23


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by rammalar Sun 8 Jun 2014 - 10:23

பயனுள்ள கட்டுரை பகிர்வு
-
தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Images?q=tbn:ANd9GcSQ_FsiFWGN4RWA0DcL23h4fPPQdcP55qemtkJ5o1WVpVcIwEPh
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25278
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 19:04

இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா  _* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:19

நண்பன் wrote:இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா  _* )* 
ஒருகாலும் நடக்காது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by Nisha Sun 8 Jun 2014 - 19:27

நண்பன் wrote:இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா  _* )* 

நானும் முடிவு எடுக்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:30

Nisha wrote:
நண்பன் wrote:இன்றிலிருந்தாவது இந்த நண்பன் திருந்தி நேரத்திற்கு தூங்குவாரா  _* )* 

நானும் முடிவு எடுக்கணும்.
அப்ப இன்றைய இரவு முழுதும் திங் பன்னுங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 Jun 2014 - 19:34

ஆமப்பா தூக்கமின்மை ஆபத்தானது என்று தெரிந்தும் அதிகமாக தூங்கக் கிடைப்பதில்லை 
இனிமேலாவது தூங்கணும்பா 

பயனுள்ள கட்டுரைப்பகிர்வு நன்றி


தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:37

நேசமுடன் ஹாசிம் wrote:ஆமப்பா தூக்கமின்மை ஆபத்தானது என்று தெரிந்தும் அதிகமாக தூங்கக் கிடைப்பதில்லை 
இனிமேலாவது தூங்கணும்பா 

பயனுள்ள கட்டுரைப்பகிர்வு நன்றி
பாவம் பயபுள்ள..நல்ல தூங்க இனி தினமும் சேனையில் உலா வாருங்கள்..சீர்க்கிரம் போய் தூங்க நான் கேரண்டி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by கவிப்புயல் இனியவன் Mon 9 Jun 2014 - 12:40

பயனுள்ள கட்டுரை பகிர்வு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து! Empty Re: தூக்கம் குறைவா? உங்கள் உயிருக்கு ஆபத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum