சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்  Khan11

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

3 posters

Go down

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்  Empty பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

Post by Nisha Mon 9 Jun 2014 - 13:00

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்


ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.

எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரமும் பெண்களிடம் இருந்தால் இன்னும் சிறப்பு.

அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான். அப்படி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஸ்மார்ட் பெண்களின் சிறப்புக் குணங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்,

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், 'எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்' என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.

அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷ யங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் 'டிக்' செய்த குணங் கள்.

இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!

நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றும் சொல்லலாம்.

தலைமைப் பண்புக்குரிய குணங்களான பணிவு, துணிவு, கனிவு என மூன்றும் ஒருங்கே அமைந்துள்ளதால் பெண்கள் தலைமையை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. இதை நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நிறுவனங்களில் கண்கூடாக பார்க்கலாம்.

பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.

அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை... மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.

நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.

இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள். சேமிப்பு குறித்த விஷயங்கள், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் பெண்கள் முதலீடு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் நிதி முதலீட்டாளர்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்... உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.

கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய 'டிகிரியில்' கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்  Empty Re: பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

Post by Nisha Mon 9 Jun 2014 - 13:01

சரி... எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?

பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.

ஆனால் ஆண்கள் அப்படியில்லை... பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.

பொது இடங்களில் கூடும்... பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.

பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.

அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.

இப்படி கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் வேலை என எந்த துறையாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து வருகின்றனர் பெண்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்  Empty Re: பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

Post by Nisha Mon 9 Jun 2014 - 13:03

எந்த இடத்திலும் யாருமே தனித்து நின்று ஜெயிப்பதில்லை. ஒரு பெண்ணீன் வெற்றி அவள் தகப்பன், சகோதரன், கணவன் ,குழந்தைகள் கையிலும் தங்கியுள்ளது என்பேன்.

சாதனை என்பது வெளியில் சென்று நான்கு பேர் அறியும் படி சாதிப்பது மட்டுமல்ல வீட்டில் தன் குழந்தைகளை சரியான விதத்தில் வளர்த்து நல்லவனாக மற்றவர் போற்றுபவனாக வாழசெய்வதும் சாதனை தான்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருப்பதும் சாத்னை தான்.பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண் இருப்பதும் சாதனைதான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்  Empty Re: பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

Post by ahmad78 Tue 10 Jun 2014 - 10:51

மொத்தத்தில் ஆண்கள் இல்லாமல் பெண்களும்
பெண்கள் இல்லாமல் ஆண்களும் ஜெயிக்கமுடியாது.

இதுதான் உண்மை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்  Empty Re: பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

Post by ராகவா Tue 10 Jun 2014 - 13:38

பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக முக்கிய நாட்கள் மறப்பது (திருமண நாட்கள்,பிறந்த நாட்கள்)...பெரும்பாலும் பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் கூறுவார்கள் .......போயிக்கொண்டே இருக்கும்...

சின்னச் சின்னதாக நிறைய பொய்கள் சொல்வது கூட பிடிக்காது...ஆனாலும் தவிர்க்க முடியாத நிலையில் நிலைமை கொஞ்சம் கடினம் தான். மறப்போம் .மன்னிப்போம்..இவற்றைப் புரிந்து கொண்டு, தெளிவாக செயல்படும் இருவருக்கும் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்  Empty Re: பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum