Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
3 posters
Page 1 of 1
குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
குழந்தைகளின் பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர் குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின் அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது, குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.
உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர், இதில் 10 கோடி பேர், பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என 'யுனிசெப்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் என, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) இலக்கு நிர்ணயித்துள்ளது. மையக்கருத்து:
இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் மையக்கருத்துகள்.
* சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்த, சமூக பாதுகாப்பு விதி எண்.202யை செயல்படுத்துதல்.
* தேசிய சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு உதவுதல்; குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்.
* பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், பணிக்கு சென்றால் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள். பள்ளி முடித்தவுடன் சில குழந்தைகள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்கின்றனர். சிலர் பெற்றோருக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள். சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், இலகுவான வேலைகளை பார்க்கலாம். அதே நேரம் கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது.
இந்தியாவின் நிலை:
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம். விவசாயம், தீப்பெட்டி, செங்கல் சூளை, டெக்ஸ்டைல் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் விடுமுறையின்றி, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். கொத்தடிமைகளாகவும் குழந்தைகள் இருக்கின்றனர்.இந்தியாவில் அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி சட்டத்தை முழு அளவில் நிறைவேற்றினால் அதிகளவிலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வர். பெரும்பாலான குழந்தைகள், குடும்ப சூழ்நிலை காரணமாகத் தான், பணிக்கு அனுப்பப்படுகின்றனர். பெற்றோரின் நிரந்தர வருமானத்துக்கு அரசு வழிவகுத்தால், அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கலாம்.
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
ஒரு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்
பயன்படுத்தப்படுவது தெரிந்தால் அவர்களுக்கு
3 மாதம் முதல் ஒரு வருடம் சிறை தண்டனை,
ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை அபராதம்
விதிக்கப்படும்.
இரண்டாவது முறையும் இதுபோன்ற குற்றச்
செயல்புரிந்தால் ஆறு மாதம் முதல் 2 ஆண்டு
வரை தண்டனை கிடைக்கவும் சட்டத்தில்
வழிவகை செய்யப்பட்டுள்ளது
-
பயன்படுத்தப்படுவது தெரிந்தால் அவர்களுக்கு
3 மாதம் முதல் ஒரு வருடம் சிறை தண்டனை,
ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை அபராதம்
விதிக்கப்படும்.
இரண்டாவது முறையும் இதுபோன்ற குற்றச்
செயல்புரிந்தால் ஆறு மாதம் முதல் 2 ஆண்டு
வரை தண்டனை கிடைக்கவும் சட்டத்தில்
வழிவகை செய்யப்பட்டுள்ளது
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: குழந்தையின் வருமானம் நாட்டுக்கு அவமானம்: இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
இந்தியாவினை விட ஒப்பீட்டு றீதியில் இலங்கையில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. !!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» இன்று உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
» இன்று ஊழல் ஒழிப்பு தினம்
» இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» குடி யால் குடும்பத்துக்கு அவமானம் அரசுக்கு வருமானம்...
» இன்று ஊழல் ஒழிப்பு தினம்
» இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
» குடி யால் குடும்பத்துக்கு அவமானம் அரசுக்கு வருமானம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum