சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Yesterday at 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா? Khan11

திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Go down

Sticky திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by ராகவா on Tue 24 Jun 2014 - 0:42

பொதுவாகத் திரைப்படங்கள் பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் கொண்டாடுகிற மாதிரி மாயையை உருவாக்கினாலும் பெரும்பாலான படங்களில் பெண்கள் கீழ்த்தரமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தமிழில் வெளிவந்த இரண்டு படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

உன் சமையல் அறையில் திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரை நோக்கி போடா வாடா என்கிற ஆண்களை அழைப்பதற்கான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமூகத்தின் பொதுப்புத்தியே, ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களை நோக்கி மீண்டும் மீண்டும் அவனது ஆண் தன்மையை நினைவுபடுத்தும் விதமாக அவன் இவன் என்று அழைப்பது. தவிர, திருநங்கைகளை டேய் என்று அழைப்பது அவர்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் படம் எடுத்திருப்பது பெரிய வருத்தத்தையே கொடுக்கிறது.

ஆடைதான் அடையாளமா?

இரண்டாவது படம் மஞ்சப்பை. பேருந்து நிறுத்தத்தில் நவீன உடையணிந்து நின்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அங்கங்களை உரசிப்பார்க்க ஒருவன் சேட்டைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பான். கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த கதாநாயகனின் தாத்தா உடனே அந்த ஆணை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை அழைத்துக்கொண்டு அவளது வீட்டிற்குச் செல்வார். அவளுடைய தந்தையை அழைத்து, அவரது கன்னத்தில் ஒரு அறை விடுவார். அடுத்து பேசும் வசனங்கள்தான் மிக முக்கியமானவை. “காலம் கெட்டுப்போய் கிடக்கிறது, பொம்பள புள்ளைய இப்படிதான் அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு அலையை விடுவியா?” என்பார்.

இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அந்தத் தாத்தாவைப் பார்க்கும் பெண்ணின் தந்தை, “என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். தாய் இல்லாத பெண் குழந்தை. அதான் அதுங்க இஷ்டம் போல வளர்த்துவிட்டேன். இப்போ அவங்களே ஒழுங்கா டரெஸ் போடக் கத்துக்கிட்டாங்க” என்கிற அர்த்தத்தில் பேசுவார். நியாயப்படி தாத்தாவின் கன்னத்தில், அந்தப் பெண்ணின் தந்தைதான் அறை விட்டிருக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில்தான் இருக்கிறது, அவர்கள் அரைகுறையாக உடையணிந்தால் பார்க்கிற ஆண்களுக்கு அவளை அனுபவிக்கத்தான் தோன்றும் என்கிற பொதுப்புத்தி சிந்தனைக்கு சாமரம் வீசியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

தொடரும் பெண் அடிமைத்தனம்

ஆண்கள் தங்களுக்கு வசதியான, தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடை அணிந்துக்கொள்ளலாம். ஆனால் பெண்கள் எப்போதுமே, எல்லா பாகங்களையும் இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் உடை அணிய வேண்டும் என்பது காலம்காலமாக இங்கே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. நிஜ வாழ்க்கையில் இந்த அநீதியில் இருந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதனைத் தடுக்கும் விதமாக, இந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து வெளிவருவது தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு.

பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களைத் தொடர்ச்சியாகக் கொச்சைபடுத்தும் விதமாகவும் காட்சியமைப்புகளைத் தமிழ் சினிமா தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வருகிறது. சில நடிகர்கள், காமெடி என்கிற பெயரில் தொடர்ச்சியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்துவதும் நடந்து வருகிறது.

எதிர்ப்பைப் பதிவு செய்வோம்

மஞ்சப்பை படத்தில், மொபைல் போன் மாற்றுவது மாதிரி, ஆண் நண்பர்களையும் தொடர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று ஒரு பெண்ணே வசனம் பேசுவது போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. ஆண்கள் தங்களுக்கு சாதகமான, அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு சூழலைப் பெண்களை வைத்தே அரங்கேற்றிவருகிறார்கள் என்பது எத்தனை பெரிய அவலம். இந்த மாதிரியான படங்களுக்கு எதிராக, பெண்களும், பெண் படைப்பாளிகளும் தொடர்ந்து போராட வேண்டும். பெண்களைப் பற்றிய மோசமான வசனங்களோ, அவர்களின் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வகையிலான காட்சிகளையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தொடர் போராட்டங்கள் மட்டுமே இப்படியான அவலங்களுக்கு முடிவு கட்டும். இந்தப் போராட்டத்தையும் தாண்டி, திரைப்பட தணிக்கைக் குழுவினரும் பெண்களுக்கு எதிரான இப்படிபட்ட காட்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

நீங்க என்ன சொல்றீங்க?

இப்படி திரைப்படங்களில் பெண்களைக் கேவலமாகச் சித்தரிப்பது குறித்தும் அதற்கு என்ன தீர்வு என்பது குறித்தும் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதிக்கலாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by ahmad78 on Tue 24 Jun 2014 - 10:00

பெண்களை திரைப்படத்தில் கொச்சைப்படுத்துகிறார்கள். உண்மைதான் மறுப்பதற்கில்லை.

ஆனால் அவர்கள் அணியும் சிறு ஆடைகளுக்கு ஆதரவு தராதீர்கள்.

நம் வீட்டில் யாராவது அறைகுறை ஆடை அணிவதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

பெண்கள் அறைகுறை ஆடையுடன் போகும்போது அவர்களை நல்ல நோக்கத்தோடு உங்களால் பார்க்கமுடியுமா?

பெண் பொன் இவ்விரண்டு விஷயத்திலும் தன்னை ஒரு நல்லவன் என்று எவனாவது சொன்னால் அவன் பொய் சொல்கிறான்.

இவ்விஷயத்தில் நாம் தன்னை ஒரு யோக்கியனாக உலத்தில் காட்டிக்கொண்டிருக்கிறோம். இதுதான் உண்மை.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by Nisha on Thu 26 Jun 2014 - 2:29

எனக்கு புரியாத விடயம் ஒன்றே ஒன்றுதான்!

சினிமாவில் கிராமப்புற பெணணாகட்டும் நகரப்புறம் பெண்ணாகட்டும் நாயகி மட்டும் அரைகுறை ஆடை அணிந்து நடமாடுவது போல் மேலே பாதி கீழே பாதி நடுவில் ஏதுமின்றி விட்டு விடுகின்ரார்களே.. நிஜத்தில் எந்த ஊரில் அப்படி பெண்கள் ஆடை அணிகின்றார்களாம்.

நாகரீக வ்ளர்ச்சி பெற்ற இடங்களில் கூட இந்த மாதிரி நீச்சலாடைகளும் மேலாடைகளும் இல்லை.

விட்டால் முழுதாக போர்த்தி தலையெல்லாம் பூவைத்து பொட்டு வைத்து இவள் தான் தமிழ்பெண் என ஒரு பக்கம் உடலில் இருக்கும் அங்கமெல்லாம் த்தெரிய இவளும் தமிழ் பெண் தானோ என மூகம் சுழிக்க வைக்கும் கோலம் ஒரு பக்கமாய் பெண்களை ப்போகப்பொருளாகவும்,கவர்ச்சி காட்டி பணம் சம்பாதிக்கும் வியாபர பொருளாகவும் தான் பார்க்கின்றார்கள்.

உண்மை நிலை இப்படி இருக்கும் போது எங்கே பெண்மை ஒளிருமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by ராகவா on Thu 26 Jun 2014 - 6:58

நன்கு சொல்லீர்கள்...
வழக்கத்திற்கு மாறாக பெண்கள் இப்போது முன்னேற்றம் அடைந்தாலும் அவர்கள் இன்னும் அன்னிய மோகத்திலிருந்து மீளவில்லை...
நடிப்பு ஒரு விளையாட்டு அல்ல..மக்கள் நிஜம் என நம்புகிறார்கள்..
இனி உள்ளொன்று வைத்து வாழும் நிலை மாறனும்..அப்போது விடிவு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by rammalar on Thu 26 Jun 2014 - 7:29

*_  *_ 
ahmad78 wrote:பெண்களை திரைப்படத்தில் கொச்சைப்படுத்துகிறார்கள். உண்மைதான் மறுப்பதற்கில்லை.

ஆனால் அவர்கள் அணியும் சிறு ஆடைகளுக்கு ஆதரவு தராதீர்கள்.

நம் வீட்டில் யாராவது அறைகுறை ஆடை அணிவதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

பெண்கள் அறைகுறை ஆடையுடன் போகும்போது அவர்களை நல்ல நோக்கத்தோடு உங்களால் பார்க்கமுடியுமா?

பெண் பொன் இவ்விரண்டு விஷயத்திலும் தன்னை ஒரு நல்லவன் என்று எவனாவது சொன்னால் அவன் பொய் சொல்கிறான்.

இவ்விஷயத்தில் நாம் தன்னை ஒரு யோக்கியனாக உலத்தில் காட்டிக்கொண்டிருக்கிறோம். இதுதான் உண்மை.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15986
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by Nisha on Thu 26 Jun 2014 - 10:35

அனுராகவன் wrote:நன்கு சொல்லீர்கள்...
வழக்கத்திற்கு மாறாக பெண்கள் இப்போது முன்னேற்றம் அடைந்தாலும் அவர்கள் இன்னும் அன்னிய மோகத்திலிருந்து மீளவில்லை...
நடிப்பு ஒரு விளையாட்டு அல்ல..மக்கள் நிஜம் என நம்புகிறார்கள்..
இனி உள்ளொன்று வைத்து வாழும் நிலை மாறனும்..அப்போது விடிவு...

நானும் அன்னிய நாட்டில்தான் வசிக்கின்றேன்! சினிமாவில் காட்டுவது போல் அரை குறை ஆடைகளுடன் இங்கே எந்த பெண்ணும் வீட்டுக்கும் விழாக்களில் கலந்து கொண்டதை காணவில்லை.!

இன்றைக்கு பெண்கள் எத்தனை சாதித்தாலும் விண்ணுக்கும் மண்ணுக்கும் போனாலும் இந்த மாதிரி போகபொருளாய் காட்டும் சினிமா இருக்கும் வரை அவளுக்கு விமோர்சனமும் இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by Nisha on Thu 26 Jun 2014 - 10:38

ahmad78 wrote:பெண்களை திரைப்படத்தில் கொச்சைப்படுத்துகிறார்கள். உண்மைதான் மறுப்பதற்கில்லை.

ஆனால் அவர்கள் அணியும் சிறு ஆடைகளுக்கு ஆதரவு தராதீர்கள்.

நம் வீட்டில் யாராவது அறைகுறை ஆடை அணிவதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

பெண்கள் அறைகுறை ஆடையுடன் போகும்போது அவர்களை நல்ல நோக்கத்தோடு உங்களால் பார்க்கமுடியுமா?

பெண் பொன் இவ்விரண்டு விஷயத்திலும் தன்னை ஒரு நல்லவன் என்று எவனாவது சொன்னால் அவன் பொய் சொல்கிறான்.

இவ்விஷயத்தில் நாம் தன்னை ஒரு யோக்கியனாக உலத்தில் காட்டிக்கொண்டிருக்கிறோம். இதுதான் உண்மை.

நிஜமான கருத்து முஹைதீன்! தன் வீட்டு பெண்களை பொத்தி பொத்தி பாதுகாக்கும் ஆண்கள் சினிமா சம்பந்த ப்பட்ட பெண்களை விமர்சிக்கும் முறை கண்டு நானும் இப்படி நினைத்திருக்கின்றேன்!நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by ராகவா on Thu 26 Jun 2014 - 20:39

பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில் தான் இருக்கிறது ..இப்படி சொல்லிச் சொல்லியே அவர்களை உசுப்பேற்றி ரசித்து மகிழும் ஆணாதிக்க சிந்தனையோடு எல்லா நிலையிலும் இருக்கவே சொல்லும். சுயகட்டுப்பாடு ஆண்களுக்கு எந்தளவு பேணப்பட வேண்டுமோ அந்தளவு பெண்களின் உடை, அலங்காரங்களும் கண்ணியமாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டிய பெண்மையை திறந்து போடச் சொல்லும் இவர்கள், பாதுகாக்க வேண்டிய இவர்களின் சொத்துக்களை திறந்து போட்டு விடுவார்களா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by முனாஸ் சுலைமான் on Thu 26 Jun 2014 - 20:48

அனுராகவன் wrote:பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில் தான் இருக்கிறது ..இப்படி சொல்லிச் சொல்லியே அவர்களை உசுப்பேற்றி ரசித்து மகிழும் ஆணாதிக்க சிந்தனையோடு எல்லா நிலையிலும் இருக்கவே சொல்லும். சுயகட்டுப்பாடு ஆண்களுக்கு எந்தளவு பேணப்பட வேண்டுமோ அந்தளவு பெண்களின் உடை, அலங்காரங்களும் கண்ணியமாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டிய பெண்மையை திறந்து போடச் சொல்லும் இவர்கள், பாதுகாக்க வேண்டிய இவர்களின் சொத்துக்களை திறந்து போட்டு விடுவார்களா..
புரிந்து கொண்டு செயற்பட நல்ல கருத்து..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by ராகவா on Thu 26 Jun 2014 - 23:06

முனாஸ் சுலைமான் wrote:
அனுராகவன் wrote:பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில் தான் இருக்கிறது ..இப்படி சொல்லிச் சொல்லியே அவர்களை உசுப்பேற்றி ரசித்து மகிழும் ஆணாதிக்க சிந்தனையோடு எல்லா நிலையிலும் இருக்கவே சொல்லும். சுயகட்டுப்பாடு ஆண்களுக்கு எந்தளவு பேணப்பட வேண்டுமோ அந்தளவு பெண்களின் உடை, அலங்காரங்களும் கண்ணியமாக இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டிய பெண்மையை திறந்து போடச் சொல்லும் இவர்கள், பாதுகாக்க வேண்டிய இவர்களின் சொத்துக்களை திறந்து போட்டு விடுவார்களா..
புரிந்து கொண்டு செயற்பட நல்ல கருத்து..
 !_ !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by hameed.harees on Sat 6 Sep 2014 - 20:20

எல்லாம் பணத்துக்காக

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum