Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மலேசியாவில் ஒரு மகிழ்வுலா: கோட்டா கினபாலு!
3 posters
Page 1 of 1
மலேசியாவில் ஒரு மகிழ்வுலா: கோட்டா கினபாலு!
-
மத்தியான வேளையில் ஒரு மணி நேரமாவது தூங்கினால்தான் இரவு 1 மணிவரை களைப்பின்றி அலுவலகப் பணியில் ஈடுபட முடியும் என்று பழக்கப்பட்டவன் நான். இத்தகைய மத்திய வேளையில், ""அப்பா கோட்டா கினபாலு என்றால் என்னப்பா?'' என்று என் 12 வயது மகன் பாலு கேட்டபோது எனக்கு எரிச்சல் வந்தது. ""டேய் என்னடா? கோட்டானாட்டம் முழிச்சிக்கிட்டு திடீர்னு இந்தக் கேள்வி கேட்கறே?'' என்று அவன்மீது எரிந்து விழுந்தேன். ""இல்லப்பா டிஸ்கவரி சேனல்ல கோட்டா கினபாலு பற்றி சொல்லிட்டு இருந்தாங்க.. மலேசியாவில இருக்காம்..'' ""சரி போ.. என்னைத் தூங்கவிடு,'' என்று பையனை விரட்டிவிட்டாலும் கோட்டா கினபாலு மனதையே சுற்றிச் சுற்றி வந்தது. அன்று மாலையே மாலிந்தோ விமான சேவை நிறுவனத்தின் மக்கள் தொடர்புத்துறை அதிகாரி சுரேஷ் வாணனைத் தொடர்பு கொண்டேன். அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் மற்றும் மற்றொரு மாநிலமான கோட்டா கினபாலுவுக்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார். இனி மலேசியா செல்வோம்-
திருச்சியிலிருந்து மாலிந்தோ விமானத்தில் கோலாலம்பூர் சென்றோம். மூன்றரை மணி நேரப் பயணம். புத்ர ஜெயா என்ற இடத்தில் உள்ள புத்ரா பாலஸ் என்கிற மாளிகை போன்ற ஹோட்டலில் மாலை உணவை முடித்துக்கொண்டு மெரினா புத்ர ஜெயா என்ற இடத்தில் உள்ள நீளமான நதியில் ஒளிமயமான படகுகள் அணிவகுத்து வந்த "மாஜிக் ஆப் தி நைட்' என்ற அரசு சார்பிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். ஏறக்குறைய 20 படகுகள், பல வண்ணங்களில், பல வடிவங்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிதந்து வந்ததைக் கண் குளிர பார்த்தோம். இதைக் காணும்போது நம் ஊரில் நடைபெறும் தெப்பத் திருவிழாக்கள் நினைவில் வரத் தவறவில்லை. தொடர்ந்து வாண வேடிக்கையும், நிகழ்ச்சியின் முடிவில் நம்மூர் கரகாட்டத்தையும் கேரளத்தின் கதகளியையும் நினைவுப்படுத்தும் விதத்தில் ஆடைகளை அணிந்து சுழன்று சுழன்று நடனமாடினர் மலாய் நாட்டு இளைஞர்களும் யுவதிகளும். இந்த வண்ண ஒளி திருவிழாவில் உள்ளூர் மக்களுடன் பல்வேறு வெளிநாட்டவர்களையும் காண முடிந்தது. அவர்களின் முகத்தில் காணும் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. அன்று கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கினோம். பயணக் களைப்பில் சொகுசு மெத்தையில் சாய்ந்தால் கண்ணாடிக் கதவு வழியாக "ஸ்கை ஸ்க்ரேப்பர்ஸ்' எனப்படும் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் பிரமாண்டமாக நமக்கு காட்சி தருகின்றன. 451.9 மீட்டர் உயரத்தில் 88 அடுக்குகளுடன் காணப்படும் இந்த இரட்டைக் கோபுரத்தின் 44ஆவது அடுக்கில் இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த வான் பாலத்தில் ஹாலிவுட் படம் ஒன்று சாகச காட்சிகளைப் படமாக்கியுள்ளது. இந்தக் கோபுரத்தின் அருகில் டிஜிட்டலில் நேரத்தைக் காட்டும் மற்றொரு பெரிய கோபுரக் கட்டடமும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இரவில் அவ்வப்போது எழுந்துகொள்ளும் போதெல்லாம் இந்த இரட்டைக் கோபுரமும் டிஜிட்டல் கடிகாரக் கோபுரமும் நம்மையை பார்ப்பது போல ஓர் உணர்வு. இந்த பிரின்ஸ் ஹோட்டலில் பணிபுரிபவர்கள் அனைவரின் முகத்திலும் நட்சத்திரம் போன்ற மின்னும் சிரிப்பு, அழகான வரவேற்பு- உபசரிப்பு நம்மை நெகிழச் செய்கிறது.
அடுத்த நாள் பத்து மலை (குகை) முருகன் தரிசனம். உலகின் புகழ்பெற்ற, மலேசியாவின் சிறப்பு வாய்ந்த முருகன் கோயில் அது. ஏறக்குறைய 300 படிகளைக் கொண்ட அந்த மலைக்குகையைக் கடந்து முருகனைத் தரிசிக்கிறோம். இயற்கையான இந்தக் குகையின் அமைப்பு உலகில் வேறெங்கும் காண முடியாத தனிச்சிறப்பு. இங்கு ஏராளமான வெளிநாட்டவர்களுடன் தமிழர்களும் பரவலாகக் காணப்படுகின்றனர். கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் தமிழர்களே. இதை மலேசியாவின் தமிழ்நாடு எனலாம்.
வாக்ஸ் மியூஸியம். மெழுகுச் சிலைகளாலான அருங்காட்சியகம். லண்டனில் உள்ள டுசார்ட் வாக்ஸ் மியூஸியம் உலகப் புகழ்பெற்றது. அதைக் காண முடியாதவர்களின் குறையைத் தீர்க்கும் வகையில் மலேசியாவில் உள்ள இந்த மெழுகுச் சிலை அருங்காட்சியம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், போப்பாண்டவர், மர்லின் மன்றோ, ஐன்ஸ்டீன் உள்ளிட்ட உலகப் பிரபலங்களை உயிருடன் பார்ப்பது போன்ற பிரமிப்பு ஏற்படுகிறது. இதைத் தமது பெருமைமிகு தருணமாகவும் கருதுகின்றனர்.
அதன் பிறகு பனி வீடு என்று சொல்லப்படும் பனியால் ஆன மாளிகைக்குள் நுழைந்தோம். உள்ளே நுழையும்போதே எக்ஸிமோக்கள் பாணியிலான புஷ்கோட்டை தருகிறார்கள். அதை அணிந்து சென்றும் உள்ளே குளிர் தாங்கமுடியவில்லை. பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகஸ விளையாட்டுகள் உள்ளே இடம்பெற்றுள்ளன. துணிச்சல்காரர்களுக்கு இங்கு விருந்து.
அதன்பிறகு டிஜிட்டல் விளக்குகளின் நகரம் எனப்படும் ஐ-சிட்டியையும் கண்டு ரசித்தோம். டிஜிட்டல் விளக்குகளால் ஆன குதிரைகள், யானைகள், மரம், செடி, கொடிகள், மலர்கள் என வண்ணமோ வண்ணம்.. எண்ணத்தைக் கொள்ளையடிக்கும் வண்ணம் காட்சி தருகின்றன.
அடுத்த நாள் பிற்பகல் நமது முக்கிய இலக்கான கோட்டா கினபாலுவுக்குப் புறப்படுகிறோம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலம் என்ற விருதை கோட்டா கினபாலு பெற்றுள்ளது. கோலாலம்பூரிலிருந்து மற்றுமொரு இரண்டரை மணி நேர விமானப் பயணத்தில் கோட்டா கினபாலுவை அடைகிறோம். சபா மாநிலத்தின் தலைநகர் கோட்டா கினபாலு. இதைச் சுருக்கமாக கே.கே. என்றும் அழைக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரில் முற்றிலும் அழிந்து அதன்பின்னர் புதுப் பொலிவு பெற்ற நகரம் இது. 4.60 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மலேசியாவில் முழுக்க முழுக்க வானுயரக் கட்டடங்கள். இங்கோ பழமையும் புதுமையும் கலந்தாற்போன்று கட்டடங்களும் இயற்கையைப் பறைசாற்றும் காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. இயற்கையின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இங்கே உள்ள செயல்பாடுகள் காணப்படுகின்றன.
பரபரப்பான நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறத்துக்கு வந்தது போல் இருக்கிறது. சுற்றுலாத் துறையினரால் பராமரிக்கப்படும் மரி மரி கலாசார கிராமத்துக்கு நுழையும்போது பல்வேறு பழங்குடி இனத்தவரின் அந்தக்கால வாழ்க்கை முறை, வீடு, ஆடை, பாத்திரம் பண்டங்கள், உணவு பழக்க வழக்கங்கள் அத்தனையையும் நம் கண் முன்னே கொண்டு வருகின்றனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் இங்கே மாடல்களாகச் செயல்பட்டு அந்தக் காலத்துக்கு நம்மைக் கொண்டு செல்கின்றனர்.
இறுதியில் கலாசார நிகழ்ச்சியாக பழங்குடியினரின் அற்புத நடனம். அந்த நடன நிகழ்ச்சிகளில் நம்மையும் பங்கேற்க அழைக்கிறார்கள். நமக்கும் அவர்களுடன் ஆடும் உத்வேகமும் உற்சாகமும் ஏற்படுகிறது. வானுயரக் கட்டடங்கள் தராத மகிழ்ச்சியை இந்த நடன நிகழ்ச்சி நமக்குத் தந்துவிடுகிறது.
அன்று இரவு கோட்டா கினபாலுவில் உள்ள பிரமாண்டமான அரண்மனை போன்ற ஸ்டார் ஷாங்ரிலா ஹோட்டலில் தங்கினோம். அங்குள்ள அதிகாரிகள் முதல் சிப்பந்திகள் வரை அனைவருமே நம்மை வரவேற்கும் விதமும் அவர்கள் காட்டும் மரியாதை, புன்சிரிப்பும் வணக்கமும் நம்மை மிகவும் நெகிழ்வடையச் செய்கின்றன. இந்தியாவில் பெரும்பாலும் இறுக்கமான முகங்களையே பார்த்துப் பழகிய நமக்கு மிகவும் இதமாக இருக்கிறது அந்நாட்டு மக்களின் பண்பாடு.
மறுநாள் கயா தீவுக்கு அதிவேக விசைப்படகில் அரை மணிநேரப் பயணம். சிறிய தீவுதான் என்றாலும் அளப்பறிய ஆனந்தத்தை தருவதாக இருந்தது. அங்கு ஒரு (கயா) தீவிலிருந்து மற்றொரு தீவான சப்பி தீவுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேபிள்களாலான கம்பியைப் பிடித்து தொங்கியபடியே 60 கி.மீ. வேகத்தில் கடக்கும் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இந்த சாகசத்தை ஃபிளையிங் ஃபாக்ஸ், கோரல் ஃப்ளையர் என்று அழைக்கின்றனர். இந்திய மதிப்பில் ரூ. 1000 கட்டணத்தில் எவரும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அதற்கேற்ற வகையில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றனர். அதனால் பயமில்லாமல் இந்த சாகசத்தை மேற்கொள்ள முடிகிறது. கீழே கடல். மேலே அந்தரத்தில் தொங்கியபடியே அடுத்த தீவுக்கு தாவுவது என்பது வாழ்க்கையில் கிடைத்தற்கரிய "த்ரில்' அனுபவம் தானே! அடுத்தது "சீ வாக்கிங்'. அதாவது கடலுக்கடியில் சிறிது தூரம் நடந்து செல்வது. இதற்காக அடுத்த தீவுக்கு வேறு ஒரு மோட்டார் படகில் பயணம். அங்கு 35 கிலோ எடைகொண்ட மிகப்பெரிய தலைக்கவசத்தை (ஹெல்மெட்) தலையில் மாட்டி விடுகிறார்கள். அதில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டுள்ளதால் நீரில் மூழ்கியிருக்கும்போது மூச்சுவிட சிரமம் இருக்காது. படகிலிருந்து அப்படியே கடலில் இறக்கிவிட்டு விடுகிறார்கள். நமக்கு இருபக்கமும் காவலாகவும் நீச்சல்வீரர்கள் இருப்பார்கள். நமக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் கரைக்கு (படகுக்கு) தூக்கிவிடவும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தைரியத்துடன் கடலுக்கு அடியில் இறங்கி சற்று தொலைவு நடந்து அங்கு உலாவரும் மீன்களை மிக நெருக்கமாக ஆசை தீரப் பார்க்கலாம். இது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். இரவு அங்கே உள்ள மிதக்கும் ஹோட்டலில் அசைவ விருந்து. மலாய், சீன, இத்தாலிய, கொரிய, ஜப்பானிய உணவு வகைகளும் இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன. ஒரு பெரிய மீனை இட்லியை வேக வைப்பதுபோல் ஆவியில் வேக வைத்து பெரிய தட்டில் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதன்மீது குழம்பு போல ஏதோ ஊற்றுகிறார்கள். அந்த மீனை அப்படியே ஸ்பூனில் அல்லது சிறு கத்தியில் வெட்டி எடுத்து சாப்பிடலாம்.
நான்காவது நாள் ஒரு சிறிய ரயில் பயணம். நார்த் போர்னியோ ரயில்வே இதை இயக்குகிறது. டான்ஜங் ஆரு ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி பப்பார் நிலையம் வரை சென்று திரும்ப 4 மணி 10 நிமிஷங்கள் பிடிக்கின்றன. இடையே சில நிறுத்தங்களில் 20 மற்றும் 35 நிமிஷம் நிற்கிறது. நீராவியில் ஓடும் ரயில். நம்மூரில் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரிக்குச் செல்லும் ரயில் போல 5 பெட்டிகளைக் கொண்ட சிறிய ரயில். ஒவ்வொரு பெட்டியிலும் 16 பயணிகளுடன் மொத்தம் 80 பேர் பயணம் செய்யலாம். மிகவும் அழகான பெட்டிகள். பெட்டியினுள் அமர்ந்தால் நம் எதிரே டேபிள்கள். அதில் இரண்டரை மணி நேர ரயில் பயணம் நெடுக தண்ணீர், குளிர் பானங்கள், காஃபி, தேநீர், கேரியரில் மதிய உணவு என்று வகை வகையாக வைத்துக்கொண்டே வந்தார்கள். வழியில் சீனர்கள் வசிக்கும் பகுதி.. அங்குள்ள அவர்களின் கோயில்.. கிராமங்கள், செங்கற் சூளைகள், வயல்வெளிகள் என இயற்கையான சூழலில் பல்வேறு காட்சிகளை ரசிக்க முடிந்தது.
இருப்பினும் உயர உயரமான கட்டடங்கள் அணி வகுத்து வானின் தோரணங்களாக தொங்கிக் கொண்டிருக்கும் மலேசியாவில் பறவை இனங்களைக் காண முடியாதது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடினானே மகாகவி. அந்தக் காக்கை குருவிகளை பார்க்க முடியாததில் ஏக்கமாகத்தான் இருந்தது. அதனால் அன்னிய தேசத்துக்கு வந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படவே செய்தது. மற்றபடி மலேசியா சாலைகளில் காணப்படும் சுத்தம், சாலை விதிகளை தவறாது கடைப்பிடிக்கும் மக்கள், ஹாரன் ஒலியே கேட்க முடியாத வாகனப் போக்குவரத்து, புன்னகையை எப்போதும் முகத்தில் தேக்கி வைத்து புன்முறுவல் பூக்கும் மக்கள் என "ப்ளஸ் பாயிண்டுகள்' அங்கே அதிகம். அதனால் பிரியாவிடையுடன் அங்கிருந்து பிரிந்தோம்.
ஒருவழியாக திருச்சி விமானநிலையம் வந்திறங்கினோம்.
அப்போது.. "சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரு போல வருமா'? என்று எங்கிருந்தோ பாடல் ஒலித்து காதில் வந்து ஒட்டிக்கொண்டது. அதையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ரசனைதானே வாழ்க்கை!
=========================
By -ரா.ராஜசேகர், கோவை.
நன்றி: கதிர்
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மலேசியாவில் ஒரு மகிழ்வுலா: கோட்டா கினபாலு!
எந்த ஊருக்குப் போனாலும் நம்ம ஊருக்கு வரும்போது உள்ள நிம்மதி எங்கும் கிடைக்காது மற்ற ஊருக்கு சென்று வரலாம் ஆனால் வாழ்வதற்கு நாம் பிறந்த ஊரே சிறந்தது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மலேசியாவில் ஒரு மகிழ்வுலா: கோட்டா கினபாலு!
jasmin wrote:எந்த ஊருக்குப் போனாலும் நம்ம ஊருக்கு வரும்போது உள்ள நிம்மதி எங்கும் கிடைக்காது மற்ற ஊருக்கு சென்று வரலாம் ஆனால் வாழ்வதற்கு நாம் பிறந்த ஊரே சிறந்தது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» மலேசியாவில் மங்காத்தா !!!
» மலேசியாவில் பஸ் விபத்து : 22 பேர் பலி
» தமிழக தொலைக்காட்சி தொடர்களுக்கு மலேசியாவில் தடை
» மலேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரிட்டிஷ் தம்பதியர்
» மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு .
» மலேசியாவில் பஸ் விபத்து : 22 பேர் பலி
» தமிழக தொலைக்காட்சி தொடர்களுக்கு மலேசியாவில் தடை
» மலேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரிட்டிஷ் தம்பதியர்
» மலேசியாவில் தேர்தல் : வேதமூர்த்தியின் கொடும்பாவி எரிப்பு .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum