சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Khan11

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

5 posters

Go down

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Empty இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

Post by ahmad78 Thu 3 Jul 2014 - 10:47

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Untitled%208(145)கடந்த ஒரு மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த மூன்று சம்பவங்கள், இந்த சமூகம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்கிற பயத்தை நமக்குள் ஏற்படுத்துகின்றது.

மர்ம உறுப்பை அறுத்து கொலை

பீகார் மாநிலம் ஜம்மு மாவட்டம் ராஜகர்னா காடு பகுதியை சேர்ந்த குஜார் பண்டிட்டின் மகன் நாராயன் பண்டிட்டும், அவனது நண்பன் குபேந்திரன் பண்டிட் ஆகியோரும், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேட்டுத் தெருவில் ரூம் எடுத்து கடந்த ஒரு வருடமாக தங்கி அந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 11 ஆம் தேதி இரவு அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து திடீரென பயங்கர அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிபோய் பார்த்துள்ளனர். அப்போது, நாராயன் பண்டிட் ரத்த வெள்ளத்தில் கிடக்க, அருகில் குபேந்திர பண்டிட் கழுத்தில் லேசான காயங்களுடன் கிடந்துள்ளனர். நடந்த சம்பவம் எதுவும் தெரியாத அக்கம்பக்கத்தினர், பதறியடித்தபடி ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே நாராயன் பண்டிட் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முதலில் மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து நாராயன் பண்டிட்டின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்ததாக குபேந்திர பண்டிட் கூறியுள்ளார். அதன்பின் போலீசாரின் தொடர் விசாரணையில், ''நல்ல வேலை நல்ல சம்பளம்னு சொல்லிதான் ஒப்பந்தகாரர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்தோம். இங்கு வந்த கொஞ்ச நாளில் நாராயணனின் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தது. ஒருநாள் ராத்திரி என்னை அவனோடு இருக்க வற்புறுத்தினான்.

வேறு வழியில்லாமல் நானும் அவன் சொல்லும்படி நடந்துக்கிட்டேன். பிறகு அடுத்தடுத்த நாட்களும் அவன் என்னை பாடாய் படுத்தி தகாத உறவில் ஈடுபட சொன்னான். ஒரு கட்டத்தில் எனக்கு அவன் மேல் பொறுத்துக்கொள்ள முடியாது வெறுப்பு உண்டானது. அன்றைக்கும் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இரவு 11.30 மணிக்கு வழக்கம் போல் என்னை தகாத உறவுக்கு வற்புறுத்தினான். நான் வேண்டாம், எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னேன். தொடர்ந்து என்னை வற்புறுத்தவே எனக்கு கோபம் கோபமா வந்துச்சு. அது இருந்தால்தானே டார்ச்சர் பண்ணுவான்னு கத்தியெடுத்து பட்டென அதை அறுத்துட்டேன். அப்பவும் எனக்கு கோபம் குறையாததால் அவன் உடம்பில் குத்தினேன். நான் தப்பிக்க என் கழுத்தை அறுத்துக் கொண்டு நடித்தேன்" என அனைத்தையும் ஒப்பு கொண்டானாம். இப்போது குபேந்திர பண்டிட் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

போதையில் பாதை மாறிய தந்தை


இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Untitled%209(124)பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரை அடுத்துள்ள தேனூரைச் சேர்ந்தவர் ராஜகோபால். லாரி டிரைவரான இவருக்கு அமுதா (பெயர் மாற்றம்) என்கிற 15 வயதுடைய மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். அமுதா, தேனூர் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்தான் அமுதாவுக்கு தனது தந்தையால் அந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

''அப்பா அடிக்கடி குடிச்சிட்டு வருவார், கொஞ்ச நாளா அப்பா என்கிட்ட மோசமா நடந்துகொள்ள முயற்சி பண்ணிக்கிட்டு வந்தார். எனக்கு முதல்ல ஒன்னும் புரியல. கடந்த 23 ஆம் தேதி ராத்திரி போதையில் வீட்டிக்கு வந்த அப்பா, தூங்கிக்கிட்டு இருந்த என் மேல் படுத்து பலவந்தமாக பலாத்காரம் செய்யும்போது கத்தினேன். ராத்திரி முழுக்க வலி தாங்கல. அடுத்த நாள் கலெக்டர் சாருக்கு போன் பண்ணி நடந்த விசயத்தை சொல்லி அழுதேன். கலெக்டர் சார் ஆள் அனுப்பி என்னை மீட்டாங்க" என குழந்தைகள் நலக்குழுவின் பராமரிப்பில் இருக்கும் அமுதா, போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா, வழக்குப் பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளனர். மருத்துவ பரிசோதனையில், ராஜகோபால் தனது மகள் அமுதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் சம்மந்தப்பட்டிருந்த ராஜகோபால், தற்போது  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

16 வயது சிறுவனால் இரண்டரை வயது சிறுமி பாலியல் பலாத்காரம்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்துள்ளது வெள்ளுவாடி சோலை நகரை சேர்ந்தவர் செல்லதுரை. இவரின் இரண்டரை வயது மகள் அகல்யா (பெயர் மாற்றம்). கடந்த மாதம் 27 ஆம் தேதி சீரழிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

செல்லதுரையின் தாயான கலியம்மாள் வீட்டில், அவரது மைத்துனர் மகனான கடலூர் மாவட்டம், வேப்பூரை அடுத்த மணவளநல்லூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது 16 வயது மகன் விமல் தங்கி இருந்தான். கடந்த 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு செல்லதுரையும், அவரது மனைவி ராணியும் வேலைக்கு சென்றுவிட வழக்கம்போல அகல்யா அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது அங்கிருந்த விமல், அகல்யாவை வீட்டிற்குள் தூக்கிச் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு சீரழித்துள்ளான்.

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Untitled%2010(103)வலியில் துடித்த அகல்யாவை அங்கேயே விட்டுவிட்டு விமல் சொன்றுவிட, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அடுத்தவரிடம் சொல்ல தெரியாமல் அன்று மாலை வரை அழுதுக்கொண்டே அகல்யா இருந்துள்ளாள். காலையில் வேலைக்கு சென்ற செல்லதுரை, வீடு திரும்பியதும் ஏன் அழுகிறாய் என்று அகல்யாவிடம் விசாரித்துள்ளார். அப்போது அழுதுக்கொண்டே, ''மாமா என்னை ஏதோ பண்ணுச்சு என நடந்ததை தெளிவாக சொல்லக்கூட தெரியாதவராய் மழலைக் குரலில் சொல்லியுள்ளாள்.

பதறிய செல்லதுரை, நடந்துள்ளதை புரிந்துகொண்டு அகல்யாவை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளார். மேலும் செல்லதுரை அளித்த புகாரின்பேரில், கை.களத்தூர் எஸ்.ஐ. செல்வலெட்சுமி வழக்குப் பதிந்து விமலை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளார். விசாரணையின்போது, விமலின் செல்போனில் ஏராளமான ஆபாசப் படங்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த படங்களை சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு கடையில் பத்து ரூபாய் கொடுத்து பதிவிறக்கம் செய்ததாக விமல் சொல்லி இருக்கிறான்.

மேலும் போலீசார் அவனிடம் நடத்திய தொடர் விசாரணையில், ''அன்றைக்கு வீட்டுல யாருமில்லை. செல்போனில் அந்த படம் பார்த்துக்கிட்டே இருந்தேன். எனக்குள்ள ஏதேதோ தோணுச்சு. படத்துல செஞ்சதுபோல் அகல்யாவை செய்து பார்த்தேன்" என்று கூறியிருக்கிறான் விமல். அதன் பிறகு, பெரம்பலூர் குற்றவியல் நீதிபதி சுரேஸ் முன்பு  ஆஜர்படுத்தப்பட்ட விமல், தற்போது திருச்சி சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Untitled%2011(80)நடந்த இந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவரும் இந்தோ அறக்கட்டளையின் இயக்குநருமான முகமது  உசேனிடம் பேசியபோது, ''இப்போது தந்தையால் சீரழிக்கப்பட்ட அமுதா, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் பராமரிப்பில் உள்ளாள்.  அமுதா உடலளவிலும் மனதளவிலும் தற்போது முன்னேறி வருகிறாள். அவள் படிப்பை தொடர நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டரை வயதுடைய குழந்தை பாதிக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது சிறுமி சிகிச்சையில் இருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகள் இப்போதுதான் வெளியில் அதிகமாக தெரிய வருகிறது. அமுதா மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நடந்ததை சொன்னதால்தான் விஷயம் வெளியில் தெரிய வந்தது. பல சம்பவங்களில் நிர்பந்தத்திற்கு பயந்து பிள்ளைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கபடுகின்றனர். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திலும் இதுதான் நடந்தது. இதுபோன்று பிரச்னைகள் வெளியில் தெரியாமல் காலங்காலமாக தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற பள்ளிகளில் ஆலோசனை வகுப்புகள் எடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சொற்ப பணத்திற்காக ஆபாசப் படங்களை குழந்தைகளுக்குக்கூட செல்போனில் பதிவிறக்கம் செய்து தருபவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதையெல்லாம் பர்க்கும்போது இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது" என்றார்.

- சி.ஆனந்தகுமார்

 
http://news.vikatan.com/article.php?module=news&aid=29689


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Empty Re: இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

Post by rammalar Thu 3 Jul 2014 - 11:15

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Tears1
- !*  !*
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24575
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Empty Re: இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

Post by ராகவா Thu 3 Jul 2014 - 13:04

இதுபோன்ற செய்திகள் நான் படிப்பதை விட்டு விட்டேன்..
எல்லாம் மனதில் துன்பதை விளைவிக்கும்..எப்போது மாறும் இந்த நிலைமை அதுவே என் கருத்து..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Empty Re: இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

Post by பானுஷபானா Fri 4 Jul 2014 - 14:50

!* !* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Empty Re: இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

Post by ந.க.துறைவன் Fri 4 Jul 2014 - 15:54

இதற்கு என்ன தான் தீர்வு அனுராகவன்...?
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Empty Re: இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

Post by ராகவா Fri 4 Jul 2014 - 18:55

ந.க.துறைவன் wrote:இதற்கு என்ன தான் தீர்வு அனுராகவன்...?
தீர்வு கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...! Empty Re: இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum