சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Khan11

பொது அறிவுத் தகவல்கள்!

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 20:51

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:04

* உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.

* கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.

* மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.

* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.

* நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:05

* ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.

* தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.

* மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.

* செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.

* ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.

* மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:05

* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி.

* இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.

* இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.

* ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.

* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:05

* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.

* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.

* இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:06

* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.

* ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.

* முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன்.

* ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்.

* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.

* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.

* சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.

* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.

* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.

* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.

* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:06

மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.

புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.

ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.

ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.

துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.

நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:07

* பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

* காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.

* பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.

* திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.

* எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.

* தலை இல்லாத உயிரினம், நண்டு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:07

* அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.

* உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.

* சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

* புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:09

* அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.

* `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.

* `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய்.

* தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்.

* குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா.

* உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக்.

* எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.

* `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன்.

* இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948.

* மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.

* காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.

* `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:09

* நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.

* நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம்.

* மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.

* முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.

* மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம்.

* வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.

* இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி.

* சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.

* முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே.

* தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.

* ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:09

* 1793 - ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர்.

* 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

* 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.

* 1948 - பரோ தீவுகள், டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன.

* 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம், இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

* 1976 - ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது.

* 1979 - 98 சதவீத மக்கள் ஆதரவுடன் இஸ்லாமியக் குடியரசாகியது, ஈரான்.

* 2001 - நெதர்லாந்து, சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.

* 2004 - ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி-மெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, கூகுள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:10

* பறக்கத் தெரியாத பறவை, பெங்குவின்.

* கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.

* ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி.

* கரையான் அரிக்காத மரம், தேக்கு.

* ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.

* அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.

* `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல்.

* உலகின் முதல் கண்வங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.

* கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.

* ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.

* கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:10

* 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.

* ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.

* பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன.

* அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.

* நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.

* கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன.

* மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.

* நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.

* டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

* 13-ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார்.

* நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.

* ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

* மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:11

* சிரிப்பதன் மூலம், மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனின் உற்பத்தி அளவு குறைகிறது.

* புகழ்பெற்ற `டைட்டானிக்' கப்பலை உருவாக்க சுமார் 70 லட்சம் டாலர்கள் செலவானது.

* நமது உடலில் 20 முதல் 30 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

* தீப்பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே சிகரெட் லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

* அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் சுட்டுவிரல் நீளம், 8 அடி.

* தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தாயும், மனைவியும் காது கேளாதவர்கள்.

* ஆந்தை மட்டுமே தன்னுடைய மேல் இமையை விரிக்க முடியும். மற்ற பறவைகள் கீழ் இமையை மட்டுமே விரிக்க முடியும்.

* கடவுளின் பெயர் சூட்டப்படாத ஒரே கிரகம், பூமி.

* கண்களைத் திறந்து கொண்டே உங்களால் தும்ம முடியாது.

* பன்றிகளின் நாக்கில் சுமார் 15 ஆயிரம் சுவை நரம்புகள் உள்ளன.

* கி.மு. 2737-ம் ஆண்டில் தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது.

* நீண்ட காலம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் ஒரே உணவுப்பொருள், தேன்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:11

ஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால் சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா? தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் வேறுபடுவதுதான் காரணம். சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ஈர்ப்பு மைய உயரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலின் எடை, இடைப்பகுதியில் அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் உடல் சோர்வை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறோம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:11

கலங்கரை விளக்கு ஒளி நீண்ட தொலைவு தெரிவதால்தான் கப்பல்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்புகிறது. கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதால் மட்டும் அதன் ஒளி நீண்ட தூரம் தெரிவதில்லை. அதற்கு வேறு அறிவியல் காரணம் இருக்கிறது. கலங்கரை விளக்கில் ஒளிதரக்கூடிய விளக்கு ஒன்று குழி ஆடியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழி ஆடி ஒளிக்கதிரை இணைக்கற்றையாக எதிரொளிக்கிறது. இப்படிப்பட்ட இணைக் கற்றை ஒளிதான் நீண்டதூரம் சென்றாலும் திண்மை குறையாமல் செல்லும். அப்படி இருந்தால்தான் தூரத்தில் வரும் கப்பல்கள்வெளிச்சத்தை உணர முடியும். கலங்கரைவிளக்க ஒளி சுமார் 5 கி.மீ. தொலைவுக்குத் தெரியும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:12

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிறப்புக்குரிய கோபுரங்களை இடிமின்னலில் இருந்து காப்பவை கலசங்கள் தான். மின்னேற்றம் பெற்றுள்ள மேகங்கள் காற்றைக் கடக்கும்போது உராய்வினால் இடி-மின்னல் உருவாகிறது. கூர் முனையுடைய உலோகம் மின்னேற்றத்தை தன்பால் இழுத்து கடத்தும். இடி-மின்னல் ஏற்படும்போது உலோகத்தால் செய்யப்பட்ட கலசம் மின்சாரத்தை ஈர்க்கிறது. கலசத்தில் இருந்து தரைக்குள் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வழியாக அந்த மின்சாரம் கடத்தப்பட்டு பாதுகாப்பாக தரைக்குள் அனுப்பப்படுவதால் கோபுரங்கள் இடி தாக்குதலுக்கு பாதிக்கப்படுவதில்லை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:12

மனிதனின் கண்ணீரும், வியர்வையும் உப்புக்கரிக்கும். ஏனெனில் அவை உணர்வுப்பூர்வமானவை என்று இயல்பான விளக்கம் தரலாம். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? மனிதனின் தோற்பரப்பு சுமார் 18 சதுர அடி. இந்த தோற்பரப்பில் லட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் கழிவுப் பொருட்களான நீர், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் கழிவு உப்புகள் போன்றவை வியர்வை சுரப்பிகள் வழியாக வெளியேறும். இது உடல்வெப்பத்தை சமநிலைப்படுத்தும். கண்ணீரிலும் சோடியம் குளோரை உப்பு உள்ளது. எனவே கண்ணீர், வியர்வை இரண்டுமே உப்புக் கரிக்கிறது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:13

இசையென்றால் எல்லா உயிர்களுக்கும் ஒரு கிறக்கம் உண்டு. அது ஏன் தெரியுமா?. இசை உணர்வுப்பூர்வமானது. உடற்செயலியல் முறையில் சொல்வதானால் மனித மூளை வலது அரைக்கோளத்தின் நெற்றிக் கதுப்பில்தான் இசையை உணரும் மையம் உள்ளது. இந்த உணர்வு மையத்தை இசை ஒரு தாளலயத்தில் தூண்டும்போது இசை நம்மால் முழுமையாக உள்வாங்கப்பட்டு கிறங்கச் செய்கிறது. வலது பக்க நெற்றிக்கதுப்பின் வளர்ச்சியால் இசைத்திறனும், படைப்புத்திறனும் அதிகமாகும் என்பது ஆய்ந்தறிந்த உண்மையாகும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:13

டாக்டர்கள் நோயாளிகளின் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பது உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை வெளிக்காட்டும் தன்மை நாக்கிற்கு இருக்கிறது என்பதால்தான் டாக்டர்கள் இப்படி செய்கிறார்கள். சில நேரங்களில் நாக்கு சுவை அறிவதில் கோளாறு செய்யும். நாக்கு மாறுபட்டு சுவை அறிவதை `டைஜென்சியா' என்றும், குறைவான சுவை உணர்வதை `ஹைபோஜென்சியா' என்றும் கூறுவர். உடலில் துத்தநாகம் என்ற உப்புச்சத்து குறைவதால் இந்த பிரச்சினைகள் ஏற்படும். காய்ச்சலின்போது அதிகமாக துத்தநாகம் இழப்பு ஏற்படுவதால்தான் அப்போது வாய் கசப்பதாக உணர்கிறோம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:13

குழந்தைகள் தூங்கும்போது புலம்புவதை அதிகமாக காண முடியும். இது ஏன் தெரியுமா? தூக்கத்திற்கான கட்டுப்பாட்டு மையமாக மூளையின் முகுளம் பகுதி செயல்படுகிறது. இருந்தாலும் தலாமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு, மூளைத்தண்டுப் பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது. ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில் உணர்வு நரம்பின் தூண்டுதலால் தானாகப் பேசுவதும் புலம்புவதும் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளிடம் ஆழ்ந்த தூக்க வகை காணப்படுவதால் அவர்களே அதிகம் புலம்புகிறார்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:14

பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது ஸ்டைலுக்காக அல்ல. சூரிய ஒளி பனிக்கட்டிகளின் மேல்பட்டு பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பின் ஒளி கண்ணை பாதித்து பார்வைத்திறனை குறைக்கச் செய்யும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ளத்தான் பனிச்சறுக்கு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிகிறார்கள்.

கோடை காலங்களில் உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே ஆபத்து இருக்கிறது. அவர்களும் கண்ணாடி அணிந்து கொண்டால் பார்வைத்திறன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:15

* ஆஸ்கார் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

* யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.

* நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.

* அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.

* மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:15

* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

* கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

* பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.

* மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.

* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

* புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.

* ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.

* நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

* ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

* மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.

* வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

* வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

* நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by ராகவா Sat 12 Jul 2014 - 21:15

குதிரையின் சராசரி ஆயுள்காலம், 60 ஆண்டுகள்.

நூர்ஜஹானின் இயற்பெயர், மெஹருன்னிசா.

சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம், அபிமன்யு.

அமைதியின் தூதுவர் என்று அழைக்கப்பட்டவர், ஜவஹர்லால் நேரு.

உயிர் காக்கும் உலோகம் என்று அழைக்கப்படுவது, ரேடியம்.

நோபல் பரிசை நிறுவியவர், ஆல்பிரட் நோபல்.

சனிக்கிரகத்துக்கு வளையம் உண்டு என்பதைக் கண்டறிந்தவர், கலிலியோ.

விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள், அக்டோபர் 8.

ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர், வில்லியம் ஹார்வி.

இந்திராகாந்தி முதன்முதலில் இந்தியப் பிரதமரான ஆண்டு, 1966.

டெல்லியின் பழைய பெயர், இந்திர பிரஸ்தம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 2 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum