சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Khan11

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by ahmad78 Wed 16 Jul 2014 - 12:00

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * 10487494_509557122513119_8404336363462436745_n 1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையில் சில வரிகள்.

பலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சனைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டு ஒரு சில கடிதங்கள் எனக்குக் கிடைத்தன. ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் பற்றியும் கேட்கிறார்கள்.

நான் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களை நெருக்கமாக அறிவேன். சில யூத நண்பர்கள் கூட எனக்கு இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் யூதர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் பற்றி அறிந்திருக்கின்றேன்.

நீதி என்ற தேவை ஏற்படும்போது இந்த அனுதாபங்கள் எல்லாம் என் கண்களை மறைக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையும் யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது?.

இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்கார்களுக்கு சொந்தமோ அது போல பாலஸ்தீன் அரபுகளுக்கு சொந்தமானது. பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களைக் கொண்டு வந்து அங்கே குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.

நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாய் நாடு என்று நினைப்பேன். அங்கே என்ன கொடுமை நடந்தாலும் எனது சொந்த நாட்டில் அது நடப்பதாக எடுத்துக்கொள்வேனே தவிர, பிற நாட்டை என் தாய்நாடாக நினைத்து ஓடிவிடமாட்டேன்.

சந்தேகமில்லாமல் சொல்கிறேன் யூதர்கள் தவறான பாதையிலேயே போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் பாலஸ்தீன் என்பது இன்றைய புவியியல் எல்லைகளுக்குள் தேடப்படவேண்டிய நிலப்பரப்பு அல்ல, மாறாக அவர்கள் இதயங்களுக்குள்ளே இருக்கவேண்டியது.

அப்படியே அது அவர்களின் தாயகப்பிரதேசம் என்றாலும், இங்கிலாந்து ராணுவத்தின் துப்பாக்கி நிழலின் கீழ் திருட்டுத்தனமாக ஒரு தேசத்தை அடைய விரும்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

Mahatma Gandhi on ! Palestine written in 1938
The Jews In Palestine
By Mahatma Gandhi
Published in the Harijan
26-11-1938.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 13:17

இப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்றை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
வேதம் போதிக்கின்றேன் என்பவர்கள் கடந்து செல்லுங்கள். 
புரிதலுக்கு நன்றி 
நிஷா


இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை எதனால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது?


எருசலேம் எனும் இடத்தை தமக்கான புனித இடம என பலஸ்தீன அராபியரும், இஸ்ரேலிய யூதரும் சொந்தம் கொண்டாடி அவ்வுரிமையை விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றார்கள்.


ஈழப்போராட்டத்தில் வடகிழக்கில் திருகோணமலைக்காக இரு பக்கமும் இழுத்தறிப்பு நடபப்து போல் தமக்கான் புனித பூமி என நம்பும் ஒரு இடத்துகாக இரத்தம் சிந்துகின்றார்கள்.


பலஸ்தீனிய அராபியர்களும் இஸ்ரேலிய யூதர்களும் யார்? காலம் காலமாக இவர்களுக்குள் போராட்டம் தொடர்வது ஏன்?
இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.


தமிழ் மொழி பெயர்ப்பு பைபிள் ஆகாரை வேலைக்காரி என சொல்கின்றது. ஆனாலும் மூல மொழியில் என்ன எழுதப்ப்ட்டதென நாம் ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும்.


ஆபிரகாமின் முதல் மனைவிக்கு இரண்டாவது மகனாக பிறந்த ஈஷாக் வம்சத்தவரே யூதர்கள் என்பவர்கள்.
திருமணமாகி பல வருடங்களாகியும் தமக்கு பிள்ளை இல்லை என நினைத்தும் இத்தனை வருடத்துக்கு பின் பிள்ளை கிடைக்காது என நம்பி ஆகாரை திருமணம் செய்ய வைத்து ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மவேல் வம்சத்தில் தொடரும் அராபியர்களான பலஸ்தீனியர்கள்.


இருவருக்கும் தகப்பன் ஒருவர். தாய் தான் இருவர்.
எதிர்காலத்தில் சொத்துப்பிரச்சனைகள் வரக்கூடாது,உரிமைப்போராட்டம் இருகக்கூடாது என தம் மகனுக்கே அனைத்து உரிமையும் வர வேண்டும் என ஆபிரகாமின் முதல் மனைவி சாராயால் ஆகார் குழந்தை இஸ்மவேலோடு விரட்டப்பட்டாள். விரட்டப்பட்ட அவள் குழந்தையுடன் ,வானந்தரத்தில் அலைந்து திரிந்து தாகத்துக்கு தவித்தபோது பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த தடியால் தான் நின்ற இடத்தில் அடிக்கும் போது தோன்றியது தான் இன்றைக்கு அராபிய முஸ்லிம்களால் புனித நீரென கொள்ளப்படும் ஷம் ஷம் நீர் என பைபிள் சொல்கின்றது. அதே இடத்தில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து அந்த நீரினை தோன்ற வைத்ததாக இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள்.


எப்படியோ ஷம் ஷம் நீர் புனிதமான நீர் என இரு சாராரும் நம்புகின்றார்கள்.
கஃபா எனும் பெயரில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து கட்டியதாக இவ்விடத்தை புனித இடமென இன்னமும் மதிக்கின்றார்கள்.


இஸ்மவேலை குறித்து உன் சந்ததியினரைக் கடவுள் ஏராளமாகப் பெருகச் செய்வார். நீ ஒரு மிகப் பெரிய குலத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைப் பெறுவாய்.. 'நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)


அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)


ஆசிர்வாதமும், சாபமுமாய வாக்குக்கொடுக்கப்ப்ட்ட இனம் அராபியர் இனம்.
அதனால் தான் அவர்கள் உலகை ஆண்டுகொள்ளும் வளம் கொழிக்கும் ஆசிர்வாதத்தை தம் வசம் கொண்டிருந்தும் உலகளவில் எல்லோராலும் பகைக்கப்படுகின்றார்களோ எனும் ஆழமான் சிந்தனைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை.


ஆனாலும் துரத்தி அடிக்கப்பட்டதாக சொல்லப்ப்ட்ட இஸ்மவேல் ஆபிரகாம் மரித்து அடக்கம் செய்யப்பட்டபோது உடனிருந்ததாக அதே பைபிள் சொல்கின்றது.


ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும்,முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)


இரு குமாரர்களும் சேர்ந்து தான் ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் எனும் போது ஆபிரகாமின் 100 வயதில் ஈஷாக் பிறந்த பின்னும் 75 வருட காலம் உயிரோடிந்த காலங்களில் நடந்தவை குறித்து வரலாறு சொல்வது என்ன?
ஆபிரகாமும், இஸ்மவேலும் ஈஷாக்கும் தொடர்பில் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பைபிள் வசனங்களை வைத்தே அறிந்திட முடிகின்றது.


அது எப்படி இருந்தாலும்........ ?


இஸ்ரேலுக்கு சொந்தமானவர்களென சொல்லப்படும் யூதர்களுக்கு அவ்விடம் வழி வழியாய் தொடரும் சந்ததிகளுக்கு வாக்களிக்கப் பட்டதெனும் கூற்றை மெய்ப்பிக்கும் ப்டி இஸ்ரேலை சாலோமேன் காலம் வரை யுதர்கள் ஆண்டதாகத்தான் வரலாறு சொல்கின்றது. சாலொமோன் காலத்தின் பின் தான் சொந்த நாட்டை விட்டு நாற்புறமும் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்கின்றது வரலாறு.


பாலஸ்தீனம் அப்படி அல்ல!
பாலஸ்தீனம் என்பது ஆக்கிரமிப்புக்குள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் ஜெருசலேம் அதன் தலைநகராகவும் இப்பிரகடனம் அறிவித்தது!


பலஸ்தீன நாடு" அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. 
பாலத்தீனத்தை "பார்வையாளர் நாடு" (observer state) என்னும் நிலைக்கு உயர்த்தியது.


ஐரோப்பிய ஒன்றியம் பாலத்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது. இதுதான் பாலஸ்தீனத்தில் நிலை.


இஸ்ரேலியர் ஜெருசலேம் கானான் இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்ட்ட பூமி என நம்புகின்றனர். அந்த இடத்தினை தம் சொந்த் பூமியென பாலஸ்தீனர் சொல்கின்றனர். என்ன தான் நடக்கின்றது?
தொடர்வோம்.




Last edited by Nisha on Tue 18 Sep 2018 - 23:03; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 14:04

சகோதரர்களுக்கிடையில்   நான் நீ என வேறுபாடு கொண்டு சண்டை இட முன்  இறைவ்ன நமக்களித்த  ஆறாம் அறிவை கொஞ்சம் பயன் படுத்தி சிந்தித்து பார்ப்போம்.

இறைவ்ன நம்மை அடிமையாகவோ ஐந்தறிவு கொண்ட மிருகமாகவோ படைக்கவில்லை. ஆறறிவுடன் நன்மை தீமை அறிந்து சுயமாய் முடிவெடுப்ப்பவராகத்தான் படைத்துள்ளார்.


நேரம் இருப்பவர்கள் இந்த லிங்க் சென்று படியுங்கள் நிரம்ப விளக்கங்கள் கிடைக்கலாம்.

இஸ்மவேல் - முஹம்மத் - பைபிள்

நிரம்ப சிந்திக்க வைக்கின்றார்கள். முக்கியமாக

ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by ahmad78 Wed 16 Jul 2014 - 15:53

1946 வரை முழுமையாக பாலஸ்தீனம் என்று உலக வரைபடங்களில் குறிக்கப்பட்ட தேசம்.1947 ஆம் ஆண்டு ஐநா சபை மாற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்ட சதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு அதன் ஒரு பகுதி வந்தேறிகளான யூதர்களிடம் கொடுக்கப்பட்டது.1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட தாக்குதல் மூலம் பாலஸ்தீனின் பெரும்பான்மை இடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர்.2000 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான (காசா மேற்குக்கரை ) உள்ளிட்ட சில பகுதிகளை தவிர 90% அதிகமான பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.இன்று மேற்குக்கரையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பத்தாஹ் கட்சியின் அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் எந்த ஐநா சபை பாலஸ்தீனத்தை திருடி இஸ்ரேல என்ற ஆக்கிரமிப்பு தேசத்தை உருவாக்கியது மேலும் இஸ்ரேல ஆக்கிரமிப்பை செய்யும் போதெலாம் கண்டு கொள்ளாமல் இஸ்ரேலை பாதுகாத்ததோ அந்த அமைப்பில் சுதந்திர பாலஸ்தீனம் என்ற ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார் வழக்கம் போல அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது எதிர்ப்பை காட்டிவருகிறது.இதில் அபாஸ் கோருவது ஒன்றும் முழுமையான பாலஸ்தீனத்தை அல்ல .மாறாக 1967 ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது 1967 ஆண்டிற்கு முன் இஸ்ரேல் ஆக்கிரமிட்ட பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு சொந்தம்.1967 ஆம் ஆண்டிற்கு பின் மீதம் இருக்கும் பகுதிகள் பகுதிகள் பாலச்டீநியர்களுக்கு சொந்தம்.மீதமுள்ள பகுதி என்பது வெறும் 20% இடங்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு சொந்தம் என்ற கோரிக்கையை அப்பாஸ் ஐநா(நைனா)சபையில் விடுத்துள்ளார்.இது எந்த வகையிலும் பலஸ்தீனத்திற்கு பலனை தரப்போவதில்லை மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.அப்பாஸின் இக்கோரிக்கையை ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீன சுதந்திர போராட்ட குழுக்கள் நிராகரித்து விட்டனர்.பாலஸ்தீனியர்கள் மட்டுமில்லை சுதந்திரத்தை விரும்பும் எவருமே இதைப் போன்ற அடிமைத்தனத்தை விரும்பவே மாட்டன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by ahmad78 Wed 16 Jul 2014 - 15:53

உலகின் மிகப் பெரிய திருட்டு எது என்றால் அது நிட்சயம் இஸ்ரேல் என்ற ஐரோப்பிய நாட்டினால் வந்த வந்தேறிகளால் திருடப்பட்ட பாலஸ்தீனம் தான்.இன்றுவரை தொடரும் சியோனிச திருட்டை எந்த ஒரு நாடும் தட்டிக் கேட்கவில்லை என்பதே நிதர்சனமான் உண்மை.சியோனிச நாட்டின் பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பை விளக்கும் வரய்படம் தான் இது...



* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * 285661_218313121646882_1465422018_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by ahmad78 Wed 16 Jul 2014 - 16:06

பாலஸ்தீன் பற்றிய நெல்சன் மண்டேலாவின் கருத்து :
பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின் துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது.இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு சம்பவங்கள் உலகை உலுக்கிக் கொண்டிருந்தது.இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்குவந்தது. ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின் துயரம் இன்றளவும் தொடர்கிறது.பலஸ்தீன சுதந்திர போராட்டமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * 528348_182569045221290_1989278846_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by ahmad78 Wed 16 Jul 2014 - 16:07

எரிக் ஃப்ராம் - இஸ்ரேல் பற்றிய கருத்து :
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து சியோனிச தேசம் இஸ்ரேல் உருவாவதற்கு ஒரு சில யூத தலைவர்களும் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் அவர்களில் உலகப் புகழ்பெற்ற உளவியல் அறிஞரும் மார்க்சியச் சிந்தனையாளருமான எரிக் ஃப்ராம் முக்கியமானவர்.இவர் "“2000 வருடங்களுக்கு முந்தித் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை ஒவ்வொரு தேசமும் சொந்தம் கொண்டாடத் தொடங்கினால் இந்த உலகம் ஒரு பைத்தியக்கார விடுதியாக மாறிவிடும்” என்றார்.இதன் மூலம் யூதர்களின் கட்டுக்கதைகளின் மூலம் உருவாக இருக்கும் சியோனிச இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.



* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * 68112_183189231825938_1022708268_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 16:28

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Israel_map

இந்த வரைபடத்தில்  இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என  பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு  இன்று நேற்றையதோ சில நூறு வருடங்கள்  கொண்டதோ அல்ல!

கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சரித்திர முக்கியத்துவம் கொண்ட பூமி அது. அதாவது ஆபிரகாமுடைய வரலாறுட்ன சம்பந்தப்படுத்தபடும்  இடம் இஸ்ரேல்.

ஆபிரகாமில் மகன் ஈசாக்  ஈசாக் தன் மகன்கள் ஏசா, யாக்கோபுடன் ஊர் எனும் பட்டணத்தினை விட்டு கி.மு 2161 ல்  தற்போதைய  இஸ்ரேல் எனப்படும் கானான்  தேசம் வந்ததிலிருந்து  ஆரம்பமாகும் வரலாறு அது.

தம் வம்ச உரிமையை அசட்டை செய்த ஏசாவுக்கு  கொடுக்காமல் யாக்கோபின் மேல் பிரியமாயிருந்தபடியால்  யாக்கோபுவிற்கு இடப்பட்ட பெயரே இஸ்ரேல் .. அதாவது ஆபிரகாம் சந்ததியில் வந்த ஈசாக்கின் மகன் யாக்கோபின் பெயர் இஸ்ரேல்.

யாக்கோபின் வழி வந்தோரே இஸ்ரவேலர் எனப்பட்டனர்.இந்த யாக்கோபின்  மகனான யூதாவின் வழி வந்தோர் யூதர்கள்.  

கானான் எனப்பட்ட இன்றைய இஸ்ரேலில் கி.மு.1871ம் ஆண்டில்  ஏற்பட்ட பஞ்சம் தாங்க இயலாது  இஸ்ரேவேல் சந்ததியினர் எகிப்துக்கு நடந்து போனார்கள்.

எகிப்தில்  400 வருடங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிருந்து  மோசேசால் மீண்டும் கி.மு.1441ம்  ஆண்டில் இஸ்ரேல் தேசம் நோக்கி வந்தார்கள். நைல் நதியை நடந்தே கடந்தார்கள் எனும் வரலாறும் உண்டு.

கிட்டத்தட்ட 40 வருடங்கள்  காடுகள், மலைகள், நதிகள் என அலைக்கழிக்கப்ட்டு எகிப்திலிருந்து புறப்பட்ட தலைமுறை  அல்லாது புதிய ஒரு தலைமுறையாக  மீண்டும் கி.மு.1400ம் ஆண்டில் அப்போதைய கானானியர் வசமிருந்த இஸ்ரேலை யோசுவா தலைமையில் போராடி வென்று  இஸ்ரேலில் குடியேறினர்.

அதாவது கி, மு 1400  இலிருந்தே  கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று.  அன்று யோசுவா தலைமையில்  தோற்கடிக்கப்பட்ட கானானியர்  இன்றைய பாலஸ்தீனியர் அல்ல!

கிட்டத்தட்ட  4000 வருடங்களுக்கு முன்னரே யுதர்களுக்கு சொந்த மான இடமாக இருந்தது இஸ்ரேல்.  குர் ஆனையும், பைபிளையும்  இணைப்பது சம வரலாறுகள் தான்.  இவ்வரலாறு குரானிலும் இருக்கும்.

சரி இங்கே பாலஸ்தினியர்கள் எப்படி வந்தார்கள் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

இன்னொரு விடயம் மிக தெளிவாக புரிந்திடுங்கள்.  யூதர்களும் இன்றைய கிற்ஸ்தவர்கள் என பைபிளை  பின்பற்றுவோரும்  ஒரே மார்க்கத்தவர் அல்ல.. யூதர்கள் தம்மை தவிர எவரையுமே இறைவனின் பிள்ளைகள் என ஏற்பதில்லை.

கிறிஸ்தவர்களை அவர்கள் புற ஜாதிகள் என்றே சொல்வர்.


Last edited by Nisha on Wed 16 Jul 2014 - 16:43; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 16:33

வரலாறு அறியாது சொல்பவர் கருத்தினை நாம் நம்புதல் நம் இறைவனையே நாம் மறுதலிப்பதாகும். மகாத்மா காந்திக்கும், நெலசன் மண்டேலாவும் சொல்லும் கருத்து எத்தையது தெரியுமா..?

இலங்கையில் ஆண்டு வந்த தாயாதி தமிழர்களை விஜயன் எனும் பௌத்த மதத்தவர் வந்து குடியேறி விட்டு இன்று இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் உள்ளது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 16:41

அன்றைய கானானிய ஆட்சி..

நியாதிபதிகள் ஆண்டார்கள்

கி.மு 1020 ஆண்டு வரை இராஜாக்களால் ஆளப்பட்டது.

முதல் அரசன் சவுல்..
அடுத்தவர் .. தாவீது
தாவீதின் மகனும் ஞானவானும் ஜெருசலேம் தேவாலயம் கட்டியவனுமான் சாலமோன்.

இந்த சாலோமோன் ஆட்சிக்கு பின் தான் கானானியதேசம் இரண்டாக பிளவு பட்டது.

சமாரியாவை தலை நகராக கொண்ட இஸ்ரவேல்!
ஜெருசலேமை தலை நகரமாக கொண்ட யூதேயா!

இன்னும் வரும்... !





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 16:55

கானானிய தேசம் பிரிக்கப்பட்டு  இஸ்ரேல் எனவும், யூதேயா எனவும்  இரு நாடுகளாக்கப்பட்ட பின்னர்

மீண்டும்  கி.மு 722 ஆன் ஆண்டில்  பிரிக்கப்பட்ட இஸ்ரேல் நாடு...ஆசிரியர்களால் அழிக்கப்பட்டது. இஸ்ரேலில் வாழ்ந்த அதன் குடிமக்கள் பல் தேசங்களுக்கும் அகதிகளாக  துரத்தப்பட்டார்கள்.

இன்றைய இலங்கை தமிழ் அகதிகள் போல..  _* 


மேலும் 100  வருடங்களுக்கு பின் யூதேயா தேசமும் பாபிலோனால் பிடிக்கப்பட்டு.. அதன் மக்களும்  சிதறடிக்கப்பட்டு.. கி, மு 586 ல்  சாலோமோனால் கட்டப்பட்ட  ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது.

இடிக்கப்ட்ட அந்த  தேவாலயம்  மீள கட்டபட  யூதர்கள் மீண்டும் தம் தாய் தேசம் செல்ல வேண்டும்.  அந்த தேவாலயம் கட்டப்பட வேண்டும். அதற்காக முயற்சி எடுக்கப்பட வேண்டும்.  இது தான்  கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளமாக  இன்று பைபிளை நம்பும் கிறிஸ்தவர்கள் எதிர்பார்ப்பது.


தொடரும். !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 17:10

யூதேயாவை பிடித்த பாபிலோனியர் யூத மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினாலும். அதன் பின் 50 வருடங்கள் பின் பெர்சிய மன்னன் சைரஸ் பாபிலோனை கைபற்றி யூதர்களை விடு்வித்து எருசலேமை மீள கட்டும் அனுமதி கொடுத்தார்!

கி.பி சுமார் 50 ஆயிர்ம யூதர்கள் செருபாபேல் என்பவர் தலைமையில் இஸ்ரேலுக்கு திரும்பினர்.

மீண்டும் எஸ்ரா என்பவர் தலைமையில் இன்னும் சில கூட்டம் நாடு திரும்பியது.

கி. மு 520- 512 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டாவது தடவை ஜெருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது.

மீண்டும் இஸ்ரேல் கி.மு.333ல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்டது!

கி.மு.63 வரை கிரேக்கர்களின் பிடியில் இருந்தது.

கி.மு.63ல் ரோமப்படையினர் மீண்டும் டைட்டஸ் என்பவர் தலைமையில் ஜெருசலேம் நகரைப் பிடித்ததோடு கி.பி.70ல் ஜெருசலேம் தேவாலயத்தையும் இடித்தது !

ஜெர்சலேமுக்கும் ஏலியா கெபிடலேனியா என பெயர் மாற்றம் செய்தனர்!


கி.பி.313 வரை.... அதாவது கி.மு 63 இலிருந்து கி.பி 313 வரை இஸ்ரேலில் ரோமர்களில் ஆட்சி இருந்தது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 17:27

ரோமர்களிடமிருந்த இஸ்ரேல் கி.பி.313 முதல் 636 வரை பைசாண்டியர்களால்
ஆளப்பட்டு   பைசாண்டிய அரசர்களில் பெரும்பாலானோர்
கிறிஸ்தவர்களாயிருந்தன்ர்.!


கி.பி.636ல் அரபியர்கள் வசம் வந்தது.  இவர்கள் ஆபிரகாம் மகன் இஸ்மவேல்  வம்சத்தார் என்பதை நினைவில் கொள்க..

கி.பி 70 இல் இடிக்கப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில்  தான்  காலிஃப் அப்டெல் மாலிக் என் என்பவர்  முஸ்லிம் வழிபாட்டுத்தலமான டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினார்.




Last edited by Nisha on Wed 16 Jul 2014 - 23:21; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 22:56

கி.பி.1099 முதல் 1291 வரை சிலுவைப்போர் வீரர்கள்

கி.பி. 1291 முதல் 1516 வரை மம்லுக் அரசின் வசமும் இஸ்ரேல் நாடு இருந்தது

1516 முதல் 1918 வரை ஓட்டோமான அரசர்கள் இஸ்ரேலை ஆண்டனர்.

அவ்வழியில் கி.பி 1520-1566 ஆண்டு வரையான சுல்தான் சுலைமான் என்பவர் ஆட்சியில் ஜெருசலேம் சுவர்கள் கட்டபட்டது.

ஃப்ரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் என்பவர் காசா நகரை கி. பி 1799ல் கைப்பற்றி தொடர்ந்து ஜெருசலேமையும் கைப்பற்ற திட்டமிட்டார்! ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை!அவர் பின் வாங்கி சென்றார்.

கி. பி 1909ல் இஸ்ரேலில் தலை நகராகிய டெல் அவிவ் நகரம் (Hill of Spring) அமைக்கப்பட்டது.


கி. பி 1917ல் முதலாம் உலகப்போர் தொடங்கியது.

அக்டோபர், 1918ல் கெருசலேம் நகரை பிர்ஷ்டிஸ் படைகள் கைப்பற்றியது! ஆல்ன்பை என்பவரது தலைமையில் சென்ற படைகள் எகிப்திலிருந்து சீனாய் பாலைவனம் ஊடாக வந்து கைப்பற்றினாலும் நகருக்குள் கால் நடையாக சென்றதாக வரலாறு சொல்கின்றது!

1948 வரை இஸ்ரேல் பிரிட்டன் வசம் இருந்தது!

இது வரலாறு.. பலரால் ஆளப்பட்ட இஸ்ரேலிய அரசு மீண்டும் யூதர்கள் வசம் வர வேண்டும். பல் திசைகளுக்கும் சிதறி அடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டுமொன்று கூட்ட பட வேண்டும்.

இது இறைவனால் முன் அறிவிககப்ட்டிருக்கின்றது. அவ்வார்த்தைக்கு ஏற்ப சிதறுண்டு கிடந்த யூத இனம் ரஷ்யாவிலிருந்து 1882 ஆண்டிலிருந்து 1903 வரை இடம் பெயர்ந்தது!

1892 ஆம் ஆண்டில் சுவிஸ்ஸர் லாந்தில் யூதர்களின் ஆன்மீகத்தந்தையான தியோடர் ஹெர்சல் அவர்களால் முதல் மா நாடு கூட்டப்பட்டு யூதர்களுக்கு என தனி நாட்டை மீட்டெடுக்கும் பிரகடனம் ஒன்றைச்செய்தார்.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் 1904 முதல் 1914 ஆண்டில் போலந்திலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேல் நோக்கி குடிபெயர்ந்தனர்!

இக்குடிபெயர்தலுக்கு அலியா என பெயரிடப்ட்டு முதல் அலியா , இரண்டாவது அலியா என ஆவணப்படுத்தப்பட்டது!

மீண்டும் தாய் நாட்டை அடைய வேண்டும் எனும் சிந்தனைக்கு சீயோனிசம் எனும் யூத விடுதலை இயக்கம் உத்வேகம் கொடுத்தது.

சியோனிசம் எனும் பெயர் எப்படி வந்தது?

இஸ்ரேலில் இருக்கும் ஒரு மலையின் பெயர் தாம் சீயோன்.. அதுவே சீயோனிசம் என்றானது!






நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 23:02

ஒட்டோமான்  அரசர்களின் ஆட்சிகாலத்தின் இறுதியில் துருக்கியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்ட்டதால்  ஆராபியர்கள் அதிருப்தி அடைந்திருந்த வேளையில்     ஓட்டொமான் அரசிடமிருந்து விடுதலையாக்கி சுதந்திர நாடாக்குவோம் எனு வாக்குறுதி யளித்து உலகபோரில் நேச நாடுகளான அமெரிக்காவும்  பிரட்டனும், யூதர்களையும் , அராபியர்களையும் பயன் படுத்தியது!

அவர்களும் தமக்கு சுதந்திரம் கிடைக்கு மென நம்பி நேச நாடுகளுக்கு உதவினார்கள்.

இந்த சூழலில் தான் பாலஸ்தினத்திலிருந்த ஆராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை வளர்ந்தது. சீயோனிசம் போல் அரபி தேசியமும் வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 23:12

பிரிட்டீஷ் அமைச்சர்களால் அங்கிராம் பெற்று ஆர்தர் ஜேம்ஸ் பல்ஃபோர் என்பவர் தலைமையில் நவம்பர் 2, 1917ல் பல்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இது யூதர்களின் தனி நாடு கோரிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம் எனலாம்!

1922ல் பிரிட்டனால் Mandate for Palestine என்றழைக்கப்படும் தனி இஸ்ரேல் நாடு அதிகாரம் வழங்கப்பட்டது!

கவனித்து பார்த்தால் 1948 வரை இஸ்ரேல் பிரிட்டன் வசம் தான் இருந்ததென்பதும் அக்காலத்தில் தான் இவ்வனைத்து பிரகடனமும் ஏற்படுத்தப்பட்டது என்பதும் புரியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 23:18

மீள்குடியேற்ற காலங்கள்

முதல் அலியா 1882 முதல் 1903 வரை ரஷ்யாவிலிருந்து
இரண்டாவது அலியா 1904 முதல் 1914 வரிஅ ரஷ்யா, போலந்திலிருந்து

மூன்றாவது அலியா 1919 முதல் 1923 ரஷ்யாவிலிருந்து

நான்காவது அலியா 1924 முதல் 1932போலந்திலிருந்தும்

ஐந்தாவது அலியா 1933 முதல் 1939 ஜேர்மனிலிருந்தும்
குடிபெயர்ந்தார்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Wed 16 Jul 2014 - 23:50


முதலாம் உலகபோருக்கு பின்னர் பால்ஸ்தீனத்திற்குள் வந்து குடியேறிய  யூதர்கள் எண்ணிக்கையோடு  அராபியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது!

யூதர்களின் செல்வாக்கு அதிகமாகி அவர்களின் பண்ணைகளில்  வேலைசெய்யும் நிலைக்கு அராபியர்கள்  தள்ளப்ட்ட அன்றைய உலகின் பொருளாதார மந்தம் காரணமாகியது!

யூதர்களிடம் ஆராபியர்கள் வேலை செய்தல் ஆராபியரிடையே பகை உணர்வை தோற்றுவித்து யூதர்களை  தாக்க ஆரம்பித்தோடு  ஆராபியர்கள் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளும் செய்ய ஆரம்பித்தார்கள்.


1936 முதல் 1939 வரை இம்முறுகல் நிலை நீடித்தாலும் அராபியர்களின் அழுத்தத்தால் பிரிட்டன்  மீள குடியேறும் யூதர்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த் ஆரம்பித்ததும்  யூதர்கள் சட்டவிரோதமாக குடிபெயர ஆரம்பித்தார்கள்!

பிரச்சனையை  சமாளிக்க திணறி பிரிட்டன் ஐ, நாவிடம்  தீர்வுக்கான ஆலோசனை வேண்டியதும்  1947, மே 15 ல் ஐ.நா. UUNSCOP கமிட்டியை உருவாக்கியது.  இக்கமிட்டியில் வல்லரசு நாடுகள் சேர்க்க்ப்படவில்லை!

ஐந்து வாரங்கள் ஆராய்ந்து. பாலஸ்தீனம் இரு பகுதிகளாக பிரிக்கப்ட்டு  ஒரு பகுதி  யூதருக்கும்  இன்னொரு பகுதி அராபியருக்கும் எனும் தீர்மானித்தது.  இந்த தீர்மானம்  நவம்பர்  1947  ஆம் ஆண்டில் ஐ,நாவால் ஏற்கப்பட்டது!

இதற்கு  35 நாடுகள் ஆதரவும்,  13 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தண! அரபு லீக்கை சேர்ந்த அரபு நாடுகள் எதிர்ப்பாகவே வாக்களித்தது!  பத்து  நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!

ஐ, நாவால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டாலும் அன்றிலிருந்து  இன்று வரை ஆராபியர்களுக்கும் யூதர்களுக்கும் பாலஸ்தினிய பகுதிகளை பிடிப்பதில்  மோதல் உருவானது.

1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி  இஸ்ரேல் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட மறு தினமே அரபு நாடுகள் இஸ்ரேலை நோக்கி படை யெடுத்தன!

இன்று வரை இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை.

கி. முன்னரான அரசர்களின் ஆட்சிகாலங்களின் ஆண்டுகள் தோராயமாய்  எழுதப்பட்டது!

இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென  தொகுக்கப்பட்ட  நீண்ட கட்டுரை ஒன்றிலிருந்து   சுருக்கமாய் தொகுத்து  அமைக்கப்பட்டது.

தகவல் நன்றி

Dr E.K. Victor Pearce, Evidence for Truth: Arhaeology,

http://www.jewish-history.com/ http://en.wikipedia.org/


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Thu 17 Jul 2014 - 0:04

இஸ்ரேல் நாடு மே மாதம் 14 ம் திகதி 1948 ல் சுந்ததிர நாடாக பிரகடனப்படுத்தப்ட்டபின் 3 ஆண்டுகளிலேயே அதன் தொகை இரட்டிப்பாகியது!

கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல் சிதறிடிக்கப்பட்டிருந்த யூதர்கள் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.

உலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகச் சொற்பமானவர்களான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் கால்பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள்! ஆனாலுல் யூதர்கள் மிகவும் தாழ்வாக சக மனிதர்களோடு ஒன்றி வார இயலாதவர்களாக, பிரச்சனைக்குரியவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Thu 17 Jul 2014 - 0:18

ahmad78 wrote:.உலகின் மிகப் பெரிய திருட்டு எது என்றால் அது நிட்சயம் இஸ்ரேல் என்ற ஐரோப்பிய நாட்டினால் வந்த வந்தேறிகளால் திருடப்பட்ட பாலஸ்தீனம் தான்.இன்றுவரை தொடரும் சியோனிச திருட்டை எந்த ஒரு நாடும் தட்டிக் கேட்கவில்லை என்பதே நிதர்சனமான் உண்மை.சியோனிச நாட்டின் பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பை விளக்கும் வரய்படம் தான் இது...

மிக தவறான புரிதல்! யுதர்களும் வந்தேறு குடிகள் அல்லர். பால்ஸ்தினியர்களும் வந்தேறு குடிகள் அல்லர். இருவருக்குமே சமமான பூமி அது.

இருவருமே அதன் தாயாதி உறவுகள் தாம்!

இன்றைய சூழலில் அவரவருக்கு சார்பான செய்திகள் மட்டுமே மிகைப்படுத்தப்ட்டு நமக்கு வந்து சேர்வதை வைத்து நாம் முடிவெடுக்க இயலாது!

யூதர்கள் மிக கொடுரமாக தடைசெய்யபட்ட குண்டுகளை வெடிக்க செய்து குழந்தைகளை கொல்வதாக வருவதும்,.. அதையே மாற்றி யூதர்கள் அழிக்கப்படுகின்றார்கள் என அவர்கள் சார்பில் வருவதுமாய் மொத்தத்தில் இவர்களின் அரசியலுக்கு பாதிக்கப்படுவதும் இழப்புக்களை சந்தித்ததும் அப்பாவி மக்கள் தான். பரிதாபத்துக்குரிய அந்த மக்களுக்காக பிராத்திப்பதை தவிர நாம் என்ன செய்ய இயலும்!

அந்த குழந்தைகளை இறைவன் காப்பாற்றிடுவான் என நம்புவோம் ! இறைவன் பார்வையில் எவருமே சபிக்கப்ட்டவர்களாய் இல்லை. தண்டனக்குரியவர்கள் மட்டும் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 10:16

இதுவா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Mon 8 Dec 2014 - 10:22

இது முஹைதீன் பதிவில் இட்டிருக்கேன்.  இதே போல்  ஒன்று தான்பா..இன்னும் கொஞ்சம் விபரம் வரும். 

இந்த பதிவை எப்படி தேடி எடுத்தீர்கள்? ஆனால் இப்போதைக்கு இதுவே போதும்.  ஒரு கட்டுரைக்கு தேடிக்கொண்டிருந்தேன் ..  நன்றி பானு. 

நீங்கள் இதை தேடி நேரம்  வேஸ்ட் ஆக்காமல் வேற பதிவில் கவனம் செலுத்துங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 11:11

இந்தப்பதிவை முழுவதுமாக படித்து கருத்திட வேண்டிய பதிவு


* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 11:16

Nisha wrote:இது முஹைதீன் பதிவில் இட்டிருக்கேன்.  இதே போல்  ஒன்று தான்பா..இன்னும் கொஞ்சம் விபரம் வரும். 

இந்த பதிவை எப்படி தேடி எடுத்தீர்கள்? ஆனால் இப்போதைக்கு இதுவே போதும்.  ஒரு கட்டுரைக்கு தேடிக்கொண்டிருந்தேன் ..  நன்றி பானு. 

நீங்கள் இதை தேடி நேரம்  வேஸ்ட் ஆக்காமல் வேற பதிவில் கவனம் செலுத்துங்க..

நீங்க சொன்ன விவரத்தை கூகுலில் டைப் செய்தேன் வந்துவிட்டது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:19

நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாய் நாடு என்று நினைப்பேன். அங்கே என்ன கொடுமை நடந்தாலும் எனது சொந்த நாட்டில் அது நடப்பதாக எடுத்துக்கொள்வேனே தவிர, பிற நாட்டை என் தாய்நாடாக நினைத்து ஓடிவிடமாட்டேன்.

நாங்கள் இலங்கை பிரச்சனையினால் புலம் பெயர்ந்தோம் என்பதற்காக இன்று எங்கள் பிள்ளைகள் சுவிஸில் பிறந்து விட்டார்கள் என்பதற்காக இலங்கைக்கும் எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உரிமை கொண்டாட முடியாது என்பது போல் உள்ளது. 

எந்த உலக நியதி இது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் * Empty Re: * Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் *

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum