சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Khan11

MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

+3
நண்பன்
kalainilaa
Nisha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:00

ஒரு மலேசிய விமான விபத்து: 295 பேரை பலி கொண்ட சோகம்!

மாஸ்கோ: கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமான சோகம் மறைவதற்குள், 280 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன், ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் வான்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இரு படைகளுக்கும் இடையேயான ஏவுகணை தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய ஆதரவு படைகளின் தாக்குதலிலேயே மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

விமான நிறுவனம் விளக்கம்:
விமானம் உக்ரைன் நாட்டு வான்பரப்பில், சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமான நிலையத்துடனான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் சோகம்:

கடந்த மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை. இந்நிலையில், மீண்டும் மலேசியாவிற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அந்நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1024082

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:02

பயணம் செய்த அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என நாம் நினைப்பது மனித தன்மை. ஆனால் உண்மையில் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என CNN BBC எல்லாம் சொல்கின்றன. ஆண்டவன் ஒருவன் இருந்தால் ஒருவராவது உயிருடன் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மிசைல் தாக்கி தான் விபத்துக்குள்ளானது என தெரிகிறது. தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அது ரஷ்ய இல்லை உக்ரைன் இல்லை தீவிரவாதி என யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும். மலேசியா அரசுக்கும் பயணம் செய்தவர்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வளைகுடா நாடுகளில் வசிக்கும் என் போன்றவர்கள் இனி இந்திய திரும்பி வீட்டை அடைந்தால் மட்டுமே நம்பமுடியும் என்ற நிலையில் உள்ளோம். விமான விபத்துக்கள் அதிகரிக்க காரணம் கண்டுபிடிக்க பட வேண்டும்.மனிதனின் மனம் மூளை இரண்டும் இப்போ பெரும்பாலும் அழிவிற்கே பயன்படுத்த படுகின்றன என்பது அதுவும் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கபடுகின்றனர் என்பது வேதனைக்குரியதாக உள்ளது+

மேலே இருக்கும் செய்திக்கு ஒருவரின் பின்னூட்டம் இது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:05

ரஷியாவுக்கு அருகில் உள்ள நாடு, உக்ரைன். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷியாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்துவிட்டு, பிறகு ரஷியாவுடன் இணைந்தது.

அதே பாணியில், கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களும், தன்னாட்சி பிரகடனம் செய்துவிட்டு, ரஷியாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் உக்ரைன் அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக நடந்த சண்டையில், 55 பேர் பலியானார்கள்.

அந்த கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா உதவி செய்து வருவதாக கருதப்படுகிறது. எனவே, ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.

அந்த விமானம், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் ஆகும். நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அந்த விமானம் புறப்பட்டது. அதில், 280 பயணிகளும், 15 சிப்பந்திகளும் இருந்தனர்.

அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது.

விமானம் விழுந்த இடம், கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது. அந்த பகுதி, கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வரும் பகுதி ஆகும். மேலும், அப்பகுதி ரஷியாவுக்கு அருகே உள்ளது. ரஷிய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது.

அந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் நாட்டு உள்துறை அமைச்சக ஆலோசகர் ஆன்டன் கெராஷ்செங்கோ தெரிவித்தார். தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை உதவியால், விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகி விட்டதாக அவர் கூறினார்.

ஏவுகணையால் தாக்கப்பட்டபோது, விமானம் 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மலேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

கடந்த சில வாரங்களில் எத்தனையோ உக்ரைன் விமானங்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர். நேற்று முன்தினம் கூட ஒரு ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது.

இதற்கிடையே, விமானம் விழுந்த இடத்துக்கு அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தனர். விமானத்தை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். விமானத்தின் சேத பகுதிகளை உள்ளூர் மக்கள் பார்த்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி உக்ரைன் பிரதமர் எரிசெனி யட்செனிக் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 8-ந் தேதி, மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. அந்த விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

4 மாதங்கள் கடந்த நிலையில், மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், இந்த கோர நிகழ்வைச் சந்தித்துள்ளது. அதில் பயணம் செய்த 295 பேரும் பலியாகி விட்டனர்
http://www.maalaimalar.com/2014/07/17213543/Malaysian-plane-crashes-on-Ukr.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:28

இரண்டு விமானங்கள் ஒரே தினம், ஒரே மாதம் வெவ்வேறு ஆண்டுகளில் வெடித்து சிதறின! உள்ளிருக்கும் மர்மம் என்ன?

அமெரிக்காவில் நியுயோர்க்கிலிருந்து புறப்பட்ட ரான்ஸ் வேல்ட் ஏயார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 800 பறப்பை மேற்கொண்டு 12 நிமிடத்தில் 1996ம் ஆண்டு யூலை 17ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடுவானில் வைத்து வெடித்துச் சிதறியது.

அதனை பல அமெரிக்கர்களும் பார்த்திருந்தனர். விமானம் வெடிப்பதற்கு முன்னர் நிலத்திலிருந்து வானிற்கு தீப்பிழம்புடன் கூடிய ஒரு பொருள் சென்றதை கண்டதாக அவர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

ஆனாலும் இன்றுவரையும் அது மூடுமந்திரமாகவே இருக்கிறது.

அதுபோலவே இன்றும் 18 ஆண்டுகளுக்கு பிறகு அதே யூலை மாதம் 17ம் திகதி உக்கிரேனில் இன்னொரு விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது என லங்காசிறியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் கனடாவிலிருக்கும் திரு.சுதர்மா அவர்கள் இன்றைய விமான விபத்துப் பற்றிக் குறிப்பிடும் போது தெரிவித்தார்.

Tamil win

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:34

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBC333B00000578-280_964x683

[b]உக்ரைனில் விபத்துக்குள்ளான மலேசிய விமானம்: 295 பேர் பலி?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:42

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBB310700000578-37_964x643

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBB320100000578-879_964x643
Struggle: A firefighter sprays water on the flames in an attempt to extinguish the fire

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBB383700000578-27_964x643

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBAA72600000578-704_964x642

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBAA68300000578-741_964x654

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBA9CFF00000578-377_964x642

Malaysian Airlines MH17 passenger plane carrying 295 people including between five and ten Britons 'shot down with ground-to-air missile' at 33,000ft over Ukraine near to Russian border

Read more: http://www.dailymail.co.uk/news/article-2696161/BREAKING-NEWS-Malaysian-passenger-plane-carrying-295-people-crashes-Ukraine-near-Russian-border.html#ixzz37lfuaoac

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:45

But many carriers continued to use the route because it was shorter and therefore cheaper.

Russian President Vladimir Putin and US President Barack Obama were speaking by telephone in a pre-arranged call when news of the tragedy began to emerge.
Flight MH17 had taken off from Amsterdam at lunchtime and was flying at around 33,000ft on one of the main routes from Europe to Asia when it was struck by the missile. It came down near a poultry farm in the village of Grabovo, an area controlled by pro-Russian rebels about 30 miles from the Ukraine-Russia border.

Witnesses claimed to have seen bodies falling out of the stricken plane over the village of Rassypnaya. Some residents feared they were being bombed.
Aleks Noit, whose relatives live nearby, said more than a dozen corpses, some naked, were strewn around the village

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBA9ADA00000578-869_964x640

Discarded: Luggage from the plane is piled up at the crash site by rescue workers performing recovery work in east Ukraine

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:47

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Article-2696161-1FBA9AFC00000578-574_964x640

Crash site: A picture taken this afternoon shows bodies amongst the wreckage of the doomed plane

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:50

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:53

விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி குறித்த விமானம் எரியுண்ட நிலையில் கிழக்கு உக்ரெய்ன் பகுதியில் வான் பகுதியில் இருந்து தரையில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியிலேயே உக்ரெய்ன் போராளிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரதேசத்தில் பல உக்ரெய்ன் விமானப்படையினரின் விமானங்கள் கடந்த வாரங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

நேற்று காலை உக்ரெய்ன் அதிகாரிகள் சுமத்திய குற்றச்சாட்டின்படி ரஸ்ய விமானப்படையினர் தமது ஜெட் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்கிடையில் உக்ரெய்ன் உள்துறை அமைச்சர் அன்டன் ஹேராஸ்சென்கோவின் தகவல்படி விமானம் ஒன்று 33ஆயிரம் அடி உயரத்தில் வைத்து ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை உறுதிப்படுத்தமுடியவில்லை.

•இரண்டு விமானங்கள் ஒரே தினம், ஒரே மாதம் வெவ்வேறு ஆண்டுகளில் வெடித்து சிதறின! உள்ளிருக்கும் மர்மம் என்ன?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by kalainilaa Fri 18 Jul 2014 - 7:09

இறைவனுக்கே வெளிச்சம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by நண்பன் Fri 18 Jul 2014 - 11:08

விளப்பம் இல்லாத குளப்பமாக உள்ளது மரணப்பட்ட உயிர்கள் அனைத்தின் ஆத்மா சாந்தியடையட்டும் ஆழ்ந்த இரங்கள்கள்
அவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டவன் மன அமைதியைத் தர வேண்டும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by பானுஷபானா Fri 18 Jul 2014 - 13:29

மிகவும் மனம் வருந்தக் கூடிய செய்தி ஆழ்ந்த இரங்கல்கள் :(
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by jaleelge Sat 19 Jul 2014 - 20:27

இறைஞ்சுகின்றேன்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Mon 21 Jul 2014 - 12:55

இந்த விபத்தில் பெரிய சோகம் என்னவெனில் ஜேர்மனி கால்பாந்தாட்டத்தில் உலககோப்பை வென்ற சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி சம்மர் ஹாலிடேக்காக மலேசியா சென்ற ஜேர்மனியர்களும், ஹோலண்டியர்களுமே பயணம்செய்ததுதான்!

விடுமுறைய சந்தோஷமாக கழிக்க சென்று இனி திரும்பி வரவே முடியாத இடம் சென்றிருக்கின்றார்கள்.

இவ்விமானத்தில் ஒரு மலேசிய தமிழ் பெண் பணிபெண்னும், மலேசிய தமிழ் நடிகை ஒருவரும் பயணம் செய்திருக்கின்றார்கள்.

விசாரணைகளுக்கு இடம் கொடுக்க கூடாதென.. விமான விபத்து நடந்த இடத்தில் அதன் அடையாளங்களை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்துவதோடு, எரிந்து விழுந்த உடல்களையும் எவரிடமும் ஒப்படைக்காது கடத்தி சென்றிருக்கின்றார்கள்.

விபத்தினை விட இதுதான் ரெம்ப கொடுமையான விடயம் !  _* _* !* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Mon 21 Jul 2014 - 13:15

மலேசிய விமானம்: 219 சடலங்கள் மீட்பு (வீடியோ இணைப்பு)

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களில் 219 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் விமானம் வழக்கமான பாதையில் செல்லாமல் வேறு திசை நோக்கி வந்ததால், இதனை உளவு பார்க்கும் விமானம் என கருதி புரட்சி படையினர் சுட்டு வீழ்த்தியதில், கடந்த 17ம் திகதி இதில் பயணித்த 293 பேரும் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், இதுவரை 219 சடலங்களை மீட்டுள்ளனர்.

அதில் 192 பேரின் உடல்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கோணிகளில் வைத்து கட்டி வாகனங்களில் ஏற்றி கடத்தி விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள டோரஸ் என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளன.

அங்கிருந்து உடல்களை இறக்கி, டன்ட்ஸ்க் நகருக்கு செல்கிற ரயிலில் குளிர்பதன வசதியுள்ள பெட்டிகளில் ஏற்றியுள்ளனர்.

இச்சம்பவம் நடந்து 4 நாட்களான நிலையில் உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டதால், ரயில் நிலையத்தில் துர்நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஆன்ட்ரி லிசெங்கோ கூறியதாவது, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷ்ய ஏவுகணையின் தொடர்பை மறைப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தீவிரவாதிகள் (ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்) செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திலிருந்து விமானத்தின் சிதைந்து போன பாகங்களையும், உடல்களையும் அவர்கள் லொறிகளில் எடுத்துச்சென்றுள்ளனர் என்றும் இதன் காரணமாக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Mon 21 Jul 2014 - 13:16

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Dead_bodies_219_003

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Dead_bodies_219_002

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணை கண்டுபிடிப்பு

ரஷ்யாவின் எஸ்.ஏ. 11 ஏவுகணை சிஸ்டம் மூலம் தான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 17ம் திகதி மலேசிய விமானம் போயிங் 777 விபத்திற்குள்ளாவதற்கு முன்பு, ஏவுகணைகளை 'புக்' என்ற லொறி ஒன்றில் ஏற்றி, அதை துணியால் மூடி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இதனை அவ்வழியே காரில் வந்த நபர் தற்செயலாக பார்த்ததால், உடனே அந்த லொறியை தனது கைபேசியில் புகைப்படம் பிடித்ததுடன் அதை பின் தொடர்ந்துள்ளார்.

சுமார் 2 கிலோ மீற்றருக்கு இவர் பின் தொடர்ந்து வந்த அந்த லொறி, ரஷ்ய எல்லையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அவர் இணையதளத்தில் பதிவு செய்த இந்த புகைப்படங்களையும், உக்ரைன் அரசு செயற்கைகோளின் மூலம் எடுத்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் அந்த லொறி தான் ஏவுகணையை கொண்டு சென்றுள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த லொறி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமானது தான் என்பதும் தெளிவாகிவுள்ளது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Mon 21 Jul 2014 - 13:17

Post by Nisha Mon 21 Jul 2014 - 13:19

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Russian_missile_005

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Russian_missile_004

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Russian_missile_003

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Russian_missile_002

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 21:51

இந்த ஆயுதம் தயாரிக்கும் நாடுகளுக்கு அழிவு வராதா கொலை நடுங்கிறது பார்க்கும் போது  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by ராகவா Mon 21 Jul 2014 - 22:00

விஞ்ஞானம் உயிரை வாங்கிடும் போல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Tue 22 Jul 2014 - 10:43

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடக்கும் இடத்தில் இருந்து, கறுப்பு பெட்டி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற எம்.ஹெச்17 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், விமானம் தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் உள்ள கோதுமைத் தோட்டத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் கறுப்பு பெட்டியை மீட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கறுப்பு பெட்டி மீட்டெடுக்கப்பட்ட வீடியோ காட்சியையும் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மீட்புப் படையைச் சேர்ந்த ஒருவர் ஆரஞ்சு நிறத்திலான அந்த பெட்டியை எடுத்து, மற்றொருவரிடம் காட்டுவது போல் அந்த காட்சி அமைந்துள்ளது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Nisha Wed 23 Jul 2014 - 18:28

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் 8f17aa5192ea94cefab4cdd256add661

கடந்த வாரம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட MH 17 விமான விபத்தில் பலியானவர்களின் உடல் உக்ரைன் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து கொண்டு செல்லும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பலியானவர்களின் உடலை சுமந்துகொண்டு முதல் விமானம் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து இன்று காலை நெதர்லாந்து புறப்பட்டது. பலியானவர்களுக்கு ராணுவ மரியாதையும் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் பலியானவர்களின் உடல்கள் எண்ணிக்கையில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாங்கள் கைப்பற்றிய அனைத்து உடல்களையும் திரும்ப ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இதுவரை 200 பேர்களின் உடல்களை மட்டுமே கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர் என்றும், மீதி 82 உடல்கள் கிளர்ச்சியாளர்களின் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உடல்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். டி.என்.ஏ பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி உடனே துவங்கப்படும் என்றும், ஆனால் பரிசோதனை முழுமையாக முடிவடையை சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

உடல்களை பெறுவதற்காக பலியானவர்களின் உறவினர்கள் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு ஏற்கனவே வந்துவிட்டனர். அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு உள்பட அனைத்து பொறுப்புகளையும் நெதர்லாந்து அரசு ஏற்றுள்ளது. இந்நிலையில் நேற்று கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட விமானத்தின் கருப்புப்பெட்டி இன்று மலேசிய கொண்டு செல்லப்பட்டது. விபத்துக்கு முன்னர் கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க உள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.thedipaar.com/news/MH17-deadbodies-netherland/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by ராகவா Wed 23 Jul 2014 - 20:58

என்று மறையும் இப்படிப்பட்ட சோகங்கள்..
நெஞ்சம் பொறுக்கல...
அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.....
நன்றி அக்கா பகிற்விற்கு....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

MH 17 விமான விபத்து:  மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல் Empty Re: MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum