Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காலம் முழுவதும் காதலுடன் வாழ
Page 1 of 1
காலம் முழுவதும் காதலுடன் வாழ
கல்யாணத்தில் முடியாத காதலைக் கூட சகித்துக் கொள்ளலாம். காதல் இல்லாத கல்யாணம்தான் சகித்துக் கொள்ளக்கூடாதது என்றொரு வாசகமுண்டு. கல்யாணத்தில் முடிந்த காதல், எத்தனை பேருக்கு அதன் பிறகும் தொடர்கிறது? காதலித்த காலத்தில் கல்யாணத்தை நினைத்து ஏங்கிய மனது, கல்யாணத்துக்குப் பிறகு காதலித்த நாட்களையே பொற்காலமாக நினைத்து ஏங்க ஆரம்பிக்கும். காரணம், கல்யாணத்தில் காணாமல் போகிற காதல்! காலம் முழுவதும் காதலுடன் வாழ முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.
அதற்கு சில விஷயங்கள் அடிப்படை.
முதலில் இருவருக்குமான உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றம்... ‘உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வீர்களா?’ என்றொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 சதவிகிதம் பேர்தான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். 21 சதவிகிதத்தினர், எப்போதாவது மட்டுமே துணையுடன் மனம் விட்டுப் பேசுகிறார்களாம். 20 சதவிகிதத்தினர் அடிக்கடி மனம் விட்டுப் பேசுவதாகவும், 50 சதவிகிதத்தினர், எப்போதுமே மனம் விட்டுப் பேசாதவர்களாகவும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் தெரியுமா? நம்பிக்கையின்மை! காதலிக்கிற போது, அதீத நம்பிக்கையின் காரணமாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். கல்யாணத்துக்குப் பிறகோ அந்த நம்பிக்கை காணாமல் போகிறது. ‘நான் பாட்டுக்கு எதையாவது சொல்லப் போக, அவர் அதுதான் சாக்குனு பிடிச்சுக்கிட்டு, அப்புறம் அடிக்கடி அதையே சொல்லிச் சொல்லிக் குத்திக் காட்டறதுக்கா...’ என்கிற பயம் நிறைய பேரிடம் இருக்கிறது. முதலில் அதைத் தகர்க்க வேண்டும். கணவனும் மனைவியும் நண்பர்கள் போலப் பேசி, ஒருவர் மீது இன்னொருவர் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
விமர்சனங்கள் கூடாது. கிண்டல், கேலி, நக்கல், நையாண்டிகளைத் தவிர்க்க வேண்டும். ஏதோ ஒரு முறை ஒரு தவறு நடந்து விட்டால் அதைப் பற்றியே சொல்லி, ‘அதான் தெரியுமே... உன்னைப் பத்தித் தெரியாதா?’ என்று பேசக்கூடாது. காதலித்த போதும், கல்யாணமான புதிதிலும் நிறைய நேரம் பேசிச் செலவிட்ட தம்பதி, திருமணத்துக்குப் பிறகு பேச்சைக் குறைத்துக் கொள்வதுடன், நெருக்கமான பேச்சுக்கும் இடைவெளி விடுகிறார்கள். வாடகை, கரன்ட் பில், டாக்ஸ் போன்ற விஷயங்களே இருவரின் உரையாடலின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கின்றன.
‘நான் சொல்றதையும் கேட்கறதில்லை. அவர் என்ன நினைக்கிறார்னும் சொல்றதில்லை. என் கணவருக்கு வெளிப்படுத்தத் தெரிஞ்ச ஒரே உணர்வு கோபம்தான். அவர் இப்பல்லாம் மூளையிலேருந்து பேசறார். மனசுலேருந்து பேசறதில்லை’ என பெண், ஆணைப் பற்றியும்... ‘‘ரொம்பப் பேசறதுதான் என் மனைவிகிட்ட பிரச்னையே... ஒரு விஷயத்தைப் பத்திப் பேச ஆரம்பிச்சா, அதை மட்டும் பேசாம, சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் உள்ளே நுழைச்சு, சிக்கலாக்கிடுவா. சின்ன விஷயத்தைப் பெரிசாக்கி என் அமைதியைக் கெடுத்துடுவா...’’ என கணவன், மனைவியைப் பற்றியும் முன்வைக்கிற பொதுவான குற்றச்சாட்டுகள் இவை.
கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் மிக வேகமாகப் பேசுபவராகவும், இன்னொருவர் மெதுவாகப் பேசுகிறவராகவும் இருந்தால் இருவரும் அதை ஆரம்பத்திலேயே சமன்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்படியே தொடரவிட்டால், இருவரில் ஒருவர் ஆதிக்க குணமுடையவராகவும், இன்னொருவர் கட்டளைகளுக்கு அடிபணிகிறவராகவும்தான் இருக்க நேரிடும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காலம் முழுவதும் காதலுடன் வாழ
உங்கள் துணை பேச ஆரம்பித்ததும், குறுக்கிடாதீர்கள்.
அவர் இரண்டு வார்த்தைகள் சொன்னதும், மீதியை நீங்களே நிரப்பி, வாக்கியத்தை முடித்து வைக்காதீர்கள். முகத்தை சுளிக்காதீர்கள். துணையின் பேச்சைக் கேட்காமல் வேறு எதிலோ கவனத்தைச் சிதற விடாதீர்கள். உடனடியாக உங்களால் பதில் சொல்ல முடியாவிட்டால், துணையின் பேச்சுக்கு அவகாசம் கேளுங்கள். ‘நான் உன்னை அலட்சியப்படுத்தவில்லை. உன் பேச்சைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.
சலிப்பு தட்டும் வகையில் நீளமாகப் பேசாமல், ‘ஷார்ட் அண்ட் ஸ்வீட்’டாகப் பேசுங்கள். நீங்களே பேசிக் கொண்டிருக்காமல், துணைக்கும் வாய்ப்புக் கொடுங்கள். இருவரின் எல்லைகளுக்கும், அந்தரங்க இடைவெளிக்கும் மதிப்பளித்துப் பேசுங்கள். சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசும் போது, ‘நான் இப்ப டென்ஷனா இருக்கேன். அந்த விஷயத்தைப் பத்திப் பேசினப்ப எனக்கு வருத்தமா இருந்தது’ என்பது மாதிரியான உங்கள் உணர்வுகளைச் சொல்லும் வரிகளை உபயோகியுங்கள். கணவன் - மனைவிக்கிடையேயான உரையாடலும் தகவல் பரிமாற்றமும் சுமுகமாக அமைந்து விட்டாலே பாதி பிரச்னைகள் நீங்கி விடும்.

அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் இருவருக்குமிடையிலான ரொமான்ஸ்...
இதற்கு நீங்கள் காதல், அன்பு, நெருக்கம் என எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக் கொள்ளுங்கள். ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ‘ஆழ்வார் பேட்டை ஆண்டவா...’ பாடலில் ஒரு வரி வரும்... ‘காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா... அந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா’ என்று... சத்தியமான வரிகள் அவை.
இரண்டு நபர்களுக்குள் காதல் உணர்வை உச்சத்தில் வைத்திருக்க ‘ஃபினைல் எத்திலாமைன்’ (பிஇஏ) என்கிற ஹார்மோன்தான் காரணமாம். காதலிக்கிற போது இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதன் விளைவாக வானத்தில் பறப்பது போலவும் மிதப்பது போலவும் தோன்றும். இந்த ஹார்மோன் சுரப்பு உச்சத்தில் இருக்கும்போது, இருவரையும் பிரித்தால் அவர்களை காதல் நோய் பீடிக்கும். உலகின் உச்சக்கட்ட துயரம், காதலைப் பிரிந்திருப்பதுதான் என நினைக்க வைக்கும்.
அத்தனை சக்தி வாய்ந்தது இந்த பிஇஏ! கல்யாணத்துக்குப் பிறகு நெருக்கம் குறையக் குறைய இந்த ஹார்மோன் சுரப்பும் சரசரவென குறையத் தொடங்குகிறது. அதைக் குறைய விடாமல் பார்த்துக் கொள்ள இருவர் தரப்பிலும் சில சின்ன முயற்சிகள் தேவை. காதலிக்கிற போது, கண்ணுக்குத் தெரியாத திசைகளில் எல்லாம் பயணிக்கத் தோன்றும். வீட்டுக்குத் தெரியாமல், உறவினர், நண்பர்களுக்குத் தெரியாமல் த்ரில்லிங்கான எத்தனையோ விஷயங்களைச் செய்து பார்க்கத் தூண்டும்.
அதே த்ரில் உணர்வுதான் திருமண உறவிலும் தேவை. இருவரும் சின்னச் சின்ன சாகசங்களில் ஈடுபடலாம். நீண்ட நடைப் பயணம் மேற்கொள்ளலாம். மலையேற்றத்தை முயற்சி செய்யலாம். இந்த சாகசங்கள் எப்படி நெருக்கம் வளர்க்கும் என யோசிக்கலாம். அந்த அனுபவம் விளக்க முடியாதது... உணரப்பட வேண்டியது. அது மட்டுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் உங்கள் துணையைத் தொட்டுப் பேசுங்கள். முத்தமிடுங்கள்.
கைகளைப் பற்றிக் கொள்ளுங்கள். இதெல்லாம் நமது கலாசாரத்தில் தவறான செயல்களாகப் போதிக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாடுகளில் காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதும் சரி, இரவு வீடு திரும்பும் போதும் சரி, கட்டியணைப்பதும் முத்தமிடுவதும் அவர்களது அன்பில் தவிர்க்க முடியாதவை.

இவை தவிர...
- இன்று என் துணைக்கு என்ன செய்யலாம் என யோசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது திடீரென அவருக்கு நீங்கள் அனுப்புகிற காதல் குறுந்தகவலாகவும் இருக்கலாம். உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவை உங்கள் கைப்பட சமைத்து வைப்பதாகவும் இருக்கலாம்.
- அடிக்கடி ஆச்சரியங்களைக் கொடுக்கப் பழகுங்கள். திடீர் முத்தம், திடீர் அன்பளிப்பு, திடீர் அரவணைப்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- உங்கள் இருவருக்கு மட்டுமே புரியக்கூடிய சில சங்கேத வார்த்தைகளையும் செய்கைகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு மாதமும் ஒரு கொண்டாட்டத்துக்குத் திட்டமிடுங்கள். ஒரு ரொமான்ட்டிக் டைரியை உருவாக்குங்கள். அதில் நீங்கள் முதலில் சந்தித்த நாள், காதலைச் சொன்ன நாள், கல்யாண நாள், பிறந்த நாள்... இப்படி குறித்து வையுங்கள். உங்கள் வருடம் முழுக்க ரொமான்ஸ் கொண்டாட்டங்களால் நிரம்பி வழியட்டும்.
- உங்கள் துணை செய்கிற பாசிட்டிவான விஷயங்களைப் பாராட்டுங்கள். நெகட்டிவான விஷயங்களை விட்டுத் தள்ளுங்கள். நினைத்த போதெல்லாம் துணையுடன் எங்கேயாவது ஒரு பயணத்துக்குத் திட்டமிடுங்கள். அப்படி நீங்கள் செல்ல நினைக்கிற இடத்திலும் காதல் இருக்கட்டும். உதாரணத்துக்கு நீங்கள் முதலில் சந்தித்த இடம், உங்கள் இருவருக்கும் மிகப்பிடித்த இடம் இப்படி...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காலம் முழுவதும் காதலுடன் வாழ
காதல் வங்கி!
லவ் டெபாசிட் (காதலை அதிகரிக்கச் செய்கிற விஷயங்கள்)
ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளுங்கள். அன்பைக் காட்டுங்கள். இருவருக்கும் பிடித்த விஷயங்களைப் பட்டியலிட்டு, அதில் இருவருக்கும் பொதுவான விருப்பங்களைத் தேர்வு செய்து, அதில் ஈடுபடுங்கள். மூன்றாம் நபருக்கு உங்கள் இருவருக்கும் இடையில் இடம் கொடுக்காதீர்கள்.
லவ் வித்டிராயல் (காதலைக் குறைக்கும் விஷயங்கள்)
கட்டளை, கோபம், நெகட்டிவான விமர்சனம், திட்டு, அடி போன்றவை காதலைக் குலைப்பவை. கட்டளையை கனிவாக மாற்றுங்கள். நெகட்டிவான மற்றும் கோபமான வார்த்தைகளைப் பிரயோகிக்காதீர்கள். துணையை மரியாதையுடன் நடத்துங்கள்.
டைம்
வாரத்துக்கு 15 மணி நேரம் உங்கள் துணைக்காக ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் டி.வி., கம்ப்யூட்டர், இவ்வளவு ஏன்... உங்கள் குழந்தைகளுக்குக் கூட இடமின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்ஸ்யூரன்ஸ்
நேர்மையைப் போன்றதொரு மிகச்சிறந்த இன்ஸ்யூரன்ஸ், திருமண உறவில் இருக்க முடியாது. இருவருக்குள்ளும் எதற்கும் எப்போதும் ஒளிவு மறைவு வேண்டாம்.
பாலிசி ஆஃப் ஜாயின்ட் அக்ரிமென்ட்
முடிவெடுக்கும் போது இருவரும் சேர்ந்தே எடுங்கள். ஒருவர் மற்றவரை வற்புறுத்தியோ, மிரட்டியோ முடிவுக்குக் கட்டுப்படச் செய்ய வேண்டாம்.
நன்றி : தினகரன்

Similar topics
» காதலுடன் காத்திருப்பேன் .....
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
» நாள் முழுவதும் களைப்பா?
» அது ஒரு கரை காலம்
» காலம்...!!
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
» நாள் முழுவதும் களைப்பா?
» அது ஒரு கரை காலம்
» காலம்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum