சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு Khan11

72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு

Go down

Sticky 72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு

Post by நண்பன் on Sat 2 Aug 2014 - 9:27

72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு
இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் உயிரிழப்பு 1465; காயம் 9000

காசாவில் நேற்று வெள்ளிக்கிழமை 72 மணிநேர மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட ஒருசில மணி நேரத்திற்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு N-1tkn-08-02-fr-90இந்நிலையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாகவும் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படு வதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பலஸ்தீன ஆயுதக் குழுக்கள் யுத்த நிறுத்தத்தை மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதன்படி யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் காசாவில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ¤க்கு இடையில் நிபந்தனைகளுடனான மனிதாபிமான யுத்த நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நேற்றுக்காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப் பட்டதைத் தொடர்ந்து காசாவில் தாக்குதல்கள் தணிந்திருந்தது. ஆனால் யுத்த நிறுத்தம் ஆரம்பமாகி மூன்று மணி நேரத்திற்குள் காசாவில் ரபா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு பலருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோன்று யுத்த நிறுத்த காலத்தில் கிழக்கு காசாவில் ஸ்னைப்பர் தாக்குதல் களும் பதிவாகியுள்ளன. ஷஜையா பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலால் பாரிய புகைமூட்டம் எழுந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதன்படி கடந்த 25 தினங்களாக தொடரும் காசா மீதான தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,461 ஆக உயர்ந்திருப்பதோடு, மேலும் 8, 400 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அதிக பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர்.
மறுபுறத்தில் 61 துருப்புகள் உட்பட மொத்தம் 63 இஸ்ரேலியர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.
பலஸ்தீன போராட்டக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதலை நிறுத்தவும் இஸ் ரேல் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் காசா சுரங்கப்பாதைகளை அழிக்கும் இலக் குடனுமே இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
எனினும் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு காசா மீது இஸ்ரேல் மற்றும் எகிப்து பல ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் முற்றுகையை அகற்றுமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஐ. நா. மற்றும் அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட காசாவில் 72 மணி நேர யுத்த நிறுத்தம் மனிதாபிமான அடிப்படை யிலானது என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த யுத்த நிறுத்த காலத்திலும் இஸ்ரேல் துருப்புகள் காசாவில் நிலைகொண்டிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
“மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் வரை அனைத்து தரப்பும் நிதானமாக செயற்படும்படி வலியுறுத்து கிறோம். யுத்த நிறுத்த காலத்தில் முழுமையாக யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்கும்படி கோருகிறோம்” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வன்முறையில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களுக்கு அவகாசம் கொடுப்பதாக அமைந்திருக்கும்” என்று அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யுத்த நிறுத்த காலத்தில் காசா மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்றும் கொல்லப்பட்ட தமது உறவினர்களை அடக்கம் செய்ய, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்க உதவும் என்றும் ஐ. நா அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த யுத்த நிறுத்தத்தை மீறும்பட்சத்தில் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்று இந்தியா சென்றிருக்கும் ஜோன் கெர்ரி எச்சரித்துள்ளார். “இது ஒரு அவகாசம். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முடிவல்ல” என்று கெர்ரி குறிப்பிட்டார்.
இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்ற ஹமாஸ் அது இஸ்ரேலின் கையிலேயே தங்யிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. “வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் 72 மணிநேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் மற்றும் ஏனைய போராட்டக் குழுக்கள், எதிர் தரப்பும் கடைபிடித்தால் இணங்கி மதிப்பளிக்கும்” என்று ஹமாஸ் பேச்சாளர் பெளஸி பர்ஹும் குறிப்பிட்டார்.
எனினும் மனிதாபிமான யுத்த நிறுத்த காலப்பகுதியிலும் காசாவில் நிலை கொண்டிருக்கும் இஸ்ரேல் துருப்புகள் அங்குள்ள ஹமாஸ் சுரங்கப் பாதைகளை அழிக்கும் நடவடிக்கையை தொடரும் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட் டிருந்தது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு

Post by Nisha on Mon 4 Aug 2014 - 14:48

என் தன இதையெல்லாம் செய்கின்றார்களோ?

இதையெல்லாம் படிக்கும் போது நாளைய தினம் என்னாகும் எனும் கவலைதான் அதிகமாகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum