Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியா மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி: கோப்பை வென்றது இங்கிலாந்து
Page 1 of 1
இந்தியா மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி: கோப்பை வென்றது இங்கிலாந்து
வல்: ஓவல் டெஸ்டிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். அடுக்கி வைத்த சீட்டு கட்டுகளை தட்டிவிட்டது போல, மளமளவென சரிந்தனர். இதனையடுத்து, இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 1–3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்தது. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1–2 என பின்தங்கி இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் (92), கிறிஸ் ஜோர்டான் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரூட் சதம்:
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்தின் ஜோர்டான் (20) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜோ ரூட், இஷாந்த் பந்தில் 3 ரன்கள் எடுத்து, டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய இவர், அஷ்வின் வீசிய 115வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். துவக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய ஸ்டூவர்ட் பிராட், ஆரோன் வீசிய 108வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்தார். ஒன்பதாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது, இஷாந்த் ‘வேகத்தில்’ பிராட் (37) அவுட்டானார். அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் (1), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார்.
முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 486 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஜோ ரூட் (149) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4, அஷ்வின் 3, வருண் ஆரோன் 2, புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மழை குறுக்கீடு:
பின், 338 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு முரளி விஜய் (2) ஏமாற்றினார். தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட மற்றொரு துவக்க வீரர் காம்பிர் (3) ‘ரன்–அவுட்’ ஆனார். இந்திய அணி, 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
தோனி ஏமாற்றம்:
பின், மீண்டும் போட்டி நடந்தது. ஆண்டர்சன் ‘வேகத்தில்’ புஜாரா (11) நடையை கட்டினார். ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ரகானே (4) அவுட்டானார். கேப்டன் தோனி, ‘டக்–அவுட்’ ஆனார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த விராத் கோஹ்லி (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த அஷ்வின் (7), புவனேஷ்வர் குமார் (4), ஜோர்டான் பந்தில் ‘பெவிலியன்’ திரும்பினர். வருண் ஆரோன் (1) ‘ரன்–அவுட்’ ஆனார். ஜோர்டான் ‘வேகத்தில்’ இஷாந்த் சர்மா (2) சரணடைந்தார்.
இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி 94 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வி அடைந்தது. ஸ்டூவர்ட் பின்னி (25) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4, ஆண்டர்சன் 2, பிராட், வோக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின்மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3–1 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது. ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்தின் ஜோ ரூட் வென்றார். தொடர் நாயகன் விருது இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமாருக்கும், இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வழங்கப்பட்டன.
‘ஹாட்ரிக்’
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்த இந்திய அணி, லார்ட்சில் நடந்த 2வது டெஸ்டில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. அதன்பின், சவுத்தாம்ப்டன், மான்செஸ்டர், ஓவலில் நடந்த டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி, ‘ஹாட்ரிக்’ தோல்வி அடைந்தது.
‘சரண்டர்’
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்டில், இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதன்பின் விளையாடிய மூன்று டெஸ்டிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இங்கிலாந்து பவுலர்களிடம் ‘சரண்டர்’ ஆன இந்திய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
முரளி விஜய் ஆறுதல்
இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முரளி விஜய் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 402 ரன்கள் எடுத்தார். அதன்பின், கேப்டன் தோனி (349 ரன்கள்), ரகானே (299) அதிக ரன்கள் எடுத்தனர்.
* அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில், 2 சதம், 3 அரைசதம் உட்பட 518 ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து, மற்றொரு இங்கிலாந்து வீரர் கேரி பேலன்ஸ் (503 ரன்கள், 2 சதம், 2 அரைசதம்) உள்ளார்.
புவனேஷ்வர் நம்பிக்கை
இம்முறை அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில், புவனேஷ்வர் குமார் முதலிடம் பிடித்தார். இவர், 5 டெஸ்டில் 19 விக்கெட் கைப்பற்றினார். இவரை அடுத்து, இஷாந்த் சர்மா (14 விக்.,), ஜடேஜா (9 விக்.,) ஆகியோர் உள்ளனர்.
* அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில், இங்கிலாந்தி்ன ஆண்டர்சன் (25 விக்கெட்), மொயீன் அலி (19), ஸ்டூவர்ட் பிராட் (19) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அடுத்து ஒருநாள் தொடர்
டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், அடுத்து இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளன. முதல் போட்டி வரும் ஆக., 25ல் பிரிஸ்டோலில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள், கார்டிப் (ஆக., 27), நாட்டிங்காம் (ஆக., 30), பர்மிங்காம் (செப்., 2), லீட்சில் (செப்., 5) நடக்கின்றன. ஒருநாள் தொடருக்கு முன், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய அணி, மிடில்சக்ஸ் கிளப் அணியுடன் 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.
3வது வீரர்
நேற்றைய ஆட்டத்தில் 23 வயதான இங்கிலாந்தின் ஜோ ரூட் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் 24 வயதை எட்டும் முன் அதிக சதம் (5) அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் மூன்றாவது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் அலெஸ்டர் குக் (7), லியானர்டு ஹாட்டன் (5) உள்ளனர்.
எல்லாமே 5
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சின் 21.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது சற்று வித்தியாசமாக இருந்தது.
‘ஹெல்மெட்’ மாற்றம்
மான்செஸ்டர் டெஸ்டில், இந்தியாவின் ஆரோன் வீசிய பந்து, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், ‘ஹெல்மெட்டில்’ நுழைந்து மூக்கை பதம்பார்த்தது. பலத்த காயமடைந்த இவர், சிகிச்சை மேற்கொண்டார். காயத்தில் இருந்து மீண்ட இவர், ஓவல் டெஸ்டில் ‘பேட்’ செய்த போது, புதிய வகை ‘ஹெல்மெட்டை’ பயன்படுத்தினார்
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
» மொகாலியில் 'காலி'யானது இங்கிலாந்து: தொடரை வென்றது இந்தியா
» இந்தியா 319 ஓட்டங்களால் தோல்வி; இங்கிலாந்து 2-0 முன்னிலை
» இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» மொகாலியில் 'காலி'யானது இங்கிலாந்து: தொடரை வென்றது இந்தியா
» இந்தியா 319 ஓட்டங்களால் தோல்வி; இங்கிலாந்து 2-0 முன்னிலை
» இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum