Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
+3
rammalar
நண்பன்
ந.க.துறைவன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?
..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?
..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
வலிகள் நிறம்பியதாக உள்ளது
உண்மையில் அவனுககு என்னவாயிற்று
இது உங்கள் வெறு கற்பனையா அல்லது நிஜமா?
படித்து முடித்ததும் கொஞ்சம் கவலையாக உள்ளது
வாழ்த்துக்கள் சிறப்பாக உள்ளது.
உண்மையில் அவனுககு என்னவாயிற்று
இது உங்கள் வெறு கற்பனையா அல்லது நிஜமா?
படித்து முடித்ததும் கொஞ்சம் கவலையாக உள்ளது
வாழ்த்துக்கள் சிறப்பாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
கவிதை எழுதுவேன்…!!
*
கவிதை எழுதுவேன் – புதுக்
கவிதை எழுதுவேன்.
எதுகை மோனை வைச்சி
கவிதை எழுதுவேன்.
கதிரவனின் கருத்தைக் கேட்டுச்
சமூகக் கவிதை எழுதுவேன்.
காற்றின் இசை உணர்ந்து
ஆன்மீகக் கவிதை எழுதுவேன்.
*
பண்பாட்டின் சூழல் கேட்டை
புதுக் கவிதையில் எழுதுவேன்.
பனிக் குளிரின் அமைதியிலே
ஹைக்கூ கவிதை எழுதுவேன்.
*
தும்பிகள் விளையாட்டு ரசித்து
சிறுவர் பாடல் எழுதுவேன்
அகம் புறம் வெளிச்சமிடும் – தமிழ்
மரபுக் கவிதை எழுதுவேன்.
*
நிலவு வெட்கப்படாலிருக்கும்
காதல் கவிதை எழுதுவேன்.
வெள்ளை இருட்டில் நடக்கும்
உண்மைக் கவிதை எழுதுவேன்.
*
வண்டுகளின் வன்கொடுமையினை
வன்மையாக எழுதுவேன்.
மலர்களின் அழகைப் போற்றி
பெண்ணியக் கவிதை எழுதுவேன்.
*
மரத்தின் அடிவேராகியே – இம்
மண்ணின் கவிதை எழுதுவேன்.
மனிதனின் உள்ளத் தவிப்பை – என்
மரணம் வரை எழுதுவேன்.!!.
*
*
கவிதை எழுதுவேன் – புதுக்
கவிதை எழுதுவேன்.
எதுகை மோனை வைச்சி
கவிதை எழுதுவேன்.
கதிரவனின் கருத்தைக் கேட்டுச்
சமூகக் கவிதை எழுதுவேன்.
காற்றின் இசை உணர்ந்து
ஆன்மீகக் கவிதை எழுதுவேன்.
*
பண்பாட்டின் சூழல் கேட்டை
புதுக் கவிதையில் எழுதுவேன்.
பனிக் குளிரின் அமைதியிலே
ஹைக்கூ கவிதை எழுதுவேன்.
*
தும்பிகள் விளையாட்டு ரசித்து
சிறுவர் பாடல் எழுதுவேன்
அகம் புறம் வெளிச்சமிடும் – தமிழ்
மரபுக் கவிதை எழுதுவேன்.
*
நிலவு வெட்கப்படாலிருக்கும்
காதல் கவிதை எழுதுவேன்.
வெள்ளை இருட்டில் நடக்கும்
உண்மைக் கவிதை எழுதுவேன்.
*
வண்டுகளின் வன்கொடுமையினை
வன்மையாக எழுதுவேன்.
மலர்களின் அழகைப் போற்றி
பெண்ணியக் கவிதை எழுதுவேன்.
*
மரத்தின் அடிவேராகியே – இம்
மண்ணின் கவிதை எழுதுவேன்.
மனிதனின் உள்ளத் தவிப்பை – என்
மரணம் வரை எழுதுவேன்.!!.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மிக்க நன்றி நண்பன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
நன்றி ராம்மலர் சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
எழுதுங்கள் ஐயா தொடர்ந்து எழுதுங்கள் சில நேரம் உங்கள் கவிதைகள் தாமதமாகப் படிக்கப்பட்டாலும் சோர்ந்து போகாமல் இன்னும் எழுதுங்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
ந.க.துறைவன் wrote:*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?
..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*
எத்துணை வேதனையான சூழல்! இச்சம்பவம் நிஜமாய் இருக்கும் என நான் நிச்சயம் நம்புகின்றேன்..
எல்லோருக்கும் பெரியவனாய், அனைவருக்கும் உதவுபவனாய், அனைவரையும் நேசிப்பவனாய் அறிவில் சிறந்தவனாய் அற்புதமானவனாய் போற்றி போற்றி அவனை தனிமைப்படுத்தி அவன் மனதில் இருப்பதை வெளிப்படுத்திய வடிகால் இல்லாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கி..
எவரிடமும் மனம் விட்டு பகிர முடியா சூழல்.. அவரவர் மனதில் உள்ளதை அள்ளிகொட்டும் போது அதை உள் வாங்கும் படியாய் போட்டுகொண்ட போர்வை இன்று அவனுக்கே எதிரானதோ?
நீங்கள் அறிந்து தெரிந்த யாரோவாயிருந்தால் இந்த சகோதரனுக்கு தேவை மருந்தும் மாத்திரையும் அல்ல.. அன்பும் ஆதரவும் தான் என புரிந்திடுங்கள் ஐயா!
மனதில் இருப்பதை வெளிக்கொட்டினாலே அவனின் பாதி மனச்சிதைவு சிதறி ஓடி விடும் ..
யாரோ யாருக்கோ தானே என்பதனால் அல்ல... இங்கே பலரை இப்படித்தான் காண்கின்றேன்.. இதன் தொடர்வாய் தனனைத்தாய் அழிக்கும் பல்ர் இழபபையும் கண்டிருக்கின்றேன்.
பாவம் அவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
ந.க.துறைவன் wrote:கவிதை எழுதுவேன்…!!
*
கவிதை எழுதுவேன் – புதுக்
கவிதை எழுதுவேன்.
எதுகை மோனை வைச்சி
கவிதை எழுதுவேன்.
கதிரவனின் கருத்தைக் கேட்டுச்
சமூகக் கவிதை எழுதுவேன்.
காற்றின் இசை உணர்ந்து
ஆன்மீகக் கவிதை எழுதுவேன்.
*
பண்பாட்டின் சூழல் கேட்டை
புதுக் கவிதையில் எழுதுவேன்.
பனிக் குளிரின் அமைதியிலே
ஹைக்கூ கவிதை எழுதுவேன்.
*
தும்பிகள் விளையாட்டு ரசித்து
சிறுவர் பாடல் எழுதுவேன்
அகம் புறம் வெளிச்சமிடும் – தமிழ்
மரபுக் கவிதை எழுதுவேன்.
*
நிலவு வெட்கப்படாலிருக்கும்
காதல் கவிதை எழுதுவேன்.
வெள்ளை இருட்டில் நடக்கும்
உண்மைக் கவிதை எழுதுவேன்.
*
வண்டுகளின் வன்கொடுமையினை
வன்மையாக எழுதுவேன்.
மலர்களின் அழகைப் போற்றி
பெண்ணியக் கவிதை எழுதுவேன்.
*
மரத்தின் அடிவேராகியே – இம்
மண்ணின் கவிதை எழுதுவேன்.
மனிதனின் உள்ளத் தவிப்பை – என்
மரணம் வரை எழுதுவேன்.!!.
*
எழுதுவதும் ஒருவகை மன ஆறுதல் தான்!
அநீதி கண்டு துயரும் உள்ளத்தின் குமுறல்கள் இப்படியாகிலும் வெளிப்படுகின்றதே!
எழுதிக்கொண்டே இருங்கள் ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மிக்க நன்றி நிசா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
*
ஊர்க் கோடி….!!
*
பொன்னிறமான நெல்மணிகள்
பரந்துவிரிந்தக் களத்தில்
வெயிலில் காய்ந்து காய்ந்து
சூடேறக் கொண்டிருக்கின்றன
மேனிக் கொதிக்க கொதிக்க
வெளியில் சொல்ல முடியாமல்…
*
இன்னொரு பக்கம்
முத்துக் கொட்டைகளாய்
மண்நிறத்தில் வேர்க்கடலைகள்
பரவியிருக்கின்ற பகுதியில்
வேலையாட்கள் பேசிக்கொண்டே
உதிர்க்கும் வார்த்தைகளாய்
காலில் துழாவும் போது
கலகலவென சத்தமிட்டு
சூரிய வெப்ப அனலில்
காய்ந்து தவிக்கின்றன
உள்ளிருக்கும் பதமானப்
பச்சைப் பருப்புகள்.
*
அரைக்கும் மிஷினில்
கூலியாட்கள் வாரிவாரிக்
கொட்டுகிறார்கள் நெல்லை
அரிசி வேறாகவும்
உமி வேறாகவும் பிரிந்துக்
குவிகிறது மனிதர்களி்ன்
உறவைப்போல….
அதே போன்று தான்
வேர்க்கடலை மிஷினும்
பருப்பு வேறாகவும்
பொட்டுக்களை வேறாகவும்
வெளியே தள்ளிகின்றது
குவியல் குவியலாய்…
*
வாலிப ஆண்களும் பெண்களும்
குவிந்த அரிசியை, வேர்க்கடலையை
முறங்களில் வாரிவாரி
கோணியில் போட்டு தைத்து
ஒதுக்கி வைக்கிறார்கள்
எண்ணிக்கைப்படி….
*
முன்னிரவு வேளையில்
வெளியூரிலிருந்து வந்த
லாரியில் மூட்டைகளை
ஏற்றி அடுக்கிறார்கள்
உள்மூச்சு வெளிமூச்சு வாங்க
வியர்வை வழியவழிய
அலுப்பின்றி, களைப்பின்றி…
*
இப்படியெல்லாம்
பரபரப்பாக இயங்கி
பலருக்கும் படியளந்த தொழில்
நலிவடைந்தப் பின் மூடபட்டு,
*
இன்று, இளைஞர்கள், வாலிபர்கள்
எந்நேரமும் சுறுசுறுப்பாகக்
கில்லி, கிரிக்கெட்,
பேட்மிட்டன் விளையாடும்
மைதானமாய் காட்சியளிக்கின்றது
அந்த ஊர்க்கோடி அரிசி ஆலை….!!
*
*
ஊர்க் கோடி….!!
*
பொன்னிறமான நெல்மணிகள்
பரந்துவிரிந்தக் களத்தில்
வெயிலில் காய்ந்து காய்ந்து
சூடேறக் கொண்டிருக்கின்றன
மேனிக் கொதிக்க கொதிக்க
வெளியில் சொல்ல முடியாமல்…
*
இன்னொரு பக்கம்
முத்துக் கொட்டைகளாய்
மண்நிறத்தில் வேர்க்கடலைகள்
பரவியிருக்கின்ற பகுதியில்
வேலையாட்கள் பேசிக்கொண்டே
உதிர்க்கும் வார்த்தைகளாய்
காலில் துழாவும் போது
கலகலவென சத்தமிட்டு
சூரிய வெப்ப அனலில்
காய்ந்து தவிக்கின்றன
உள்ளிருக்கும் பதமானப்
பச்சைப் பருப்புகள்.
*
அரைக்கும் மிஷினில்
கூலியாட்கள் வாரிவாரிக்
கொட்டுகிறார்கள் நெல்லை
அரிசி வேறாகவும்
உமி வேறாகவும் பிரிந்துக்
குவிகிறது மனிதர்களி்ன்
உறவைப்போல….
அதே போன்று தான்
வேர்க்கடலை மிஷினும்
பருப்பு வேறாகவும்
பொட்டுக்களை வேறாகவும்
வெளியே தள்ளிகின்றது
குவியல் குவியலாய்…
*
வாலிப ஆண்களும் பெண்களும்
குவிந்த அரிசியை, வேர்க்கடலையை
முறங்களில் வாரிவாரி
கோணியில் போட்டு தைத்து
ஒதுக்கி வைக்கிறார்கள்
எண்ணிக்கைப்படி….
*
முன்னிரவு வேளையில்
வெளியூரிலிருந்து வந்த
லாரியில் மூட்டைகளை
ஏற்றி அடுக்கிறார்கள்
உள்மூச்சு வெளிமூச்சு வாங்க
வியர்வை வழியவழிய
அலுப்பின்றி, களைப்பின்றி…
*
இப்படியெல்லாம்
பரபரப்பாக இயங்கி
பலருக்கும் படியளந்த தொழில்
நலிவடைந்தப் பின் மூடபட்டு,
*
இன்று, இளைஞர்கள், வாலிபர்கள்
எந்நேரமும் சுறுசுறுப்பாகக்
கில்லி, கிரிக்கெட்,
பேட்மிட்டன் விளையாடும்
மைதானமாய் காட்சியளிக்கின்றது
அந்த ஊர்க்கோடி அரிசி ஆலை….!!
*
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
இழப்பு…!!
*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து உட்கார்ந்து
கா… கா.. ன்னு கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச் சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….
.*
*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து உட்கார்ந்து
கா… கா.. ன்னு கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச் சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….
.*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
உணர வைக்கும்…!!
.*
எதற்காக சட்டென
நீ கோபித்துக் கொள்கிறாய்?
கோபித்துக் கொள்வது
தவறில்லை.
கோபம் மனஇறுக்கத்தைக்
கொடுக்கும் நோய்.
கோபத்திற்கு மாமருந்து
மௌனம்.
மௌனத்திற்குப் பிறகான
உன் முகம் சூரியகாந்தியாய்
பிரகாசிக்கிறது
கோபம் பனிப்போல் மறைந்து
உன்னை உணர வைக்கும்
உன்னுள்
புதிய சிந்தனைப் பிறக்கும்.
புரிந்துக் கொள்.
புரிந்து இணைய வைப்பதே
காதல்.
*
.*
எதற்காக சட்டென
நீ கோபித்துக் கொள்கிறாய்?
கோபித்துக் கொள்வது
தவறில்லை.
கோபம் மனஇறுக்கத்தைக்
கொடுக்கும் நோய்.
கோபத்திற்கு மாமருந்து
மௌனம்.
மௌனத்திற்குப் பிறகான
உன் முகம் சூரியகாந்தியாய்
பிரகாசிக்கிறது
கோபம் பனிப்போல் மறைந்து
உன்னை உணர வைக்கும்
உன்னுள்
புதிய சிந்தனைப் பிறக்கும்.
புரிந்துக் கொள்.
புரிந்து இணைய வைப்பதே
காதல்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
ந.க.துறைவன் wrote:*
ஊர்க் கோடி….!!
*
பொன்னிறமான நெல்மணிகள்
பரந்துவிரிந்தக் களத்தில்
வெயிலில் காய்ந்து காய்ந்து
சூடேறக் கொண்டிருக்கின்றன
மேனிக் கொதிக்க கொதிக்க
வெளியில் சொல்ல முடியாமல்…
*
இன்னொரு பக்கம்
முத்துக் கொட்டைகளாய்
மண்நிறத்தில் வேர்க்கடலைகள்
பரவியிருக்கின்ற பகுதியில்
வேலையாட்கள் பேசிக்கொண்டே
உதிர்க்கும் வார்த்தைகளாய்
காலில் துழாவும் போது
கலகலவென சத்தமிட்டு
சூரிய வெப்ப அனலில்
காய்ந்து தவிக்கின்றன
உள்ளிருக்கும் பதமானப்
பச்சைப் பருப்புகள்.
*
அரைக்கும் மிஷினில்
கூலியாட்கள் வாரிவாரிக்
கொட்டுகிறார்கள் நெல்லை
அரிசி வேறாகவும்
உமி வேறாகவும் பிரிந்துக்
குவிகிறது மனிதர்களி்ன்
உறவைப்போல….
அதே போன்று தான்
வேர்க்கடலை மிஷினும்
பருப்பு வேறாகவும்
பொட்டுக்களை வேறாகவும்
வெளியே தள்ளிகின்றது
குவியல் குவியலாய்…
*
வாலிப ஆண்களும் பெண்களும்
குவிந்த அரிசியை, வேர்க்கடலையை
முறங்களில் வாரிவாரி
கோணியில் போட்டு தைத்து
ஒதுக்கி வைக்கிறார்கள்
எண்ணிக்கைப்படி….
*
முன்னிரவு வேளையில்
வெளியூரிலிருந்து வந்த
லாரியில் மூட்டைகளை
ஏற்றி அடுக்கிறார்கள்
உள்மூச்சு வெளிமூச்சு வாங்க
வியர்வை வழியவழிய
அலுப்பின்றி, களைப்பின்றி…
*
இப்படியெல்லாம்
பரபரப்பாக இயங்கி
பலருக்கும் படியளந்த தொழில்
நலிவடைந்தப் பின் மூடபட்டு,
*
இன்று, இளைஞர்கள், வாலிபர்கள்
எந்நேரமும் சுறுசுறுப்பாகக்
கில்லி, கிரிக்கெட்,
பேட்மிட்டன் விளையாடும்
மைதானமாய் காட்சியளிக்கின்றது
அந்த ஊர்க்கோடி அரிசி ஆலை….!!
*
*
அருமையாக உள்ளது,சிந்திக்க வேண்டியதாய் உள்ளது
இன்றைய காலத்தில் நெல் வயல்களும் மாட மாளிகைகளாக மாறி வருகிறது
நாளைய சமுதாயம் சாப்பாட்டுக்கு என்ன செய்யுமோ தெரியவில்லை!
சிறந்த கவிதைக்கு நன்றிகள் பாராட்டுக்கள்.
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
நிஜம் தான்! நேற்றுக்கூட என்னை அறியாமல் ஆத்திரமாய் திட்டி விட்டேன். கேட்டுகொண்ட பிரபா சிரித்தார்.
வெயிலுக்கு நிழல் தரும் மரங்களையெல்லாம் தறித்து வெட்டவெளியாய் ஆக்கும் போதும், சோளனும், கோதுமையும் பயிரிட்ட இடங்களில் மாடிக்கட்டிடங்கள் எழும் போதும் எனக்கு பின் வரும் அடுத்த சந்ததி உணவுக்கு எங்கே போகும் எனும் கேள்வி வந்து பயத்தை தருகின்றது.
வய்ல வெளிகள் வெட்ட வெளிகளாவதும் விவசாயிகள் தொழில் தேடி நம்ம பர்சான் போய் விவசாயப்பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழிலின்றி பெரு நகரம் நோக்கி படையெடுப்பதும் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
ஆனாலும் கொஞ்சம் முயன்றால் எதிர்காலமும் இவர்கள் கரத்தில் தான். நிரம்ப சிந்திக்க தூண்டிய கவிதை. நன்று ஐயா.
இன்னும் எழுதுங்கள்.
வெயிலுக்கு நிழல் தரும் மரங்களையெல்லாம் தறித்து வெட்டவெளியாய் ஆக்கும் போதும், சோளனும், கோதுமையும் பயிரிட்ட இடங்களில் மாடிக்கட்டிடங்கள் எழும் போதும் எனக்கு பின் வரும் அடுத்த சந்ததி உணவுக்கு எங்கே போகும் எனும் கேள்வி வந்து பயத்தை தருகின்றது.
வய்ல வெளிகள் வெட்ட வெளிகளாவதும் விவசாயிகள் தொழில் தேடி நம்ம பர்சான் போய் விவசாயப்பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழிலின்றி பெரு நகரம் நோக்கி படையெடுப்பதும் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.
ஆனாலும் கொஞ்சம் முயன்றால் எதிர்காலமும் இவர்கள் கரத்தில் தான். நிரம்ப சிந்திக்க தூண்டிய கவிதை. நன்று ஐயா.
இன்னும் எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
ந.க.துறைவன் wrote:இழப்பு…!!
*
இன்னிக்கி மதியம்
சாப்பாட்டு வேளையிலே
வீட்டு முன்புறமிருக்கிற
மரத்திலே வந்து உட்கார்ந்து
கா… கா.. ன்னு கத்திச்சி
காக்கா.
யாரோ உறவுக்காரங்க
வரப்போறாங்கன்னு
நினைச்சிக்கிட்டிருந்தே
வந்தது யார் தெரியுங்களா?
ஏதோ புதிய பொருள்
விளம்பரம் செய்யற
பொண்ணுங்க ரெண்டு
பேர் வந்து நின்னு
அதை வாங்கிக்கச் சொல்லி
ஓரே நச்சரிப்பு.
என்ன பண்றது?
கடைசியா பொருள்
வாங்கின பின்னாலேதான்
எடத்தைவிட்டே
காலி பண்ணாங்கன்னா?
பார்த்துக்களேன்.
அவங்களுக்கு வருமானம்
எனக்கு சிறு இழப்பு….
.*
ஹா ஹா சுவாரசியமாக உள்ளது
உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
ஹாஹா!
துறைவன் சார் அன்றாடம் நடப்பதை சொல்வது ரெமப் சுவாரஷ்யம் தான். காகம் கத்தினால் யாராச்சும் விருந்தாளி வருவாங்க.,. விருந்தாளி வந்தாலே செலவு தானே ஐயா. அப்படியே நினைச்சிக்கோங்க!
துறைவன் சார் அன்றாடம் நடப்பதை சொல்வது ரெமப் சுவாரஷ்யம் தான். காகம் கத்தினால் யாராச்சும் விருந்தாளி வருவாங்க.,. விருந்தாளி வந்தாலே செலவு தானே ஐயா. அப்படியே நினைச்சிக்கோங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
ந.க.துறைவன் wrote:உணர வைக்கும்…!!
.*
எதற்காக சட்டென
நீ கோபித்துக் கொள்கிறாய்?
கோபித்துக் கொள்வது
தவறில்லை.
கோபம் மனஇறுக்கத்தைக்
கொடுக்கும் நோய்.
கோபத்திற்கு மாமருந்து
மௌனம்.
மௌனத்திற்குப் பிறகான
உன் முகம் சூரியகாந்தியாய்
பிரகாசிக்கிறது
கோபம் பனிப்போல் மறைந்து
உன்னை உணர வைக்கும்
உன்னுள்
புதிய சிந்தனைப் பிறக்கும்.
புரிந்துக் கொள்.
புரிந்து இணைய வைப்பதே
காதல்.
*
வாவ் அருமையாக உள்ளது *_ *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
தீபாவளி….!!
*
விடியல்பொழுதின் நேரம்
விழிக்கும் பறவைகளெல்லாம்
குரல் கொடுக்கவில்லை.
மரக்கிளைகள் எங்கும்
அசைவற்று கிடக்கின்றன.
மேகமூட்டமாயிருக்கின்றன
மழைத் தொடருமென்று அடிக்கடி
வானிலை மையம் அறிவிக்கின்றது.
இன்று தீபாவளி என்பதால்
விழித்துக் கொண்ட மக்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
என அனைவரும் உற்சாகமாய்
குளித்து மங்கலகரமாய்
அழகான புத்தாடையில்
காட்சியளிக்கின்றார்கள்.
பட்டாசு வெடிக்கும் சிறுவர்களுக்கு
உதவியாகப் பெற்றோர்கள்
அருகில் நின்று பாதுகாப்பு
எச்சரிக்கையோடு குரல் கொடுத்து
மகிழச்சியோடு சிரிக்கிறார்கள்.
பாதையில் போவோர் வருவோர்
வெடிகள் வெடித்தப் பிறகே
பாதையிலிருந்து நகர்ந்துப்
போகின்றார்கள்.
செல்போனில் வாழ்த்துச்
செய்திகள் சொல்பவர்களுக்கு
வெடிச் சத்தம் பெரும்
இடைஞ்சலாகவே இருக்கின்றது.
பறவைகள், விலங்குகள் எல்லாம்
ஓயாத வெடிச் சத்தங் கேட்டுப்
பாதுகாப்பான இடந்தேடிப் போய்
பதுங்கியிருக்கின்றன.
பட்டாசுப் புகை வான்நோக்கி
உயர்ந்துச் செல்கின்றன
மனிதர்களின் மகிழ்ச்சியின்
பெருங் கொண்டாட்டமாய்….!!
*
*
விடியல்பொழுதின் நேரம்
விழிக்கும் பறவைகளெல்லாம்
குரல் கொடுக்கவில்லை.
மரக்கிளைகள் எங்கும்
அசைவற்று கிடக்கின்றன.
மேகமூட்டமாயிருக்கின்றன
மழைத் தொடருமென்று அடிக்கடி
வானிலை மையம் அறிவிக்கின்றது.
இன்று தீபாவளி என்பதால்
விழித்துக் கொண்ட மக்கள்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
என அனைவரும் உற்சாகமாய்
குளித்து மங்கலகரமாய்
அழகான புத்தாடையில்
காட்சியளிக்கின்றார்கள்.
பட்டாசு வெடிக்கும் சிறுவர்களுக்கு
உதவியாகப் பெற்றோர்கள்
அருகில் நின்று பாதுகாப்பு
எச்சரிக்கையோடு குரல் கொடுத்து
மகிழச்சியோடு சிரிக்கிறார்கள்.
பாதையில் போவோர் வருவோர்
வெடிகள் வெடித்தப் பிறகே
பாதையிலிருந்து நகர்ந்துப்
போகின்றார்கள்.
செல்போனில் வாழ்த்துச்
செய்திகள் சொல்பவர்களுக்கு
வெடிச் சத்தம் பெரும்
இடைஞ்சலாகவே இருக்கின்றது.
பறவைகள், விலங்குகள் எல்லாம்
ஓயாத வெடிச் சத்தங் கேட்டுப்
பாதுகாப்பான இடந்தேடிப் போய்
பதுங்கியிருக்கின்றன.
பட்டாசுப் புகை வான்நோக்கி
உயர்ந்துச் செல்கின்றன
மனிதர்களின் மகிழ்ச்சியின்
பெருங் கொண்டாட்டமாய்….!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மிக்க நன்றி ராம்மலர் சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மழை…!!
*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?
*
*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
முத்தப் போராட்டம்…!!
*
ஆதிகாலத்தில் பிரபஞ்சம்
சத்தங்களிலிருந்தே தோன்றியது.
அச்சத்தங்களின் உச்சமே
அப்பரிமாணம்.
அங்கிருந்தே தோன்றினர்.
ஆதாம் – ஏவாள் என்ற
மானுடப் பிறவிகள்.
அன்று தொடங்கியது தான்
அன்பின் அடையாளமாகப்
பதிக்கப்பட்டு வருகின்ற
மதுர முத்தங்கள்.
*
இருட்டின் முத்தங்கள்
உயிர்த்துளியில் மானுட
இருப்பின் உருவங்களை
உற்பத்தி செய்கி்ன்றன.
*
அச்சத்தங்களில் எழுந்த
மொத்த முத்தங்களின்
தொகுப்பே
இப்பொழுதிருக்கும்
உலக மக்களின் தொகை.
*
காலந்தோறும் மானுட
வாழ்வின்
மொத்தப் போராட்டத்தை
உள்ளடக்கியது தான் முத்தம்.
இம்முத்தங்களில் கனிவது தான்
காதல், திருமணம், குடும்ப
வாழ்வின் எல்லைகள். இம்
முத்தங்களுக்கு எந்த
வர்க்கவேறுபாடுகளுமில்லை?
*
இனி எதிர்வரும் நாள்களில்
அம்பலத்தில் அரங்கேறாமல்
அந்தரங்கத்தில் மட்டுமே
சத்தமில்லாமல் இயங்கட்டும்
முத்தப் போராட்டம்.
*
*
ஆதிகாலத்தில் பிரபஞ்சம்
சத்தங்களிலிருந்தே தோன்றியது.
அச்சத்தங்களின் உச்சமே
அப்பரிமாணம்.
அங்கிருந்தே தோன்றினர்.
ஆதாம் – ஏவாள் என்ற
மானுடப் பிறவிகள்.
அன்று தொடங்கியது தான்
அன்பின் அடையாளமாகப்
பதிக்கப்பட்டு வருகின்ற
மதுர முத்தங்கள்.
*
இருட்டின் முத்தங்கள்
உயிர்த்துளியில் மானுட
இருப்பின் உருவங்களை
உற்பத்தி செய்கி்ன்றன.
*
அச்சத்தங்களில் எழுந்த
மொத்த முத்தங்களின்
தொகுப்பே
இப்பொழுதிருக்கும்
உலக மக்களின் தொகை.
*
காலந்தோறும் மானுட
வாழ்வின்
மொத்தப் போராட்டத்தை
உள்ளடக்கியது தான் முத்தம்.
இம்முத்தங்களில் கனிவது தான்
காதல், திருமணம், குடும்ப
வாழ்வின் எல்லைகள். இம்
முத்தங்களுக்கு எந்த
வர்க்கவேறுபாடுகளுமில்லை?
*
இனி எதிர்வரும் நாள்களில்
அம்பலத்தில் அரங்கேறாமல்
அந்தரங்கத்தில் மட்டுமே
சத்தமில்லாமல் இயங்கட்டும்
முத்தப் போராட்டம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அனைத்து வரிகளும் முத்துப்போன்றது
ஐயாவின் கவியில் ஒருகனம் மெய்மறந்தேன்
நன்றி ஐயா தாங்களின் கவிகளை இன்னும்
எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்
ஐயாவின் கவியில் ஒருகனம் மெய்மறந்தேன்
நன்றி ஐயா தாங்களின் கவிகளை இன்னும்
எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மிக்க நன்றி இன்பத்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum