Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
+3
rammalar
நண்பன்
ந.க.துறைவன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
First topic message reminder :
*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?
..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*
*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?
..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
இலைவரிகள்…!!
*
மரங்களுக்கு எப்பொழுதும்
எதிர்மறை எண்ணங்களில்லை
அப் பச்சை இலைகளின்
மென்மையானச் சிரிப்பின்
சலசலப்புப் பேச்சுக்கள்
இரகசியமற்றவைகள்.
இதமானக் காற்றை
இலவசமாக வழங்கும்
வள்ளல் மனம்
படைத்தவைகள் மரங்கள்.
நிழலுக்கு
ஒதுங்குகின்றவர்களைக் கூட
யார் என்ன நிறமென்று
பார்ப்பதில்லை மரங்கள்.
மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
ஒவ்வொருவரின் இதயத்திலும்
மரம் என்பது மனிதமே என்ற
மனம் விரிய வேண்டும்.
அப்பொழுது தான்
அனைவருக்கும் சித்திக்கும்
ஞான விருட்சத்தின்
பிரபஞ்ச மௌனம்…!!
*
*
மரங்களுக்கு எப்பொழுதும்
எதிர்மறை எண்ணங்களில்லை
அப் பச்சை இலைகளின்
மென்மையானச் சிரிப்பின்
சலசலப்புப் பேச்சுக்கள்
இரகசியமற்றவைகள்.
இதமானக் காற்றை
இலவசமாக வழங்கும்
வள்ளல் மனம்
படைத்தவைகள் மரங்கள்.
நிழலுக்கு
ஒதுங்குகின்றவர்களைக் கூட
யார் என்ன நிறமென்று
பார்ப்பதில்லை மரங்கள்.
மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
ஒவ்வொருவரின் இதயத்திலும்
மரம் என்பது மனிதமே என்ற
மனம் விரிய வேண்டும்.
அப்பொழுது தான்
அனைவருக்கும் சித்திக்கும்
ஞான விருட்சத்தின்
பிரபஞ்ச மௌனம்…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
அருமையாக உள்ளது கவிதை வரிகள்
பாராட்டுக்கள் ஐயா
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
அருமையாக உள்ளது கவிதை வரிகள்
பாராட்டுக்கள் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
நண்பன் wrote:மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
அருமையாக உள்ளது கவிதை வரிகள்
பாராட்டுக்கள் ஐயா
நிஜம் தான்! தன்னலம் கருதா பிறர் நலம் கருதும் கொடை வள்ளலாய் நிழலும் தந்து ஆகாரமும் தந்து சுவாசிக்க காற்றையும் சுத்தப்படுத்தி.. மரங்கள் இல்லாவிட்டால் மனிதரில்லை எனும் நிலை தானே.
கவிதையும் சிந்தனையும் அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அ [ செ ] ழிப்பு….!!
*
கிரானைட் கற்கள் வெட்டி
எடுக்கப்பட்டதில்
மதுரையில்
பொக்கிஷ மலை அழிப்பு
கிராமங்கள் அழிப்பு
அழித்தவர்கள் செழித்தார்கள்
அடடா,
இன்னும் கொஞ்ச நாளில்
செந்தமிழ்நாடே
காணாமல் போய்விடுமோ?
*
கிரானைட் கற்கள் வெட்டி
எடுக்கப்பட்டதில்
மதுரையில்
பொக்கிஷ மலை அழிப்பு
கிராமங்கள் அழிப்பு
அழித்தவர்கள் செழித்தார்கள்
அடடா,
இன்னும் கொஞ்ச நாளில்
செந்தமிழ்நாடே
காணாமல் போய்விடுமோ?
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அடடா எல்லாக் கவிதைகளும் அமையாகவுள்ளது இன்னும் தாருங்கள் தொடருங்கள்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
பாராட்டுக்கு நன்றி பாயிஸ்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மிக்க நன்றி இனியவன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
சுபம்….சுகம்….!!
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
*
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
சுபம்….சுகம்….!!
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
*
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
பொழுது சாய்வதில்லை…!!
*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள்.
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
ந.க. துறைவன்.
*
*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள்.
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
ந.க. துறைவன்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
பயணம் எங்கே…?
*
செம்பருத்திப் பூவின் மேல்
அமர்ந்திருக்கின்றன
பெயர் தெரியாதக் குருவிகள்.
பாதையில் போகும் பெண்கள்
குருவிகளைப் பார்க்காமல்
தலைக் கவிழ்ந்துப் போகிறார்கள்.
அப் பெண்களைப் பார்வையிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
கடந்து போகிறான் வேகமாய்
கருப்புக் கண்ணாடி அணிந்த
வாலிபன்.
கீரைக்காய் முலாம்பழம் விற்கும்
தள்ளு வண்டிக்காரன் குரல் கேட்டு
திரும்பிப் பார்க்கிறார்கள் பெண்கள்.
காற்றில் பறந்து போகிறது
வெயிலுக்குத் தலையில் சுற்றியிருந்தக்
ஒருத்தியின் வண்ணத்துணி..
புங்கமர நிழலில் ஒதுங்கிய போது
மரத்திலிருந்து விர்ரென்று எழுந்து
பறந்துப் போனது காக்கை.
எதிரே கட்டியிருந்து பெரிய பேனரைப்
பார்த்துப் படித்துவிட்டு மௌனமாய்ச்
சிரித்துக் கொண்டாள் ஒருத்தி்.
எதிரே வந்த ஆட்டோக்காரனிடம்
போக வேண்டிய இடத்தைச் சொல்லி
ஏறி அமர்ந்துக் கொண்டார்கள்
வாகனங்களைக் கடந்து கடந்து
ஆட்டோ வேகமாய் மறைந்தது
உலக மக்களின் நடப்பினைக்
கண்காணித்தவாறே கோபமாய்
நெருப்பனலை வீசி நகர்கிறான்
மேகங்களற்ற வானில் சூரியன்…!!
*
*
செம்பருத்திப் பூவின் மேல்
அமர்ந்திருக்கின்றன
பெயர் தெரியாதக் குருவிகள்.
பாதையில் போகும் பெண்கள்
குருவிகளைப் பார்க்காமல்
தலைக் கவிழ்ந்துப் போகிறார்கள்.
அப் பெண்களைப் பார்வையிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
கடந்து போகிறான் வேகமாய்
கருப்புக் கண்ணாடி அணிந்த
வாலிபன்.
கீரைக்காய் முலாம்பழம் விற்கும்
தள்ளு வண்டிக்காரன் குரல் கேட்டு
திரும்பிப் பார்க்கிறார்கள் பெண்கள்.
காற்றில் பறந்து போகிறது
வெயிலுக்குத் தலையில் சுற்றியிருந்தக்
ஒருத்தியின் வண்ணத்துணி..
புங்கமர நிழலில் ஒதுங்கிய போது
மரத்திலிருந்து விர்ரென்று எழுந்து
பறந்துப் போனது காக்கை.
எதிரே கட்டியிருந்து பெரிய பேனரைப்
பார்த்துப் படித்துவிட்டு மௌனமாய்ச்
சிரித்துக் கொண்டாள் ஒருத்தி்.
எதிரே வந்த ஆட்டோக்காரனிடம்
போக வேண்டிய இடத்தைச் சொல்லி
ஏறி அமர்ந்துக் கொண்டார்கள்
வாகனங்களைக் கடந்து கடந்து
ஆட்டோ வேகமாய் மறைந்தது
உலக மக்களின் நடப்பினைக்
கண்காணித்தவாறே கோபமாய்
நெருப்பனலை வீசி நகர்கிறான்
மேகங்களற்ற வானில் சூரியன்…!!
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அசுரமன அன்பு உறவுகள்…!!
*
வீட்டுவாசலில்
பூத்துக் குலுங்குகிறது வேப்பமரம்.
துளசி செடியைச் சுற்றிச் சுற்றி
வருகின்றன வண்டுகள்
மடல் விரித்து சிரிக்கிறது
கத்தாழை
மங்கலம் தெரிவிக்கிறது
மாவிலைத் தோரணம்.
வாழ்க வளமுடன் – என்று
வரவேற்கிறது ஸ்டிக்கர்.
கடிதங்கள் இல்லாமல்
காலியாக இருக்கிறது
தபால்பெட்டி.
பூட்டப்படாமல் கிடைக்கிறது
இரும்பு கேட்.
நாளிதழை வீசியெறிந்து
போகிறான் பேப்பர் பையன்
மீட்டர் கணக்கெடுக்க வந்த
மின்ஊழியர் அட்டைக் கேட்டு
காலிங்பெல் அழுத்துகிறார்.
உரத்தக் குரல் கொடுக்கிறாள்
காய்காரம்மா.
குப்பைக் கேட்டு மணியடித்து
அழைக்கிறார்கள்
நகராட்சி கடைநிலை ஊழியர்கள்.
என்னவாயிற்று,
இவ்வளவு நேரமாய் யார்
அழைத்தும் உள்ளிருந்து
எவரும் வெளி வரவில்லை
இப்படித்தானிருக்கிறது
எல்லா வீடுகளின் நிலவரம்
உள்ளே மனக் கதவம் திறவாது
பதுங்கியிருக்கின்றன
அசுர அன்பு மனஉறவுகள்.
*
*
வீட்டுவாசலில்
பூத்துக் குலுங்குகிறது வேப்பமரம்.
துளசி செடியைச் சுற்றிச் சுற்றி
வருகின்றன வண்டுகள்
மடல் விரித்து சிரிக்கிறது
கத்தாழை
மங்கலம் தெரிவிக்கிறது
மாவிலைத் தோரணம்.
வாழ்க வளமுடன் – என்று
வரவேற்கிறது ஸ்டிக்கர்.
கடிதங்கள் இல்லாமல்
காலியாக இருக்கிறது
தபால்பெட்டி.
பூட்டப்படாமல் கிடைக்கிறது
இரும்பு கேட்.
நாளிதழை வீசியெறிந்து
போகிறான் பேப்பர் பையன்
மீட்டர் கணக்கெடுக்க வந்த
மின்ஊழியர் அட்டைக் கேட்டு
காலிங்பெல் அழுத்துகிறார்.
உரத்தக் குரல் கொடுக்கிறாள்
காய்காரம்மா.
குப்பைக் கேட்டு மணியடித்து
அழைக்கிறார்கள்
நகராட்சி கடைநிலை ஊழியர்கள்.
என்னவாயிற்று,
இவ்வளவு நேரமாய் யார்
அழைத்தும் உள்ளிருந்து
எவரும் வெளி வரவில்லை
இப்படித்தானிருக்கிறது
எல்லா வீடுகளின் நிலவரம்
உள்ளே மனக் கதவம் திறவாது
பதுங்கியிருக்கின்றன
அசுர அன்பு மனஉறவுகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அடடா ஆட்டம் பாட்டம்தான் இந்தக கல்யாணமேந.க.துறைவன் wrote:சுபம்….சுகம்….!!
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
*
திருமணம் ஒன்றை நேரில் பார்த்த மாதிரி உள்ளது அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
-
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மிக்க நன்றி ராம்மலர் சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
ந.க.துறைவன் wrote:பொழுது சாய்வதில்லை…!!
*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள்.
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
ந.க. துறைவன்.
*
அருமையான கவிதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» கே இனியவனின் புதுக்கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum