Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்
3 posters
Page 1 of 1
355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்
விழுப்புரம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 355 ஆண்டுகாலமாக இருந்த காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டது. 1659ம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் முக்கிய மாகாணங்களில் செயல் பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பின்னர், காவல்துறை சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களை தடுக்கவும் அந்தந்த மாநில உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவல்நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், தமிழக காவல்துறை விரிவுபடுத்தப்பட்டு 16 பிரிவுகளாக தற்போது செயல் பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 1,452 காவல்நிலையங்களும், 196 மகளிர் காவல்நிலையங்கள் என மொத்தம் 1,648 காவல்நிலையங்கள் இயங்குகிறது. காவல்நிலையங்களில் பலக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கென தனி அடையாளமாக விளங்கி கொண்டிருந்தது. காவல்துறையினர் பதிவு செய்யும் வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கும் நீதிமன்றமும் சிவப்பு நிற கட்டிடங்களில் தான் செயல்பட்டு வந்தது. இப்படி 355 ஆண்டுகள் காவல்நிலையத்துக்கு அடையாளமாக விளங்கிய சிவப்பு நிற கட்டிடங்களை தற்போது பச்சை நிறத்திற்கு மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் காவல்நிலையமாக வளவனூர் காவல்நிலைய கட்டிடத்தை சிவப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல்நிலையத்தை வருடாந்திர ஆய்வு செய்வது வழக்கம். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது, காவல்நிலையம் முழுவதும் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வளவனூர் காவல்நிலையத்தில் மாவட்ட எஸ்பி சில தினங்களில் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இருக்கிறார். அவர் ஆய்வுக்கு வருவதற்குள் காவல்நிலையங்களில் பச்சை நிற பெயிண்ட் அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி படிப்படியாக அனைத்து காவல்நிலையங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் பச்சைநிறத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், வனத்துறை அலுவலகங்களுக்கு மட்டும்தான் பச்சை நிறம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது காவல்நிலையங்களும் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுவதால் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பல நூற்றாண்டுகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றுவது சரியல்ல. என்றனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=107491
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்
சிவப்பு நிறமாய் இருப்பதனால் தான் காவல் துறை என்றால் கடுமை எனறானதோ! நிறம் மாறியது போல் காவலர்களின் குணமும் மாறுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்
அரபு நாட்டில் நான் கண்ட காவலர்கள் எங்கள் நண்பர்கள் போல் நடந்து கொண்டார்கள் ஆனால் இலங்கையில் நான் கண்ட காவல் பொலிஸ் காரர்கள் பிடிக்க வே இல்லை இல்லை #* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நிறம் மாறும் உயிரினங்கள்
» பச்சோந்தி நிறம் மாறும் விதம்
» பிரம்மாண்ட நிறம் மாறும் மைதானம்(
» உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம்
» நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்
» பச்சோந்தி நிறம் மாறும் விதம்
» பிரம்மாண்ட நிறம் மாறும் மைதானம்(
» உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம்
» நிறம் மாறும் பழைமையான விநாயகர் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum