சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Khan11

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!

3 posters

Go down

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Empty ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 15:13

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!
எம்.பரக்கத் அலி, ஓவியங்கள்: கண்ணா

அட... அமைச்சரவை மாற்றங்களின்போது மட்டுமே தமிழக அமைச்சர்கள் செய்திகளில் அடிபடுகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பிரத்யேக இயல்புகள் என்ன? எதுவுமே தெரியாத மூடுமந்திரமாகத்தானே இருக்கிறது. ஒரு 'மினிஸ்ட்ரி ரவுண்ட்-அப்’ அடிப்போம். வாருங்கள்...
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2யார் என்ன பழமொழி சொன்னாலும் அதன் அர்த்தம் கேட்டு மனதில் இருத்திக்கொள்வது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பழக்கம். அதோடு பழமொழிகள் தொடர்பான புத்தகங்களையும் படிப்பார். 'கிழிஞ்ச ஜிப்பா... தகர டப்பா’ என கருணாநிதி பெயர் சொல்லாமல் வளர்மதி சட்டசபையில் பேசியபோது, தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தனர். உடனே, 'மூளி என்றால் இவர்கள் ஏன் மூக்கை தொட்டுப் பார்க்கிறார்கள்?’ என பதிலடி கொடுத்தார் ஓ.பி. அதற்கெல்லாம் அந்தப் பழமொழி பிரேமையே காரணம்!
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2'எக்ஸ் மினிஸ்டர்’ என லெட்டர் பேடு அச்சடித்து வைத்திருக்கிறார்
ஓர் அமைச்சர் என்றால், நம்புவீர்களா? அவர், சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன். 'உள்ளே... வெளியே’ அமைச்சரவை மாற்றத்தில் இவர் வெளியேற்றப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். அதனாலேயே நிரந்தரமாக 'எக்ஸ்-மினிஸ்டர்’ லெட்டர் பேடு அச்சடித்து வைத்துக்கொண்டிருக்கிறார். 'மினிஸ்டர் போஸ்ட் நிரந்தரம் கிடையாதுல. அதான் இந்த ஏற்பாடு’ என்று நெருக்கமானவர்களிடம் பெருமிதமாகச் சொல்லிக்கொள்வாராம். இதுதாங்க தொலைநோக்குச் சிந்தனை!
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! P34a
[size]
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னைப் பற்றி எந்தச் செய்தியும் ஊடகங்களில் அடிபடாமல் பார்த்துக்கொள்வார். அதற்கென ஒரு தனி அணியே வைத்திருக்கிறார். அமைச்சர் தொடர்பான எந்தச் செய்திகளும் வராமல் பார்த்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்களாம் அவர்கள். மக்களுக்கு சேவை செய்யத்தானே எந்த எல்லைக்கும் போகணும்![/size]


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Empty Re: ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 15:14

'சட்டப்படி’ அமைச்சர் என்று பெயர் வாங்கி வைத்திருக்கிறார் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன். யாராவது உதவி கேட்டால், 'சட்டப்படி செய்ய முடியுமா? முடிஞ்சா செஞ்சுகொடுங்க’ என்று பரிந்துரைப்பதாலேயே இந்தப் பெயர்.
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத காமராஜர் முதல்வராக இருந்த மாநிலத்தில், ஐந்தாவது வகுப்பு மட்டுமே படித்த 'முக்கூர்’ சுப்பிரமணியன் 'தகவல் தொழில்நுட்ப அமைச்சர்’ என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுதான். ஆனால்,  ஈமெயில், கூகிள், வாட்ஸ்-அப், இணையம், ஈ  கவர்னன்ஸ்,  வீடியோ கான்ஃபரன்ஸ்... என தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து எதுவும் தெரியாத, புரியாத அவர், அத்துறை வளர்ச்சிக்கு என்ன பாடுபட முடியும் என்பதை நித்தம் நித்தம் விவாதிக்கிறார்களாம் துறை அதிகாரிகள்!  
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2குடிநீர் தொடர்பான விவகாரங்கள் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டது. ஆனால், அந்தத் தண்ணீரை வைத்து 'அம்மா குடிநீர்’ ஆரம்பித்து சபாஷ் வாங்கிய பலே கில்லாடி போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனால் கிளெட்ச்சை அழுத்தி கியர் தட்டவேண்டிய போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், புட்டியில் தண்ணீர் நிரப்பி மூடி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சருக்கு வராத யோசனை, செந்தில்பாலாஜிக்கு வந்தது. போக்குவரத்து ஊழியர்களின் உடம்பில் இருந்து லிட்டர் கணக்கில் ரத்தம் உறிஞ்சி, 'கின்னஸ்’ சாதனை படைத்து அம்மாவிடம் சமர்ப்பித்தார். இந்த 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால்’ செந்தில்பாலாஜிமீது மற்ற அமைச்சர்களுக்கு செம காண்டு. 'அம்மா’வும் இவர்கிட்ட உஷாரா இருக்கணும்போல!
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2 கோரிக்கைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அறிவுரை மழை பொழிவது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா ஸ்டைல். 'எதிர்காலத்தைப் பாரு. பிள்ளைகளைப் படிக்க வை. குடும்பத்தைக் காப்பாத்து...’ என அறிவுரைகளை அள்ளிவிடுவார்.
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2 மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபாலிடம் விநோதமான ஒரு பழக்கம் உண்டு. உள்ளாடைகள் உள்பட தன்னுடைய ஆடைகள் அனைத்தையும் அவரே துவைத்து அலசி காயப்போடுவாராம். இவரின் பல வருடப் பழக்கமான இது, அமைச்சரான பிறகும் தொடர்கிறது. 'அமைதிப்படை’ சத்யராஜ் குளியல் காட்சி, சார் மனசுல அழுத்தமா பதிஞ்சிருச்சுபோல!
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2 கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோரை வெரைட்டியாகத் திட்டியே 'மாண்புமிகு’ ஆனவர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்படி விதவிதமான வசை பாடல்களை எழுதிக்கொடுப்பதற்காகவே ஒருவருக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் விஜயபாஸ்கர். இவருடைய இந்த வியூகத்தை தாமதமாகத் தெரிந்துகொண்ட சில அமைச்சர்கள், இப்போது நன்றாக எழுதத் தெரிந்த தமிழ் பட்டதாரிகளை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2 அமைச்சர்களிலேயே அதிதீவிர பக்திப் பழம்... சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி. பெரிய வட்டப் பொட்டு, சந்தனம், விபூதி என நெற்றி முழுக்க நிரப்பிக்கொள்பவர், பெரிய டாலர் செயினை புடைவைக்கு மேலே நன்றாகத் தெரியும்படி எடுத்துவிட்டிருப்பார். காரணம், அந்த டாலரில் 'அம்மா’ படம் பளிச்சிடும். கோட்டையில் அவருடைய அறை மினி கோயிலாகக் காட்சியளிக்கும். கருமாரி அம்மன், கற்பக விநாயகர், காளிகாம்பாள் படங்களை சுவர் முழுவதும் மாட்டி வைத்திருப்பார். மேஜையோ அஷ்டலட்சுமி, விநாயகர் சிலைகள் நிரம்பி கர்ப்பக்கிரகம்போல காட்சியளிக்கும். நடுநாயகமாக 'அம்மா’ படம். அந்த வரிசையில் சம்பந்தமே இல்லாமல், விவேகானந்தர் படம் ஒன்றும் இருப்பதுதான் ஆச்சர்யம்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Empty Re: ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!

Post by ahmad78 Thu 4 Sep 2014 - 15:14

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! P34
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2 அம்மாவிடம் பூங்கொத்து கொடுக்கும் பாக்கியம் பெற்ற அமைச்சர்கள், காட்டும் பவ்யம் ஒவ்வொன்றும் ஒருவிதம். வருவாய்  துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகவும் எட்ட நின்று இடுப்புக்கு மேல் முழு உடலையும் வளைத்து நின்று பூச்செண்டு கொடுப்பார். ஜெயலலிதாவே எட்டித்தான் அதை வாங்கவேண்டியிருக்கும். 'அம்மா இருக்கும் இடம் கோயில். அங்கே செருப்பு போடலாமா?’ எனச் சொல்லி கொஞ்ச நாள் செருப்பு போடாமல் திரிந்தவர் இவர்.
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2 ஒவ்வோர் அமைச்சரும் தங்கள் துறை சார்பாக புதிய திட்டமோ அறிவிப்போ வெளியிடுவதாக இருந்தால், ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் அதை முதலில் அமல்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என அலசி ஆராய்ந்துவிட்டுதான் பிற தொகுதிகள் பக்கம் கவனம் திருப்புவார்கள்.
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2ஆச்சர்யமாக, எந்த அமைச்சரின் மேஜையிலும் கணினி இல்லை!
ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Dot2 'மூவ்மென்ட்’ - அம்மாவின் கான்வாய் கிளம்பிவிட்டதற்கான சங்கேத வார்த்தை இது. கார்டனில் ஜெயலலிதா தயாராகும் முன்னரே, அவரது கான்வாய் ஆயத்தமாகிவிடும். கார்கள் அணிவகுக்கத் தொடங்கியதுமே, முதல்வரின் பாதுகாப்பு போலீஸார் 'கான்வாய் ரெடி’ என ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிடுவார்கள். அது 'பி.எஸ்.ஓ’ என அழைக்கப்படும் அமைச்சர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வந்து சேரும். உடனே அவர்கள் அமைச்சர்களுக்கு தகவல் சொல்ல, அலர்ட் ஆவார்கள். என்ன வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முக்கூர் சுப்ரமணியன் அறைகளில் கூடுவார்கள். காரணம், கோட்டையில் ஜெயலலிதா கார் வந்து நிற்கும் போர்ட்டிக்கோவுக்கு அருகில்தான் அந்த இரண்டு அறைகளும் இருக்கின்றன. அம்மாவின் கார் வந்து சேரும் வரை அங்கே பழங்கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். கார்டனில் இருந்து கான்வாய் கிளம்பியதும் ரெண்டாவது எஸ்.எம்.எஸ் வரும். அவ்வளவுதான்... புரோட்டோக்கால்படி வரிசைக் கட்டி நின்றுவிட்டு 'கப்சிப்’ ஆகிவிடுவார்கள்.
'அட, அமைச்சர்கள் ஏன் எப்பவும் இவ்ளோ டென்ஷனா இருக்காங்க?’ என்று கேட்கிறீர்களா? 'முதல்வன்’ ரகுவரன், அர்ஜுனிடம் கேட்பாரே... அதுபோல... ஒரு நாள்... ஒரே ஒரு நாள் நீங்கள் 'அம்மா அமைச்சரவையில்’ இருந்து பாருங்களேன். அப்போ புரியும்!
 
விகடன்
 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Empty Re: ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!

Post by Nisha Thu 4 Sep 2014 - 15:16

சமத்து சின்னக்கவுண்டரே! 

இடி இடிச்சால் என்ன  மழை பெய்தால் என்ன..சுனாமியே வந்தாலும் எனக்கென்ன.. நான் வருவேன்.. பதிவு போடுவேன்.. சொல்லாமல் போயிருவேன் என சபதம் எடுத்தவரே நீர் வாழி.. 

சின்னகவுண்டர்னு  பேரு வைத்தாலும் வைச்சேன்.. யார் சொல்லும் கேட்பதில்லையப்பா#*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Empty Re: ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!

Post by பானுஷபானா Thu 4 Sep 2014 - 15:24

பதில் சொல்லக்கூட அவரால முடியல ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்! Empty Re: ஆல் அமைச்சர்ஸ்... அலர்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum