சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Yesterday at 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Yesterday at 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Yesterday at 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Yesterday at 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Yesterday at 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Yesterday at 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Yesterday at 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» ஆன்மீக சிந்தனை
by rammalar Sun 26 Mar 2023 - 11:57

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

» சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் 5 நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு
by rammalar Fri 24 Mar 2023 - 13:16

» ’கேடி-தி டெவில்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை!
by rammalar Fri 24 Mar 2023 - 13:09

» ஜெயம் ரவியின் 32 வது படம்
by rammalar Fri 24 Mar 2023 - 13:06

» அனுஷ்காவுக்கா மானஸி பாடியி ’நோ நோ’ பாடல்
by rammalar Fri 24 Mar 2023 - 13:03

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 23 Mar 2023 - 20:00

» கொசுவைப்பற்றிய தகவல்கள்
by rammalar Thu 23 Mar 2023 - 19:43

» தினம் ஒரு மூலிகை - காவட்டம் புல்
by rammalar Wed 22 Mar 2023 - 17:17

» படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 22 Mar 2023 - 17:14

வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!  Khan11

வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

Go down

Sticky வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

Post by ahmad78 Tue 9 Sep 2014 - 16:06

வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!  Ld2001“மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும் நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதையாகின்றன. குறிப்பாக உணவு   உற்பத்தி  முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க வேண்டிய - உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு,  இர வுப்பணி, ஒரே இடத்தில்  அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற்பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தா மல் இருப்பது, ரசாயன பூச்சிக்கொல்லிகளின்  பயன்பாடு போன்றவை பிரச்னைகளின் காரணிகள்.

சில சாதாரண விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினாலே பல நோய்களை தவிர்க்க முடியும். இக்கவனம் இல்லாமல் போனதால்  எதிர்ப்பு சக்தியை  இழந்து, பல நோய்களை நாமே வரவழைக்கிறோம். சில நோய்களை எளிமையாக மூலிகைகள் கொண்டு குணப்ப டுத்த முடியும்... தவிர்க்கவும்  முடியும்” என்கிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். இதோ... வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க சில  அபூர்வ மூலிகைகள்!பி.கு: தீவிர நிலை  நோயாளிகளுக்கு இவை பலன் தராது. மருத்துவர் ஆலோசனையைப் புறக்கணிக்க வேண்டாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

Post by ahmad78 Tue 9 Sep 2014 - 16:06

நீரிழிவு

இன்சுலின் செடி: இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

கள்ளிமுடையான்: கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற் றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

சர்க்கரைக்கொல்லி: கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.

சிறியாநங்கை: கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

ஸ்டீவியா என்னும் சீனித்துளசி: தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து  பொடியாக்கி,  டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ  சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது.   அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும்  இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது.   இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல்,  வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என  நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

Post by ahmad78 Tue 9 Sep 2014 - 16:07

அஜீரணம்

அருவதா: இதனை ‘பிள்ளை வளர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள். இளம் குழந்தைகளின் அஜீரண கோளாறுகளுக்கு நல்லது.

புற்றுநோய்

கோதுமைப்புல் சாறு: கோதுமைப்புல் சாறு சிறந்த நிவாரணி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை ‘பச்சை ரத்தம்’ என அழைக்கிறார்கள். வீட்டிலேயே எளி தாக வளர்த்து  தயாரிக்க முடியும். 10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி  வீதம் விதைக்க, பத்தாவது  நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும். இதனை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண் டும். அறுவடை செய்த தொட்டியில் திரும்ப  விதைக்க வேண்டும். இப்படியே தொடர வேண்டும். இப்போது பெருநகர அங்காடிகளில்  பாக்கெட்டுகளில் கோதுமைப்புல் கிடைக்கிறது.

எலுமிச்சம் புல்: எலுமிச்சம் புல் சாறிலுள்ள ‘சிட்ரால்’ வேதிப்பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (கிஜீஷீஜீtஷீsவீs) செய்து கொள்வதாக  கூறியுள்ளனர்  இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். அதே வேளையில் நல்ல செல்களுக்கு ஒன்றும்  ஆவதில்லை என்றும்  கண்டறிந்தனர். 2006ல் நடைபெற்ற ஆய்வு இது.

முள்ளு சீதா: ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படுவது முள்ளு சீதா. இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம். அங்குள்ள பழங்குடியினர்  பல்வேறு  நோய்களைக் குணப்படுத்த இப்பழத்தை உபயோகிக்கின்றனர். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் நோய்களை  குணமாக்க  பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால்  இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்றும்  அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. தமிழகத்தில் நன்கு  வளர்கிறது.

வெண்தேமல்: காலையில் வெறும் வயிற்றில், கறிவேப்பிலை கொழுந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு  கைப்பிடி  சேர்த்து மிக மெதுவாக மென்று விழுங்க வேண்டும். பத்தியம் உண்டு. வெள்ளை சர்க்கரையை ( கீலீவீtமீ ஷிuரீணீக்ஷீ)  கண்டிப்பாக தவிர்க்க  வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

Post by ahmad78 Tue 9 Sep 2014 - 16:07

சிறுநீர் கோளாறுகள்

சிறுபீளை : சிறுநீரைப் பெருக்கி, சிறுநீர் கற்களை கரைக்கும் சக்தி உடையது.

வாழைத்தண்டு: பொரியல் செய்து உட்கொண்டால் சிறுநீர் கோளாறுகள் குறையும்

மூலநோய்: மெக்சிகோ நாட்டுத் தாவரமான ‘ஐயப்பனா’ (Ayapana triplinervis) அறுவை சிகிச்சை நிலையில் இருக்கும்  மூல  நோயாளியைக்கூட மிக எளிதாக குணப்படுத்தும் என்கிறார்கள்.  காலையில் பல் சுத்தம் செய்து வெறும் வயிற்றில் சுமார் 5  இலைகளை உட்கொண்டு  சிறிது சுடுநீர் அருந்த வேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையைப்  பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகக்  கூடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

Post by ahmad78 Tue 9 Sep 2014 - 16:07

சளி, இருமல்

துளசி: துளசிமாடம் இன்றைய வாழ்வியல் முறையில் மறைந்து வருவது வருந்தத்தக்கதே. துளசியில் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப் பிடலாம்.  இருமல், சளி, ஜலதோஷம், தொற்று நீக்கும். சிறந்த கிருமிநாசினியும் கூட.

தூதுவளை: இதன் இலை கோழையை அகற்றும். தூதுவளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். சுவாசக் கோளாறுகளுக்கும் நல்லது.

ஆடாதொடை: மிளகுடன் இலையை உண்ண கபத்தை அகற்றும்.

கற்பூரவல்லி: குழந்தைகளுக்கு சளி, ஜலதோஷம் ஏற்பட்டால் கொடுக்கலாம்.

அழகு

மஞ்சள் கரிசலாங்கண்ணி: உடல் வனப்பு பெறவும், கூந்தல் கருமையாக இருக்கவும் இதனை உபயோகிக்கின்றனர். வள்ளலார் விரும்பிய மூலிகை இது.

ரோஸ்மேரி: மத்தியதரைக்கடல் நாடுகளிலிருந்து இறக்குமதியானது. தேநீருடன் சேர்த்து அருந்த புத்துணர்ச்சி ஏற்படும். அசைவ உணவுக்கு  மணமூட்டி  சுவையையும் அதிகரிக்கிறது. கூந்தல் பராமரிப்பிலும் அழகு சாதனப் பொருள்களிலும் பயன்படுகிறது.


 
http://anjaaan.blogspot.com/2013/10/blog-post_500.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum