Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
3 posters
Page 1 of 1
நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் தந்தையைப் பார்த்தே அந்த இரண்டு சகோதரர்களும் வளர்ந்தார்கள். குடித்ததில் செலவானது போக மீதமிருந்தது தான் குடும்பச்செலவுக்கு. அது போதவில்லை என்பதால் தாயும் வேலைக்குப் போய் தன்னால் முடிந்ததை சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து குடும்பத்தை சமாளித்தாள். சில சமயம் அவள் சம்பாதித்ததையும் அவள் கணவர் பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவதுண்டு. வீட்டில் தினமும் சண்டை, தகராறு, அடி, உதை, அழுகை....
அந்த நிம்மதியற்ற சூழ்நிலையில் வளர்ந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் தந்தையைப் போலவே குடிகாரனாக மாறி விட்டான். இப்படி ஆனது ஏன் என்று அவனைக் கேட்ட போது அவன் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் வருத்தத்துடன் சொன்னான். "தினமும் நான் பார்த்து வளர்ந்த அந்த சூழ்நிலை என்னையும் இப்படி ஆக்கி விட்டது"
இன்னொரு சிறுவன் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதித்து பணம் சேர்த்து அதை வைத்து தொழில் ஆரம்பித்து பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபரானான். அவன் வெற்றிக்குக் காரணம் கேட்ட போது அவனும் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் சொன்னான். "எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்பதற்கான உதாரணமாக அந்த சூழ்நிலைகள் இருந்தன. அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆழமாக இருந்தது...."
ஒரே விதமான அனுபவத்திலிருந்து இருவரும் இருவேறு படிப்பினைகள் பெற்றதைப் பாருங்கள். எதுவும் நாம் பார்க்கும் விதத்திற்கேற்ப மாறுகிறது. அதைப் பொறுத்தே அதனால் பலனடைகிறோம் அல்லது பாதிக்கப்படுகிறோம்.
ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகான கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
"Two men looked out from prison bars
One saw mud, the other saw the stars"
சிறைக்கம்பிகளின் வழியே வெளியே பார்த்தனர் இரு கைதிகள். ஒருவன் சேற்றைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான். இருந்த இடம் ஒன்று தான். ஆனால் பார்வைகள் போன இடங்கள் வேறு. எதைப் பார்க்கிறோம் என்பதை இருக்கும் இடமும், சூழ்நிலையும் தீர்மானிப்பதில்லை. நாமே தீர்மானிக்கிறோம்.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாசிகளிடம் சிக்கி பலவித சித்திரவதைகளை அனுபவித்து உயிர் பிழைத்த எத்தனையோ பேர் போர் முடிவுக்கு வந்த பின்னும் அந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் மன நோயாளிகளாக மாறி விட்டனர். சகஜ நிலைக்கு வர பலருக்கு கவுன்சலிங், மருந்துகள் தேவைப்பட்டனர். ஆனால் அதே சித்திரவதைகளை அனுபவித்த ஒரு சிலருக்கு அவை ஒரு பாடமாக அமைந்தன. சுதந்திர வாழ்க்கையே மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதையும் அதில் தேவையில்லாமல் கவலைகளில் மூழ்கி வாழ்வை அனுபவிக்க மறப்பது முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தார்கள். அந்த நாட்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் பின் எந்த நாளும் நல்ல நாளே என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். சிலர் தங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுதி பெரும் பணம் சம்பாதித்தார்கள். ஒரே விதமான அனுபவங்கள் எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.
எனவே நான் இப்படியாக மாற மற்றவர்கள் தான் காரணம், சூழ்நிலைகள் தான் காரணம் என்பது மிகப் பெரிய பொய். முன்பு சொன்ன குடிகாரத் தந்தையின் இரு மகன்கள் எதிர்மாறான இருவேறு நிலைகளை அடைய வைத்தது அவரவர் பண்புகளே. இரண்டாம் உலகப் போர்க்கைதிகளில் பலர் மன நோயாளிகளாக மாற, சிலர் பக்குவப்பட்டு மகிழ்ச்சியான மனிதர்களாக மாறியதும், சிலர் அதைப் பற்றி எழுதிப் பணம் பார்த்ததும் அந்த அனுபவங்களை அவர்கள் எடுத்துக் கொண்ட விதத்தினாலேயே. அவர்களை மட்டுமல்ல எவரையும் எதுவாகவும் ஆக்குவது அவரவர் பார்வைகளே.
நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
http://kiruukkal.blogspot.com/2013/12/blog-post_8134.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்பதற்கான உதாரணமாக அந்த சூழ்நிலைகள் இருந்தன. அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆழமாக இருந்தது...."
என் வாழ்க்கையில் கடந்தவைகளையும் நடந்தவைகளையும் நான் இப்படித்தான் எதிர் கொண்டேன், எடுத்து கொண்டேன்.
கடந்ததன் மீது பழி போட்டு தப்பிகொள்வதை விட கடந்ததை நம் வாழ்க்கைக்கு பாடமாக கொண்டு முன்னே செல்லுதல் தான் சிறப்பு. வாழ்வின் வெற்றிக்கும் அது தான் அடிப்படை!
நல்லதொரு பகிர்வு. நன்றி முஹைதீன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
Nisha wrote:எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்பதற்கான உதாரணமாக அந்த சூழ்நிலைகள் இருந்தன. அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆழமாக இருந்தது...."
என் வாழ்க்கையில் கடந்தவைகளையும் நடந்தவைகளையும் நான் இப்படித்தான் எதிர் கொண்டேன், எடுத்து கொண்டேன்.
கடந்ததன் மீது பழி போட்டு தப்பிகொள்வதை விட கடந்ததை நம் வாழ்க்கைக்கு பாடமாக கொண்டு முன்னே செல்லுதல் தான் சிறப்பு. வாழ்வின் வெற்றிக்கும் அது தான் அடிப்படை!
நல்லதொரு பகிர்வு. நன்றி முஹைதீன்.
:flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி
» உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்!
» நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
» நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?
» உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum