சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Khan11

தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

3 posters

Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by ahmad78 Wed 17 Sep 2014 - 8:59

குட் டச்... பேட் டச்...

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Ht2796
நெற்றி சுருங்கக் கண்டால்
எனக்கு நெஞ்சம் பதைக்குதடி...
உன் கண்ணில்
நீர் வடிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி...
என் கண்ணிற்
பாவையன்றோ?
கண்ணம்மா...
என்னுயிர்
நின்னதன்றோ!


நெற்றி சுருங்குவதை கண்டாலே நெஞ்சம் பதைக்கும்போது, நெஞ்சம் முழுதும் வஞ்சம் வைத்து குழந்தைகளை வதைப்பவரை என்ன செய்யலாம்? குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. நாம் இல்லாத பொழுதில், எதையும் சமாளிக்கும் வகையில், 4 விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

1. ‘நோ’ சொல்வது...

தான் விரும்பாத எதையும் எந்த வகையிலும் பிறர் திணிக்கத் தொடங்கும்போதே, தயங்காமல் மறுக்கச் சொல்லித் தருவது மிக அவசியம். அழுத்தமாகவும் தைரியமாகவும் தன்னை துன்புறுத்துபவரிடம் ‘நோ’ சொல்ல கற்றுக்கொடுங்கள்.

2. சத்தம் போடுவது...

விரும்பத்தகாத செயல்கள் நடப்பதாக உணரும் போது, அடுத்தவரை உதவிக்கு அழைத்தல் அவசியம். ‘அம்மா’ என்றோ, தூரத்தில் செல்பவரையோ, வெறுமனே ‘ஹெல்ப்’ என்று கூட சத்தமாகச் சொல்ல சொல்லுங்கள். அல்லது சட்டென குரல் உயர்த்திப் பேசச் சொல்லித் தரவேண்டும். திடீரென குரலை உயர்த்தி பேசுதல் அருகில் இருப்பவர்களின் கவனத்தை கவரும். கூட்டத்தில் இருப்பதும் பாதுகாப்பாக இருக்க ஒரு வழி.

3. அங்கிருந்து அகன்று விடுவது...

குழந்தை விரும்பாத போது அந்த இடத்தி லிருந்து அகன்று, வேறு மனிதர்கள் இருக்கும் இடத்துக்கோ, தெரிந்தவர்கள் இருக்கும் இடத்துக்கோ செல்ல பழக்குங்கள்.

4. நம்பிக்கையான நபரிடம் சொல்வது...

தனக்கு நிகழும் பிரச்னைகளை தான் நம்பிக்கைக்கு உரியவராக கருதுபவரிடம் சொல்ல, சிறுவயது முதலே பழக்கிவிட வேண்டும். ‘நம்பிக்கை என்பது நம் கருத்தல்ல... அவர்களின் முடிவே’ என்பதையும் நாம் அனுமதிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty Re: தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by ahmad78 Wed 17 Sep 2014 - 8:59

எது தொடக்கூடாத பகுதி?  எப்படி விளக்குவது?  

அண்டர்வேர் / ஸ்விம் வேர் ரூல்

குழந்தைகளின் உடலில் பிரைவேட் பார்ட் அல்லது அடுத்தவர் தொடக்கூடாத பகுதி எது என்பதே இந்த ரூல். குழந்தைகளின் உள்ளாடை அணியும் இடத்தை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது என்பதே முதல் விதி. ‘ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் நீச்சல் உடை வித்தியாசப்படும் அல்லவா? அது போன்றே அவர்களின் உடல் உறுப்புகளும். உள்ளாடை / நீச்சல் உடை அணியும் இடங்களே குழந்தைகளின் பிரைவேட் பார்ட்... அதனை யாரும் தொட அனுமதி இல்லை’ என்பதை மிகத்தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

இது போன்ற விஷயங்களை குழந்தைகளிடம் பேசத் தகுந்த நேரம்... அவர்கள் மகிழ்ச்சியாகவும் வேறு எந்த கவனச் சிதறல்களும் இல்லாத பொழுதுகளே. உதாரணமாக தொலை தூரப் பயணம், நடைப் பயணம், பள்ளி சென்று அழைத்து வரும் நேரம், நீச்சல் பயிற்சி போன்றவற்றுக்கு அழைத்துச் செல்லும் போது. இதைவிட எளிதாக, தினமும் குழந்தைகள் தூங்க செல்லும் முன், கதை பேசுவது போல, அவர்களின் தினப்படி நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம்... அறிவுறுத்த வேண்டியதை யும் பேசிவிட முடியும். குழந்தைகளின் ‘குட் டச்... பேட் டச்...’ பற்றி எளிய முறையில் எடுத்து கூறுவதே PANTS எனப்படுகிறது.

Privates are private

அண்டர்வேர் அணியும் அவர்களின் பிரைவேட் பகுதிகளை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது... உடல்நிலை சரியில்லாத போது டாக்டர் போன்றவர்களை தவிர.

Always remember your body belongs to you

குழந்தைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டிய முக்கிய விஷயம் இது... அவர்களின் உடல் அவர்களின் சொத்து. யாருக்கும் அதைத் தொட உரிமை இல்லை. ஏதேனும் அவர்களை சிரமப்படுத்துவதாக இருந்தால் உங்களிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும்.

No means No

குழந்தைகள் விரும்பாத வரை யாரும் அவர்களைத் தொட உரிமை இல்லை. மீறித் தொடும் போது, தைரியமாக ‘நோ’ சொல்ல பழக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் தொடும் போது கூட அதனை குழந்தைகள் விரும்பாவிட்டால் சொல்ல உரிமை உண்டு. குடும்பத்தில் சொல்ல பழகிவிட்டால் வெளியாட்களிடம் பயம் வராது.

Talk about secrets that upset you

ரகசியம் எது என்பதும், நல்ல ரகசியம் - கெட்ட ரகசியம் குறித்தும் குழந்தைகள் தெளிவாக அறிந்திருத்தல் அவசியம். ஒரு பார்ட்டியோ,  சர்ப்ரைஸ் பரிசோ நல்ல ரகசியம். யாரேனும் அவர்களை துன்புறுத்துவதோ, அவர்கள் விரும்பாத எதுவுமோ கெட்ட ரகசியமே. அதனை மறைக்காமல் நம்மிடம் சொல்ல தைரியமூட்டுங்கள்.

Speak up, someone can help
 
எதுவாக இருந்தாலும் தைரியமாக சொல்லப் பழக்குங்கள். உங்களிடம்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை, அவர்களுக்கு விருப்பமான யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். அது அவர்கள் தாத்தா, பாட்டி, நண்பர்கள் - ஏன் ஆசிரியர்களாக கூட இருக்கலாம். அவர்கள் நம்பிக்கை பெற்ற யாராவது ஒருவரிடம் சொல்வது முக்கியம். அப்படி எதுவானாலும் அது அவர்களின் தவறல்ல என்று நம்பிக்கை அளிப்பது அவசியம்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2806&Cat=500


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty Re: தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by ahmad78 Wed 17 Sep 2014 - 9:01

இன்றைய கணக்கெடுப்புப்படி நம் நாட்டில் 54 சதவிகித குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.  இக்குழந்தைகளில் 24 சதவிகிதம் ஆண் குழந்தைகள். பொதுவாக நம் கலாசாரத்தில் ஆண் குழந்தைகள் அழுவது ஏற்கப்படுவதில்லை. ‘ஆம்பளைப் பையன் அழக்கூடாது’ என்று சொல்லியே வளர்த்து வருகிறோம். குறுகிய வட்டங்களில் ஆண் குழந்தைகள் தம்மை அடைத்துக் கொள்வதற்கு இதுவும் காரணமே. ‘யாரால் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஆபத்து வரும்’ என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 

சில உதாரணங்கள் இங்கே... தோழி ஒருவர், 8வது படிக்கும் அப்பா இல்லாத பையனை முடி வெட்ட ஒரு குறிப்பிட்ட சிகையலங்கார நிலையத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பையன் உள்ளே இருக்கும்போது தோழி வெளியில் இருப்பார்... சில முறைகளுக்குப் பிறகு, பையன் ‘அங்கே முடிவெட்ட வர மாட்டேன்’ என்று சண்டை பிடித்து கோபத்துடன் பொருட்களை உடைத்திருக்கிறான். மெதுவாக விசாரித்ததில் அந்த சலூன் கடைக்காரரும் அவரின் தோழரும் அந்த பையனை மிகவேதனைப்படுத்தி இருப்பது தெரியவந்தது.

நம் நாட்டில் பெண்கள் தாயாகக் கருதப்படுவதால் அவர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உண்டு. ஆனால், சில பெண்கள் தங்களுடைய நிறை வேறாத மன இச்சைகளை தீர்க்க சிறு குழந்தைகளை உபயோகிப்பதும் அதிர்ச்சிகரமான விஷயம். மனவியல் வல்லுநர்கள் இதற்கு என்ன பெயரிட்டு அழைத்தாலும் சிதைவது குழந்தையின் வாழ்க்கையே. இவர், அவர் என எவ்வித வேறுபாடும் இன்றி, குழந்தைகளைச் சுற்றி  உள்ள அனைவருமே சந்தேகப்பட வேண்டியவர்களே. சில உறைவிடங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களும் பெருமளவில் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதும் நிதர்சனம். 

சில மதத் தலைவர்கள் கூட இந்தச் சர்ச்சையில் சிக்க காரணம் அடக்கி வைக்கப்படும் அவர்களின் வாழ்க்கை முறை. அதற்குப் பலியாவதோ குழந்தைகள்தான். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் சிலர் கூட, அதிக பணத்துக்கும் போதைப் பொருட்களுக்கும் ஆசை காட்டி குழந்தைகளை அவர்கள் பக்கம் இழுத்து, அவர்களின் இச்சைகளை நிறைவேற்றி விடுகின்றனர். நாளடைவில் போதையின் பிடியில் சிக்கிச் சீரழியும் குழந்தைகள் தாமாகவே இந்த வேலையை செய்ய முன்வருகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்தப் பாதிப்பு பிற்காலத்தில், அவர்கள் மண வாழ்க்கையில் பெரிய சிக்கலை உண்டாக்கும். பெண்கள் மேல் ஒருவித பயமும் வெறுப்பும் குரோதமும் இருக்கும். 

பெண் குழந்தைகள் அழுதாவது ஆறுதல் தேடும், ஆண் குழந்தைகளின் மனதில் இது தீராத வடுவாகவே இருக்கும். அவர்கள் தங்களை ஒரு முழுமையான ஆணாகவே நினைக்க மாட்டார்கள்... எப்போதும் ஒரு பதற்றம் இருக்கும். மண வாழ்க்கையில் முழுதாக ஈடுபட முடியாமல் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாவார்கள். பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களின் குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் குழந்தைகளை குடும்ப விஷயங்களில் ஒதுக்கி வைக்கக் கூடாது. பெண் குழந்தைகளை ஈடுபடுத்துவது போலவே, வீட்டுப் பணிகள் அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும்.

அவர்களின் வயதுக்கேற்ற உடல் மாற்றங்களை அவர்களுக்கு புரிய வைத்தல் மிக அவசியம். அவர்களின் கூச்சம், பயம், அச்சம் போன்றவற்றை தெளிவாக விளக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் பெண்கள் மேல் வரும் ஈர்ப்பு குறித்தும், அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் நண்பனை போல் உரையாடி விளக்குங்கள். பெண்குழந்தைகளின் உடலை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது போல, ஆண் குழந்தைகளுக்கும் அறிவுறுத்த வேண்டியது அவசியம். பெண்களைப் போலவே பையன்களும் 12 - 15 வயதுக்குள் உடலியல் மாறுதல்களை சந்திக்கிறார்கள். குரல் மாறுவது, உடலில் ரோமங்கள் வருவது, உயரமாவது, வியர்வை வாசம் வருவது, மார்பு வடிவம் மாறுவது... இவை மட்டுமின்றி, ஆண் உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்களும் அவர்களை அதிகக் குழப்பத்தில் ஆழ்த்தும். பெண்கள் பூப்பெய்தினால் வீட்டில் உள்ளவர்கள் எதாவது கொஞ்சமாவது சொல்லித் தருவார்கள். 

பையன்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். சக பையன்களுக்குள் பேசிக்கொள்வதில் பாதி ஊகங்களாகவும், மீதி பயங்களாகவுமே இருக்கின்றன. திடீரென அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைவதும் தனிமையை விரும்புவதும் அதிக கோபமும் சண்டை போன்றவையும் அவர்களின் குழப்பங்களின் வெளிப்பாடே. இந்த வயதையும் இந்த வயதில் மற்றவர்களை எப்படிக் கையாளுவது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமையே. 
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2843


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty Re: தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by ahmad78 Wed 17 Sep 2014 - 9:05

குட் டச்... பேட் டச்... க்ருஷ்ணி கோவிந்த்

ஆனை விற்கும் வர்த்தகராம் உன் மாமன் சேனைக்கெல்லாம் அதிகாரியாம். சின்னண்ணன் வந்தானோ கண்ணே உனக்கு சின்னச் சட்டை  கொடுத்தானோ உனக்கு கண்ணான தம்பிக்கு காதுகுத்தப் போறோமுன்னு முன்னூறு வெத்திலையும் உனக்கு மூத்த அம்மான் சீரு வரும் நானூறு  வெத்திலையும் உனக்கு நடு அம்மான் சீரு வரும் கல்கண்டும் சர்க்கரையும் உனக்கு கடை அம்மான் சீரு வரும் அள்ளிக் கொடுப்பார் அருமையம்மான்  காப்பரிசி  பிடித்துக் கொடுப்பார் பெரியம்மான் காப்பரிசி.

ஒரு குழந்தைக்கு இத்தனை உறவுகள் உள்ளது என்று தாலாட்டில் அறிமுகப்படுத்துகிறார் தாய். உண்மையில் இந்த உறவுகள் சில நேரங்களில்  இனிமையும் சில நேரங்களில் துன்பத்தையுமே தருகின்றன. செய்தித்தாளில் உற்றார், உறவினரால் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்  என்பது போன்ற துயரச் செய்தியைப் படிக்கிறோம். பெற்றவர்களின் சில தவறான நம்பிக்கைகளினால்தான் குழந்தைகள் துன்பப்படுகிறார்கள்.  குழந்தைகளுக்கு கற்றுத் தரும் முன்பு பெற்றோரின் நம்பிக்கையையும் உண்மையில் நடப்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை 

ஒரு பாதுகாப்பான இடத்தில் குடியிருக்கிறோம். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அத்தனை பேரும் குடும்பம் போல பழகுகிறோம். அவர்களால் நம்  குழந்தைக்கு எந்தக் கெடுதலும் இல்லை. அவர்கள் நம் சகோதரர் போலத்தான். சுற்றிலும் படித்தவர்கள், நல்லவர்கள், வசதியானவர்கள் வாழ்வதால்  பாதுகாப்பாக இருக்கிறோம். 

உண்மை 


மூன்றில் ஒரு பெண் குழந்தையும் ஐந்தில் ஓர் ஆண் குழந்தையும் அக்கம்பக்கம் உள்ளவர்களாலேயே பாதிப்புக்கு ஆளாகிறார்கள். படிப்பு, சமூக  அந்தஸ்து, ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இதில் இல்லை. 

நம்பிக்கை 

நான் என் குழந்தையிடம் ‘குட் டச்’ பற்றி பேசியிருக்கிறேன். அவளுக்கு /அவனுக்கு அதைப் பற்றி தெரியும். எனினும், நல்ல பள்ளியில் படிப்பதால்  அங்கெல்லாம் இப்படி நடக்க வாய்ப்பில்லை.

உண்மை

பாதகச் செயல் புரிபவர்கள் எவருமே குழந்தையிடம் அனுமதி கேட்டுச் செய்வதில்லை. கட்டாயப்படுத்தியும், குறுக்கு வழியிலுமே பெரும்பாலும் இது  நடக்கும். குழந்தை அறியும்படி செய்தால் அதனால் தடுக்க முடியும். கட்டாயப்படுத்தியோ, பலவந்தமாகவோ செய்தாலோ என்ன செய்ய முடியும்?  குழந்தையை தொடுவது மட்டுமே தவறல்ல... குழந்தையைக் கொண்டு தொட வைப்பதும் தவறே. குழந்தைகளைக் குழப்பியும் இதைச் செய்ய முடியும்.  ஆகவே, எத்தனை தெளிவாக முடியோ அத்தனை தெளிவாக கற்றுத் தருதல் அவசியம்.

நம்பிக்கை 

முன் பின் அறியாதவர்களால்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

உண்மை

இது முற்றிலும் தவறு. குறைந்த அளவு குழந்தைகளே அறியாதவர்களால் பாதிக்கப்படுகின்றனர்.  மிக அறிந்தவர்கள், குழந்தைகள் மிகவும்  விரும்புபவர்கள், உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் யாருடன் அதிக நேரம் செலவிடுகின்றனரோ சில நேரம் அவர்களாலும் (டீச்சர், கோச், கார் டிரைவர், பேபி சிட்டர்) பாதிக்கப்படுகின்றனர். 

நம்பிக்கை

எனக்கும் என் குழந்தைக்கும் ஃப்ரெண்ட்லியான உறவு இருக்கிறது. என்னிடம் எல்லாம் சொல்லுவார்கள்... எதையும் மறைக்க மாட்டார்கள்.

உண்மை

எந்த குழந்தையும் தனக்கு நேர்ந்ததை உடனே யாரிடமும் சொல்ல முன்வருவதில்லை. ‘சொன்னால் பெற்றோர் வருத்தப்படுவார்கள்... அல்லது  சொல்வதை நம்ப மாட்டார்கள்... அல்லது தன்னால் சுட்டிக்காட்டப்படும் நபர் அப்படிச் செய்திருப்பார் என நம்பமாட்டார்கள்’ என்று எண்ணுவதால்  சொல்ல முன்வருவதில்லை. அந்த நேரத்தில் அவர்கள் அதிகபட்ச குழப்பத்திலும் பயத்திலும் இருப்ப தாலும் யாரிடமும் பகிர விரும்புவதில்லை.  அப்படி ஏதேனும் குழந்தைகள் குற்றம் சாட்டினால் அது நூறு சதவிகிதம் உண்மையாகவே இருக்கும். ‘அவரா அப்படி செய்வார்... நம்பமுடியலையே’   என்று பெற்றோர் வெளியிடும் ஒரு விமர்சனம் அவர்களின் கருத்துகளை சொல்லவிடாமல் செய்து
விடுகிறது.

நம்பிக்கை

என் பெண் குழந்தைகளை பற்றித்தான் பயம்... ஆண்குழந்தைகள் அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

உண்மை

பெண் குழந்தைகளைப் போலவே ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. 2007ம் ஆண்டு ஆய்வு அறிக்கையின் படி பெண் குழந்தைகளை விட  ஆண் குழந்தைகள் அதிகமாகப்  பாதிக்கப்பட்டுள்ளனர். 8-12 வயது வரை உள்ள ஆண் குழந்தைகளுக்கு மென்டல் சப்போர்ட், எமோஷனல் சப்போர்ட்  இரண்டும் மிக அதிகம் தேவை. இன்னொன்றும் கவனத்தில் கொள்ளுங்கள்... குழந்தைகளைத் துன்பப்படுத்துபவர்கள் அனைவரும் ஆண்கள் அல்ல. 

நம்பிக்கை

என் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியும், ‘யு ட்யூப்’பில் கூட இதைப் பற்றி காட்டியிருக்கிறேன், அவர்கள் பள்ளியில் ஒரு நாடகத்திலும்  சொல்லிருக்கிறார்கள். இன்னும் திரும்ப அதை எதற்கு சொல்லித்தர வேண்டும்? வேறு ஏதேனும் கற்றுக்கொள்ளட்டுமே!

உண்மை

குழந்தைகள் ஒரே வயதினராக இருந்தாலும் அவர்களின் புரிந்து கொள்ளும் திறன், கற்கும் திறன், வெளிப்படுத்தும் திறன் போன்றவை  ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு படமாக பார்த்ததோ, என்றோ ஒரு நாள் நாடகமாக பார்த்ததோ அவர்களுக்கு எத்தனை தூரம் மனதில் நிற்கும்  என்பது கேள்விக்குறியே. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் வெவ்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அதனால், மீண்டும்  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இதைப் பற்றி பேசுவது நல்லது.நம்பிக்கைகள் இப்படியும், உண்மைகள் அதற்கு முரணாகவும் இருக்கும்போது  இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது பல்வேறு சிக்கல்களை தவிர்க்குமே. 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty Re: தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by ahmad78 Wed 17 Sep 2014 - 9:05

இன்னும் என்ன செய்தால் நம் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்?

1. உங்கள் குழந்தைகளை சுற்றி உள்ளவர்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
 

தினம் தினம் செல்லும் விளையாட்டுப் பயிற்சியோ, ட்யூஷனோ...  எப்போதாவது செல்லும் பிறந்த நாள் கொண்டாட்டமோ, குடும்ப விழாவோ, திருமண விழாவோ... அவ்வப்போது பக்கத்து வீட்டில் சினிமா பார்ப்பதோ...  எதுவானாலும் உங்கள் குழந்தை மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்களைச் சுற்றி உள்ளவர்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். இது போன்ற  நிகழ்வுகளுக்குப் பின் ஒரு குழந்தையின் நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் அந்த இடத்தில் இருந்தவர்களைப் பற்றியும் விசாரியுங்கள்.

2. அனுமதிக்கும் முன் அறிந்து கொள்ளுங்கள்...

உங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஆட்கள், வேலையாட்கள், டிரைவர், பயிற்சியாளர் என யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி முடிந்த  அளவு ரெஃபரன்ஸ் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விசாரிக்காமல் விட்டு, பின்னே வருத்தப்படுவதில் என்ன பயன்?

3. உங்கள் குழந்தை மேல் அக்கறை கொண்டவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

புதியவரோ, உறவினரோ - உங்கள் குழந்தையுடன் தொடர்பு  கொள்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் உங்கள் குழந்தை மேல் திடீர் அக்கறை கொண்டால் என்னவெனக் கவனியுங்கள். குழந்தையை பற்றிய திடீர்  பாராட்டும் தேவையற்ற விதத்தில் பரிசுகளும் இருந்தால் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். ஒரு வேளை குழந்தைகள் அவர்களுடன் பழகுவதை  பத்திரமாக உணர்ந்தாலும்கூட, என்ன காரணம் அவருடைய திடீர் பாசத்துக்கு என்பதை நீங்கள் அறிந்திருத்தல் அவசியம்.

4. குழந்தைகளை சுற்றி மனிதர்கள் அவசியம்... 

உங்கள் நேரடிக் கவனிப்பில் உங்கள் குழந்தை இல்லாத போது, குடும்ப உறுப்பினர் யாராவது இருப்பது அவசியம். இக்கால ‘மைக்ரோ  ஃபேமிலி’அமைப்பில் அது சாத்தியமில்லாமல் இருப்பதால், முடிந்த அளவு குழந்தைகளை தனியாக விடுவதை தவிர்க்கவும்.
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2775&Cat=500


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty Re: தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by Nisha Wed 17 Sep 2014 - 11:03

அவசியமான பகிர்வு!

இப்பல்லாம் யாரையும் நம்ப முடியவில்லை என்பது தான் நிஜம். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை பெரியவர்களான நாமே புரிந்திட இயலாத போது சின்ன குழந்தைகள் எம்மாத்திரம்?

நான் என்றுமே நானோ பிரபாவோ இல்லாத சூழலில் அன்னியர் எவரையும் வீட்டில் அனுமதிப்பதும் இல்லை. வர விடுவதும் இல்லை.

இந்த குட் ட்ச், பேட்டச் ஏற்கனவே சொல்லிகொடுத்திருக்கேன் அதே நேரம் அவர்கள் ஸ்கூல் கிளாஸிலும் ஆபத்து பிரச்சனை வந்தால் எப்படி கையாளனும் எங்கே அடித்து தப்பிச்சி ஓடணும் என சொல்லி கொடுத்திருக்காங்க.

பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்.


Last edited by Nisha on Wed 17 Sep 2014 - 15:56; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty Re: தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by பானுஷபானா Wed 17 Sep 2014 - 14:06

நானும் எல்.கே.ஜி சேர்த்ததில் இருந்து நிறைய சொல்லி குடுத்திருக்கிறேன். இருந்தாலும் மனதின் ஓரம் பயம் இருக்கத் தான் செய்கிறது .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தொடுதல் கற்போம் கற்பிப்போம். Empty Re: தொடுதல் கற்போம் கற்பிப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum