சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஆட்டு மந்தைச் சிந்தனை Khan11

ஆட்டு மந்தைச் சிந்தனை

Go down

ஆட்டு மந்தைச் சிந்தனை Empty ஆட்டு மந்தைச் சிந்தனை

Post by ahmad78 Wed 17 Sep 2014 - 9:11

மனம் மயங்குதே: டாக்டர் சுபா சார்லஸ்

ஆடுகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும். வரிசையில் செல்கிற போது, முதலில் போகிற ஆடு திடீரென ஒரு தடையை எதிர்கொள்ளும். தாவிக் குதித்து, அந்தத் தடையைத் தாண்டிச் செல்லும். அதன் பின்னால் வருகிற ஆடுகள், அதைப் பார்த்து தாமும் அப்படியே செய்யும். பின்னால் வருகிற ஆடுகளுக்குத் தடையே இல்லாவிட்டாலும் கூட, முதலில் தாண்டிய ஆட்டினைப் பின்பற்றி, எல்லாமே தாவித் தாண்டிதான் அந்த இடத்தைக் கடக்கும். இதுதான் ஆட்டுமந்தைச் சிந்தனை. இந்த ஆட்டு மந்தைச் சிந்தனை ஆடுகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களாகிய நமக்கும் இருக்கவே செய்கிறது.

தங்களது 24 வயது மகன் தீபக் உடன் என்னைச் சந்திக்க வந்தார்கள் ஒரு பெற்றோர். தீபக் அவர்களுக்கு ஒரே மகனாம். பி.இ. முடித்தவர். வந்ததில் இருந்து அம்மா மட்டும்தான் பேசிக் கொண்டே இருந்தார். தீபக் தலைகுனிந்து உட்கார்ந்திருக்க, அவரது அப்பாவோ விட்டத்தை வெறித்தபடியே இருந்தார்.‘‘மேடம்... இவனுக்கு என்ன குறை வச்சோம்னு கேளுங்க... ஒரே பையன். சீரும் சிறப்புமா வளர்த்தோம். எங்க சக்திக்கு மீறி பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சோம். பத்தாவது முடிச்சதும், நாமக்கல்ல ஒரு பெரிய ஸ்கூல்ல சேர்த்தோம். எங்கக்கா, அண்ணன் பசங்க அத்தனை பேரும் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வெளிநாட்ல பெரிய பெரிய வேலைகள்ல இருக்காங்க. 

அவங்களைப் பார்த்து எனக்கும் தீபக்கை எப்படியாச்சும் இன்ஜினியராக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பிடணும்னு ஒரு ஆசை. பல்லைக் கடிச்சிட்டு, புள்ளையைப் பிரிஞ்சு ரெண்டு வருஷம் இருந்தோம். பிளஸ் டூ முடிச்சதும் இன்ஜினியரிங் காலேஜ்ல சேரவே மாட்டேன்னு அடம் பிடிச்சான். கட்டாயப்படுத்தி சேர்த்தோம். படிப்பை முடிச்சான். வெளியில வந்தவனுக்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை கிடைச்சது. இவனுக்குத் தான் ஆரம்பத்துலேருந்தே படிப்புலயும் வேலையிலயும் ஆர்வமே இல்லையே... அதனால கொஞ்ச நாள்ல கம்பெனியிலேருந்து சிலபேரை வெளியில அனுப்பினப்ப இவனையும் அனுப்பினாங்க. 

கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தான். அவ பெரிய இடத்துப் பொண்ணு. ஐ.டி. கம்பெனியில வேலை பார்க்கிறா. கல்யாணத்தை முடிச்சிடலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப இவனுக்கு வேலை போயிடுச்சு. கிடைச்ச வேலையைத்தான் தக்க வச்சுக்க முடியலைன்னா, பொண்ணையும் தக்க வச்சுக்கத் தெரியலை. ரொம்ப யோக்கியசிகாமணி மாதிரி அவகிட்ட போய், தனக்கு வேலை போயிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கான். அவ உனக்காக காத்திட்டிருக்கிறது வேஸ்ட்டுனு சொல்லிட்டு, அவங்க வீட்ல பார்த்த வேற ஒரு பையனைக் கட்டிக்க சம்மதம் சொல்லிட்டா. ஆறு மாசமா வீட்ல சும்மா இருக்கான். வீட்டை விட்டு வெளியில போறதில்லை. வேற வேலையும் தேடலை. 

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தாண்டா இப்படியே இருக்கப் போறேன்னு திட்டினதுக்கு, போன வாரம் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணிட்டான். எங்கக்கா வருஷத்துக்கு ஒருவாட்டி புள்ளைங்களைப் பார்க்க அமெரிக்கா போறா. திரும்பி வரும் போது கழுத்து நிறைய நகையோடவும் கை நிறைய காசோடவும் வர்றதைப் பார்க்கிறப்ப எனக்கு எப்படி இருக்கும்? ‘அமெரிக்காவுக்கு வாடா... நாங்க வேலைக்கு ஏற்பாடு பண்றோம்’னு சொந்தக்காரப் பிள்ளைங்க கூப்பிடறாங்க. அதுக்கும் முடியாதுங்கிறான்... கண்ணும் கருத்துமா வளர்த்த ஒரே பையன்... இன்னிக்கு இப்படியொரு நிலைமையில ஜடம் போல நிக்கறதைப் பார்க்கிறப்ப பெத்த வயிறு பத்தி எரியுது...’’ அதற்கு மேல் பேச முடியாமல் உடைந்து அழுதார் தீபக்கின் அம்மா. அவரை சமாதானப்படுத்தி வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, தீபக்கிடம் பேசினேன்.

‘‘எனக்கு சின்ன வயசுலேருந்தே ஜர்னலிஸ்ட்டாகணும்னு ரொம்ப ஆசை. பேப்பர்லயும் டி.வி.லயும் வர்ற நியூஸை என் ஸ்டைல்ல எழுதிப் பார்ப்பேன். பிற்காலத்துல ஜர்னலிஸம் படிச்சு, பிரபலமாகணுங்கிற கனவுல இருந்தப்ப அம்மாதான் என்னை இன்ஜினியரிங் படிக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. எனக்குப் பிடிக்காமத்தான் நாமக்கல் ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்தாங்க. அந்தச் சூழல் பிடிக்காம தப்பிச்சு ஓடிப் போயிடலாமானு அழுதிருக்கேன். அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வர்றப்ப எல்லாம் அவங்க காலைப் பிடிச்சுக் கெஞ்சி, என்னைக் கூட்டிட்டுப் போயிடுங்கனு கதறியிருக்கேன். அதுக்குப் பிறகு அவங்க வர்றதையே நிறுத்திட்டாங்க. ‘அடிக்கடி வந்தீங்கன்னா உங்க பையன் ஏங்கிடுவான். வராம இருந்தா பழகிடுவான்’னு வார்டன் சொன்னாராம். கஷ்டப்பட்டு ரெண்டு வருஷப் படிப்பை முடிச்சிட்டு வெளியே வந்து, அப்பவாச்சும் என்னை விஸ்காம்ல சேர்த்து விடச் சொல்லிக் கெஞ்சினேன்.

‘உனக்கென்ன பைத்தியமா... உன் அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சியெல்லாம் இன்ஜினியரிங் முடிச்சிட்டு பெரிய பெரிய வேலைகள்ல இருக்கிறப்ப, நீ விஸ்காம் படிக்கப் போனா நம்ம குடும்ப கவுரவம் என்னாகும்? இன்ஜினியரிங்தான் படிக்கணும்’னு கட்டாயப்படுத்தி சேர்த்தாங்க. அதையும் பொறுத்துக்கிட்டேன். படிப்பை முடிச்சதும் சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை கிடைச்சது. நாமக்கல் ஸ்கூலையும் விட கொடுமையான ஜெயில் வாழ்க்கை அது. கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை. எதுக்குப் பிறந்தோம்... என்ன பண்ணிட்டிருக்கோம்... என்ன பண்ணப் போறோம்னு எதுவுமே புரியலை. திடீர்னு கம்பெனியில சில பேரை வேலையை விட்டு அனுப்பறதா சொல்லி என்னையும் அனுப்பிட்டாங்க. சந்தோஷமா வெளியில வந்தேன். 

எனக்கு வேற வேலை கிடைக்கிற வரைக்கும் காத்திருக்க என் காதலி தயாரா இல்லை. அவங்க வீட்ல கட்டாயப்படுத்தறதா சொல்லி என்னை விட்டுட்டுப்போயிட்டா. அம்மாவோட பேச்சு... சொந்தக்காரங்களோட கிண்டல், கேலி... காதலியோட பிரிவுனு எல்லாம் சேர்ந்துதான் என்னை தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி யோசிக்க வச்சது. ஆனா காப்பாத்திட்டாங்க... என் கனவுகள், கற்பனைகள்னு எல்லாத்தையும் சிதைச்சிட்டு, வெறும் நடைபிணமா வாழச் சொன்னா என்னால எப்படி மேடம் முடியும்... நான் என்ன தப்பு பண்ணினேன்..?’’ என்ற தீபக்கின் வார்த்தைகளில் நியாயம்  இருப்பதை உணர்ந்தேன். கோடானு கோடி மக்கள் இருக்கிறார்கள். 

ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணம் உண்டு. கருவிழியில் தொடங்கி, கைரேகை வரைக்கும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. மனதும் அப்படித்தான். தனித்துவமானது. தன் பிள்ளைகள் தனித்துவத்துடன் இருப்பதைப் பார்க்கிற பெற்றோர் முதலில் அதை மதிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் பழக வேண்டும். எல்லோரும் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் என்கிற ஆட்டுமந்தை மனோபாவம் இனி வரும் காலங்களில் உதவப் போவதில்லை. எல்லோராலும் செய்ய முடிகிற வேலைகளைச் செய்ய ரோபோ போதும். 16, 17 வயதில் பிள்ளைகள் மனத்தில் ஏராளமான கேள்விகள் இருக்கும். அதில் தெரிகிற தனித்துவம் மெல்லிய கீற்று போல, மெல்லிய வானவில் போல இருக்கும். அது எத்தனை நகைச்சுவையானதாக இருந்தாலும் வித்தியாசமானதாக இருந்தாலும் எள்ளி நகையாடாமல், இழிவாகப் பேசாமல், அதில் உள்ள ஈடுபாட்டைப் புரிந்து கொள்ளப் பழக வேண்டும். 

அவர்களுக்குப் பிடிக்காத ஒரு துறையைத் திணித்து, அதை நோக்கி ஓடச் செய்கிற முயற்சிகள் அவர்களது ஆசைகள், லட்சியங்கள், கனவுகள் என எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கிப் போடுவதற்குச் சமம். ‘‘ஆயிரம் பேராக உள்ள ஆட்டுமந்தையில் உங்கள் மகனும் ஒரு ஆடாக இருக்கலாம். ஆனால், நான் இங்கே இருக்க வேண்டியவனில்லை என்கிற உறுத்தல் அவருக்குக் காலத்துக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அர்த்த சாஸ்திரம் 4 சக்திகளை அவசியமெனச் சொல்கிறது. அறிவு, மனித சக்தி, பண சக்தி மற்றும் சந்தோஷமிக்க ஆர்வம். முதல் 3 இருந்தால் மட்டும் போதாது. நான்காவதான மகிழ்ச்சி இல்லாவிட்டால் முதல் மூன்றும் இருந்தாலும் வீண்தான். 

உங்கள் அக்கா, அண்ணன் என உறவினர் குடும்பங்களை மட்டுமே உங்களது உலகமாகப் பார்க்காதீர்கள். இந்த உலகம் மிகப் பெரியது. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிற பரந்து, விரிந்த உலகத்தில் உங்களுடைய இந்த ஆட்டுமந்தைச் சிந்தனையால் உங்கள் மகனின் கனவுகளைக் கலைத்து, வாழ்க்கையை நசுக்கி விட்டீர்கள். மகனின் கனவுகளை அவரது கண்களின் மூலம் காணப் பழகுங்கள். தனித்துவத்துடன் வாழத்துடிக்கிற அவரது ஆசைகளை ஊக்கப்படுத்துங்கள். உற்சாகப்படுத்துங்கள். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் தனது தனித்துவங்களுடன், ஆர்வங்களுடன், ஆசைகளுடன் வாழ்கிற உரிமை அவருக்கு இருக்கிறது. அதை அனுமதியுங்கள். உங்கள் மகனின் எதிர்காலம் நீங்கள் ஆசைப்பட்டதைவிட அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறும்’’ என்றேன் தீபக்கின் அம்மாவிடம். 

‘‘எனக்கு மட்டும் ஏன் இப்படி..?’’ என மறுபடி அதே வார்த்தைகளில் தன் புலம்பலைத் தொடர்ந்த அம்மாவைப் பார்த்து, தீபக் தாழ்வு மனப்பான்மையில் நிலைகுலைந்து போனதையும், குற்ற உணர்வு கழுத்து வரை அழுத்த, வார்த்தைகளற்று உட்கார்ந்திருந்ததையும் உணர்ந்தேன். அவரது அம்மாவை ஆட்டுமந்தைச் சிந்தனையிலிருந்து வெளியே கொண்டு வருகிற என் முயற்சிகள் பாதிக் கிணற்றைத் தாண்டி விட்டன. சீக்கிரமே தீபக்கின் பத்திரிகையாளர் கனவு நனவாகப் போகிற அந்த நாளை அவரோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆட்டு மந்தைச் சிந்தனை Empty Re: ஆட்டு மந்தைச் சிந்தனை

Post by ahmad78 Wed 17 Sep 2014 - 9:11

பயிற்சி

50 கோடி பேர் உண்மை என வலியுறுத்துவதால் ஒரு பொய் உண்மையாகி விடாது. பொய் பொய்தான். அடிப்படையான இந்த ஆட்டுமந்தை மனோபாவத்திலிருந்து வெளியே வரப் பழகினாலே, வாழ்க்கையில் எந்த இடத்திலும் அந்த எண்ணத்தை எட்டிப் பார்க்க விடாமல் தடுத்து விடலாம்.பொய்யான, போலியான ஒரு விஷயத்தை உண்மையைப் போலவும் நிரூபிக்கப்பட்டதைப் போலவும் சித்தரிக்கிற எத்தனையோ விளம்பரங்களைப் பார்க்கிறோம். ஏமாந்து போகிறோம். விளம்பரங்களை நம்பி, அவற்றுக்கு விலை போவது கூட ஆட்டுமந்தை மனோபாவத்தின் வெளிப்பாடுதான். அத்தகைய விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.ஆட்டுமந்தை மனோபாவமானது பகுத்தறிவைக்கூட மழுங்கச் செய்து விடும். தக்காளி விதைத்து அமோக விளைச்சல் பார்த்திருப்பார் ஒரு விவசாயி. அவரைத் தொடர்ந்து அத்தனை விவசாயிகளும் தக்காளியே விதைப்பார்கள். 

அடுத்த சில வருடங்களுக்கு அது தொடரும். திடீரென தக்காளி விலை படுத்துப் போக, விற்பனை வாய்ப்பின்றி, அத்தனை தக்காளியையும் தெருவில் கொட்டுவார்கள். நஷ்டப்பட்டு நிற்பார்கள். இது ஒரு சின்ன உதாரணம்தான். இப்படி எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும், எல்லா மனிதர்களிடமும் ஆட்டுமந்தை சிந்தனையைப் பரவலாகப் பார்க்கலாம். எல்லாரும் பிள்ளைகளை இன்ஜினியரிங்கில் சேர்க்கிறார்களா... நாமும் ஏன் அப்படியே நினைக்க வேண்டும்? பிள்ளையின் விருப்பத்தைத் தெரிந்து கொண்டு, அது தொடர்பான வேறு படிப்பைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது?

கூட்டத்தில் தனித்து நிற்க ஒரு தைரியம் வேண்டும். அப்படி நிற்கத் துணிகிறவர்தான் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி பெறுகிறார். இதை பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் உணர வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ‘மாத்தி யோசி’ டெக்னிக்தான் வாழ்க்கையில் ஜெயிக்க விரும்புவோருக்கான மந்திரம். எந்தத் துறையிலும் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையைப் படித்தால், உழைப்பு, ஆர்வம் என்பனவற்றையும் மீறி, மாத்தி யோசித்த அவர்களது துணிச்சலே பிரதானமாக இருக்கும்.

(சிந்திப்போம்...)


தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum