Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு இலட்சத்துக்கும் அதிக நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள்
3 posters
Page 1 of 1
ஒரு இலட்சத்துக்கும் அதிக நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள்
கொழும்பில் உருவாகும் எழில்மிகு சொர்க்கபுரி¸
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாயன்று (16.09.2014) இலங்கை வந்தடைந்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பல்வேறு அபிவிருத்தித் திட்டங் களை ஆரம்பித்து வைத்ததோடு மேலும் பல எதிர்கால திட்டங்க ளுக்கான ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார். இரு நாடுகளுக் கிடையிலான பாரம்பரிய நட்புறவின் அடிப்படையில் சீனா இலங்கைக்கு பல வகையிலும் கைகொடுக்க முன்வந்திருப்பது இலங்கை மக்களையும் இலங்கையையும் கெளரவிப்பதாகவே அமைகின்றது.
சீன ஜனாதிபதியின் வருகையோடு செய்து கொள்ளப்பட்டுள்ள 27 ஒப்பந்தங்களும் இதனை வெளிப்படுத்துகின்றன. இரு நாட்டு ஜனாதிபதிகள் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த 27 ஒப்பந்தங்களைப் பார்க்கின்ற போது இரு நாடுகளுக்கும் பரஸ் பரம் நன்மைகள் இருந்தாலும் கூடுதல் நன்மையும் பிரதிபலன் களும் இலங்கைக்கே இருக்கிறது. சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம். குற்றவியல் விடயங்களி பரஸ்பர சட்ட ஆலோசனை வழங்கல், நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு தொழில் நுட்ப உதவி வழங்குதல், கொழும்பு துறைமுக நகர் திட்டம் (முதல் கட்டம்), ஹம்பாந்தோட்டை துறை முக கொள்கலன் இறங்குதுறைக்கான 2 ம் கட்டத்துக்கு உதவுதல் மற்றும் கடன் வழங்குதல் தொடர்பான ஒப்பந்தங்கள் உட்பட 27 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.
என்றாலும், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 2 ஆம் 3 ஆம் கட்டப் பணிகள் பூர்த்தியடைந்து இரு நாட்டுத் தலைவர் களாலும் அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஒளியை ஏற்படுத் தியிருக்கிறது. இதன் மூலம், இலங்கையின் தேசிய மின் திட்டத்தில் 900 மெகா வாற்ஸ் மின்சாரம் சேர்க்கப்பட்டிருப்பது ஆசியப் பிராந்திய நாடுகளுக்கே முன்மாதிரியாக அமைகின்றது. மின்வெட்டிலிருந்து இலங்கை மீண்டிருப்பது ஒருபக்கம் நிம்மதியைத் தருகிறது. அதேநேரம், மின்சாரக் கட்டணமும் 25 வீதத்தால் குறைக்கப்பட்டிருப்பதோடு எரிபொருட்களின் விலைகளிலும் குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான ஜனாதிபதி யின் அறிவிப்பு நாட்டு மக்களுக்கு இரட்டிப்புச் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைவிடவும், இலங்கையர் என்ற வகையில் நாம் பெருமை கொள் ளும் விடயம் நேற்று (17.09.2014) இடம்பெற்றது. கொழும்பில் துறைமுக நகரொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் (Colombo port city) சீன, இலங்கை ஜனாதிபதிகளால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைத் தீவோடு இன்னும் ஓர் அழகிய தீவை புதிதாக இணைத் துக்கொள்வதே இந்தத் திட்டமாகும். அதாவது 233 ஹெக்டேயர் கொண்ட கடல் பரப்பை மண்ணினால் நிரப்பி இலங்கையின் மொத்த நிலப்பரப்பை விஸ்தரிக்கும் பாரிய தொரு வேலைத்திட்டமாகவே இதனைப் பார்க்க முடிகிறது.
1337 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தத் துறை முக நகர் மூலம் இலங்கை பொருளாதார ரீதியில் மிகப் பெரிய வெற்றியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் சீனக் குடியரசின், “சைனா ஹாபர் என்ஜினியரிங் நிறுவனம்” நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கிறது. 8 ஆண்டுகளில் இதன் பணிகள் பூர்த்தியடைய வேண்டும். 233 ஹெக்டேயர் விஸ்தீரணம் கொண்ட இந்தத் துறைமுக சொர்க்கபுரியில் 213 ஹெக்டேயர் பரப்பளவு கொண்ட பிரதேசத்தை இலங்கை பராமரிக்கும். மிகுதி 20 ஹெக்டேயர் பரப்பளவு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படு கிறது. மூன்று அதிகார சபைகளின் கீழ் இதன் முகாமைத்துவம் வரையறுக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகார சபை, முதலீட்டு அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய மூன்றுமே இந்த துறைமுக சொர்க்கபுரியை கையாளுமென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. துறைமுக நகரில் தங்குமிட வசதிகள், நவீன பாதைகள். சொகுசு ஹொட்டல்கள். அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள். வணிக வளாகங் கள். களியாட்ட விடுதிகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் ஆகியனவும் இடம்பெறுகின்றன. இதன் மூலம், இலட்சக் கணக்கான இலங்கையர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்கள் கிடைக்குமென இரு நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாத் துறை ஊக்குவிப்பு யுக்தியில் சீனாவை முன்னிலைச் சந்தையாக இலங்கை அடையாளங் கண்டுள்ளது.
சீன சுற்றுலாப் பயணிக ளைக் கவரும் தனது இலக்கினை அடைய துறைமுக சொர்க்கபுரி பாரியதொரு மைல்கல்லாக அமையும். ஆசியப் பிராந்தியத்தை இலக்காகக் கொண்ட சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தின் வலையமைப்புக்குள் இலங்கையும் அடங்கு கிறது. இதன் மூலம் இலங்கைக்கும் பாரிய பொருளாதார நன்மை கிடைக்கும் என்பதே எதிர்பார்ப்பு. ஆகவே, சீன ஜனாதிபதியின் வருகை இலங்கையின் அபிவிருத்திக்கும் எதிர்கால அரசியல். பொருளாதாரத்துக்கும் நல்லதொரு செய்தியைச் சொல்லி இருக்கிறது.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
1337 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திட்டம்
233 ஹெக்டயர் கடலை நிரப்பி சொர்க்கபுரி நிர்மாணம்: இருநாட்டு ஜனாதிபதிகளால் நேற்று ஆரம்பித்து வைப்பு
1337 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திட்டம்
கடலை நிரப்பி 233 ஹெக்டயரில் உருவாக்கப்படும் துறைமுக நகரத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி i ஜின்பிங் ஆகியோரினால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1337 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படும் இந்த பிரமாண்டமான அபிவிருத்தி திட்டம் 8 வருடங்களில் முழுமையடைய இருக்கிறது.
வணிக வளாகங்கள், நவீன பாதைகள், பொழுது போக்கு அம்சங்கள் உட்பட பல வசதிகளுடன் கூடிய நவீன நகரமாக இது உருவாக்கப்படவுள்ளது. இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன ஜனாதிபதி. துறைமுக நகர நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பங்குபற்றினார்.
துறைமுக நகர நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு, கொழும்பு துறைமுக வளாகத் தில் நேற்றுக் கலை கோலாகலமாக நடை பெற்றது. காலை 9.00 மணியளவில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கொழும்பு துறை முகத்தில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கொள்கலன் இறங்குதள தொகுதிக்கு வருகை தந்தனர். இந்த விழாவுக்கு வருகை தந்த சீன ஜனாதிப தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் வரவேற்றனர்.
இங்கு அமைக்கப்பட் டிருந்த துறைமுக நகரின் மாதிரியை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வை யிட்டதோடு கொழும்பு சர்வதேச துறைமுக கொள்கலன் இறங்குதளத் தையும் பார்வையிட்டனர். கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான விபரங்களை சீன கொமியூனிகேசன் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி (Chinis Communication Construction Company) உயரதிகாரிகளும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன. துறைமுக அதிகார சபை தலைவர் பிரியத் பந்துவிக்ரம ஆகியோரும் இரு நாட்டு தலைவர்களும் விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் துறைமுக நகர நிர்மாணிப்புக்கான நினைவுப் படிகத்தை திறந்து வைத்தனர். தேசிய பாரம்பரிய நடன கலைஞர்களின் மேள தாளங் களுடனான வரவேற்புடன் அவர்கள் நினைவுப் படிகத்திற்கு அருகில் அழைத்துவரப்பட்டனர். பின்னர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்ட இரு நாட்டு ஜனாதிபதிகளும் நாடாவை வெட்டி நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
அதனோடு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழும் கப்பலில் இருந்து மணலை பீய்ச்சி சம்பிரதாய பூர்வமாக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெருமளவான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் இருந்த இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு கையசைத்து மகிழ்ச்சி வெளியிட்டதோடு பொதுமக்கள் கோசமெழுப்பு தமது பாராட்டை தெரிவித்தனர்.
கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத் தியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் அமைச்சரவையின் அனுமதி யுடன் ஆரம்பிக்கப்படுகிறது. இது தொடர்பில் துறைமுக அதிகார சபைக் கும் சைன கொமியுனிகேசன் கன்ஸ்ட் ரக்ஷன் கம்பனிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கடலை நிரப்புவதினூடாக உருவாகும் 233 ஹெக்டயரில் 177 ஹெக்டயர் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. 63 ஹெக்டயர் நிலப்பரப்பு பொது வசதிகள், வீதிகள், நீர்ப்பாதை. பூங்கா என்பவற்றுக்காக ஒதுக்கப்படுகிறது.
துறைமுக அதிகார சபையினூடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் முதலீட்டுச் சபை வரிச் சலுகையுடன் செயற்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் காலி முகத் திடலுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவிக்கப்படுகிறது. முதலாம் கட்டத்தின் கீழ் கடலில் நிலப்பகுதியை உருவாக்குவது 75 ஹெக்டயரில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் துவது என்பன முன்னெடுக்கப் படும். 2 ஆம் கட்டத்தின் கீழ் 95 ஹெக்டயரில் உட்கட்டமைப்பு வசதிகள் முன்னெடுக் கப்படும். முதலாம் கட்டம் 3 வருட காலத்தினுள் நிறைவு செய்யப்பட இருப்பதோடு முழுத் திட்டத்தையும் 8 வருடத்தில் நிறைவுசெய்ய உத்தேசிக் கப்பட்டுள்ளது.
கடலை நிரப்புவதற்கு 35 மில்லியன் கன மீட்டர் கருங்கல் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.233 ஹெக்டயரில் உருவாகும் துறைமுக நகரில் 108 ஹெக்டயர் முதலீட்டாளருக்கும் 125 ஹெக்டயர் இலங்கை அரசாங்கத்துக்கும் வழங்கப்பட இருக்கிறது. முதலீட்டா ளருக்கு வழங்கும் 108 ஹெக்டயரில் 20 ஹெக்டயர் சுதந்திரமாக அனுபவிக்க வழங்கப்பட இருப்பதோடு 88 ஹெக்டயர் நிலம் 99 வருட குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான 125 ஹெக்டயரில் 63 ஹெக்டயர் பொது வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. ஒப்பந்தப்படி அரசாங்கத்துக்கு 213 ஹெக்டயரும் முதலீட்டாளருக்கு 20 ஹெக்டயர் காணிகளும் சொந்த மாகின்றன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு இலட்சத்துக்கும் அதிக நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள்
நல்லது நடந்தால் சரி! இந்த உல்லாசப்பயணிகள் வருகையால் ஏற்கனவே இலங்கையில் சிறுவர்பாலியல் துஷ்பிரயோகம் அதிகம். இனியும் அப்படி ஆகாது இன்னொரு தாய் லாந்தாக இலங்கையை மாற்றாது சொர்க்க புரி நல்ல புரியாக இருக்கும் படி விட்டால் போதும்.
இந்த உல்லாசப்பயணவருவாய்க்காக தாய்லாந்து போல இலங்கையிலும் மாற்றலாம் என ஒரு அமைச்சர் சொன்னதாய் செய்தி! நாடு உருப்பட்டாப்பல தான்!!*!*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு இலட்சத்துக்கும் அதிக நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள்
நல்லதே நடக்கட்டும்.
வேலைவாய்ப்புக்கள் பெருகலாம். படித்து விட்டு வேலையின்றி தவிக்கும் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பார்க்கலாம்.
வேலைவாய்ப்புக்கள் பெருகலாம். படித்து விட்டு வேலையின்றி தவிக்கும் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். பார்க்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ஒரு இலட்சத்துக்கும் அதிக நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள்
கடலை நிரப்பி உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) உருவாக்கப்படுவதினூடாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் உருவாவதாக துறைமுக அதிகார சபை தெரிவித்தது.
இலங்கையை தென்னாசியாவில் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றும் இந்த திட்டம் 8 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட இருப்பதோடு நிர்மாணப்பணிகளில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
கடலை நிரப்பி 233 ஹெக்டெயரில் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகள் கடந்த வாரம் இலங்கை மற்றும் சீன ஜனாதிபதிகளால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. இதில் 170 ஹெக்டெயர் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட இருப்பதோடு 63 ஹெக்டெயர் நிலப்பகுதி பொது வசதிகளை மேம்படுத்துவதற்கும், பூங்கா, நீர் மார்க்கம் என்பன அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையில் பாரிய நேரடி முதலீட்டுடன் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு 1,337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முதற்தடவையாகவே கடலை நிரப்பி நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு இதில் 5, 6, 7 நட்சத்திர ஹோட்டல்கள், செயற்கையான கடற்கரை, போர் மூலா - 1 ஓட்டப்பாதை, சொகுசு சந்தைக் கட்டடம், சிறிய கொல்ப் மைதானம், நீர் விளையாட்டரங்கு, சிறு பூங்காக்கள், சொகுசு வீட்டுத்திட்டங்கள் என்பன அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகர முதலாம் கட்டம் 3 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட இருப்பதோடு இரண்டாம் கட்டம் 5 வருட காலத்தில் நிறைவு செய்யப்படுகிறது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் சுற்றுலா, போக்குவரத்து, விளையாட்டு ஹோட்டல் துறைகளில் நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் ஒரு இலட்சத்துக்கு மேல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முத லீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ள னர். வெளிநாட்டு முதலீடுகளினூடாகவும் அதிக தொழில் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைனா கொமுயுனிகேசன் கனஸ்ட்ரக்சன் கம்பனி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க உள்ளதோடு இது தொடர்பில் இரு நாட்டுக்குமிடையில் ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டுள்ளது.

வாருங்கள் ஹாசிம் ! நலம் தானே!
வீட்டில் அனைவரும் நலம் தானே?
இதே திரி ஏற்கன்வே இங்கே இருப்பதால் இணைத்து விடுகின்றேன்? மன்னிக்கவும்!
வீட்டில் அனைவரும் நலம் தானே?
இதே திரி ஏற்கன்வே இங்கே இருப்பதால் இணைத்து விடுகின்றேன்? மன்னிக்கவும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒரு இலட்சத்துக்கும் அதிக நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள்
கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) குறித்த அனைத்து பகிர்வுகளும் இனி இங்கே பதியவும் வேண்டுகின்றேன்!
ஒரு செய்தி அல்லது தகவல் குறித்த பகிர்வு ஒரே திரியில் பதியப்பட்டால் அதை குறித்த ஆவணப்படுத்தல் நம் சேனையில் எப்போதும் இருக்கும் அல்லவா!
ஒரு செய்தி அல்லது தகவல் குறித்த பகிர்வு ஒரே திரியில் பதியப்பட்டால் அதை குறித்த ஆவணப்படுத்தல் நம் சேனையில் எப்போதும் இருக்கும் அல்லவா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» ஷெரீன் கொடுத்த, மறைமுக, ‘அட்டாக்!’
» முதியோர் தொகை 2 இலட்சத்துக்கும் அதிகம் தாபரிப்பு பணம் வழங்க நடவடிக்கை
» இலங்கையில் குவைத் நாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம்! – நீதியமைச்சர்
» சீனாவுடன் மறைமுக பேரம் எதுவும் இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum